தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, செப்டம்பர் 06, 2014

சூட்தண்


சமையல் செய்வது என்பது ஒரு கலை வலைப்பதிவர் உமையாள் காயத்ரி அவர்கள் சமையலைப்பற்றி இந்த சமூகத்திற்கு ஒரு சேவை செய்து வருகிறார்கள் என்றே சொல்வேன், வாழ்க ! வளர்க ! அவரின் தொண்டு. தி கிரேட் தேவகோட்டை சமையலுக்கு புகழ் பெற்றது என்பது உலகறிந்த உண்மை, தேவகோட்டையானாகிய யாம் எமக்கு தெரிந்த சமையல் கலையை உலகிற்கு அறிமுகப்படுத்தினால் 
(உமையாள் காயத்ரி அவர்கள் இதைப் படிக்கும்போது... நமக்கு போட்டியாக ஒரு ஆள் களத்தில் குதித்து விட்டேதோ ? என்று பயபட வேண்டாம் எமது பாதை வேறு) 
அதுவும் ஒரு சேவையே மக்களுக்கும் இது தேவையே எனக்கருதி ''சூட்தண்'' என்ற தண்ணீரைப்பற்றி அன்றாடம் உபயோகமான இந்த தகவலை தங்களுக்கு கற்றுக் கொடுப்பதில் யாம் பெருமை கொள்கிறோம்.

செய்முறை.

முதலில் ஒரு லிட்டர் பிடிக்க கூடிய ஒரு வாணலியை எடுத்துக் கொள்ளுங்கள் குறிப்பு அந்த நேரத்தில் வீட்டில் வானொலி பாடிக் கொண்டிருந்தால் ? ஸ்விட்ச் ஃஆப் செய்து விடவும் காரணம் இசையில் மயங்குவோரும் உண்டு ஆதலால் செய்முறையில் கவனக்குறைவு ஏற்படலாம் பிறகு, கண்மாயில் எடுத்து வந்த தண்ணீரானாலும் சரி, கிணற்றில் இறைத்து வந்த தண்ணீரானாலும் சரி, முனிசிபாலிட்டி தண்ணீரானாலும் சரி, அல்லது அம்மா கடைக்கு போகும்போது வாங்கி வந்த மினரல் வாட்டரானாலும் சரி அதை வாணலியில் ஊற்றி அடுப்பை பற்ற வைத்து அடுப்பில் வைக்கவும் மிதமான சூட்டில் இருந்தாலும் பிரச்சனை இல்லை சிறிது நேரத்தில் வாணலியில் ஊற்றிய தண்ணீர் ''தளபுள தளபுள'' என்ற சப்தத்துடன் கொதிக்கும் பிறகு பேய் SORRY ஆவி வரும் (வலைப்பதிவர் ஆவி அல்ல) அப்பொழுது புடிதுண்டில் பிடித்து கவனமாக இறக்கி வைக்கவும், சிறிது நேரத்தில் கொதி அடங்கியவுடன் மிதமான சூட்டில் இருக்கும் பொழுது வீட்டில் வயதானவர்கள் பெரும்பாலும் மாத்திரை சாப்பிடுவார்கள் அப்பொழுது அவர்கள் மாத்திரையை விழுங்குவதற்கு இந்த தண்ணீரை உபயோகப்படுத்தலாம், சின்னக் குழந்தைகளுக்கு சளி பிடித்திருந்தால் ? அவர்களுக்கும் குடிக்க கொடுக்கலாம், அதைப்போல குளிர் காலங்களில் சாதாரணமாகவே எல்லோரும் குடிப்பதற்கு இதையே பயன் படுத்தலாம், இன்னும் சொல்லப் போனால் மருத்துவர்கள் (மருத்துவர் ராமதாஸ் அல்ல) இப்பொழுதெல்லாம் சுட வைத்த தண்ணீரையே குடிக்கச் சொல்கிறார்கள், மேலும் இதையே பெரிய பாத்திரங்களில் செய்தால் வயதானவர்கள் குளிக்கும்போது மற்ற தண்ணீரோடு கலந்து கொண்டால் குளிப்பதற்கு ஏதுவாக இருக்கும். இது உலக அளவில் எல்லா மனிதர்களுக்கும் பயன் படவேண்டும் என்ற எமது உயர்ந்த சிந்தனையால் எனக்கு தெரிந்த மொழிகளில் இதை பலருக்கும் உபயோகமாக வெளியிட்டுள்ளேன் அவர்களும் பயன்பட்டு இதற்கு பெயர் சூட்டி மகிழ்ந்து அந்தப் பெயர்களை எனக்கு e-Mail அனுப்பி வைத்தார்கள்

ஹிந்தியில் (गरम पानी) கரம்பாணி
  தெலுகுவில் (వేడి నీల్లు) வேடி நீலூ
மலையாளத்தில் (ചൂടു വെള്ളം) சூடு வெள்ளம்

கன்னடத்தில் (ಬಿಸಿ ನೀರು) பிசி நீரு

இலங்கையில் (උණු වතුර) உணு வத்துர
பிலிப்பைன்ஸில் (Mainit na Tubig) மைனிட் நா டுபிக்
இண்டோனிஷியனில் (Hot Air) ஹோட் ஆய்ர்
  தாய்லாந்தில் (น้ำร้อน) நம்ரோண்
 ஜப்பானில் (湯) ய்யூஹ்
  சைனீஸில் (热水) ஏஸ் வெய்
  ஃப்ரெஞ்ஸில் (Eau Chaude) உஸ் ஸுதாஹ்
ரஷ்யாவில் (Горячая вода) கரே ஸெவ்வாதா
 அல்மாய் ஹார்(المياه حاره)அரபியில்
ஆங்கிலத்தில் (Hot Water) ஹாட் வாட்டர்



இவ்வளவு ஏன்... தி கிரேட் தேவகோட்டையில் நம் இனிய தாய்மொழியாம் தமிழில் கூட பழங்கால சொல் வழக்கில் சுடுதண்ணீர் என்பார்கல்.... என்னங்க... திடீர்னு கல் எடுக்கிறீங்க... என்ன... என்னை குறி வக்கிறீங்க... அய்யய்யோ... எஸ்கேப்.

குறிப்பு – எனக்கு தட்டச்சு தெரியாத சிங்கள மொழியில் மட்டும் உணு வத்துர என்ற வார்த்தையை கொடுத்து உதவிய நண்பர் திரு. யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி.


36 கருத்துகள்:

  1. இது வேறயா!..
    நல்லாத் தானே ஐயா போய்க் கொண்டிருந்தது!..
    நான் ஆரம்பத்தில் நினைத்தது கடைசியில் தான் நடந்தது!..
    தண்னீர் கொதிக்க ஆரம்பித்து விட்டதே - அதைச் சொன்னேன்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கு தெரிந்த சமையல் கலை நம்மோடு அழிந்து விடக்கூடாதே என்ற எண்ணம்தான்,

      நீக்கு
  2. பன்மொழி புலவர் வாழ்க! வளர்க!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளை ஒழிகனு சொல்லலை அதுவரை சந்தோஷமே...

      நீக்கு
  3. சூட் தண் வைப்பதைப் பற்றி இதுவரையிலும் , தலைமுதல் கால்வரை இவ்வளவு விபரமாக யாருமே கூறியதில்லை .நீங்கள் செய்திருக்கும் இந்த மாபெரும் உதவிக்கு எப்படி கைம்மாறு செய்வது என்று தெரியாமல் மண்டைக் காய்கிறது !

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    அண்ணா.

    கலத்திங்கள்..... கலக்கித்திங்கள்.....
    சகோதரிஉமையாள் காயத்ரி பற்றி மிக அருமையாக சொல்லிஉள்ளீர்கள் உண்மைதான் நமக்கு சமயல் என்றால் மிகத் தூரம்.. சமைத்து தந்தால் சாப்பிடுவதுதான்வழக்கம்..... மாங்காய் வடு கொண்டு எப்படி ஊறு காய் செய்வது அம்மாவிடம் சொன்னேன் செய்து தாந்தாய்..உதவிய கு றிப்பு சகோதரியின் குறிப்புத்தான்....

    அத்தோடு பலமொழிகளில் பெயர்களை அறிய முடிந்தது... தங்களுக்கு உதவிய யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றிகள்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. சுடுதண்ணீர் சமையல் கலை நிபுணராகிய உங்களுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து உங்களுக்கு விரைவில் அழைப்புகள் வரலாம்... எதற்க்க்கும் இன்னும் கொஞ்சம் மொழி யில இதன் பெயரை தெரிஞ்சு வச்சுக்கோங்க.
    அடுத்த சமையல் குறிப்பு என்ன? ஆவலுடன்? காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய கைவசமுள்ளது அவசரப்படாதீர்கள் நண்பா,,,

      நீக்கு
  6. சூப்பரா இருந்துச்சு உங்கள் சமையல் குறிப்பு. அப்படி சொல்லுவேன்னு மட்டும் நினைக்காதீங்க நண்பரே....

    அட இப்படி எல்லாம் நீங்க ஒரு பதிவை தெத்துவிண்கன்னு தெரிஞ்சிருந்தா, நான் கூட எனக்கு தெரிந்த நூடுல்ஸ் செய்வது எப்படின்னு ஒரு பதிவை போட்டிருப்பேனே!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு முதல்லயே தெரியும் நீங்க ஸூப்பரா இருந்துச்சுனு எழுதுவீங்கனு...

      நீக்கு
  7. ஒழிக ன்னு சொன்னா, இப்படி பன்மொழிகளை யாரு சொல்வாங்க..அதுக்குத்தான்.. வாழ்க! வளர்க!!ன்னு சொல்வது நண்பரே!!!.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லாச்சொல்லுங்க,,, காரைக்குடிகாரருக்கு கேட்கட்டும்.

      நீக்கு
  8. நான் கூட படிக்க ஆரம்பிக்குமுன் இது ஏதோ ஜிகிர் தண்டா போல தென் மாவட்ட உணவு போல என நினைத்தேன். உங்களுக்கே உரித்தான குறும்பில் வெகு அழகாக வெந்நீர் வைக்கும் முறையை தந்துள்ளீர்கள். அதோடு வென்னீருக்குள்ள மற்ற மொழி பெயர்க்களையும் கொடுத்து அசத்திவிட்டீர்கள். படித்தேன் சிரித்தேன். இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மலாலும் ? நாலுபேர் சந்தோஷப்பட்டால் ? சந்தோஷமே அதைவிட சந்தோஷமுண்டோ.... நண்பரே...

      நீக்கு
  9. தாங்கள் தொடாத துறையே இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருதையும், அறுத்து மற ! என்பதில்லையா ?

      நீக்கு
  10. ஹாஹாஹா.....நல்ல நகைச் சுவைப் பதிவு....யம்மடியோ இந்த சூட் தண் வைக்கிறதுக்கு என்னா பில்டபு...ஜி! ஆனா இந்த சூட்தண்ணையும் ரசிச்சோம்.....

    சரி கில்லர் ஜி.....ஒரு சின்ன சஜஷன் தப்பா எடுத்துக்காதீங்க......மாத்திரைகள் எதுவா இருந்தாலும்...சூடு தண்ணீர் குடிச்சு போடக் கூடாதுங்க.....மாத்திரை சாப்பிட சாதாரண ஆறிய, ரூம் டெம்ப்ரேச்சர்ல உள்ள தண்ணீரத்தான் உபயோகிக்கணும் ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கும் நன்றி, அடுத்து ''கூல்டண்'' பதிவிட உதவி செய்தமைக்கும் நன்றி நண்பரே...

      நீக்கு
  11. ஆமா இந்த தொப்பிய எங்க சுட்டீங்க. பெரிய பில்டப்பு வேற ம்..ம்...ம்..ம் இந்த நேரத்தில பார்த்து கல்லையும் காணோம். சரி விடுங்க பிழைச்சு போகட்டும்.
    ரொம்பவே ரசித்தேன் சகோ. இலங்கை தமிழ் என்றால் நாம் இப்பவும் சரி அப்பவும் சரி சுடுதண்ணி என்றே சொல்வோம். வாழ்த்துக்கள் சகோ எதுக்கா ...!
    சமையல் குறிப்புக்கு தான் நன்றி நன்றி நன்றி ...!

    பதிலளிநீக்கு
  12. சமையல் விபரத்தை போடவும பெண் பதிவர்கள் ஒருவரும் வரவில்லையே காலம் மாறிவிட்டதோ ? என்று நினைத்தேன் நல்லவேளை நீங்களாவது சமையல் கலையை படிக்க வந்தீர்களே... அதற்கு நன்றி.
    உங்களை போன்றவர்''கல்'' கல்லெடுத்து எறிஞ்சா ? மண்டை உடைந்து விடக்கூடாதே என்பதற்காக முன்னெச்சரிக்கையாக ஆபீஸில் A 3 பேப்பரில் தொப்பி செய்து மாட்டிக்கொண்டேன், எப்பூடி ?

    பதிலளிநீக்கு
  13. செம சமையல் குறிப்பு ஜீ, சமையல் குறிப்பைவிட பிறமொழிச் சொற்கள் அருமை + அறியாத தகவல். முதல் முறை உங்கள் தளத்திற்கு வருகிறேன் , இனி தொடருவேன். இது என்னுடைய வலைப்பக்கம், நேரமிருந்தால் வந்து பாருங்கள்...

    http://pudhukaiseelan.blogspot.com/

    பதிலளிநீக்கு
  14. தொடருங்கள் கைவசம் நிறைய சமையல் குறிப்புகள் உள்ளது, நேற்றே தங்களது பிச்சைக்காரன் கதையை படித்து நெகிழ்ந்து விட்டேன் கருத்துரையும் இட்டேன் நண்பரே... தங்களின் முதல் வருகைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. ஆகா, அருமையான செய்முறை..செய்துபார்த்துவிட்டுக் கருத்துரைக்கலாம் என்று செய்தும் பார்த்துவிட்டேன்..டேங்கர் நீர் எடுத்துக்கொண்டேன், ஆனாலும் சூட்தண் நன்றாய் வந்தது..செய்முறைக்கு நன்றி சகோ.
    பல மொழிகளில் சுடு நீரை எப்படிச் சொல்வார்கள் என்றும் சொல்லிவிட்டீர்களே..சூப்பர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செலவைப்பற்றி கவலைப்படாமல் உடன் செய்து பார்த்தீர்களே... அங்குதான் நீங்கள் நிற்கிறீர்கள் நன்றி.

      நீக்கு
  16. வலைப்பதிவர் உமையாள் காயத்திரி அவர்களின் பதிவை அறிமுகம் செய்தமைக்கு முதலில் பாராட்டுகள்.

    ஒவ்வொரு தமிழரும் ஒவ்வொரு பிறமொழிச் சொல்களை அறிந்திருப்பின், தூய தமிழைப் பேண உதவும். அதாவது, தமிழில் இருந்து பிறமொழிச் சொல்களைக் கழட்டிவிட உதவும்.

    தண்ணீர், சுடுதண்ணீர் இரண்டும் நம்ம தமிழ் தான்.
    ஆனால், சூட்தண். எந்த மொழி?
    என் தலையை இப்படி உடைத்தேன். படியப்பா...
    சுடவைத்த தண்ணீரை சுட்ட தண்ணீர் என்றால்
    சுட்ட தண்ணீரை சுட்.தண். என்றே சுருக்கலாம்
    அப்படி இருக்கையில்
    சூட்தண். எப்படித் தலைப்பாக வரலாம்.

    சுவையான பதிவைத் தந்தமைக்குப் பாராட்டுகள்.
    மேலும் மேலும் ஆற்றலைப் பெருக்கி
    கில்லர்ஜி இன் பதிப்பு என்றால்
    தனி அடையாளம் இருக்குமென
    முன்னேற வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ''சூட்டப்பா'' இருக்கும் என்பதற்காக இப்படி தலைப்பு வைத்தேன் நண்பரே,,, தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி, நிச்சயமாக மாறுபட்டவையாக இருக்கும் எனது பதிவுகள்.

      நீக்கு
  17. Had a Nice laugh.... thank you for introducing R.umayal gayathri to other blog readers.

    பதிலளிநீக்கு
  18. விடுமுறைக்கு இடையில் பதிவுகளை காணயியலவில்லை.

    ஆகா...இப்படி ஒரு சமையல் குறிப்பா.. வித்தியாசமாக பதிவிடும் தங்களின் திறமை தெரிகிறது சகோ.

    சமையலின் ஆரம்பப்பாடம்... படிக்க ஆரம்பித்து விட்டீர்கள்....

    புதிய குறிப்புக்கள் வரும் என எதிர் பார்க்கிறேன்.

    நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக வரும் சகோதரி ஆனால் ? என்னைக்கண்டு பயப்படவேண்டாம் என எச்சரிக்கிறேன்.

      நீக்கு
    2. எதற்கு பயம்....? அப்படின்னா...?

      எனக்கும் புதிய சமையல் குறிப்புகள் கிடைக்கும் அல்லவா...?

      நீக்கு
    3. பயமில்லையென்றால் எனக்கு பிரட்சினையில்லை அடுத்து மக்களுக்கு பயனுள்ள ''கூல்டண்'' வெளிவரும்.

      நீக்கு