தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜூன் 28, 2014

ஸுவாமிஜீ, குத்தியானந்தா


என் வாழ்க்கையில், உள்ள கொள்கையே, எந்த மனிதனுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்து முடிக்க வேண்டும் என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தேன், இருக்கிறேன், இருப்பேன். இதில் துளியளவும் ஐயமில்லை இருப்பினும் எனக்கு கஷ்டங்களும், துன்பங்களும் வரக்காரணம் என்ன ? ஒருவேளை நான் இறைவனுக்கு துரோகம் செய்திருப்பேனோ ? செய்திருக்க சாத்தியம் இல்லையே... நானறியாமல் எப்படி ? இந்தக் குழப்பத்தை தீர்க்க சாமியாரை காணலாமா ? எனக்கு இதில் நம்பிக்கை இல்லையே என்ன செய்யலாம் என ஆலோசித்துக் கொண்டு இருக்கும் போது... வாசலிலிருந்து, நோட்டீஸ் ஒன்றை ஒரு சிறுவன் வீசி விட்டு சென்றான், எடுத்துப் படித்தேன் அதில்..

மனிதகுலமே... நமது,
இருளை விலக்க வந்த ஒளி விளக்கு,
அகத்தை அறிந்து வந்த அகல் விளக்கு,
சிந்தனையை சிலிர வைக்கும் சிமிழி விளக்கு,
குடும்ப உறவுகளை குளிர விடும் குலவிளக்கு,
குழப்பங்களை குறைத்து விடும் குமிழி விளக்கு,
கலக்கங்களை கசக்கி விடும் கலங்கரை விளக்கு,
சிவந்த பார்வையால் சுட்டெரிக்கும் சிவப்பு விளக்கு,
துன்பங்களை துறத்தி விடும் தூண்டா மணி விளக்கு,
சத்தியத்துக்கே, புத்தி சொன்ன, புத்திரமாமணி
ஸுவாமிஜீ, குத்தியானந்தா
அவர்களின் சொற்பொழிவு கேட்டு பக்திப் பழரசம் பருக வாரீர், வாரீர்.

இதைப் படித்ததும், இவரைப் போய் பார்த்தால் என்ன ? உடன் விசாரித்தேன், Appointment வாங்கினால் உடன் காணமுடியும் என்றார்கள் எனது செல்வாக்கைப் பயன்படுத்தி M.P ஆசைத்தம்பி மூலம் Appointment வாங்கிப் போய் பார்த்தேன் தனியறையில் சந்தித்தேன், எல்லா விவரங்களையும் சொன்னேன், என்னைப் பார்த்து, என் கண்ணைப் பார்த்து மீண்டும் ஒருமுறை சொல் என்றார் என்ன அருள் சினிமாவுல விக்ரம் கேட்டது மாதிரி கேட்கிறாரே ? வேறு வழியின்றி மீண்டும் ஒப்புவித்தேன், 

பிறகு வெள்ளி கூஜாவிலிருந்து... தங்கத்திலான சிறிய குப்பியில் அவரே ஊற்றித்தந்து பருகுங்கள் என்றார், எனக்குள் ஆச்சர்யம் மாநிலமே போற்றும் எவ்வளவு பெரிய சாமியார் அவரே பேதபாகுபாடின்றி தானே ஊற்றிக் கொடுக்கிறாரே, பருகியதும் அற்புதமான சுவையாக இருந்தது.

(ஒரு முறை நான் உகாண்டா போயிருந்தபோது PARரில் சாப்பிட்டதும் இதைப் போலவே இருந்தது, இருப்பினும் இதை அதனுடன் ஒப்பிடக்கூடாது தவறு கன்னத்தில் போட்டுக் கொண்டேன்) 

பிறகு வீட்டுக்கு வந்து மனைவி செல்வியிடம் சொன்னேன், அவள் தடுத்தும் கேட்காமல் தாலிச் செயினை தவிர பீரோவைத் திறந்து வீட்டுப் பத்திரங்கள், நகைகள், வெள்ளி நகைகள், பணம், அத்தனையையும் ஒரு பெட்டியில் எடுத்துக் கொண்டு அவர் சொன்னபடியே பௌர்ணமி வெள்ளியன்று இரவு ஆஸ்ரமத்திற்க்கு போனேன், பூஜையறையில், ஸுவாமிஜீ, ஒரு சீடரி (பெண்பால்) நான், வெள்ளி கூஜா, தங்க குப்பி, பூஜை ஆரம்பித்த சிறிது நேரத்தில் தங்ககுப்பியில், ஒழுகப்பட்டு சீடரியால் எனது வாயில் வார்க்கப்பட்டு, மீண்டும், மீண்டும், பிறகு சீடரி எனது கையில் எதையோ கொடுக்கப்பட்டது போல்... I Thing Pen கையெழுத்து பெறப்பட்டது போல்... சுள்ளென்று வெயில் முகத்தில் அடிக்க... கண் விழித்தேன் என்னஇது நாம் எங்கிருக்கிறோம் எழுந்து பார்த்தால் ? ஆற்று மணலில் கிடந்திருக்கிறேன், தூரத்தில் ஒத்தக்கடை விருசுழி ஆற்றுப்பாலம் அதில் வாகனங்கள் போய்க் கொண்டிருந்தது, வேகமாய் மேலே வந்து ஒரு டாக்ஸியை மறித்து வாடியார் வீதி போ என்றேன், வீட்டிற்குள் போனேன், மனைவி டாக்ஸிக்கு பணம் கொடுத்து விட்டு வந்தாள்.

என்னங்க போனகாரியம் என்ன ஆச்சு உங்க கார் எங்கே ?
எல்லாமே புரிந்தது, வெட்கமாக இருந்தது, மனைவி பேயாட்டம் ஆடினாள் நண்பர் சாம்பசிவத்தை அழைத்துக் கொண்டு Police Station போய் விபரம் சொன்னேன், அவர்கள் சிரித்து விட்டு கீழ்ப்பாக்கம் போகச் சொன்னார்கள், M.P ஆசைத்தம்பி வீட்டுக்கு போனேன் அவர் டெல்லி போய் விட்டாராம், கூடாது, கூடாது, இரவு முழுவதும் யோசித்து காலையில் M.Pக்கு போன் செய்து விபரத்தை சொல்லாமல் எனது நண்பர் சாம்பசிவத்திற்கு ஸுவாமிஜீயை காண Appointment வேண்டுமென கேட்டு வாங்கினேன், உடன் ஓடியன் மணி சலூனுக்கு போய் மொட்டையடித்து மீசையை மட்டும் வைத்துக் கொண்டேன், ஸுவாமிஜீயை காணப் போனேன், பூஜையறையில் நானும், அவனும் (ஸுவாமிஜீ) விபரத்தை சொல்லி எங்கேடா என்னோட நகை, பணம், பத்திரங்களெல்லாம் ? அவன் அலாரம் பெல்லை அடிக்க முயல சட்டென தேங்காயை எடுத்து அவன் கையில் அடித்தேன் இருவரும் கட்டிப்புரள, எனது கையில் குத்து விளக்கு கிடைக்க, அடுத்த நிமிடம் குத்து விளக்கு அவன் வயிற்றுக்குள்... ஜில்லென்று முகத்தில் யாரோ தண்ணீர் அடிக்க... கண் விழித்தேன்,

''ஏண்டா இன்னுமா தூங்குறே போய் வேலையப் பாருடா''
கேட்டவர் – ஜெயிலர், ஜெயபால்
இடம் – வேலூர்.

எனக்கு கஷ்டங்களும், துன்பங்களும் வரக்காரணமென்ன ? ஒரு வேளை நான் இறைவனுக்கு துரோகம் செய்திருப்பேனோ ? செய்திருக்க சாத்தியம் இல்லையே... நானறியாமல் எப்படி ? ஒரு வேளை செய்யப் போகிற கொலைக்காகத்தான் கஷ்டத்தையும், துன்பத்தையும் ஏற்கனவே கொடுத்துட்டாரோ ? அப்படினா இப்ப எதற்கு கஷ்டம் ?


CHIVAS REGAL சிவசம்போ-
குலவிளக்கு போல வந்த ''குத்தியானந்தா''''குத்து விளக்கு''ல குத்திட்டீயலே....

காணொளி

38 கருத்துகள்:

  1. இருந்தாலும் இப்படியெல்லாம் கஷ்டம் வரக்கூடாது..
    ஏன் இப்படின்னு புதுசா வந்திருக்காரே -
    பஜ்ஜியானந்த சாமிகள் அவர்கிட்ட கேக்கலாமா!?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்






    1. ஐயா, சுவாமிகள் முகவரி கொஞ்சம் தரமுடியுமா ?


      நீக்கு
  2. போலி சாமியார்களை கிண்டலடிக்கும் சிறப்பான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  3. நன்றி திரு ''தளிர்'' சுரேஸ் ஸார்....

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. ஆமா, இவரைத்தான் குத்திப்புட்டு உள்ளே இருக்கேன்... நீங்கதான் வரனும் ஜாமீன் எடுக்க.... வருவீங்களா ?

      நீக்கு
  5. சிறந்த ஆய்வுப் பதிவு

    பதிலளிநீக்கு
  6. முதல் படத்தை பார்க்கவே ரொம்ப பயமா இல்ல இருக்கு...

    நல்லாவே நக்கலடிச்சிருக்கீங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமால,,, ஒருவேளை நரபலி சாமியாரா ? இருப்பாரோ.....

      நீக்கு
  7. சாமியார் மீது அப்படி என்ன கோபம்?.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கு நன்றி தோழரே.... சாமியாரை நேசிக்கும் மனமும் முண்டோ தோழருக்கு.

      நீக்கு
  8. அந்தச் சாமி யாரோ?
    அந்தச் சாமியாரோ?
    அருமையான பதிவு ‘
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்களுக்கு, நன்றி மிஸ்டர். ஊமை ஸார்.

      நீக்கு
  9. வணக்கம்
    சாமியாரின் குறும்புகள் மலிந்து விட்டது வேறு யாரையும் நம்பளம் இந்த அயோக்கியனுவளை நம்ப முடியாது....
    விளக்கு என்று இறுதி வரி முடியும் கவியும் நன்று பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துக்கு நன்றி, நண்பரே...

    பதிலளிநீக்கு
  11. வர வர யாரக்குத்தான் அல்வா வரம் கொடுக்கிறதுன்னு மறஞ்சுபோச்சு சூவாமீஜீக்கு

    பதிலளிநீக்கு
  12. அல்வாவுக்கு ஆசைப்பட்டவன் கதி கடைசியில் இதுதான்.

    பதிலளிநீக்கு
  13. ஓ! நித்த்யானந்தா போயி குத்தியானந்தாவா......!!!!!! சூப்பர் போங்க....குலவிளக்கு குத்தியானந்தாவ குத்து விளக்கால குத்தியதாலதான் கில்லர்ஜி என்ற பேரோ?!!!!!!!!

    எனக்குப் போட்டியா வந்த குத்தியாநந்தாவக் குத்திட்டு ஜெயிலுக்கு போன "கில்லர்"நீயல்லவோ...உண்மையான சிஷ்யன் ....... அதனால் நீ "கில்லர் ஜி" குத்தியானந்தா உன் சொத்தைப் பறித்தால் என்ன...நான் இருக்கின்றேன் உனக்கு எனது எல்லா சொத்தையும் தருகின்றேன்...என் ஆத்மார்த்த சிஷ்யன் நீதான்..."ஜி"....உன்னை நான் எடுக்கின்றேன் ஜாமீன்!

    என்ன கில்லர்ஜி ரெடியா....நித்தி வருகிறார்.....ஹாஹாஹா....

    அருமையான பதிவு......எல்லா ரௌடி சாமியார்களையும் வாரி எடுத்தது.....அது சரி பொதுவாக பெண்கள்தானே போய் ஏமாறுவார்கள்....எப்படி நீங்கள்...??!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  14. என்ன செய்ய ? பேராசை பெருநஷ்டம்.

    பதிலளிநீக்கு
  15. இப்பதிவு, பதிவு மட்டுமல்ல பாடமும்கூட. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. குத்தியானந்தா .....எதுவும் ஊர ரெண்டா ஆக்கலீயா ஜீ

    பதிலளிநீக்கு
  17. அதான் நான் அவரை ரெண்டாக்கிட்டேனே.... நண்பா....

    பதிலளிநீக்கு
  18. குத்தியானந்தா என்ற பெயர் வந்த காரணத்தை சொல்லுங்க கில்லர்ஜி,அதில் ஒரு கிரைம் ஸ்டோரியே இருக்கிறதா கேள்விபட்டேன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த ரகசியத்தை E-Mailலில், அனுப்புகிறேன்.

      நீக்கு
  19. இன்னைக்கித்தான் முதல் தடவையா உங்க தளத்துக்கு வந்தேன். நல்ல நகைசுவை உணர்வு உங்களுக்கு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைப்போன்ற மூத்தபதிவர்களின் வாழ்த்துக்கள் கிடைத்தால் ? நான் மேலும் நன்றாக எழுதுவேன் ஐயா, தொடந்து வரவும் நன்றி.

      நீக்கு
  20. வணக்கம் கில்லர்ஜீ !

    முத்திபெற வேண்டி முயலாத எல்லோர்க்கும்
    குத்தியா னந்தா குறைதீர்ப்பார் - சத்தியமே
    இல்லாத சாத்திரங்கள் சேர்ந்திழுக்கும் இவ்விடத்தில்
    பொல்லா வினைகள் பொழிந்து !

    போலிச் சாமியார்களை புரட்டி எடுத்து இருக்கீங்க
    அருமையா இருக்கு

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துக்கு நன்றி நண்பரே....

      நீக்கு
  21. எப்படீங்க ஜி இப்படியெல்லாம்... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சும்மா இருக்கும்போது... சும்மாக்காச்சுக்கும் யோசிச்சது.

      நீக்கு
  22. பலரும் உங்கள் தளத்தை தொடர்வதில் மிக்க மகிழ்ச்சி தோழர்...

    பதிலளிநீக்கு
  23. இதற்க்கு தாங்களும் ஒரு காரணம் ஜி நன்றி.

    பதிலளிநீக்கு
  24. " தனியறையில் சந்தித்தேன்... "

    அட பாவி மக்கா ! என்னா தைரியம் ?!

    மிக அருமையான பதிவுஜீ ! என்ன ஒண்ணு... எத்தனை குத்தியாநந்தாக்களால குத்துபட்டாலும் நம்ம மக்களோட கண்ணு திறக்க மாட்டெங்குதே !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : தமிழன் என்று சொல்லடா... தமிழில் பேசடா !

    http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post.html

    ( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம சனங்களோட அறிவுக்கண்ணை திறப்பது சாமானிய காரியமில்லை சாமானியரே....

      நீக்கு
  25. புத்தி கெட்டவர்களுக்குப் பாடம் புகட்டும் பதிவு.

    செம விறுவிறுப்பு.

    பதிலளிநீக்கு