தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஏப்ரல் 16, 2015

ஒரத்தநாடு, ஒத்தைவீடு ஒண்டிராஜ்


அன்பின் ஐயா திரு. ஜியெம்பி அவர்கள் கடந்த எனது பதிவுக்கு கருத்துரையில் துபாய் வாழ் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப்பற்றி தெரிந்தால் எழுதுங்களேன் எனக்கேட்டு இருந்தார்கள் எனக்கா தெரியாது ஒவ்வொரு விடயங்களையும் எழுதினால் படிக்கும் பதிவர்களின் கன்னங்களில் கண்ணீர் அருவிதான் கொட்டும் ஐயா கேட்டுக் கொண்டதற்கு இணங்க எமது அவசரப்பதிவு நண்பர்கள் விரும்பினால் தொடரும் இவ்வகை பதிவுகள்.

நமது இந்தியர்கள், எத்தனையோ பேர் இந்தியாவை விட்டு அயல் நாடுகளில் வாழ்வது ஏன் ? காரணம் கேட்டால், வயிற்று பிழைப்புக்காக எனச்சொல்வது பொதுமரபு ஆனால் உண்மை என்ன ? மேல்தட்டு வாழ்க்கைமீது ஆசை, ஆம் எல்லோருக்குமே ஆடம்பர வாழ்க்கையின் மீதுமோகம், சீக்கிரமாக பணக்காரர்கள் வரிசையில் வரவேண்டும், பகட்டு கௌரவஆசையின் தொடக்கம் சிலரை, சீரழிவின் விளிம்பில் கொண்டுபோய் நிறுத்தி விடுகிறது,

ஒண்டிராஜ் கூலி வேலைக்கு போகிறவன் தனியாக இருக்கும் ஒற்றை வீட்டில் (வாடகை) மாலையில் கிடைக்கும் ஊதியத்தில் இரவில் மனைவி முத்தம்மாள், மகனுடன் ஒரு வேளையாவது நல்லஉணவு, நிம்மதியான உறக்கம் இதுதான் தற்கால நோக்கம், கணவன்-மனைவியின் சாமர்த்தியத்தால் சிறிதளவு பணம் சேர்ந்து விட்டது குடிசை போட்டாலும் பரவாயில்லை, நமக்கென்று சொந்தமாக ஒரு இடம், வாங்கினார்கள்,

இந்த நேரத்தில்தான் விதியின் விளையாடல் ஆரம்பமாகியது, பக்கத்து ஊர்க்காரன் துபாயிலிருந்து Group Visa கொண்டு வந்திருந்தான் உடனடியாக 35 பேர்வேண்டும் 65,000/ Rs கட்டி, Ticket எடுத்து வந்தால் போதும், பேக்கரியில் வேலை, Room Free , சாப்பாடு Free , மாதம் 25,000/ Rs சம்பளம், ஆசை யாரைவிடும் மனைவி முத்தம்மாள் சொன்னாள்,
''ஏங்க இடத்து பத்திரத்தை நம்ம வெட்டியாருட்டவச்சு பணம் வாங்கலாங்க''
மறுத்துப் பேசினால் குடும்பத்தில் பிரச்சனைகள் தொடங்கும் வேறு வழியின்றி சிறிதாக தலையை ஆட்டிதான் வைத்தான் ஒண்டிராஜ், மற்ற வேலைகளை சரச்சரவென நடத்தி, விமான நிலையத்துக்குள் நுழையும்போது.... கணவன்காண, முத்தம்மாள் மூன்று சொட்டு கண்ணீரை விட்டு பறக்கும் விமானத்திற்கு டாட்டா காட்டி விட்டு வீட்டுக்குள் வந்து, மச்சான் முதல் மாசசம்பளம் அனுப்பியதும், வெட்டியாருட்ட 10,000/ Rs மட்டும் கொடுத்தால் போதும், முதல்ல நல்ல குக்கர் ஒண்ணு வாங்கனும் அப்புறம்...... இப்படியே கனவு காணத்தொடங்கி விட்டாள் முத்தம்மாள்.

ஒண்டிராஜ் துபாயில் இறங்கியதும் இரவில் Airport டின், பிரமாண்டத்தை பார்த்து பிரமித்து விட்டான்... அரபி வந்தார் ஏஜன்டிடம் பேசினார், அவனை மட்டும் Passportடை வாங்கி கொண்டு Land Cruiser ரில் கூட்டிப் போனார், வாழ்வில் முதல்முறையாக காரில் போவதால் அதுவும் Land Cruiser ரில் அவனும் கனவு காணத்தொடங்கி உறங்கி விட்டான் இரவுநேரம் என்பதால் இறங்கிய இடம் தெரியவில்லை அரபி கை காண்பித்த இடத்தில் உறங்கி காலையில் எழும்போதுதான் தெரிந்தது நிற்கின்ற இடம் பாலைவனம் என்று தூரத்தில் ஆங்காங்கே கொட்டாரங்கள், கண்ணுக்கு எட்டிய தூரம்வரை வீடுகள் தெரியவில்லை.

08.00 am அரபி ஒருதமிழ் பேசுபவனோடு வண்டியில் மூட்டை முடிச்சுகளோடு வந்தார், அவன் சொன்னான்,
''இதுல அரிசி, காய்கறி, இருக்கு டேங்ல தண்ணீர் கெடக்கு இனி 15 நாள் கழிச்சுதான் அரபி வருவார், நீ இந்த ஒட்டகத்தை எல்லாம் ஓட்டிக்கிட்டு அதோ.......... தெரியுதுபாரு மணல்மேடு அதுக்கு அங்கிட்டு போ நம்ம ஆளுங்க எல்லாம் ஒட்டகம் மேய்ச்சுகிட்டு இருப்பாங்க, நீயும் மேய்ச்சுட்டு சாயங்காலம் திரும்ப ஓட்டிக்கிட்டு வந்துரு, வந்து சமைச்சு சாப்பிட்டுக்க, போகும்போது மறக்காம தண்ணி பாட்டில எடுத்துக்க''
என்று சொல்ல அரபி அஸ்ஸலாமு அலைக்கும் சொல்லி விட்டு பதிலை எதிர் பார்க்காமல் வண்டியை எடுத்துக்கொண்டு போயே....... விட்டார்கள்,

இவனுக்கு கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போலிருந்தது என்ன செய்வது ? யாரிடம் போய் என்ன கேட்பது ? வந்தவன் தமிழ்க்காரன் நம்ம பேரைக்கூட கேட்கலையே.... ஒன்றும் புரியாமல் உட்கார்ந்து விட்டான், சிறிது நேரத்தில் ஒட்டகங்கள் கத்த ஆரம்பித்து விட்டன... அந்தவழியே ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு போனவன் ஒட்டகத்தின் சத்தம் கேட்டு உள்ளே வந்து இவனிடம் கேட்டான்.
தமிழா ? 
இவனுக்கு சந்தோஷமாய் இருந்தது, இவன்
அண்ணே……
எனவாயை..... அவன் கையை காட்டி நிறுத்தினான்,

எல்லாம் எனக்குத் தெரியும், உன் கதையும், என் கதையும் மட்டுமில்ல, அங்கே வந்துபாரு எல்லோருடைய கதையும் ஒண்ணாத்தான் இருக்கும் முதல்ல நீ ஒட்டகத்தை கிளப்பு எவனாவது அரபி பார்த்தான்னா வட்ட கழட்டிக்கிட்டு அடிப்பான், கிளம்பு போகும்போது எல்லாம் பேசலாம்

ட்டகங்களை ட்டிக்கொண்டு ட்டகத்தோடு டினான் ரத்தநாடு த்தவீடு ண்டிராஜ்.

குறிப்பு இதைப்படிக்கும் ? ? ? முத்தம்மாள் போன்ற சகோதரிகளே.... எத்தனை பெண்கள் தங்களின் பேராசையால், கணவர்களை இப்படி மொத்தமாய் நாசப்படுத்தி கொண்டிருக்கிறார்கள், தெரியுமா ? பிறரைப்பார்த்து நமது கணவனும் துபாய் போனால் வீடு வாங்கலாம், கழுத்து நிறைய நகை போடலாம் என்ற ஆசையால், கடைசியில் கழுத்தில் உள்ள தாலியை இழந்தவர்களும் உண்டு, இது நான் உங்களுக்கு விடும் எச்சரிக்கை அல்ல ! என்னாலான சிறிய ஆலோசனை.

பணிவுடன் அபுதாபியிலிருந்து, சகோதரன்  KILLERGEE
காணொளி
(Please ask Audio Voice)


64 கருத்துகள்:

  1. ஓடினான் ஓடினான் ஒட்டகத்தோடு ஓடினான் ஓரத்த நாடு ஒத்த வீடு ஒண்டி ராஜ்
    ஓபாமாவை போல வாழ ஆசை பட்டு!

    வாடினான் வாடினான் வாட்டும் வெய்யிலில் வாடினான்
    வாய்ப்பு(பூ)வை வளரச் செய்ய தண்ணிருக்கு பதிலாக கண்ணீரை சொறிந்த படி!

    நண்பா ! நச் பதிவு!

    உண்மையை சொல்லியும் உமது மீசை மட்டும் உருக வில்லையே அது ஏன்?
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் கருத்துரை தந்த பராசக்தியே வருக
      இது போன்ற கருத்துரைகளை தருக
      யாம் பாலையிலிருந்து தப்பித்து
      சோலைக்குள் புகுந்து விட்டோம் நண்பரே...
      ஆகவே மீசை இன்............னும் ரீச்சாக வ(ள)ரும்.

      நீக்கு
  2. வணக்கம்
    ஜி
    தாங்கள் சொல்வது உண்மைதான் சிலரது வாழ்க்கை கண்ணீர். எழுத்துகளாக எழுதப்பட்டுள்ளது... வெளிநாட்டு வாழ்க்கை என்பது நினைப்பவருக்கு நன்றாக இருக்கும் அதில் அனுபவப்பட்டவனிடம் கேட்டால்தான் அதன் துன்பம் தெரிய வரும்
    சென்றவனுக்கு வருவதற்கு ஆசை இருப்பவனுக்கு செல்வதற்காசை.....ஜி
    படித்த போது மனம் கனத்து விட்டது. பகிர்வுக்கு நன்றி.த.ம 3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரூபன் தங்களுக்கு தெரியாததா ? பணியாளர்களின் கஷ்டம் ஆகவேதான் தங்களின் மனம் கணத்து விட்டது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. ஆசைதானே துன்பத்திற்குக் காரணம்
    உண்மைதான் நண்பரே தாங்கள் சொல்வது உண்மைதான்
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே புத்தன் ஒரு தீர்க்கதரிசிதானே....

      நீக்கு
  4. இது ஞாயமில்ல, கில்லர்ஜி. யாரோ கேட்டாங்கன்னு எங்களையெல்லாம் ஏன் இப்படி கொடுமைப் படுத்தறீங்க? முத்தம்மா மனசு என்ன பாடுபடும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இந்த முத்தம்மா படித்து விட்டு 4 செல்லம்மாக்களின் வாழ்க்கையை காப்பாற்றலாமே...

      நீக்கு
  5. அருமையான பதிவு நண்பரே,

    வெளிநாட்டுக்கு சென்று பாடுபடும் பலரின் கண்ணீர் கதைகளை கேட்டிருக்கிறேன். அவைகள் பெரும்பாலும் ஹவுஸ் கீப்பிங், கன்ஸ்ட்ரக்சன் போன்ற தொழிகளில் தான் மாட்டிக்கொள்வார்கள். ஒட்டகம் மேய்ப்பது விளையாட்டாக சொல்லும் வேலை என்று நினைத்திருந்தேன். பதிவை படித்த பின்தான் அது விளையாட்டல்ல, உண்மை என்று புரிந்து கொண்டேன்.

    உங்களின் பதிவு வெளிநாட்டு வேலை மீது மோகம் கொண்டு போகும் கூலித் தொழிளார்களுக்கு எச்சரிக்கை மணியாக இருக்கும்.

    த ம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பாலைவனத்தில் தமிழர்கள் ஒட்டகம் மேய்ப்பதை விளையாட்டு வார்த்தையாக பேசிப்பேசியே நமது ஊடகங்கள் வளர்த்து விட்டன அதனால் தாங்கள் இப்படி நினைத்து விட்டீர்கள் இது உங்களது தவறு அல்ல அதைப்போல M.A படித்தவன் துபாயில் கக்கூஸ் கழுவுகிறான் 80ம் உண்மையே விளையாட்டல்ல ஏதோ குடும்ப சூழல், ஏஜன்ஸி மோசடி இப்படி சிக்கி சின்னாபின்னாமாகி தப்பிப்பதற்க்குள் காலங்கள் உருண்டோடி அதே வாழ்க்கை இயல்புக்கு(ம்) வந்து விடும்.

      நண்பரே தாங்கள் சொல்வதுபோல கூலித்தொழிலாளர்கள் இதைப்படிக்கும் வாய்ப்பிருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்.

      நீக்கு
  6. இல்லாதவன் ஆசைப்பட்டால் இந்தக்கதிதான் என்று காலங்காலமாக இப்படி ஆக்கிவிட்டார்கள் நண்பரே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே சிலரது ஆசைகள் நடந்து விடும்போது மற்றவர்களும் ஆசையை வளர்த்து விடுகிறார்கள் நண்பரே.

      நீக்கு
  7. சேரனின் "வெற்றிக் கொடி கட்டு" படம் ஞாபகம் வந்தது ஜி...

    துணைவிகள் மட்டும் காரணம் அல்ல என்பதும் உங்களுக்கு தெரியும்...

    இன்னும் பல உண்மைகளை இது போல் தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தாங்கள் சொல்வதும் உண்மையே எனது மனைவியும்கூட முத்தம்மாள் வகை ஜாதியே 80தை தைரியமாக ஒப்புக்கொள்கிறேன் அதேநேரம் தாங்கள் என்னைக்கூட மனதில் வைத்து சொல்வதாகவும் எடுத்துக்கொண்டு பதில் தருகிறேன் எனது குழந்தைகளுக்கு இன்னொரு அம்மா கிடைத்து விடக்கூடாது 80ல் உறுதியாக இருந்த காரணத்தால் எனது வாழ்வு இதில் நீடித்து விட்டது என்ன எனது வேதனை அது இல்லாதபோது அவள் இருந்தாள், அவள் இல்லாதபோது அது இருக்கிறது.

      இங்கு பல ஆண்கள் சம்பளம் குறைவாக இருந்தும் காலம் கழிப்பதற்க்கு கடந்த 5 வருடமாக புதிய காரணம் ஒன்று இருக்கிறது டாஸ்மார்க் ஆம் அதை விரிவாக பதிவில் தருகிறேன். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிக்கிறேன் நன்றி ஜி.

      நீக்கு
  8. ஏங்க இது உண்மையா...
    அப்படின்னா இந்திய தூதரகம் என்னா செய்கிறது
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோழரே கீழே நண்பர் துரை ஜி அவர்களின் கருத்துரையை கண்டிப்பாக பாருங்கள்.

      இந்தியத்தூதரகமா ? நண்பரே அங்கு வேலை செய்வது யார் ? வடநாட்டுக்காரர்கள் மீதி ஆபீல் பாய் வேலையில் இருப்பவர்களும் மலையாளிகள் இருவருக்குமே தமிழர்கள் (மதராஸிகள்) என்றாலே நல்ல மதிப்புதான் அவனிடம் போய் எந்த மொழியில் பேசுவது ஹிந்தி தெரியாது ஆங்கிலம் படித்ததில்லை பிறகு தமிழன் மற்ற மாநிலத்தவனுக்கு கட்டவுட்டிற்க்கு பாலாபிஷேகம் மற்ற மாநிலத்தவன் தமிழனுக்கு பால் ஊற்றுவான் இதுதானே நடந்து கொண்டு இருக்கிறது ஏன் ? தோழா எனது கோபத்தை தூண்டி விடுறீங்க பிறகு நான் வேறு பதிவு எழுதவேண்டியது வந்திடும் சரி எந்த நாட்டிலாவது இந்திய தூதரகம் தொழிலாளர்களுக்கு உதவியதாக தகவல் இருந்தால் சொல்லுங்கள் நான் அந்த நாட்டுக்கு போகிறேன்.

      நீக்கு
  9. நானும் கேள்விப்பட்டதுண்டு. அப்போவெல்லாம் அதன் தாக்கம் தெரியவில்லை.சிலநேரம் இட்டுக்கட்டி சொல்றாங்களோ என நினைப்பேன். பின் எனக்கு தெரிந்த ஒருவர் வேலைக்கு வந்து, கஷ்டங்கள் அனுபவித்து, உயிர்பிழைத்து வந்த கதையை கேட்டதால் உண்மைதெரிந்தது. இன்னும் எத்தனை ஒண்டிராஜாகள்... இப்படியாக.. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சகோ இதில் படிக்காதவர்களின் நிலைதான் மிகவும் மோசம் கீழே நண்பர் துரை ஜி அவர்களின் கருத்துரையை கண்டிப்பாக பாருங்கள் சகோ.

      நீக்கு
  10. வேதனை தரும் விடயங்கள் தகுதிக்கு மிஞ்சி ஆசைப் பட்டால் வாழ்க்கை நிம்மதியை இழந்து விடுவோம்.இதற்குத் தான் சொல்வார்கள் விரலுக்கேற்ற வீக்கம் வேண்டும் என்று. அவசியமான பதிவு அறியாதவர்கள் அறியட்டும். நன்றி வாழத்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்து மிகவும் சரியாக சொன்னீர்கள் சகோ.
      குறிப்பு – இரண்டு பதிவுக்கு ஒருமுறைதான் வருவது என்ற தங்களது டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு நன்றி சகோ.

      நீக்கு
  11. அதுல பாருங்க!..

    அரபி - திரும்பி வர்ற பதினைஞ்சு நாளைக்குள்ள - மேய்க்கக் கொடுத்த ஒட்டகம் -

    பிச்சுக்கிட்டுப் போனாலும் சரி.. புடுங்கிக் கிட்டுப் போனாலும் சரி.. -
    இல்லே.. மேலோகமே போய்ச் சேர்ந்தாலும் சரி..

    அடி.. ஒதை அத்தனையும் நம்ம ஒத்தை வீடு ஒண்டி ராசுக்குத்தான்..

    இவனோட மொதலாளி மட்டுமல்லாம.. அக்கம் பக்கத்து அரபிகளும் கூடிக்கிட்டு கும்மி எடுத்துடுவானுங்க!..

    * * *

    பதிவு கண்டு மனம் நெகிழ்கின்றது.. ஜி!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நான் எழுதக்கூடாது என்று நினைத்ததை நீங்கள் கருத்துரையாக தந்து விட்டீர்கள் இதுவும் நல்லதே தங்களிடமிருந்து வந்தது பதிவுக்கு பலம் சேர்த்து விட்டது நன்றி ஜி.

      நீக்கு
  12. வெளிநாட்டு மோகம் வேதனையைத் தரும் என்று சொல்லாமல் சொல்லிவிட்டது பதிவு! விழிப்புணர்வு பதிவை படித்தாவது விழித்துக்கொள்வார்களா? நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே இதில் வேதனையானவர்களின் எண்ணிக்கையே அதிகம் அதை மட்டும் பார்த்து விட்டு எல்லோரும் ஆசைப்படுகிறார்கள் இதுதான் ஆரம்பம்.

      நீக்கு
  13. ஜி,,,,,,,,,,,,,,
    வளமான வாழ்க்கைக்கு மட்டுமா?
    உறவுகளைக் கரையேற்றவும் அல்லவா?
    நம் மண்ணில் நல்ல வேலை கிடைக்கும் என்றால் ஏன் இந்த பாடு.
    பார்ப்போம் எப்ப மாறும் என்று.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ
      பார்ப்போம் எப்ப மாறும் என்று...
      இந்த நிலைக்கு நாம்தானே காரணம் திருடன் என்று தெரிந்தே வாக்களிக்கிறோமே நாம்தானே காரணம் எவன் ஆட்சிக்கு வந்தாலும் உலகம் சுற்றும் வாலிபனாகிறான் யாருடையை பணம் கேள்வி கேட்க ஒரு நேரம் வருகிறது 5 வருடங்களுக்கு ஒரு முறை ஆனால் அந்தநேரம் 500 ரூபாய் நமது கண்ணை மறைத்து மூளையையும் தூங்க வைத்து விடுகிறதே இவர்கள் இப்படி கஷ்டப்படுவதின் பாவ பலனுக்கு நாளை இறைவனிடம் அனைவரும் பதில் சொல் வேண்டியது வரும்.

      நீக்கு
    2. அப்படி ஒரு நினைவு இருந்தால் இப்படி செய்வார்களா?
      சரி
      இவர் சரியில்லை என்று நாங்கள் மாற்றி யோசிக்கிறோம், அவரும் சரியில்லை,
      மாற்றுகிறோம் அவரும் சரியில்லை,
      பிறகு எப்படி?
      இந்த முறை மாறனும்.
      அப்பதான் எல்லாம் சரியாகும்.
      மக்கள் ஆட்சி என்று சொல்லிக்கொள்வது மட்டும் தான் நம் பெருமை.
      வேறு எதுவும் இல்லை.
      5 வருடமும் வேண்டாம் 500 ருபாய்யும் வேண்டாம்.
      கடுமையான மாற்றம் வரனும்.
      எப்போ? எப்படி?

      நீக்கு
    3. ஓரே வழி நோட்டோ ஓட்டுதான் அதையும்தான் பார்ப்போமே...

      நீக்கு
  14. எனக்கு இப்படி ஒட்டகம் மேய்க்கும் பணி இருப்பது தெரியாது. எங்கு மேய்ப்பது எப்படி மேய்ப்பது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் நாயகனே வருக...
      என்னிடம் தாங்கள் கேட்டது வேறு வகைதான் இருப்பினும் இதொரு தொடக்கமே இதையும் அறிந்து கொள்ளுங்கள் ஒட்டகம் மேய்ப்பது பாலவன சுடும் மணலில் கடும் வெயிலில்தான் என்ன உணவு பாலைவனத்தில் என்ன இருக்கும் கள்ளிச்செடிகள் மற்றும் முட்கள் போன்ற செடிவகைகள் இவண் வெயிலுக்கு எங்கு ஒதுங்குவது ஒரு நிமியம் நினைத்துப் பாருங்கள் நாட்டில் இருப்பவர்கள் கண்களுக்கு இவையெல்லாம் தெரிவதில்லை. இன்னும் பதிவுகள் தருகிறேன் ஐயா நன்றி.

      நீக்கு
  15. அருமையான பதிவு சகோ. வெளிநாட்டு மோகத்தால் வேதனை தான் மிஞ்சும் என்பதை உங்கள் பதிவின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ வேதனைதான் உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் நலமே...

      நீக்கு
  16. I also know the reality. They can't express their feelings to their relatives. Enna kodumai Saravanaa.....Idhu?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுமையை உணர்ந்தமைக்கு நன்றி நண்பரே....

      நீக்கு
  17. சேரனின் வெற்றிக் கொடி கட்டு இதைத்தான் சொல்லும். அது நினைவுக்கு வந்தது. அப்படி ஏமாந்து போகும் மக்கள் மிகவும் சாமானியர்களே. பாவம்.

    எல்லோரும் பணத்தாசைக்காகச் செல்வது என்பதும் கிடையாது....

    தொடருங்கள் தங்கள் பதிவை....இப்படி ஏமாறுபவர்கள் இனியாவது ஏமாறாமல் இருக்கின்றார்களா என்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க்கை இந்தியாவில்தான் இருக்கிறது 80 இங்கு வந்தவர்களுக்குதான் தெரிகிறது வருகைக்கு நன்றி

      நீக்கு
  18. கொடுமை. இது பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுமைதான் நண்பரே வருகைக்கு நன்றி.

      நீக்கு
  19. இந்த கதையை வெற்றிக் கொடி கட்டு படத்தில் நகைச்சுவையுடன் கோடிட்டு காட்டியிருப்பார் சேரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே அந்த சினிமா நானும் பார்த்தேன் அதில் நம்ப முடியாத காட்சிகள் நிறைய இருக்கிறது அதாவது நண்பன் வீட்டுக்கு சாமான் கொடுக்க வந்தவன் மாதக்கணக்கில் தங்குவது அது மிகப்பெரிய ஓட்டை.

      சாதாரணமாக நண்பன் வீட்டுக்கு போபவன் ஒருநாள்கூட தங்க மாட்டான் அதுதான் உண்மை காரணம் ஒருமாத லீவில் குடும்பத்துடன்தான் இருக்க நினைப்பான் இந்தப்படத்தைப் பார்த்து இந்தியாவில் உள்ளவர்கள் ரசித்தார்கள் வெளிநாட்டில் வாழ்பவர்கள் சிரித்தார்கள்.ரசித்து அல்ல இவ்வளவு கேனத்தனமாக எடுத்து இருக்கிறானே என்று.

      நீக்கு
  20. ஜி உங்கள் பதிவை படிப்பதற்கு முன்பிருந்தே நிறைய சந்தேகங்கள் எனக்குண்டு. ஒட்டகம் மேய்க்க உள்ளூரிலேயே ஆட்கள் கிடைக்க மாட்டார்களா? ஏன் வெளியிலிருந்து ஆட்களை வரவழைக்கிறார்கள்.

    துபாய்க்கு சென்றவர்களின் சோகக் கதைகள் போலவே , நிறைய வெற்றியை சம்பாதித்தவர்களின் கதைக்ளும் இருக்கும். அவற்றையும் தெரியப்படுத்தவும்.

    த.ம. 15

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நண்பரே நல்ல கேள்வி கேட்டீர்கள் போங்கள் இருப்பினும் பதில் சொல்கிறேன் இந்த நாட்டு மக்கள் தொகை 2 ½ மில்லியன் ஆனால் இதனைவிட மூன்று மடங்கு வெளிநாட்டு மக்கள் வாழ்கிறார்கள் அவர்களுடைய சுய வாழ்க்கைக்காகத்தான் 80 உண்மையாக இருந்தாலும்.
      அரேபியர்களில் அனைத்து வேலைகளும் இதில் அடங்கி இருக்கிறது அதாவது தவறாக நினைக்காதீர்கள் அரேபியன் வெளியில் சொல்ல முடியாத இரண்டு வேலைகளைத் தவிற மற்ற அனைத்து வேலைகளுக்கும் ஆட்கள் வேண்டும் அதாவது விரல் அசைவுக்கு வேலையாள் காரணம் இவண் ஒரு வாழைப்பழ சோம்பேறி என்றுதான் சொல்லவேண்டும் இவர்களா ? ஒட்டகம் மேய்க்க அதுவும் வெயிலில் இவ்வளவுக்கும் பணம் அதுதான் இவர்களின் பெட்ரோல் வளம் பெட்ரோல் எல்லோர் வீட்டிலுமா ? ஊற்றெடுக்கிறது என்று கூட நாங்கள் கேட்கலாம் அரசாங்கம்தான் பணம் கொடுக்கிறது பிள்ளை பெறப்பெற பணம் வேறு வேலை பிள்ளை பெறுகிறான் விரிவாக சொல்கிறேன் இந்நாட்டின் மிகப்பெரிய அலுவலகம்
      01. சென்ட்ரல் பேங்க் (பணம் அடிக்குமிடம்)
      02. மினிஸ்ட்ரி ஆப் பைனான்ஸ் (பணம் இருக்குமிடம்)
      03. பென்ஷன் டிபார்ட்மெண்ட் (பணம் விநியோகிக்குமிடம்)
      இதில் மூன்றாவதில்தான் நான் வேலை செய்கிறேன் கருத்துரை வேண்டாமே... பதிவுகளில் சந்திப்போம்.

      வெற்றி பெற்றவர்களும் உண்டு சொல்கிறேன்.

      நீக்கு
  21. உள்ளூரில் முதலாளிகளே ,அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச சம்பளத்தைக் கொடுக்காமல் கொடுமைப்படுத்தறான் ,இப்போ அரசே ,அவுட் சோர்சிங் முறை என்று உழைப்பவனின் வயிற்றில் அடிக்கிறது .நமது நாடு ஜன நாயக நாடு என்று சொல்லிக் கொள்கிறோம் ,ஆனால் இங்கே பண முதலைகளின் ஆட்சிதான் நடக்கிறது !வெளி நாட்டுக்கு வேலைக்கு போகும் ஏழைகளைப் பற்றி அரசு ஏன் கவலைப் படப் போகிறது ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே பணக்காரர்களுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

      கீழ் மட்டக்காரர்களுக்கு சிந்திக்கும் திறன் இல்லை 500 ரூபாய் கிடைத்தால் ஓட்டு

      நம்மைப்போன்ற நடுத்தர வர்கத்தினரும் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்று சொல்லியே தவறு செய்து கொண்டு இருக்கிறோம்

      வேறு வழி ? ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தையும் கொடுப்பது இப்பொழுது உதவாது 80தே எமது கொள்கை.

      நீக்கு
  22. அன்புள்ள ஜி,

    வெளிநாட்டுக்குப் போய் வேலைபார்க்க வேண்டும் என்ற மோகத்தில் போய் சிக்கித்தவிக்கின்றவர்களை நினைத்துப்பார்க்கவும்... இங்குள்ளவர்கள் சிந்திக்கவும் வைக்கும் ஒரு நல்ல பதிவு.

    இதை வைத்துப் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். உண்மைச் சம்பவங்களை... தங்கள் மனதைப் பாதித்தவைகளை எழுதினால் எல்லோரும் தங்களின் அனுபவப் பதிவைத் தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு.

    நன்றி.
    த.ம. 17.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் மணவையாரே தங்கது கோரிக்கைகளை நிறைவேற்ற முடிந்தவரை முயல்கிறேன்.

      நீக்கு
  23. ஆசையே...அலை போலே.....நாமெல்லாம் அதன் மேலே.... என்ற பாடல் நிணைவுக்கு வந்தது நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே அதனால்தானே அதன் கீழேயே நிற்கிறோம்.

      நீக்கு
  24. வணக்கம் சகோதரரே.!

    பதிவும், அதை சார்ந்த கருத்துரைகளும் கண்டு கலங்கி விட்டேன். "ஒட்டகம் மேய்கிற வேலையா? " என்று விளையாட்டாக சொல்லும் வார்த்தைகள் உண்மையான நிலை கண்டு மனது கனத்து விட்டது. இதற்கெல்லாம் காரணம், வறுமையும், அதை போக்க நினைக்கும் சமயம் சற்று அளவுக்கு மீறி ஏற்படும் ஆசைகளுந்தான் என எண்ண வைக்கிறது. அதையும் மீறி தலை எழுத்து என்பதொன்று உண்டே.! மனதை வருத்தும் பதிவிது.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் சகோ ஆசையின் தொடக்கமே இந்த நிலைக்கு காரணம் விதி 80தையும் சிலநேரங்களில் சில மனிதர்களே எழுதிக்கொள்கிறார்கஶ். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  25. சிந்திக்க வேண்டும் பலர் அருமையான பகிர்வு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நண்பரே நன்றி தனியே நிற்காதீர்கள் தோப்பாவோம்.

      நீக்கு
  26. தலைப்பைப் பார்த்ததும் ஏதோ கிண்டல் செய்வதுபோலிருந்தது. பதிவைப் படித்ததும் மனம் கனத்தது. வாழ்க்கையின் உண்மையான பக்கத்தை அப்படியே காட்டிவிட்டீர்கள். கற்பனையோடு செல்பவர்களும், காசுக்காக செல்பவர்களும் கொஞ்சம் சிந்திக்கவும் வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே நலம்தானே கற்பனைக்காக சிந்திப்பவர்கள் பகட்டு வாழ்வை மட்டுமே நினைக்கின்றார்கள் ஆகவே பலரின் நிலை இப்படி..

      நீக்கு
  27. அருமையான பதிவு நண்பரே....

    மனிதமனம் எதைத்தான் வேண்டாமெனச் சொல்லும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி நண்பரே...

      நீக்கு
  28. என் கணவரின் நண்பர் என்ஜினியரிங் முடிச்சிட்டு பிடிவாதமா அங்கே போய் ஒட்டகம் மேய்த்து அங்கிருந்து வெளியேற முடியாமல் ஒரு நண்பரின் உதவியால் பாஸ்போர்ட் இல்லாமல் வந்து சேர்ந்தாராம். இரு வருடங்களுக்குப் பின் அடிக்கடி அந்தக் கதையைச் சொல்வார் என் கணவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இதுபோல் பல பேருக்கு இந்த அனுபவம் உண்டு.

      நீக்கு
  29. அனுபவப்பதிவுகள், நிச்சயம் வருமுன் காக்கும் நண்பரே!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  30. என்ன கொடுமை......

    ஆசையினால் இப்படிச் சென்று கஷ்டப்படும் ஒவ்வொருவருக்காகவும் மனது கலங்குகிறது. என்னுடைய நண்பர்கள் சிலரும் இப்படிச் சென்று அங்கே கஷ்டப்பட்டு திரும்பியிருக்கிறார்கள். ஒட்டகம் மேய்க்கவில்லை எனினும் பார்த்த வேலைக்கு காசு கூட கிடைக்காது வந்தவர்களும் உண்டு.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தாங்கள் சொல்வதும் நடந்து கொண்டே.......... இருக்கிறது.

      நீக்கு
  31. நல்ல பதிவு! ஆனால், இதை ஏன் நீங்கள் பேரவா (பேராசை) எனக் கூறுகிறீர்கள் என்பதுதான் புரியவில்லை. தன் நாட்டில் வாய்ப்புக் கிடைக்காதவன் வெளிநாட்டில் சென்றாவது எப்படியாவது உழைத்துப் பொருளீட்டி வாழ்வில் நிலைபெற (settle) வேண்டும் என நினைப்பது தவறா? முதலில், பேரவா என்பது என்ன? உண்மையாகத் தனக்குக் கிடைக்க வேண்டியதை விடப் பன்மடங்கு கூடுதலாக எதிர்பார்ப்பதுதான் பேரவா. ஆனால், வெளிநாட்டில் வேலைக்குச் செல்லும் நம் படித்த, படிக்காத மக்கள் அப்படிப்பட்ட அவாவுடனா செல்கிறார்கள்? ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு துறையின் வளர்ச்சி வெவ்வேறு மாதிரியாக இருக்கும். ஒரு நாட்டில் சவுளித்துறை ஓகோவென்றிருக்கும், இன்னொரு நாட்டில் கனிமவளத்துறை கொடிகட்டிப் பறக்கும், மற்றொரு நாட்டில் உணவகத்துறை கொழித்துக் கிடக்கும். இவை போக நம் நாட்டுக்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான பணமதிப்பின் வேறுபாடும் உண்டு. இவற்றைக் கணக்குப் பார்த்துத்தான், ஒருவேளை நம் நாட்டை விட அந்த நாட்டில் இந்தத் துறையின் வருமானம் கூடுதல் போல என்று நினைத்து அதனால்தான் அந்த நாட்டில் இங்கு நாம் பார்க்கும் இதே வேலைக்கு இங்குள்ள ஊதியத்தை விடப் பன்மடங்கு தருவதாகக் கருதி நம் மக்கள் அங்கு செல்கிறார்கள். இதைப் பேரவா எனக் கூறலாமா? அதுவும் வெளிநாட்டில் பணிபுரியும் நீங்களே, சமூக அக்கறையாளரான நீங்களே கூறலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகைக்கும் விஸ்தாரமான கருத்துரைக்கும் முதற்கண் நன்றி நான் பேராசை என்று குறிப்பிட்டது கடைசியில் எத்தனையோ பெண்கள் தனது கணவர்களின் வாழ்க்கையை நாசப்படுத்தி விட்டார்கள் 80தை மட்டுமே குறிப்பிட்டு இருக்கிறேன் இதன் பின் மறைந்துள்ள சூட்சுமங்கள் பலருக்கும் தெரியவில்லை அதை வெளிப்படுத்தி விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் படிக்காதவர்கள் இங்கு வந்து கடுமையான அதிகமாக உழைக்கிறார்கள் சம்பளம் குறைவாகவே பெறுகிறார்கள் 80தைத்தான் குறிப்பிட்டேன் நான் இதை கதையாக வர்ணித்தாலும் அனைத்துமே உண்மையும்கூட
      என்னைப்பொறுத்தவரை படித்தவர், படிக்காதவர் அனைவருமே இந்தியாவில் உழைத்து இந்தியாவுக்காக பாடுபடவேண்டும் அதன் காரணமாகவே எனது மகனை ஆரம்பம் முதலே வெளிநாட்டு வாழ்க்கைமீது வெறுப்புணர்வை புகுத்தி வந்து இருக்கிறேன் அதைப்போல எனது மகனும் இந்த வாழ்க்கைக்கு ஆசைப்படவில்லை நான்தான் படிக்காதவன் ஏதோ வந்து விட்டேன் நமது மகனும் வந்து இந்திய வாழ்க்கையை நமது கலாச்சாரத்தை மறந்து விடக்கூடாது 80தே எமது திண்ணமான எண்ணம் இதையே பிறருக்கும் வெளிப்படுத்தவே இந்தப்பதிவு மற்றபடி தவறான நோக்கம் அல்ல இப்பொழுதும் சொல்கிறேன் நான் சமூக நலனுக்காகவே இந்தப்பதிவை எழுதினேன் நண்பரே.

      நீக்கு