தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், அக்டோபர் 20, 2014

திருவாடானை, திருடன் திருமால்


திருமால், திருடுவதில் ஒரு கைதேர்ந்த கலைஞன் வெகுநாளாக கண்காணித்திருந்து ஒருநாள் சிலம்பனி சன்னதி தெருவில் உள்ள அந்த பங்களாவில் வீட்டில் உள்ளவர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க போயிருக்க இதுதான் கோவிந்தா போட Sorry கொள்ளையடிக்க, சரியான தருணம் எனமுடிவு செய்தான், இரவு ஒருமணி நைசாக பங்களா கேட்டருகே போய், உட்கார்ந்திருந்த வாட்சுமேனிடம்
அண்ணே தீப்பெட்டி கொடுங்க 
என கேட்டுக் கொண்டே.. குளோராஃபாம் அடித்து வைத்திருந்த கைக்குட்டையை எடுத்து வாட்சுமேன் முகத்தில் அழுத்தவும் வாட்சுமேன் உட்கார்ந்த நிலையிலேயே மயக்கமானான்.

எப்படியும் ஐந்துமணி நேரமாகும் மயக்கம் தெளிய.. அதற்குள் வேலையை முடித்து விடலாம், பாக்கெட்டுக்குள் கையை விட்டு சாவியை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான், இருட்டில் கையில் கத்தியை ஏந்திக் கொண்டு நேராக மாடிக்கு போய் தனது, சாவிக் கொத்திலிருந்து ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்தான் மூன்றாவது அறையில் சுவற்றுடன் பதித்திருந்த பீரோவை திறக்க, கட்டுகட்டாய்.... பணமும் நகைகளும், சிறுசிறு வெள்ளிச்சிலைகளும் இருந்தது, ஒவ்வொன்றையும் பக்குவமாக எடுத்து மூட்டையில் கட்டினான் இரண்டு மணி நேரத்தில் எல்லா வேலையும் முடிந்து விட்டது.

கீழே வந்தான் கிச்சனை பார்க்கவும் பசிப்பதுபோல் இருந்தது உள்ளே போய் என்ன இருக்கிறது எனபார்த்தான், ஹாட்பாக்ஸில் சப்பாத்தியும், ஒரு பாத்திரத்தில் கோழி குருமாவும் இருந்தது, திருமாலுக்கு கோழி என்றால் பயங்கர இஷ்டம் மொத்தத்தையும் கொட்டி ஒரு பிடிபிடித்தான், முரட்டு ஏப்பம் வந்தது, இவனிடம் ஒரு கெட்டபழக்கம் சாப்பிட்டால் சிறிது நேரமாவது தூங்க வேண்டும், ஹாலுக்கு வந்தவன் வீட்டில்தான் யாரும் இல்லையே சோபாவைப் பார்த்ததும் A/cயை போட்டு விட்டு சாய்ந்தான். 

வாட்சுமேன் தோலைத்தட்டி உசுப்பிய, அடுத்த பங்களா வாட்சுமேன் 
என்ன.. இன்னும் தூங்குறே
கண் விழித்த, வாட்சுமேன் அட.. விடிந்து விட்டதே ! சட்டென இரவு நடந்தது ஞாபகம்வர விருட்டென கம்பை எடுத்துக் கொண்டு உள்ளே ஓட... கூடவே அடுத்த பங்களா வாட்சுமேனும்... ஹாலில் சோபாவில் சாய்ந்து கொண்டு ஒருவன் கிடக்க... பக்கத்தில் மூட்டை ஒன்று கிடக்க... 

தோல்பட்டையில் கம்பு அழுத்துவது போல் உணர்ந்த திருமால் திருதிருவென முழித்துப் பார்க்க எதிரே இரண்டுபேர் அதிலொருவன் கம்பை உயர்த்தி நடு மண்டையில் ஒரு போடு போட்டான், மண்டை பிளந்து மீண்டும் மயக்கமாய் சாய்ந்தான்.

நடு மண்டையில் ஒரு போடுபோட்ட வாட்சுமேன் டெலிபோனில் போலீஸ் ஸ்டேஷனுக்கு விபரம் சொல்லிக் கொண்டிருக்க... அடுத்த பங்களா வாட்சுமேன் கையில் கயிறுடன் ஓடிவந்து கொண்டிருக்க... கூடவே அடுத்தடுத்த பங்களாக்காரர்களும் வந்து கொண்டிருக்க... ஹாலில் A/c உர்ர்ர்ர்ரயென உருமிக் கொண்டிருந்தது....

சாம்பசிவம்-
திருப்பதி 7 மலையான் எல்லாத்தையும் காப்பாத்திட்டாரே....

CHIVAS REGAL சிவசம்போ-
திருமலையில உள்ளவரு, திருமாலை மாட்டி விட்டுட்டாரே...

KILLERGEE-
நல்லவன் வாழ்ந்து சாவதும், கெட்டவன் செத்துச்செத்து வாழ்வதும்தான் இறைநியதி.

Video
(Please ask Audio Voice)
By
KILLERGEE
From Devakottai (INDIA)

Happy Diwali

28 கருத்துகள்:

  1. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே.!

    நல்லதோர் கற்பனை கலந்த கதை.! உண்மை சம்பவத்தை, கற்பனையுடன் கலந்து திறம்பட சுவையுடன் சொல்லியிருக்கிறீர்கள்.! நடப்பவை யாவுமே நாராயணன் செயல்தான்.! பல நாள் திருடன் ஒரு நாள் கண்டிப்பாக அகப்படுவான்.! பகிர்ந்தமைக்கு நன்றி.! வாழ்த்துக்கள்.!

    என் புதிய (திருட்டு சம்பந்தபட்ட) பதிவையும் தங்களுக்கு நேரமிருப்பின் காணவும்.! நன்றி!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. உண்மை சம்பவத்தை நகைச்சுவையாக சித்தரித்த விதம் அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
  4. பெருமளவு மாலை செலவு செய்துதான் இனி வெளிவரவேண்டும் திருமால்.
    அருமை நண்பரே!

    பதிலளிநீக்கு
  5. நடந்தது...தங்கள் பாணியில்....அருமை.

    பதிலளிநீக்கு
  6. ஆண்டவனிடம் இருந்து தப்பமுடியாது யாரும் என்பதை விளக்குகிறது. நல்ல பதிவு!
    தீபாவளி வாழ்த்துக்கள் சகோ .... !

    பதிலளிநீக்கு
  7. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  8. தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    வீட்டை கொள்ளை அடிப்பாவார்கள் மாட்டிக்கொள்கிறார்கள். மனதை கொள்ளை அடிப்பவர்கள்????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹேய் இது சூப்பரா இருக்கே! அருமை நண்பரே!

      நீக்கு
  9. உண்ட களைப்பு தீர துாங்கீனதுக்கா...இந்தத் தணடனை....???

    பதிலளிநீக்கு
  10. ஆகா இப்படி வெளிநாட்டில் நடந்து கேள்விப்பட்டதுண்டு...
    இப்போது தேவகோட்டையில்?
    ஹ ஹ ஹ ..
    அப்புறம் ..

    தங்களுக்கும் குடும்பத்தினர்க்கும் எனது இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

    அறிவியல் செய்தி ஒன்று !

    பதிலளிநீக்கு
  11. தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தங்களுக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
    http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

    பதிலளிநீக்கு
  13. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது சரிதான் போலிருக்கே !

    பதிலளிநீக்கு
  15. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு

  16. உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  17. ஹஹஹஹஹாஅ.....ஆஹா கதையா இது! முதலில் உண்மைச் சம்பவம் என்று நினைத்து விட்டோம் நண்பரெ! சூப்பர் அப்பு கற்பனை!

    கடைசில வைச்சீங்க பாருங்க ஒரு பஞ்ச்....திருப்பதி பெருமாள் காப்பத்தினாரு மூட்டைய.....ஆனா திருமால மாட்டி விட்டாருனு.....செம!

    ரசித்தோம்!

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் அண்ணா...

    தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
    அலுவலகம் சென்றதால் காலையில் தெரிவிக்க இயலவில்லை.
    நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

    வலைச்சர இணைப்பு
    http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_26.html

    நன்றி

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோதரரே.!

    தங்களின் அருமையான நேரங்களுக்கு நடுவிலும், என் வலைத்தளம் வந்து என் பதிவுகளுக்கு கருத்துக்களிட்டு, பாராட்டுவதற்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  20. மதுரை நிகழ்வினை மிகவும் சிறப்பாக பதிவு செய்தமைக்கு வாழ்த்துக்கள். தங்களையும், பிற நண்பர்களையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு