ஞாயிறு, நவம்பர் 17, 2013

ஆணா ? பெண்ணா ?


கிளி, மாதிரி இருக்காளே
மயில், போல ஆடுறாளே
குயில், போல பாடுறாளே
மான், போல ஓடுறாளே
பெண்களைப்பற்றி, இப்படி நாலுவார்த்தை கௌரவமாக சொன்னவன் ஆண்களை மட்டும்,
யானை, போல நடந்து வர்றான் பாரு
குள்ளநரி, போல தந்திரக்காரன்
நாய், போல நன்றியானவன்
சிங்கம், போல தைரியமா போவான்
கழுதை, போல சுமக்கத்தான் லாயக்கு
மாடு, போல நல்லா உழைப்பான்
கழுகு, மூக்கு வேர்த்தது போல வருவான்
பன்றி, மாதிரி திங்கிறான் பாரு
குதிரை, மாதிரி நல்லா ஓடுவான்
ஒட்டகச்சிவிங்கி, மாதிரி வளந்திருக்கான்
ஆமை, மாதிரி நுளைஞ்சிட்டான்யா
நல்லபாம்பு, கிட்ட பழகுறமாதிரில இவண்
பச்சோந்தி, மாதிரி மாறிக்கிட்டே இருப்பான்
தேள், கொட்டுற மாதிரி பேசுவான்யா
காக்கா, பிடிக்கிறதுல சரியான ஆளுய்யா
கோழி, தவிட்டை முழுங்குறது மாதிரி முழுங்குவான்
ஆந்தை, போல முழிக்கிறான் பாரு
உடும்பு, பிடில பிடிக்கிறான்
திமிங்கலம், மாதிரி உடம்பை வளத்துருக்கான்
குரங்கு, மாதிரி தாவுறானே
என, ஏன் இப்படி கேவலமா சொல்லி வச்சான்  ?  ஒருவேளை இதையெல்லாம் சொல்லிவச்சது பெண்ணாக இருக்குமோ ?

வியாழன், செப்டம்பர் 19, 2013

Tie.



அமெரிக்கர்கள் 95 % பேர் டை கட்டுகிறார்கள்,  இதில் 80 % பேருக்கு டை கட்டத்தெரிவதில்லை ஏதோ கழுத்தில் மாட்டிக்கொள்கிறார்கள் அவ்வளவுதான். ஆனால் ? இந்தியர்கள் 45 % பேர் டை கட்டுகிறார்கள் இதில் 35 % பேர் மிகச்சரியாக டை கட்டுகிறார்கள் இதிலும் மிகுதி 10 % பேர் கூடிய விரைவில் பழகிக்கொள்கிறார்கள் நான் பலநேரங்களில், பலபுகைப்படங்களில், பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன்,

செவ்வாய், ஜூலை 16, 2013

இப்படியும், அப்படியும்.

 
 
இந்த விசயத்தைப்பற்றி, நான் கூடுதலாக எழுத விரும்பவில்லை காரணம் ? மேற்கண்ட படங்களிலும், கீழ்கண்ட வீடியோவிலும் நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றீர்கள், என்னைக்கேட்டால் என்மனம் கணக்கிறது அவ்வளவுதான், பணவிரயம் தவறு, (تـــبذيـــر المال حـــرامதப்தீர் அல்மால், ஹராம்) எனஉலகுக்கு சொல்ல வேண்டியவர்களே ! இப்படியிருந்தால் ?
 
video
Video

புதன், மே 08, 2013

சவுக்கடி.


 
எனது, Website டில் நான் வெளியிடும் விசயங்களை சிலர் Copy அடித்து Face Book கில் தனது கருத்துக்கள்போல் வெளியிடுவதாக ஷார்ஜா நண்பர் கணேசன் காளீஸ்வரன், ( Working in CBD Dubai ) சொன்னதை கேட்டு என்மனம் வேதனையாக உள்ளது, 1983 - 1989 ஆண்டுகளில் நான் சிலவார இதழ்களுக்கு எழுதியனுப்பிய துணுக்குகள், சிறுகதைகள், பத்திரிக்கைகளில் வெளிவராமலும், எனக்கு திருப்பியனுப்பாத கதைகளும் சிறிதுகாலம் கழித்து மற்றவர்கள் பெயரில் எனது தலைப்பும், கதாபாத்திரங்களின் பெயர்களும் மாற்றப்பட்டு கதையில் சிறியமாற்றங்கள் செய்து வெளியானது கண்டு மனம் துடித்திருக்கிறேன், அந்தவேதனை எப்படியானது தெரியுமா ? உனது குழந்தைக்கு மற்றவன் இன்ஷியல் போட்டால் உனக்கு எப்படி ? இருக்கும் அதைப்போலிருந்தது எனக்கும், இந்தவேதனையில் நாளடைவில் எழுதுவதையே நிறுத்திவிட்டேன், எனது Website ல்கூட பிறருடைய கருத்துக்களை நான்சொல்ல வேண்டிய நிலைவரும்போது, (தலைப்புகள் குடியாட்சியாம், சாகாகலை, சந்தோஷம், காட்மண்டு கடவுள், வியத்தகு வில்லியம்ஸ், பே.பே.பேச்சிமுத்து, Sir Post,  வாழ்க்கை வாழ்வதற்கே, 1/2 கிலோ கவலை, இனி வரப்போகும் வாழ்வாதாரம்) இதில் சிலவார்த்தைகள் யாருடையது என்பதை குறிப்பிட்டுள்ளேன், Face Book கில் வெளிவரும் பலபுகைப்படங்களை பார்த்துக்கூட பலவிஷயங்கள் நான் எழுதுகிறேன், அல்லது விஷயங்களுக்கு புகைப்படங்களை உருவாக்குகிறேன், ஆனால் கருத்துக்களை ஒருபோதும் நான் Copy அடித்ததில்லை, அது எதற்கு சமம் என்பதை கீழே கருப்பு நிறத்தில் எழுதியுள்ளேன், எழுத்தாளர் ராஜேஸ்குமார் அவர்கள் சொன்னதைப்போல, பிஞ்சு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றாவிட்டாலும் பரவாயில்லை வெண்ணீர் ஊற்றாதீர்.

நண்பா... இனியெனும்,
மலம் கழித்து வாழ்   
மலம் களித்து வாழாதே   
இதைவிட, ஒரு சவுக்கடி வேண்டுமா ?
இதற்கு நீ கொடுக்கவேண்டுமா பதிலடி ?
Come to my, e-mail I.D. 
Related Posts Plugin for WordPress, Blogger...