வியாழன், டிசம்பர் 19, 2013

பிறந்தநாள்.

 
பிறந்தநாளை நாம் வெகுவிமரிசையாக கொண்டாடுகிறோம் அதிலும் சினிமாதாரங்கள் அடிக்கடி கொண்டாடுகிறார்கள், ஆனால் எத்தனையாவது ? 16 ரில் தொடங்கி, 61 வரை எப்பொழுதுமே குழப்பம் சரி போகட்டும், அது நமக்கு அவசியமில்லாத விசயம், ஒருவருடத்தை கடக்கும்போது நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டிய விசயங்கள் ஏராளம் உள்ளது கடந்த வருடத்தைவிட இன்று நமது பொருளாதார நிலை உயந்துள்ளதா ? வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதா ? கடந்த வருடத்தை விட இந்தவருடம் நாம் நமது தவறுகளை குறைத்திருக்கிறோமா ? மனிதநேயம் எனச்சொல்வார்களே, அது நம்மிடம் குறைந்துள்ளதா ? நிறைந்துள்ளதா ? எனஎன்றாவது நாம் தேடிப்பார்த்திருக்கிறோமா ? உண்மையில் நாம் தொலைவைத்தேடி (தொலைந்து போகுதல், மரணித்தல்) ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை, நிஜத்தை மறந்துவிட்டு நிழலை கண்டு மகிழ்கிறோம். ஒருகுழந்தை பிறக்கிறது அதை உலகிற்கு வரவேற்று கொண்டாடுகிறோம், தனது சந்ததி தொடர்கிறது, தான் ஆண்மகன் என சமூகத்திற்கு நம்மாலான ஒருஅறைகூவல், இன்னாரு மகன் மன்னாரு என்பதற்க்கு நம்மாலான ஒருபட்டயம், நமது அஸ்தியை கரைத்து ஆஸ்தியை எடுத்து நாஸ்தியாக்க நம்மாலான ஒருகுஸ்திவீரன், இப்படி ஏதாவது ஒரு காரணங்களுக்காக இந்த நாட்களை நமது குழந்தைகளின் பெரியபருவம் வரை (நாம் குழந்தைகள் அல்ல ! என, நம்குழந்தைகள் நினைக்கும் காலம்வரை) இதை கொண்டாடலாம் ஆனால் House Go go என, Cemetery Com com என சொல்லும் காலம் வரை கொண்டாடுவது எனக்கென்னவோ, மாற்றுச்செயலென தோன்றுகிறது.
Sampasivam-
Many many happy Returns of the Birthday to Mr. Killergee
CHIVAS REGAL சிவசம்போ (தனக்குள்)
யாருய்யா இவண், சாவுகிராக்கி அவருக்கு புடிக்காத விசயத்தைச்சொல்லி சாயங்காலம் பார்ட்டிய மண் அள்ளி போட்ருவான் போலயே...


2 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...