தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஆகஸ்ட் 08, 2014

FANTASTIC FRANCE

You Want See Big size ? Just Click One Time Photo Inside.
பிரான்ஸ் தலைநகரம் பாரீஸில், நண்பர் பிரபு கண்ணுச்சாமியின் வீட்டில் தங்கினேன், வாழ்வில் மறக்க கூடாத உதவியாளர். 

பிரான்ஸில், நான் மட்டுமே புகைப்படக்கருவியுடன், சுற்றியதால் பெரும்பாலான சித்திரங்களும், காட்சிகளும் நானிலில்லாமல்... நான் கண்டு ரசித்தவை உங்கள் விழிகளுக்கும்... 

பாரீஸ் கோபுரத்தின் உச்சிக்கு தொங்கு பெட்டியில் சென்றுவர, 14.00 யூரோ வசூலிக்கிறார்கள், இதில் இரண்டு நிலைவரை படியில் ஏறிபோய் தொங்கு பெட்டியில் சென்றுவர, 8.50 யூரோ வசூலிக்கிறார்கள், மேலும் ஊனமுற்றோர்களுக்கு கூடுதல் சலுகைகளும் உண்டு. 

பழமை வாய்ந்த கட்டிடங்களை பாதுகாத்து வருகிறார்கள், பெரும்பாலும் இடித்து விடாமல், உள்ளுக்குள்ளேயே புதிய நவீனங்களை புகுத்தி விடுவதுதான் இவர்களின் சிறப்பம்சம். 

பெரும்பாலும் ஆறு நிலைகளுக்கும் கீழான கட்டிடங்கள்தான் அதிகமாக காணப்படுகின்றன. 

புகைவண்டி போக்குவரத்து என்னைப் போன்ற பாமரனுக்கும், புரியும் வகையில் வழிவகை செய்து இருக்கிறார்கள்.

பிரயாணச்சீட்டு 6.50 யூரோவுக்கு எடுத்துக் கொண்டால், ஒருநாள் முழுவதும் உபயோகப்படுத்தி, எங்கும் எத்தனை முறையும் சென்று வரலாம், 

பயணிக்கும் போதே அடுத்த நிலையத்தில் நாம் இறங்க வேண்டியது இடதுபுறமா, அல்லது வலதுபுறமா, என்பதை ஒலிபெருக்கியில் ப்ரெஞ்சு மொழியில் அறிவித்து விடுகிறார்கள், இதனால் பயணிகள் இறங்கத் தயாராகி விடுகிறார்கள், நிலையம் வந்ததும் தாணியங்கி கதவுகள் திறக்க, ஒரு வினாடியில் பயணிகள் இறங்கி, மறு வினாடியில் பயணிகள் ஏறி, அடுத்த வினாடியில் வண்டி புறப்பட்டு விடுகிறது.

எல்லோருமே, எப்போதுமே சுறுசுறுப்புடன் செயல்படுகிறார்கள், நம்மூரிலுள்ள வாழைபழ சோம்பேறிகள் வந்தால் அவர்களுக்கு சிரமமாகத்தான் இருக்கும். 

எனக்கு ஆச்சர்யமான விசயம் என்னவென்றால் சுரங்கப்பாதையில் ஓடும் புகைவண்டிகள், நான்கு திசைகளிலும் செல்கிறது மேலே நகரம், இது எப்படி சாத்தியம் ? 

அதுவும் இதை புகைவண்டி கண்டு பிடித்த ஆண்டுகளிலேயே அமைக்கத் தொடங்கி விட்டார்கள், இதிலிருந்து நான் தெரிந்து கொண்டது நாம் எவ்வளவு தூரம் பின்தங்கி இருக்கிறோம் ? 

தொலைதூர புகைவண்டிகளின் சக்கரங்கள் நமது ஊரைப் போலவே இருக்கிறது. 

உள்ளுக்குள்ளேயே, அதாவது சுரங்கப்பாதையில், ஓடும் புகைவண்டியில் இரும்பு சக்கரத்துடன் பேருந்தில் உள்ள ரப்பர் சக்கரங்களையும் பொருத்தி உள்ளார்கள், இதனால் பயணிகளுக்கு இது அதிகமாக இறைச்சல் கொடுப்பதில்லை.

நான், வியந்த ஓவியமே, நல்ல கலைக்காவியமே...
கோபுரத்தின் உச்சியில், எனது இந்தியாவைப்பற்றி....

மனிதன் எப்படி, எப்படியோ, முடிவில் இப்படி. 




போட்டோ, எடுக்க போட்டா போட்டி.

காவலர் விரைவூர்தி.
My, Great Indian Train from My Sweet India.

குறிப்பு – நம் இந்தியாவில், இருப்புப் பாதைக்காண திட்டம் 1832 ஆம் ஆண்டில் வரையப்பட்டது, 1836 ரில் முதல் இருப்புப்பாதை தற்போதைய, சென்னையின் சிந்தாரிப்பேட்டை பாலம் அருகே சோதனை ஓட்டமாக அமைக்கப்பட்டது.

1837 லில் செங்குன்றம் ஏரிக்கும், செயின்ட் தாமஸ் மவுண்ட்டின் (பரங்கிமலை) கற்சுரங்களுக்கும் இடையே 56 கி.மீ. (35 மைல்) தொலைவிற்கு நிறுவப்பட்டது. 

1844-லில் அப்போதைய கவர்னர் ஜெனரல் Enry Artinge தனியார் துறையினரும் இருப்புப் பாதைகள் அமைக்க அனுமதித்தார்.

1853 April 16 முதல் பயணிகள் போக்குவரத்து தொடர்வண்டி மும்பையின் போரிபந்தருக்கும், தானேக்கும் இடையே 36 கி.மீ. (21மைல்) தொலைவிற்கு இயக்கப்பட்டது.

காணொளி
  
F.P- 19 Nov 2012

50 கருத்துகள்:

  1. சூப்பர் கில்லர் ஜி! உலகம் சுற்றும் வாலிபனாகிட்டீங்களோ?!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறிய திருத்தம் நண்பரே... உலகம் சுற்றும் பாமரன்.

      நீக்கு
  2. காமெராவும் கையுமா அலையரீங்கனு சொல்லுங்க...படங்கல் அருமை ஜி! பயணம் பற்றிச் சொல்லியதும் உட்பட...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Camera என்றுமே என்னை பிரியாத நண்பன்தான். வருகைக்கு நன்றி. Photo's இன்னும் வரும்.... France Part - 2

      நீக்கு
  3. அழகிய படங்களுடன் பகிர்வு அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பர் திரு. ‘’தளிர்’’ சுரேஷ்.அவர்களே...

      நீக்கு
  4. அனுபவப் பகிர்வு அருமையாய் இருக்கிறது நண்பரே!
    தொடருங்கள்!
    நன்றி

    பதிலளிநீக்கு
  5. இன்னும் நிறையப் படங்கள் போட்டிருக்கலாமே!

    பதிலளிநீக்கு
  6. படங்கள் அனைத்தும் அருமை நண்பரே
    மீசையை மாற்றிவிட்டீர்களா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் இன்னும் வரும். பயணம் 2012 ல் நண்பரே....

      நீக்கு
  7. படங்களும் பகிர்வும்
    நன்றாக அமைந்திருக்கிறது
    தொடருங்கள்

    பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
    http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பரே...
      பாபுனைய என்னாலும் முடியுமோ ? முயற்சிக்கிறேன்.

      நீக்கு
  8. புகைப் படங்கள் அருமை ,முக்கியமாக அந்த இளம்தம்பதிகள் படம் !எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்,அவர்களுக்கு இப்போ பிள்ளை பிறந்து இருக்கும்தானே ?ஏன் கேட்டேன் என்றால் படங்கள் அனைத்திலும் இரண்டாண்டுகளுக்கு முந்தைய தேதி உள்ளதே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க கணக்கு மிகச்சரி பகவான்ஜி அவங்களுக்கு கல்யாணமாகி 2 குழந்தை பிறந்து விவாகரத்தும் ஆகிப்போச்சாம் நான் போனதே 2012 ல்தானே...

      நீக்கு
  9. காட்சிகளும் கலைவண்ணங்களும் அருமை!
    படங்களைப் பார்க்க இங்கு
    பகிர்ந்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றியுடன்
    வாழ்த்துக்களும் சகோதரரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி சகோதரி படங்கள் இன்னும் வரும்.

      நீக்கு
  10. பிரான்ஸ் நகர் உங்க கமெராவில் கவிதையாய் இருக்கு அண்ணா! அருமையா இருக்கு! பார்ட் டூ போட்டோக்களுக்காக வெய்டிங்:))

    பதிலளிநீக்கு
  11. உலகம் சுற்றிய கில்லர்ஜீ... தன் அனுபவங்களையும் படக்காட்சிகளையும் பகிர்ந்தமைக்கு நன்றி! இனி எதற்க்கு நான் பிரான்ஸ் சுத்திப்பாக்க... கில்லர்ஜீ பதிவ பாத்தா சுத்தி பார்த்ததுதானே அர்த்தம்.......சுத்திப்பாத்துட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் பொருங்க நண்பரே... நீங்க பார்ப்பதற்க்கு இன்னும் எவ்வளவோ இருக்கே...

      நீக்கு
  12. நல்லதொரு பயணக்கட்டுரை. (உங்கள் பெயரை எழுத ஒரு மாதிரி இருக்கிறது - கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்களேன், ப்ளீஸ்)

    எனக்கும்கூட பாரீஸ் போய் லூவர் அருங்காட்சியகம் பார்க்கவேண்டும் - குறிப்பாக அந்த மோனாலிசா ஓவியம். டாவின்சி கோட் புத்தகம் படித்ததிலிருந்து இந்த ஆசை. நேரில் பார்த்தால் நாம் நினைக்கும் அளவிற்கு இல்லை என்கிறார்கள்.
    கட்டுரையின் முடிவில் நம் இந்திய ரயில்வே பற்றிய குறிப்பும் நன்றாக இருக்கிறது.
    பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கு நன்றி அம்மா, மற்றவரிலிருந்து நான் முற்றிலும் வேறுபட்டவன் ஆகவே பெயர் மாற்ற முடியாமைக்கு மன்னிக்கவும் எனது பதிவை தொடர்ந்தால் தங்களுக்கே புரியும். நமது நாட்டு ரயில்வே குறிப்பு குழந்தைகளுக்கு உபயோகமாக இருக்குமென நினைத்தேன் தாங்கள் அதனைக்குறித்து எழுதியமைக்கு மிக்க மகிழ்ச்சி. நாளை காண்க - France Part - 2

      நீக்கு
  13. அழகிய புகைப்படங்களுடன் அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
  14. வணக்கம்
    தாங்கள்இரசித்வையை மற்றவர்களும் இரசிக்க வேண்டும் என்ற சிந்தனை மனப்பாண்மை கண்டு மகிழ்ந்தேன் அழகிய படங்கள்பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  15. அனுபவமும் படங்களும் அருமை..மோனலிசா படம் எடுக்க இப்படி ஒரு கூட்டமா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூட்டம் என்றால் ? குனிய முடியாது ஒருவேளை குனிந்து விட்டால் ? நிமிர முடியாது.

      நீக்கு
  16. புகை வண்டி நிலக்கரி, டீசலில் ஓடுபவை மட்டுமே. நீங்கள் பார்த்தவை அனைத்தும் மின்சார வண்டிகளாகத்தான் இருக்க வேண்டும். தமிழில் புது வார்த்தைகள் தேவை!!

    மோனலிசா ஒரிஜினல் ஓவியமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும், அனைத்தும் மின்சார வண்டிகளே...
      மோனலிசா ஒரிஜினல் ஓவியமே.

      நீக்கு
  17. உங்களின் ஃபிரான்ஸ் பயண அனுபவம் மற்றும் படங்கள் அருமை. இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். பரவாயில்லை மன்னித்து விடுகிறேன்.

    நான்காவது புகைப்படம் மட்டும் பெருது படுத்தாமல் எனக்கு மிகவும் பெரிதாக காட்சியளிக்கிறது (அது என்ன படம் என்று தங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாமரனின் அறிவுக்கு எட்டியதை சொல்லி விட்டேன். நான்காவது படம் ஸூப்பர் என்று சொன்னதற்க்கு நன்றி.

      நீக்கு
  18. பிரான்ஸ் நகரை பாதி சுற்றிப் பார்த்தாச்சு... rest..... மீதியை பார்க்க ஆவலுடன் உள்ளோம்.....

    புகைப்படம்,ஓவியப்படம் எல்லாம் அருமை.

    தாங்கள் தளத்திற்கு பலமுறை வந்தும் பதிவு இல்லை என்றே இப்பதிவிற்கு காட்டியது.
    பின் நீங்கள் கருத்தில் தெரியப் படுத்துய பின் சரி இப்பவாவது open ஆகுதா பார்ப்போம் என வந்தேன்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி, மீதியை காண, போவற்க்கும் நன்றி.

      நீக்கு
  19. முதலில் கருத்திட்டது வந்த என்று தெரியவில்லை. அதனால் மறுபடியும் கருத்திடுகிறேன்.

    படங்கள் அனைத்தும் அறுமியயாக இருக்கிறது.
    நான்காவது படம் மட்டும் பெரிது படுத்தாமல், பெரிதாகவே தெரிகிறது.

    அடுத்த பாகத்தையும் போய் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான்காவது படம் ஸூப்பர்னு எத்தனை தடவைதான் சொல்வீங்க ? ச்சே அழகா பொறந்துட்டாலே இப்படித்தான்.

      நீக்கு
    2. நான் எங்காவது சூப்பர்ன்னு சொன்னேனா?

      நீங்களா கற்பனை செஞ்சுக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை.

      இவ்வளவு குளோஸ் அப்ல எடுத்து எங்களை பயமுறுத்துறீங்களேன்னு கொஞ்சம் நாசூக்கா சொன்னா, உடனே நீங்க சூப்பரா இருக்கீங்கன்னு சொல்றதா அர்த்தமா???

      நீக்கு
    3. நண்பரே. நீங்க போட்ட கருத்துரையை Copy எடுத்துக்கிட்டு Google லில்போய் எனக்கு பிடித்த கொரிய மொழியில் போட்டுப்பார்த்தேன் அதுதான் இப்படி காண்பித்தது அதையே திருப்பி தங்களுக்கு போட்டு விட்டேன்.

      நீக்கு

  20. வணக்கம்!

    தங்கள் வருகையை நான் அறியவில்லை!
    அறிந்திருந்தால் உங்களைச் சந்தித்திருப்பேன்.

    எண்ணம் மணக்க எழுதிய இப்பதிவு
    வண்ணம் மணக்கும் மலா்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் வருவேன் பாரீர்.... காண்போம் ஒருநாள் பாரீஸ்.

      நீக்கு
  21. நண்பா!
    விழி கொண்டு மொழிபேசி
    வழி தெரியா அலைந்தேன்
    அல்லலுற்றேன் அன்றொரு நாள்
    1996!
    இன்று
    வழியும் மொழியும்
    வாழ்த்தி வரவேற்கும்
    நிலையினை அடைந்தேன்
    என் நண்பா!

    உலகம் உன்னை சுற்றுகிறதோ
    திலகம் இட்டு வாழ்த்துகிறேன்
    பிறக்கட்டும் சிறப்பு பணி
    சிறக்கட்டும் நம் அன்பின் அணி


    நட்புடன்,
    புதுவை வேலு


    பயணங்கள் தொடரட்டும். மீண்டும் வருக! நண்பா! "BIEN VENUE"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கள் பலிக்கட்டும் நண்பரே... நன்றி.

      நீக்கு
  22. anithu pugaipadamum arumai. thagvalkalum arumai. vaalthukal. unga blog um arumai.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பரே.

      நீக்கு