தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஆகஸ்ட் 20, 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014

எனக்கும் ஆசை கவிப்போட்டிக்கு அனுப்பினேன்,
கவியிரண்டு சென்று வா ! மகளே
வென்றும் வா ! அழகாய்....
வழியில் நான் விழியில் நீ வர....
 
அன்புடன்.
KILLERGEE
Abu Dhabi.
 
To, துபாய், துணைவன் துரைச்சாமி.
 
கனவாய், வந்தாய் கணவா ! நினைவால், நின்றேன் சிலையாய்
தனலாய், கொதிக்கும் கதியில் என்னை, தவிக்க விடுவது சதியே !
 
பங்குனிமாத, தங்கவந்த கனியே ! என்னைபங்கு, கொள்ளும் மணியே !
தங்கமும், தந்தாய் கனிவாய் ! ஏங்கவும், செய்தாய் பனிவாய் !
 
வீரமுள்ள, என்னவரே வீறுகொண்டு எழுந்திருந்தாய்
விசாமுடியும், காரணத்தால் விரைந்து, விட்டாய் என்னைவிட்டு
 
தேசம்விட்டு, சென்ற கணவா ! என்தேகத்தை, என்றும் மறவா !
பணமா வாழ்க்கை பதியே வாட்டுது என்னை விதியே
 
உயிராய், நினைப்பேன் உனையே உழைத்தது, போதும் துணையே
திரும்பிவிடு, திணைக்கரும்பே ! திகட்டவில்லை, உன்குறும்பே !
 
என்னருகே, நீ இழைந்து குடித்த, கூழும் குளிர்ந்ததய்யா !
பிரிந்திருந்து, நீ உழைத்ததினால் பிரியாணியும், பித்தமய்யா !
 
குடிசையிலே, குதூகளித்தோம் மார்கழியில், நான் மாசமய்யா !
ஏசி வீட்டினிலும், குடியிருக்கோம் எல்லா, மாசமும் தோஷமய்யா !
 
வந்துவிடு, வசந்தகாற்றே நாம் வளமுடனே, வாழ்ந்திடவே
போய்விடுவோம், குடிசைக்கே குதூகளிப்போம், குடும்பத்துடன்.....
 
குலவிளக்கை, ஏற்றிடவே வம்சவிளக்கை, வளர்த்திடவே
மனவிலக்கை, உடைத்துவிடு மலர்க்கனையை, விதைத்துவிடு
 
என்விழியை, உனக்காக நீ வரும் வழியில், நிறுத்தி வைத்து
கடைசி வரை, காத்திருக்கும் கடையநல்லூர், காஞ்சனா.
 
* * * * * * * * * * * * *
 
 
வாழ்ந்தேன் 25 வகை.
 
உங்களிடம், எனது கதையளக்க வந்தேன்...
ஒருகாலத்தில், நானும் காதலித்து இருந்தேன்...
முதலில், நான்தான் அவளை பார்த்தேன்...
அவளிடம், காதலை சொல்ல நினைத்தேன்...
அதற்கு, நான் எனது வாயை திறந்தேன்...
சட்டென, எனது நாவை கடித்தேன்...
வேண்டாமென, வயலினால் இசைத்தேன்...
நாதத்தால், வார்த்தையை உரைத்தேன்...
அவளின், எண்ணங்களை படித்தேன்...
இடை''யே, அவளையும் ரசித்தேன்...
அவளது, பார்வையால் மலைத்தேன்...
இருப்பினும், பார்வையை வளைத்தேன்...
கண்களால், மென்மையாக சிரித்தேன்...
மனதுக்குள், அவளை புசித்தேன்...
திடீரென, கொடூரமானாள் அதிர்ந்தேன்...
அவள், உதிர்த்த வார்த்தையால் மடிந்தேன்...
தினம் நினைத்து, நினைத்து நொந்தேன்...
மனதுக்குள், வலியால் துடித்தேன்...
உணர்வு, மரத்து என்னைநானே அசைத்தேன்...
மனச்சுமையால், மலைத்து களைத்தேன்...
அவள், நினைவுகளால், சருகாய் உதிர்ந்தேன்...
நடந்ததை, வெளியே சொல்லாமல் மறைத்தேன்...
இப்போது, குடியால் அவளை மறந்தேன்...
குடிக்காக, எனது வீட்டையும் தொலைத்தேன்...
அவளால், குடியாகி ஒருநாள் இறந்தேன்...
 
Video
(Please ask Audio Voice)


89 கருத்துகள்:

  1. வணக்கம்
    அண்ணா.
    தங்களின் கவிதை படிப்பதற்கு நன்றாக உள்ளது தற்போது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெறஎனது வாழ்த்துக்கள்.
    இப்படி தலைபிட வேண்டும் .
    தீபாவளித் திருநாளை முன்னிட்டு
    ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
    உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. தலைப்பை மாற்றி விட்டேன் நண்பரே, வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வழக்கம் போல இதிலும் வித்தியாசப்படுத்திவிட்டீர்கள் நண்பா! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. கவிதை சூப்பரா வருதே. அப்புறம் என்ன வார்த்தைகளும் சரி வரிகளும் சரி. ஆழமான பொருளையும் அள்ளித் தருகிறதே. அன்பின் ஏக்கம் பிரிவின் துயரம் அப்பப்பா எவ்வளவு அனைத்தையும் சுமந்து வந்த அழகிய கவிதை சகோ. இனி தொடருங்கள் நிறைய கவிதை வடியுங்கள் சகோ தயங்காமல்.
    போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆழ்ந்து படித்தமைக்கும், வாழ்த்துக்களுக்கும், நன்றி.

      நீக்கு
  5. கடைய நல்லூர் காஞ்சனாவின் எண்ணம் கடைந்தேற கணவன் துரைச்சாமி சீக்கிரம் வந்தா தேவலே !

    தேனாய் இனிக்க வேண்டிய வாழ்க்கையை இப்படி இறந்தேனாய் ஆக்கிவிட்டாளே!
    போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  7. வித்தியாசமான கவிதை
    அருமை நண்பரே
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் சித்தம் என்பாக்கியம் நண்பரே...

      நீக்கு
  8. சகோ ரெண்டு கவிதையும் அருமையான முயற்சி! வெற்றிபெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. நண்பரே! இரு கவிதைகளும் அருமையாக உள்ளன! வித்தியாசமானதாகவும் உள்ளன.....ஓ போட்டிக் கவிதைகளா?!!! வாழ்த்துக்கள் நண்பரே வெற்றி பெற!

    பதிலளிநீக்கு
  10. தங்களின் (துளசியின் வாசம்) ஆசியே ஒரு வெற்றிதானே நண்பரே...

    பதிலளிநீக்கு
  11. கவிதைகள் இரண்டும் காரமாக இருக்கின்றன..
    வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறிய இடைவெளிக்குபின் தங்களது வாழ்த்து கிடைத்தமைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  12. இத்தனை சிறந்த பாத்திறம்
    தங்களிடம் இருப்பதை
    ரூபன் குழுவினரின் போட்டி
    அரங்கேற்றியிருக்கிறதே!
    சிறந்த பதிவு - முடிவு
    நடுவர்களின் கையில் இருக்கிறதே!
    வெற்றி பெற வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கவிதை படைக்க காரணமாயிருந்த தங்களுக்கும் நன்றி நண்பரே...

      நீக்கு
  13. ஆசை இருக்கு கவிதை எழுத.....ஆனா...அதிர்ஷடம்முனு ஒன்னு இல்லையே தலைவா.....எனக்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முயற்சி திருவினையாக்கும், முயற்சியின்மை தெருமுனையாக்கும், வெற்றி பெற்றால் திருவினையில் நிற்போம், இல்லாவிடில் தெருமுனையிலாவது நிற்போம்.

      நீக்கு
  14. ஆட்டகாசமாக கவிதை தங்களுக்கு கைகூடி வருகிறது.

    அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

    நிறைய கவிதைகள் வடியுங்கள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக இனி க(வி)தை களையும் காணலாம்.

      நீக்கு
  15. அன்பின் கில்லர்ஜீ - இரணடு கவிதைகளூம் அருமை - நன்று நன்று - போட்டியில் வெற்றி பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா தங்களின் வருகையும், கருத்துரையுமே எமக்கு ஒரு வெற்றிதான், நன்றி.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே!
    கருத்துடன்,௬டிய இருகவிதைகளும் மிகவும் அருமையாக இருந்தது.
    போட்டியில் வெற்றி பெறும் இவ்விரு கவிதைகளுக்குக்கும், கவிதைகளை வடித்த தங்களுக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
    நட்புடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனப்பூர்வமான வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி, சிறிய வருத்தம் தாங்கள் அவ்வப்போது மட்டுமே வருகை தருவது.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே!
      நான் தங்கள் வலைத்தளத்திற்கு அவ்வப்போது வருகை தருவதற்கு மன்னிக்கவும். இனி அவசியம் தங்கள் பதிவுகளை உடனுக்குடன் தொடர்கிறேன். மற்றவை ஆண்டவன் செயல்! தற்சமயம் நானும், சகோதரர் ரூபன் வெளியிட்ட கவிதைப்போட்டிக்கு, இரு கவிதைகளை (கவிதை என்ற பெயரில்) (என் பாணியில்) ஏதோ எழுதி வெளியிட்டு உள்ளேன். தங்களுக்கு நேரமிருப்பின், என் தளத்திற்கு வந்து பார்த்துக்கருத்துச் சொன்னால், (தங்கள் பாணியில்,“தேறுமா”?) மகிழ்ச்சியடைவேன்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி
      கண்டேன் கவிதையை,,,
      உண்டேன் கவிச்சுவையை,,
      சகோதரி நடுவர்களுக்கு இணைப்பை அனுப்பி விட்டீர்களா ?

      நீக்கு
    4. வணக்கம் சகோதரரே!

      என் தளத்தினில், நான் கேட்டுக்கொண்டதற்கிணங்கி என் இருகவிதைகளையும், தங்கள் வேலையின் நடுவிலும், சிரமம் பாராது வந்து பார்வையிட்டு, தங்கள் கருந்துக்களையே ஒரு கவியாக்கி, சிறப்பான முறையில் வாழ்த்தியமைக்கு, என் சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
      நடுவர்களுக்கு, மின்னஞ்சல்களின் வாயிலாக கவிதை பற்றிய விபரங்களை, தெரிவித்து விட்டேன் சகோதரரே..!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  17. அருமையான வரிகள் வலிகளை தாங்கி...வெற்றிபெற..வாழ்த்துக்கள் சகோதரரே.

    பதிலளிநீக்கு
  18. மிக்க நன்றி சகோதரரே...

    பதிலளிநீக்கு
  19. எத்தனை இலகுவாகச் சொற்களைச் சுழற்றிப் போட்டுக்
    கவிதை வடித்துள்ளீர்கள் சகோதரரே!

    இரண்டு கவிதைகளும் அருமை! உங்களுக்கு எழுத வராதென்று
    சொன்னதெல்லாம் சும்மாதானே!..:)

    வெற்றி பெற உளமார வாழ்த்துகிறேன் சகோதரரே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உளமார வாழ்த்தியமைக்கு உள்ளன்புடன் நன்றி.

      நீக்கு

  20. படித் தேன்!
    ரசித்தேன்!
    உங்கள் கவி தேன்!
    வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  21. தேறும்னு ஆறுதலா மூணு வார்த்தை முத்தாய் சொன்னதற்க்கு நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  22. இரண்டு கவிதைகள் மூலம் இரு வேறு கதைகளை சொல்லுகின்ற பாங்கு அருமை. முதல் கவிதை பிரிவின் கொடுமையை சொல்கிறது என்றால் இரண்டாம் கவிதையோ உயிர் பிரிந்ததை சொல்கிறது. இரண்டும் வெவ்வேறு பரிமாணத்தில் உள்ளன. நீங்கள் கவிஞர் கண்ணதாசன் ஊரை சேர்ந்தவர் அல்லவா. அதனால் தான் ‘பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்’ என அவர் எழுதியதுபோல வந்தேன், இருந்தேன், பார்த்தேன், நினைத்தேன், என தொடுத்திருக்கிறீர்கள். நானும் இரசித்தேன்.

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்து ரசித்தமைக்கும், வாழ்த்தியமைக்கும் நன்றி நண்பரே...
      கண்ணதாசன் இளவயதில் தங்கிபடித்த குருகுலம் ''அமராவதி புதூர்'' தேவகோட்டையில்தான் இருக்கிறது.

      நீக்கு
  23. //தேசம் விட்டுச் சென்ற கணவா என் தேகத்தை என்றும் மறவா
    பணமா வாழ்க்கை, பதியே வாட்டுது என்னை விதியே//

    கவிதையின் உயிர்நாடியான வரிகள்.

    கடையநல்லூர் காஞ்சனாவின் கண்ணீரில் வடித்தெடுத்த உருக்கமான கவிதை.

    பரிசு பெற வாழ்த்துகள் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உயிர் நாடியான வரிகளை சரியாக சொன்னீர்கள் நண்பா.. எனக்கு(ம்) பிடித்தவையே... நன்றி.

      நீக்கு
  24. கில்லர்ஜி

    கவிதை நன்றாக இருக்கிறது.
    வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அம்மா.

      நீக்கு
  25. கவிதையிலும் கலக்குகிறீர்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  26. முதல் கவிதையில், சங்க இலக்கியங்கள் உணர்த்தும்
    “வினையே ஆடவர்க்கு உயிரே” என்ற கோட்பாட்டினையும், “அவன் போருக்குப் போனான் நான் போர்க்களம் ஆனேன்” என்ற காதல் கருத்தினையும் எடுத்தியம்பியது. (கவிதைகளை எழுதும்போது நீண்ட வரிகளாக அமைக்காதீர்கள். )

    உங்கள் கவிதையைப் பற்றி சொல்வதானால் படித்தேன்! சுவைத்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரையை ஏற்றுக்கொள்கிறேன் ஐயா, கவிதையை 20 வரிகளில் முடிக்க வேண்டும் என்பது போட்டியின் விதிமுறை கவிதை நீளமாக போன காரணத்தால் இரட்டையாக சேர்த்து விட்டேன்,
      வருகைக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  27. கவிதை நன்றாக இருக்கிறது...
    வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பரே,,,,

      நீக்கு
  28. வித்தியாசமான அருமையான கவிதை
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  29. தங்களின் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  30. முதல் கவிதை நன்றாக உள்ளது நண்பரே! ஆனால், சீர் பிரித்தலிலும், காற்புள்ளி இடுவதிலும் பிழைகள் உள்ளன என்பதைப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஆனாலும் கவிதை நன்று! மேலும், கவிதை என்றாலே எல்லோரும் புதுக்கவிதை மட்டுமே எழுதும் இக்காலத்தில் நீங்கள் அந்த முதல் கவிதையை மரபு வழியில் படைத்திருப்பது பாராட்டத்தக்கத்து. தொடர்ந்து எழுதுங்கள்! போட்டிகளுக்காக அன்றி, தொடர்ச்சியாக எழுதிக் கொண்டே இருங்கள்! ஒரே ஆண்டில் பெருத்த முன்னேற்றத்தை நீங்கள் உணரலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கும், ஆலோசனைக்கும், தவறுகளை சுட்டிக்காட்டியமைக்கும் மிக்க நன்றி நண்பரே... முயற்சிக்கிறேன்.

      நீக்கு
  31. கவிதை போட்டியில் வெற்றி பெற அன்புவின் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  32. எளிமையான வார்த்தைகளில் வரிகள் கோர்த்த விதம் வெகு சிறப்பு.
    வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி பாண்டியரே....

      நீக்கு
  33. நண்பா இரு கவிதைகளுமே அருமை, போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  34. தங்களின் வாழ்த்து எமக்கு ''கும்''மென்று உற்சாகப்படுத்துகிறது நண்பா....

    பதிலளிநீக்கு
  35. பிரிவுத் துயரம் வெளிப்படுகிறது கவிதையில். இன்னொருக் கவிதை உங்களின் சமுதாய அக்கறையைக் கட்டுகிறது. மிக அருமையானக் கவிதை.நிறையத் தளங்களில் காதல் கவிதைப் படிக்க கிடைக்கிறது .
    உங்கள் கவிதைக்கு பாராட்டுக்கள் கில்லர்ஜி. போட்டியில் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.....
    கவிதைகள் மனத்தைக் கணக்க செய்தது உண்மை. ஆனால் காணொளி சட்டென்று புன்னகையை வரவழைத்து விட்டது. அதற்காக ஸ்பெஷல் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி அம்மா, காணொளிக்காக நான் அதிக சிரத்தை எடுக்கிறேன் ஆனால் ? அதனைக்குறித்து யாருமே எழுதுவதில்லை இதனால் இனி காணொளிகள் வேண்டாமென நினைத்தபோது தங்களிடமிருந்து ஸ்பெஷல் வாழ்த்து தேன் தேன் மகிழ்தேன் அம்மா.

      நீக்கு
  36. காஞ்சனாவின் ஏக்கக் கவிதை அருமை சகோ..பிரியாணியும் பித்தமாகிப் போச்சே..சூப்பர்.
    அடுத்த கவிதையும் இனிமையான தேன். போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேன்மதுரத்தமிழிடமிருந்து.... பாராட்டு மழையா ? தேன் தேன் குளி(ர்ந்)த்தேன். வருகைக்கு நன்றி சகோதரி.

      நீக்கு
  37. மீசைக்கார நண்பா... உனக்கு தேகமெல்லாம் ஆசையோ? அருமையான கவிதை. திருமணமான பின் முதல் மாதத்திலேயே மனைவியை இரண்டு வாரம் விசா பிரச்சனையால் தனியே விட்டு விட்டு வந்தது நினைவிற்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குசும்புக்கார நண்பா.... தங்களின் முதல் வருகைக்கு வந்தனம், எனது ஆசையை ஆகஸ்ட் 30 ல் வெளிவரும் ''மௌனமொழி'' என்ற கவிதையை படியுங்கள் நண்பரே வருகைக்கு மீண்டும் நன்றி.

      நீக்கு
  38. முயற்சி திருவினையாக்கும் என்ற தங்களின் கூற்றுப்படி கவிதை போட்டிக்கு கவிதை எழுத முயன்று கொண்டு இருக்கிறேன் நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது கூற்றால் கவிதைக்கீற்று கோர்க்கப் போகும் தங்களின் கூற்று வெற்றியடைய இப்பொழுதே எனது வாழ்த்துக்கள் நண்பா,,,, தயங்காதீர் வெற்றி உமதே...

      நீக்கு
  39. வணக்கம் சகோதரரே!

    வலைச்சரத்தில் என் வலைத்தள அறிமுகத்தை அறியச்செய்தமைக்கு என் மனப்பூர்வமான நன்றிகள் சகோதரரே..!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  40. கடமையை செய் பலனை எதிர் பார்க்காதே...
    பலனும், கிடைக்கிறதே....

    பதிலளிநீக்கு
  41. தங்களின் முயற்சியைப் பாராட்டியே தீர வேண்டும் ¨!சிறப்பான வரிகள் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் சகோதரா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் மனம் நிறைந்த பாராட்டிற்க்கும், வாழ்த்தியமைக்கும் நன்றி சகோதரி.

      நீக்கு
    2. ரெண்டுமே நச் - இருவேறு ரகம்! வெற்றி பெற எனது வாழ்த்துகளை தந்தேன்! அன்புடன் ரவிஜி

      நீக்கு
    3. ரவிஜி அவர்களுக்கு கில்லர்ஜி in நன்றி.

      நீக்கு
  42. அடடா அடடா பாட்டு பாட்டு ! சுப்பர் ஆ இருக்கு கில்லர் ஜி

    வாழ்த்துக்கள் போட்டியில் வெற்றி பெற !

    பதிலளிநீக்கு
  43. கவிமுகம் இத்தனை நாட்களாய் எங்கே சென்றது ஐயா.. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தாமதமான வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  44. வெற்றி பெறுவதற்கு முன்பே நிறைய வாழ்த்தை பெற்றாகிவிட்டது.
    இதுவே கவிதைக்கு கிடைத்த வெற்றிதான் கில்லர்ஜி!
    வாழ்த்துகள்!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் தோழரே தாங்கள் சொல்வது அப்படித்தான் உணர்கின்றேன்.

      நீக்கு
  45. பதில்கள்
    1. ராஜபாட்டை - ராஜா அவர்களுக்கு வந்தனம், என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி தகவல் கொடுத்தமைக்கும் நன்றி நண்பரே...

      நீக்கு
  46. ஆஹா, வித்தியாசமான கவிதைகள்.
    அதுவும் அந்த இரண்டாவது கவிதை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.
    போட்டியில் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  47. மனம் நிறைந்து வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே.....

    பதிலளிநீக்கு
  48. வணக்கம் சகோதரரே!

    நேற்றைய (03.09.2014) வலைச்சரத்தில் தங்கள் வலைத்தள அறிமுகத்தையும் கண்டேன். என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் சகோதரரே..!

    வாழ்த்துக்களுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  49. வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி.

    பதிலளிநீக்கு
  50. வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதற்கு வாழ்த்துக்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் வந்து வாழ்த்தியமைக்கு நன்றி நண்பா....

      நீக்கு
  51. பெயரில்லா9/09/2014 2:29 AM

    அருமை வித்தியாசமான கவிச்சுவை ரசித்தேன்
    வெற்றிபெற இனிய வாழ்த்து.
    உடனே வர முடியவில்லை.
    இன்று எட்டிவிட்டேன்
    பணி தொடர வாழ்த்துடன்
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் எட்டிப் பார்த்து ரசித்ததைவிட ஒரு வெற்றியுமுண்டோ.... நன்றி.

      நீக்கு
  52. ஆத்தீ... பல திறமையுடைய அண்ணனின் உறவு கிடைத்ததற்கு பெருமகிழ்ச்சியடைகிறேன். என்ன ...!அழகா எழுதுறிங்க. அசத்திட்டிங்க. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். ஒரு புத்தகம் வாசித்த மகிழ்வு கிடைத்தது.

    பதிலளிநீக்கு