வியாழன், பிப்ரவரி 20, 2014

சிவஹனி.

அபுதாபி முஷபாவில் ஒருநாள், சாம்பசிவமும், ஹனீபாவும் அறுக்கும்போது...
 
ஏத்தா, அரபிக்காரன் கம்பு லூஸ் ன்னு சொல்றானே, என்னத்தா அர்த்தம் ?
ஏப்பு, இப்படி அட்டுப்புடிச்சமாதிரி கேக்கிறிய ?
ஏத்தா, இதுகூடவா தெரியலே ?
அப்படின்னா, இன்னா அர்த்தம் ?
கம்புலூஸுன்னா, எத்தனை ரூபான்னு அர்த்தமுத்தா.
அது, கம் புலூஸ் சுல.
அதத்தானத்தா, நானும் சொன்னேன்.
ஏப்பு, இப்படி உயிர எடுக்கிறிய
ஏத்தா, அரபிக்காரன் ஸூத்தாநீ கேட்டா, என்னத்தா சொல்விய ?
ங்கொய்யால, கம்பெடுத்து விளாசிப்புடமாட்டோம்.
அதுக்கு, ஏத்தா கம்பெடுக்கிறிய ஸூத்தானி ன்னு கேட்டா ? மாபி தானி ன்னு சொல்லவேண்டியதானே ! 
மொதல்ல, என்ன கேட்டீங்க ?
வேற, இருக்கான்னு கேக்றான் இல்லேன்னு, சொல்லவேண்டியதானே ! 
அது, ஸ்ஸூ தானி ல.
எல்லாம், ஒரு எழவுதான்த்தா.
ஙொக்கால், நம்மல்ட்ட கேட்ருவானா ? அப்படி, முட்டித் தூக்கிடுவோமுல
பாத்துத்தா, கொம்பு ஒடிஞ்சிரப்போகுது.
ஒடிஞ்சாலும், முட்டுவோமுள்ள !
ஏத்தா, அரபிக்காரன் ரோத்தால்ன்னு, சொல்றானே என்னத்தா ?
ஏப்பு, இப்படி மெட்ராஸ்காரன் மாதிரி பேசிறிய !
அப்படின்னா, போ, வா, ன்னு அர்த்தமுத்தா !
சரிப்பு, அரபியில போ அப்படின்னு, சொல்றதுக்கு ரோ ன்னு சொல்றாங்கள்ல, அப்படின்னா, போடா ன்னு எப்படி சொல்றது ?
ரோடான்னு, சொல்ல வேண்டியதான்.
நம்மல, ஒருநாளைக்கு துபாய்க்கு கூட்டிட்டுபோயி சுத்திகாமிங்கப்பு.
பெஸ்டிவெல் வரட்டும்த்தா, கண்டிப்பா போவோம்.
அப்ப, இன்ன இருக்கு ?
அப்பத்தானே, ராட்டணம்மெல்லாம் இருக்கும். ஏறி, சுத்தலாம். காலத்துக்கும் இப்படி செண்பகநாதன், மாதிரிதானத்தா இருக்கீங்க.
நாங்கல்லாம், மோசமான ஆளுப்பு.
நீங்க, மோசமா இருந்தாலும், நாசமாபோனாலும், காசா அப்புக்கு என்னா ?
ஏப்பு, பேசிக்கிட்டு இருக்கும்போது என்னை, இழுக்கிறீங்க ?
நீங்க, இப்படி நினைக்கிறீங்க, உங்களைப்பத்தி இவரு, என்ன சொன்னாரு தெரியுமா ?
என்னப்பு, சொன்னாரு ?
அதை, வாயால சொல்லமுடியாதுப்பு,
அப்ப,....                   என்னையா கரண்டு போச்சு ?
அவருதான், சொன்னாருல வாயால சொல்லமுடியாதுன்னு, விட்டுத்தொலைக்க வேண்டியதானே, அவரு, எப்பவுமே ENTRANCE லவச்சு இருப்பாரு, இப்பபாரு இழுத்த, இழுல கரண்டே போச்சு.  
3 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...