தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜூலை 04, 2014

விஸ்வகர்மா

பண்டைய காலத்தில், விஸ்வகர்மாக்கள் எனப்படும் ஆச்சாரிகளால் விஞ்ஞானரீதியில், சிந்தித்து உருவாக்கப்பட்டு மனிதன் ஓட்டிக் காண்பித்த மூன்று சக்கர முதல் வாகனம் இதுதான், இதன் பிறகுதான், மன்னர்கள் போர்களுக்கு சென்றுவர தேர்களும், தெய்வங்கள் திருவிழாக்களில் வீதி உலாவர ரதங்களும், சந்தனக்கூடு இழுக்கும் தேர்களும் உருவாக்கப்பட்டது, அது மட்டுமல்ல இன்றைய... 

Abarth, Acura, Alfaromeo, Alvis, Ashok Leyland, Astonartin, Audi, Austin cooper, Bentley, BMW, Brabus, Bugatti, Buick, Cadillac, Chevrolet, Chrysler, Citroen, Cizeta, Corvette, Daewoo, Deronda, DeTomaso 2, Dodge, Elfin, Emgrand, Englon, Ferrari, Fiat, Ford, Geely, Gleagle, Gm, GMC, Holden, Honda, HUMMER, Hyundai, Infiniti, International, Invicta, Jaguar, Jeep, KIA, Koenigsegg, Lada, Lafayette, Lagonda, Lamborghini, Lancia, Lexus, Lincoln, Lotus, Marutisuzuki, Maserati, Mastretta, Mazda, Mercedes-Benz, Mercury, Mini, Mitsubishi, Morgan, Nissan, Opel, Pagani, Panoz, Pegaso, Peugeot, Pontiac, Porsche, Proton, Renault, Rolls-Royce, Rossion, Rover, Saab, Scion, Seat, Simca, Skoda, Smart, Spania GTA, Spyker, Subaru, Suzuki, Tata, Tesla, Toyota, Vauxhall, Vector, Venturi, Volkswagen, Volvo, Westfield, Wiesmann

போன்ற கார்கள் உருவாக பிள்ளையார்சுழி போடப்பட்டதும், இதன் மூலம்தான், நானும் கூட பிற்காலத்தில் உதவுமென, இதை ஓட்டிப்பார்த்த காரணத்தால்தான் சுலபமாக U.A.E யில், Driving License  எடுக்க முடிந்தது.

You Want See Big size Just Click One Time Photo Inside


Car's


45 கருத்துகள்:

  1. வணக்கம்
    உண்மைதான் பறவையைக்கண்டு விமானசெய்தான் என்பது போல நடைவண்டி கண்டு வானங்களை படைத்தான்.இன்று ஒவ்வொருவரையும் சிறிது சிந்திக்கவைக்கும் பதிவு அருமை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. இன்று ஒரு இனிய தகவல்..
    தங்களின் பொக்கிஷத்தில் இருந்து இன்னும் நிறைய தகவல்களைப் பகிரவும்..
    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக தங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவேன் ஐயா,

      நீக்கு
  3. சிறு அகவையில்
    நானோட்டிய மூன்று சில்லு ஊர்தியிலா
    நீரோடிப் பழகி
    ஓட்டுநர் அனுமதி ஏடு பெற்றீர்?
    சிந்திக்க வைக்கும்
    சிறந்த பதிவு நண்பா!

    பதிலளிநீக்கு
  4. நடைவண்டிக்கு இத்தனை சிறப்பா? பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், நண்பர் 'தளிர்' சுரேஷ் அவர்களே... இந்த வண்டி நமக்கு வெற்றி நடையை பழகி கொடுத்தது... ஆனால் இன்றைய தலைமுறைக்கு கிடைக்கவில்லை.

      நீக்கு
  5. இன்றைய தலை முறைக்கு கிடைக்கவில்லை. ஆம்..சரியாகச் சொன்னீர்கள்.

    விஸ்வகர்மாக்கள் - நம்மூதாதையர்கள். ரத்தினச் சுருக்கமாக அழகாக சொல்லி இருக்கிறீகள்.
    மறந்து போனது...
    நினைவில் வருகிறது...
    மூன்று சக்கரவாகனம்....!!!

    நன்றி.

    பதிலளிநீக்கு
  6. மிக அரிய படம். நானும் இதில் தான் பழகினேன்.
    பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரியபடம் உண்மைதான், ஆனால் இந்த அரிய பொக்கிஷங்கள் இப்பொழுது அழிந்து கொண்டு வருகிறதே... நண்பா.

      நீக்கு
  7. உண்மைதான் நண்பரே
    சிந்திக்க வைக்கும் பதிவு
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழமையை நினைவு கூர்வதில் ஒருசுகம் உண்டுதானே ஐயா.

      நீக்கு
  8. அதனால்தான் இந்த ஆச்சாரியார்கள் தங்களின் கடவுளாக பிரம்மனை கொண்டாடுகிறார்களா........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலம் கழிக்கு்ம் மானிடனையே, வணங்கும்போது... பிரம்மனை வணங்கினால் என்ன ? நண்பரே....

      நீக்கு
  9. சக்கரம் கண்டுபிடிக்கப் பட்ட பின் மனித குல வரலாற்றில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது என்று சொல்லவும் வேண்டுமா ?
    விக்கிப் பீடியா தரும் தகவல் >>>சில்லு மனித குல வரலாற்றில் மிக மிக முக்கியமான கண்டுபிடிப்பு ஆகும். 5000 ஆண்டுகளுக்கு முன்பு மொசெப்பொத்தேமியர்கள் இதனைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தத் தொடங்கியதாக நம்பப்படுகிறது.
    கில்லர் ஜி ,விஸ்வ கர்மாக்கள் ,மொசெப்பொத்தேமியர்கள் இந்த இருவரில் சக்கரத்தை கண்டு பிடித்தது யார் என்று நமக்கு எப்படி தெரியும் ?

    பதிலளிநீக்கு
  10. உண்மைதான் பகவான்ஜி, அந்த ''மொசெப்பொத்தேமியர்கள்'' பிற்கால சொல்வழக்கில் ''விஸ்வகர்மாக்கள்'' ஆனார்கள்,,, தமிழகம் தமிழ்நாடு ஆனதுபோல், வரலாற்றை தோண்டி எடுத்தமைக்கு நன்றி பகவானே.....

    பதிலளிநீக்கு
  11. நானும் உங்க கட்சிதான் ஜீ ! பிற்காலத்துல உதவும்ன்னு நடைவண்டி ஓட்டிதான் பிரான்ஸ்ல எடுத்தேன் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : தமிழன் என்று சொல்லடா... தமிழில் பேசடா !

    http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post.html

    ( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பரே, Office கிளம்பிவிட்டேன் வந்து படிப்பேன் மேலோட்டம் விட்டேன் அருமை.

      நீக்கு
  12. செய்திக்கொத்து அருமையாக இருந்தது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  13. ''செய்திக்கொத்து'' வித்யாசமான வார்த்தை நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  14. அந்த காலத்தில் நடை பழகும் குழந்தைகளுக்கான இந்த நடை வண்டி வீட்டுக்கு வீடு வாடிக்கையான ஒன்று ! நானும் சிறு வயதில் இதில்தான் நடை பழகியதாக என் அம்மா ௬றுவார்கள்! காலத்தின் மாற்றத்தில் இடவசதி குறைவு காரணமாக அந்த வண்டிகளும் காணாமல் போய் விட்டன.சூழ்நிலைக்கு தகுந்தபடி அனைத்தும் மாறித்தான், போய்விட்டது.
    நட்புடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி, நான் என்றுமே பழமையை விரும்பும் புதுமை சித்தன் சகோதரியே...

      நீக்கு
  15. கேள்வி பதிலில் என்னையும் சேர்த்து விட்டதில், என் புதிய பதிவு உருவானதிற்கு காரணமாயிருந்த உங்களுக்கு நன்றி சகோதரரே! உங்களுக்கு நேரமிருப்பின்,உங்களால் உருவான பதிவை வந்து பார்வையிட்டால் மகிழ்ச்சியடைவேன்.
    நட்புடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்துவிட்டு பின்னூட்டமிட்டுதான் வருகிறேன் சகோதரி.

      நீக்கு
    2. என்அழைப்பிற்கிணங்கி, என் பதிவை பார்வையிட்டு பின்னூட்டங்களால்,பாராட்டி வாழ்த்தியமைக்கு நன்றி சகோதரரே!
      நட்புடன்,
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  16. மண்ணியல் சிறுதேர் என்று தமிழிலும் மிருக்ஷ கடிகா என சமஸ்கிருதத்திலும் சொல்லப்பட்ட நடைவண்டி..................
    பிள்ளைத்தமிழ் என்னும் இலக்கியத்தில் சிறுதேர் உருட்டி விளையாடும் பிள்ளைக்கு ஒரு பருவமே உண்டு.........
    நம் சங்கப் பாடல்களில் “எண்டேர் செய்யும் தச்சன்“ என்பது விஸ்வகர்மாக்கள் பற்றிய குறிப்பாக இருக்கலாம்.
    தங்கள் பதிவு பல விடயங்களை நினைக்கத் தூண்டுகிறது.
    நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்காக, தாங்கள் சங்கப்பாடலை எடுத்து வைத்தமைக்கு சிறப்பான நன்றிகள் நண்பரே....

      நீக்கு
  17. ஹாஹாஹா...//நானும் கூட பிற்காலத்தில் உதவுமென ஓட்டிப் பார்த்தபிறகுதான் ......லைசன்ஸ் வாங்க...// மிகவும் ரசித்தோம் இந்த வரிகளை! ஜி!

    பழந்தமிழர்கள்/நமது மூதாதையர் நிறைய விஞ்ஞானத்தில் கண்டுபிடித்ததுதான் இன்று நாம் நவீனமாக உபயோகிப்பது! அதற்கான ஆதாரங்களுடன் புத்தகங்கள் நூலகத்தில் உள்ளன! வாசிக்க நேர்ந்தது! திருமூலர் திருமந்திரத்தில், வானியல் விளக்கங்கள் மட்டுமல்ல, நமது உடல் சார்ந்த விஞ்ஞானங்களும், மருத்துவமே பேசப்படுகின்றது. அது போல மாணிக்கவாசகரின் திருவாசகத்திலும், போகர் சித்தரின் 7000 லும் மருத்துவம் நிறைய பேசப்படுகின்றது. அவற்றை எல்லாம் பிரித்து அறியப்படவேண்டும்.

    ரசித்தோம் உங்கள் பதிவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு கொசுருவாக இருக்கட்டுமே, என்றுதான் இந்த பதிவை இட்டேன் இத்தனை தூரம் ரசனைக்குறியதாக இருக்குமென நான் நினைக்கவில்லை வருகைக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  18. இப்போதுதான் உங்கள் தளம் வருகிறேன் .. அருமையான தகவல்கள் நன்றி

    பதிலளிநீக்கு
  19. முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.ராஜபாட்டை-ராஜா.

    பதிலளிநீக்கு
  20. உங்கள் வார்த்தைகளுக்கு நன்றிஜீ !

    ஆனால் ஒன்று... நிச்சயம் நீங்கள் உங்கள் பதிவையும் வெளியிட வேண்டும். கரு வேண்டுமானால் ஒன்றாக இருக்கலாம் நண்பரே... ஆனால் உங்களின் கண்ணோட்டம் நிச்சயம் வேறுபடும். உங்கள் பாணியில் சிறப்பாக அமையும். இதுதான் வலைப்பூக்களின் பலமும் கூட ! உங்கள் பதிவை படிக்க ஆவலாக உள்ளேன்.

    மற்றொரு இந்திய மொழியாக ‍ஹிந்தியை ஆதரிப்பதிலோ, கற்றுக்கொள்வதிலோ குறையொன்றும் இல்லை நண்பரே ! ஆனால் அந்த ஒரு மொழிக்காக நாட்டின் மற்ற அத்தனை மொழிகளையும் காவு கொடுக்க நினைப்பதில்தான் பிரச்சனை தொடங்குகிறது ! மேலும் நமது ஆங்கில மோகம் !!!

    அதுசரி... பின்னூட்டத்தின் கடைசியில் ஏதோ கண்டபடி திட்டியிருக்கீங்களே... அதை கொஞ்சம் தமிழ்ல சொல்லுங்கஜீ !

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா, தங்களை திட்டியிருப்பேன் என்று நினைக்கிரீர்களா ?

      நீக்கு
  21. தங்களின் முதல் வருகைக்கு நன்றி டோக்டர்.

    பதிலளிநீக்கு
  22. அப்படியா. இது எப்படித் தெரியும்.

    பதிலளிநீக்கு
  23. எதைக்கேட்கிறீர்கள் ?

    பதிலளிநீக்கு
  24. உங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில் பாராட்டப்பட்டுள்ளது .
    இணைப்பு http://blogintamil.blogspot.in/2014/08/blog-post_10.html
    வாழ்த்துக்கள்.....

    பதிலளிநீக்கு