தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஏப்ரல் 26, 2015

கில்லர்ஜிக்கு, ஆறாம் மாண்டு


26.04.2015 இன்று உங்கள் கில்லர்ஜிக்கு ஆறாம் மாண்டு ஆம் எழுது கோல். என்ற பதிவின் மூலம் 2010 ஆம் ஆண்டு இதே நாளில் எழுத தொடங்கினேன் தங்களின் அமோக ஆதரவால் இன்று இந்த நிலையை தொட்டு இருக்கிறேன் எமது எழுத்துகள் பிடித்தால் ? ? ? தொடர்ந்து ஆதரவு தர வேண்டுகிறேன்.  


வலைப்பதிவர் நண்பர் தங்கம் பழனி அவர்கள் கடந்த 14 March 2014 அவரது தொழில் நுற்பம் வலைப்பதிவில் எனது வலைப்பூவை அறிமுகப்படுத்தி என்னைப்பற்றி... கன்னா பின்னாவென்று எழுதி இருந்தார் அவருக்கு நன்றி சொல்ல வேண்டுமென, நினைத்துக் கொண்டே இருப்பேன்... புதிய பதிவுகளை இடும் ஆர்வத்தில் சற்று தாமதமாகி விட்டது, கவியரசு கண்ணதாசன் அவர்கள் ஒரு விழாவில் கலந்து பொழுது ஒரு முக்கிய பிரமுகர் வர தாமதமாகி விட்டது இதை அவருக்கு உணர்த்த கவியரசர் பேசும் போழுது நகைச்சுவையாக சொன்னாராம் சிலருக்கு மதம் பிடிக்கும், சிலருக்கு தாமதம் பிடிக்கும் என்று... 

ஆனால் எனக்கு இரண்டுமே பிடிக்கா...தூ... என்பதை தெரிவித்துக் கொள்கிறேன், இந்த பதிவு விசயத்தை எனக்கு தெரிவித்த இனிய நண்பர் ‘’வலைச்சித்தர்’’ திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி.

அவரின் அறிமுகப்பதிவை காண... கீழே சொடுக்குக...
கண்டுவர நினைப்போருக்கும், காண்பவருக்கும், பின்னே பார்க்கலாமென நினைப்போருக்கும் எமது நன்றி.

அன்புடன்,
Devakottai Killergee Abu Dhabi

57 கருத்துகள்:

  1. மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் நண்பரே
    வாழ்த்துக்கள்
    தங்களின் எழுதுகோல்
    தொய்வின்றி எழுதட்டும்
    சாதனைகள் பல படைக்கட்டும்
    தம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வாக்கை காப்பாற்ற முயற்சிக்கிறேன்.

      நீக்கு
  3. ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் தந்த தங்கம் பழனியின் இணைப்பையும் படித்தேன். அதில் சொல்லப்பட்டுள்ள உங்கள் சின்னச் சின்ன ஆசைகளையும் கண்டேன்.
    த.ம.3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இணைப்பிற்க்கு சென்றமைக்கும் எமது நன்றிகள்.

      நீக்கு
  4. வாழ்த்துக்கள் நண்பரே,
    மேலும் பல ஆண்டுகள் கண்டு பதிவர்களை மகிழ்ச்சிப் படுத்துங்கள்!
    த ம 6

    பதிலளிநீக்கு
  5. அன்பின் ஜி.. அவர்கள் வாழ்க!..
    அவருடைய பன்முகத் திறமை வாழ்க.. வளர்க!..
    அடித்து விளையாடும் தளம் - வலைத் தளம் வாழ்க வாழ்கவே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி யின் வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றிகள் கோடி.

      நீக்கு
  6. ஆறாம் ஆண்டில் ஏழாம் வாக்கு!

    வாழ்த்துகள் நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. வாழ்த்துக்கள்

    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோழரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  8. தங்களுக்கு முதலில் வாழ்த்துக்கள்.
    அப்புறம் தாங்கள் தந்த இணைப்பையும் படித்தேன், தங்கள் ஆசைகள் அத்துனையும் அருமை,
    எழுது கோலா? கீபோட் மௌவுஸ் இல்ல,,,,,,,,,,,,,
    ஓ இது எழுதுகோல்,
    எப்படி?
    அந்த பெயர் விளக்கம் சொல்லிட்டீங்கலா? புதியவர்களுக்கு,
    தாமதம் பிடிக்காது, தாமதமாகிவிட்டது என்ன?ஜி,,,,,,,,,,,,,,,,,
    ஒகே,,,,,,,,,,,,,,,மீண்டும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இணைப்பிற்க்கு சென்று வந்தமைக்கும் நன்றி
      மௌவுஸ் ம்.....ம்ம்....

      நீக்கு
  9. ஆறாம் மாண்டா ?ஒவ்வொரு பதிவுக்கும் 'செத்து செத்து பொழைக்கிற 'விளையாட்டை ஆடுவதால் இப்படி தலைப்பா :)
    அது சரி ,ஆறு வருசமாச்சா ..கடந்த இரண்டு வருடமாய் தானே எங்களுக்கு தெரிய வந்தீர்கள் ?
    உங்களை nokiaயவர்களின் எண்ணிக்கை அதிகரித்து ,முதலிடம் பிடிக்க ஜூனியர் ஜோக்காளியின் வாழ்த்துகள்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகவான்ஜி அவர்களின் வாழ்த்துக்கு கில்லர்ஜியின் நன்றி.உண்மைதான் கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தானே நான் வெளியில் குதித்தேன் அதாவது கிணற்று தவளை நான்.

      நீக்கு
  10. அன்புள்ள ஜி,

    ஆறாம் ஆண்டில் அடிஎடுத்து வைப்பது மகிழ்ச்சி...
    ஆசைகள் அனைத்தும் நிறைவேற வேண்டும்...
    ஆறாய்ப் பெருகும் எண்ணங்கள்
    தேராய்த் தேசமெங்கும் பயனடைய ஓடவேண்டும்...
    வலைத்தளம் சிறக்க வலம் வர(ம்) வேண்டும்...!
    வலைச்சித்தரின் வளமான அறிமுகம் கண்டோம்...
    கலைச்சித்திரமாய்த் திகழ படைப்பு தரவேண்டும்.

    நன்றி.
    த.ம.10.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணவையாரின் மனம் நிறைந்த வாழ்த்துப்பாவிற்கு நன்றி.

      நீக்கு
  11. ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நண்பர்க்கு வாழ்த்துக்களும், வறவேற்புகளும் என்றும் உரித்தாகுக....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய நண்பரின் வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  12. கில்லர்ஜிக்கு ஆறாம் “ மாண்டு”? தெரிந்து எழுதி அதற்கு ஏதாவது பொருள் இருக்கிறதா இல்லை தட்டச்சு தவறா? தொடர்ந்து பதிவிடுவதற்கு வாழ்த்துக்கள். உங்கள் பழையபதிவுகள் சில பார்த்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும், பழைய பதிவுகளை படித்து கருத்திட்டமைக்கும் நன்றி தலைப்பு தெரிந்தே எழுதியது என்னுள் பந்தப்பட்டவைகளை நான் என்றுமே சுபமாக நினைப்பதில்லை ஐயா.

      நீக்கு
  13. ஆறாம் ஆண்டு தொடக்கத்துக்கு நல்வாழ்த்துக்கள் !! தங்களின் எழுதுகோல் மென் மேலும் சிறக்க என்னுடைய நல்வாழ்த்துக்கள் !!

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா4/26/2015 1:12 PM

    அந்த கைலாய நாதன் திரிபுரம் எரித்தவன் என உங்கள் தம் அரும் தவ மெய்ஞான பரிபூர்னத்தியம் படைத்த புரானச்செவ்வியங்கள் சொல்லும் சிவபெருமானின் தனையன் பொற்பதங்க் கொண்ட கமல மலர்களில் தீச் சூடராக பிறந்து குளிர்ந்த குமரன் குருபரனுக்கு திருமுகங்கள் ஆறு. மனிதப் பூச்சிகளின் வாழ்வியல் செழிக்க பெரும்பாடான் பகிர்த வியாக்கனங்களும் , பண்டமாற்று சுழற்சிவரைவுகளும் உருவாக்கிடப் பெற்று மனிதப் பூச்சிகள் மானுடனாய மாற்ருதலுக்கு உட்படுத்திய தோரய சாஸ்வதனமான அதன் நாகரிகம் பிறந்த இடம் ஆறும் அதன் படுகையும். வரைகலை வேந்தன் வஞ்சிரா கிரனங்களைத் தன்னிலடக்கி விசுவாச சங்கல்பம் செய்து கலைத்துறையின் புனிதனாக ஓவியத்தின் எழுபிறள் சூடரான ஆதித்யனின் அருள் கிரனங்கள் ஆறு.(புற /அக சிவப்பு உட்பட).அநேக சரனமாக அனைத்து அறிவியற் கொள்கைகளையும் கற்றிட மென்ன தன் இடுகைக்குள் இட்டு அமர்த்தி பூபள சமூகத்தின் முகத்திக்கி வைத்திருக்கும் அடிப்படை திரிகோன சூத்திரங்கள் ஆறு. சரித்திர கதை சாம்ராட் சாண்டில்யன் யவனர்கள் என்றழைத்து சிறப்பித்த கிரேக்கர்கள் ஹெக்ஸா என்று அழைத்து மகிழ்ச்சியின் பேருச்சியைத் தொட்டது தொட்டதும் ”ஆறு”

    ஆறு -பைனரி /டெர்னரி/குவர்டெர்னெரி/குய்னெரி/சென்னெரி-யாக வளர்க என வாழ்த்தும்.

    “டெராபைட்”தாமஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் ‘’டெராபைட்’’ தாமஸ் அவர்களின் வருகைக்கும் பிரமாண்டமான கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  15. ஆறினை தொட்ட அகந்தையில்லா நண்பரே
    பேரினை பெற்றுவிட்டாய் பேரின்ப நாயகரே!
    ஊரென்ன சொல்லும் உலகனென்ன சொல்லும்?
    உண்மைஎழுதுகோல் என்றும் வெல்லும்.

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஈபிள் டவரிலிருந்து வாழ்த்துப்பா தந்த நண்பருக்கு நன்றிப்பா

      நீக்கு
  16. வாழ்த்துக்கள் ஜி! உங்கள் சாதனைப்பயணம் தொடரட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் தளிர் சுரேஷ் அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  17. வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்திய மதுரைத் தமிழனுக்கு நன்றி.

      நீக்கு
  18. ஹலோ என்ன 6 வருடமா? எங்கய்யா இருந்தீங்க? மாறு வேஷம் போட்டு இருந்தீங்களோ? உங்களக் கண்டதே இல்லை ...சரி சரி பரவாயில்லை....6 வருஷம் அம்மாடியோவ்...

    வாழ்த்துகள்! நண்பரே! இன்னும் நீங்கள் தொடர்ந்து எழுத வாழ்த்துகள்! அது சரி 2010 ல் ஆரம்பம் என்றால் 5 தானே இல்லையோ?!!!!! பிரதமர், ப்ரெசிடென்ட் ஆட்சியே 5 வருஷம்தான்......என்றாலும் எல்லோரும் ஓட்டு போட்டு மீண்டும் எலெக்ட் செய்வது போல் உங்களையும் நாங்கள் இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து எழுத ஓட்டு போடுவோம்....பாராட்டுகள்! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகம் புரியாத அப்பாவியாக கிணற்றுத்தவளையாக இருந்தேன் இப்பத்தான் வெளியில் குதித்து வந்து இருக்கிறேன் ஊரணியை கலக்கிட்டு கடலுக்கு வருவேன் வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  19. வணக்கம் சகோதரரே.

    ஆறாம் ஆண்டில்,அடி எடுத்து வைத்தமைக்கு தங்களுக்கு என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள். தாங்கள் குறிப்பிட்ட பதிவினிலும் சென்று தங்கள் சிறப்பை கண்டு வந்தேன். முதல் பதிவினையும் பார்வையிட்டு பரிசாக என் கருத்துரை பதித்து வந்தேன். மேலும் மேலும் எழுத்துலகில் எழுதுகோலின் துணையுடன் புகழின் உச்சிக்குச்செல்ல இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன்.
    வாழ்க வளமுடன்..

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ எழுது கோல் பதிவுக்கு கருத்துரை இட்டது கண்டு மகிழ்ச்சி வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

      நீக்கு
  20. தங்குதடை இன்றி எழுதும் தொடர்ந்து
    தாமதமா வேனும் வருவேனே வாழ்த்திட
    பங்குபற்ற தூண்டும் வகையில் இடுகின்ற
    பின்னூட்டம் ஊக்கம் தரும்!

    வாழ்த்துக்கள் !வாழ்த்துக்கள்! பல்சுவையுடன் நல்கும் பல பதிவுகள் பன்மடங்காய் பெருகிட !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டா வாழ்த்துறீங்க இடையிடையே லீவு விட்டுறீங்களே.... ஏன் ? இருப்பினும் இப்பவாவது வந்தீங்களே வாழ்த்தியமைக்கு நன்றி சகோ முடிந்தவரை முயல்கிறேன்.

      நீக்கு
  21. உங்க எழுத்து திறமைக்கும், அத் திறமைகள் மேன்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோ.
    சின்ன ஆசைகள் சிறப்பான ஆசைகள்.
    நிறைவேறிட நினைக்கிறேன் நானும்.
    (வில்ல(த்தனமா)ங்கமா எழுதுவதில் உங்களுக்கு நீங்களே நிகர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோவின் மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கு நன்றி எனது ஆசைகளில் சுயநலம் இருக்காது அதில் பொதுநலமே இருக்கும் அப்பாவியை வில்லங்கம் என்றது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

      நீக்கு
  22. எனது வாழ்த்துகளும்....

    வளர்க... வளர்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் நிஜாமுத்தீன் அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  23. எங்கள் கில்லர்ஜி அவர்களுக்கு
    ஆறாம் ஆண்டு...
    நண்பா!
    ஆண்டுகள் கரையலாம்
    எழுத்துகள் பெருகணும்
    எழுத்துக்கு ஓய்வில்லை
    ஆகையால்
    தங்கள் எழுத்தைத் தொடர
    எனது வாழ்த்துகள்
    பதிவுகளைத் தொடருங்கள்
    கருத்திடப் பறந்து வருவோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்துகளே என்னை இன்னும் எழுத வைக்கும் 80தை மறக்க வேண்டாம் வருகைக்கும், வாழ்த்துப்பாவிற்க்கும் நன்றி.

      நீக்கு
  24. தொடர்ந்து தங்களது பதிவுகளைப் படித்துவருகிறேன். தங்களது எழுத்துக்கள் நன்கு மெருகேறியுள்ளதை தற்போது காணமுடிகிறது. தாங்கள் எடுத்துக்கொள்ளும் பொருண்மைகளும், சொல்லும் விதமும் வாசகர்களை நன்கு ஈர்க்கின்றன. தங்களது பயணம் தொடரட்டும். மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் இந்த வகையான கருத்துரைகளே எம்மை இன்னும் அழகாக எழுத வைக்கிறது 80தை அறியத்தருகிறேன் நன்றியுடன்.

      நீக்கு
  25. பதிவுலகில் ஐந்து ஆண்டுகள் வெற்றிகரமாக கோலோச்சி ஆறாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் தாங்கள் மென்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  26. உங்கள் எழுத்தாற்றல் சிறக்கவும் எழுத்துப்பயணம் தொடரவும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் ஜீ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே வாங்க வாங்க நலம்தானே.... வழி தெரிந்துடுத்தோனா சந்தோஷம் நன்றிகள்.

      நீக்கு
  27. வாழ்த்துக்கள் கில்லர்ஜீ ........... தொடருங்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துகளால் தொடர்வேன் நண்பரே...

      நீக்கு
  28. மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் நண்பரே.... மேலும் பல பதிவுகளை எழுதி எங்களையும் மகிழ்த்திட எனது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு