தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜூன் 18, 2015

இதய வலிகள் ஏழு

சுயநல இதயவலிகள்.
 
1. நமது, வேதனைகளில் பங்கு பெற்று நமக்கு 6தல் கூறிய நண்பன் மறுநாள் அதை பிறரிடம் நகைச்சுவை படுத்தி பேசியது நம் காதுக்கு வரும்போது.... ஏற்படுவது.

2. வாழ்க்கைச்சூழல் மாறி நாம் பணக்கார வரிசையில் வரும்போது அதுவரை மதிக்காத மனைவி திடீரென பாசத்தை பொழியும்போது.... ஏற்படுவது.

3. ஆத்மார்த்தமாய், செய்த உதவியை பணம் கொடுத்து கொச்சை படுத்தும்போது.... ஏற்படுவது.

4. உண்மையை சொல்லும் போது நம்பாதவர்கள், பொய் சொன்னதை நம்பும்போது.... ஏற்படுவது.

5. பிறருக்காக, நாம்செய்யும் தியாகத்தை அந்தபிறர் உணர்ந்து பார்க்காமல் பேசும்போது.... ஏற்படுவது.

6. ஆத்மார்த்தமாய், நினைத்திருந்த நண்பன் நமக்கு துரோகம் செய்யும்போது.... ஏற்படுவது.

7. பதவி அதிகாரத்தால், தான்செய்த தவறை பிறர் நம்மீது, சுமத்தப்படும்போது.... ஏற்படுவது.
 
குறிப்பு- இவையனைத்தும் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டே...  இருக்கிறது.
 
பொதுநல இதயவலிகள்.
 
1. நாட்டுக்காக, நமக்காக உயிர்துறந்த ராணுவ வீரர்களின் மரணத்திற்கு வருந்தாதவர்கள், யாரோ ஒரு பிரயோஜனமில்லாத நடிகர் மரணத்திற்காக வாகனங்களை தீ வைப்பதைக் காணும்போது.... ஏற்படுவது.

2. தனது உழைப்பை, நாட்டுக்காக மட்டுமே கொடுத்த விஞ்ஞானிகளின் மரணத்திற்கு கடையை அடைக்காதவர்கள், தனது உழைப்பை வீட்டுக்காக மட்டுமே கொடுத்த அரசியல்வாதியின் மரணத்திற்காக கடையை அடைப்பதைக் காணும்போது ஏற்படுவது.

3. கிரிக்கெட்டைப்பற்றி, ஒன்றுமே தெரியாத சினிமாக்காரர்கள் தான் சம்பாரிப்பதற்காகத்தான் கூடுகிறார்கள், என்பதை அறியாமல் ஏமாறும் மக்களைக் காணும்போது.... ஏற்படுவது.

4. விபச்சாரியென, தெரிந்திருந்தும் அவர்களுக்கு கோயில் கட்டுவதைக் காணும்போது.... ஏற்படுவது.

5. குடும்பத்துடன், பார்க்கத்தகாதது எனதெரிந்திருந்தும் அந்த சினிமாவைகாண, மக்கள் கூட்டமாக போவதைக் காணும்போது.... ஏற்படுவது.

6. ஊழல்வாதியென, தெரிந்திருந்தும் அவர்களுக்கு மக்கள் ஓட்டுப் போடுவதைக் காணும்போது.... ஏற்படுவது.

7. விலைவாசி ஏறுவதை தட்டிக்கேட்க கூடாத மக்கள் மதப்பிரச்சனைக்கு கூடுவதைக் காணும்போது.... ஏற்படுவது.
 
குறிப்பு- இவைகள் அனைத்தும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே... இருக்கிறது.

66 கருத்துகள்:

  1. உண்மையான இதயம் உள்ளவர்களுக்கு -
    இதனால் எல்லாம் வலிக்கத் தான் செய்யும்!..

    தங்கள் பதிவினால் - மறந்திருந்த சில வலிகள் நினைவிற்கு வந்து விட்டன!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடனடி வருகை தந்து உண்மையான விடயத்தை அழகாக சொன்னீர்கள் ஜி.

      நீக்கு
  2. நீங்களே சொல்லியிருக்கிற மாதிரி இந்த பொதுநல வலிகளும் சுயநல வலிகளும் என்றைக்குமே ஏற்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன. கூடியவரை இந்த வலிகளில் மாட்டிக்கொள்ளாத மனப்பக்குவத்தை நாம் வள‌ர்த்துக்கொள்ள‌ வேண்டும். அனுபவங்களை விட சிறந்த ஆசான் எங்கிருக்கிறார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையே சகோ அனுபவமே நம்மை செம்மை படுத்துகிறது.

      நீக்கு
  3. காதலி இன்னொருவனுக்கு கழுத்தை நீட்டி ,நம் கழுத்தை அறுக்கும் போது ஏற்படுவது ....இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் கில்லர்ஜி:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவளிடம் முதலில் நம் கழுத்தை நீட்டியதற்க்கு தண்டணையோ ?

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே.

    உண்மையிலேயே நல்லபதிவு. ஆழ்ந்த சிந்தனையுடன் ௬டிய பகிர்வு. தாங்கள் குறிப்பிட்டுள்ள இதய வலிகள் அனைவருக்கும் ஏற்படுவது உண்மைதான். ஆனால் இவையனைத்தும் தாங்கள் ௬றுவது போல் அவ்வப்போதும், தொடர்ந்தும் நிகழ்ந்து கொண்டிருப்பதால், வலிகளைத் தாங்கி தாங்கி நம் இதயங்கள் வலி தாங்கும் பழக்கத்திற்கு வந்து விட்டதே.! என்ன செய்வது.? எப்போதேனும்,அந்த வலிகள் வேதனையை சுட்டிக் காட்டும் போது பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.! வேறு வழியில்லை.
    சிறந்த பகிர்விற்கு நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அருமையாக வலிகளைக் குறித்து விவரித்தீர்கள் நன்றி.

      நீக்கு
  5. இதயவலிகள்...அனைத்தும் புரையோடிய.....வேர்கள்....

    தம 3

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் கில்லர் ஜி !

    உதயத்தில் ஒளிபுகுந்து காட்டை மேய்ந்தும்
    .....உள்ளீரம் மறைந்திருக்கும் மண்ணைப் போலே
    மிதமான அறிவாற்றல் கொண்டும் மக்கள்
    .....மிடுக்கோடு புரிகின்ற செய்கை கூட்டும்
    இதயத்தின் வலியெல்லாம் இரண்டாய்க் காட்டி
    .....இக்காலச் சமூகத்தைச் சாடும் வார்த்தை
    பொதுவாக எல்லோர்க்கும் புரியும் போதும்
    .....புகழுக்காய் நடிக்கின்றார் என்னே செய்வோம் !


    நானும் சந்தித்த வலிகள் அருமை கில்லர் ஜி ...புதுசு புதுசா சிந்திக்கிறீர்கள்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    தமிழ்மணம் கூடுதல் ஒரு வாக்கு


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே //புகழுக்காய் நடிக்கின்றார் என்னே செய்வோம்// அற்புதமாக சொன்னீர்கள்.

      //புதுசு புதுசா சிந்திக்கின்றீர்கள்// இதற்க்கு காரணம் தங்கனைப் போன்றவர்களின் கருத்துரையே காரணம் கவிஞரே தொடர் வருகைக்கும், வாக்கிற்க்கும் நன்றி.

      நீக்கு
  7. எழேழு ஜென்மத்துக்கும் மறக்க முடியாத வலிகள் நண்பா!
    7 + 7 = வலிகள்
    1)சுட்டால்தானே தெரிகிறது
    தொட்டால் சுடுவது சுயநல இதய வலிகளென்று!

    2 )பட்டால்தானே புரிகிறது! பாழும் அரசியலில்
    பொதுநல இதய வலிகள் என்னவென்று!

    ஆகமொத்தம் வலிகளின் மொத்த நிவாரணி= கில்லர்ஜி
    நட்புடன்,
    புதுவை வேலு
    த ம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பா,
      தொட்டால்தான் தெரியும் சுயநலவலி மாற்றிக்கொள்கிறான் சரி
      பட்டால்தான் தெரியும் பொதுநலவலி - இந்த
      முட்டாள்தன செயல் ஏன் ? எத்தனை முறை படுவது 68 வருடமாகவா ?

      நீக்கு
  8. இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    பதிவுலகில் நிகழும் அநியாயங்களைக் கண்டு கொள்ளாமல் போவது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா அநியாயங்களை நியாயமென கருதி செய்பவரும் பதிவர்தானே...
      சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்.

      நீக்கு
  9. ஏழு
    தன்(சுய)நல வலிகளும்
    ஏழு
    பொதுநல வலிகளும்
    தொடருகின்றன...
    இதெல்லாம்
    நன்மை செய்யும் உள்ளங்களுக்கே
    சொந்தம்...

    தங்கள் தளத்தை
    http://tamilsites.doomby.com/ இல்
    இணைக்காது இருப்பின்
    இணைத்துக்கொள்ளுங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே...
      //இதெல்லாம் நன்மை செய்யும் உள்ளங்களுக்கே சொந்தம்//
      மிக அருமையாக சொன்னீர்கள், இதுவரை இல்லை இனி முயற்சிக்கிறேன் தகவலுக்கு நன்றி.

      நீக்கு
  10. கண்ணதாசன் இவற்றில் உள்ள சில விஷயங்களுக்குப் பொருந்துவது போல நிறைய பாடியிருந்தாலும், உடனே எனக்கு நினைவுக்கு வந்த வரி, "நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்" வரிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே அருமையான வரிகளை நினைவு படுத்தினீர்கள் நன்றி.

      நீக்கு
  11. சில வலிகள் சகித்தான் வேண்டும்போல அமைதியாக வாழ!ம்ம் 1 வது சுயநலவதியே இன்னும் வலையை /முகநூலை இந்தமாதம் ஒதுங்கும் நிலையில்!ம்ம் வருவேன் ஊழல் வாதிக்கு ஓட்டு போடும் போது நான் என்ன கொடுமை செய்துவிட்டேன் பொதுவெளியில் முகநூல்/வலைக்கு நேரம்ஒதுக்கி நட்பை சேர்ப்பதால் [[[[[[[[[[[[[[[[

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது உள்ளத்தில் உள்ளதை கொட்டி விட்டீர்கள்.

      நீக்கு
  12. அடிக்கடி பின்னூட்டம் போட முடியாத தற்போதைய புதிய கைபேசிநிலை!தமிழ் உருவி அதில் சேர்க்கும் தொழில்நுட்ப அறிவு தனிமரத்துக்கு இல்லை சகோ உங்கள் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனிமரமாய் நிற்காமல் வாருங்கள் நண்பா தோப்பாவோம்.

      நீக்கு
  13. வலிகள் பலவகை ஒவ்வொன்றும் ஒரு வகை.அதனை அடுக்கி சொன்னது அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் என்னையும் மனதில் வைத்து வந்தமைக்கு நன்றி நண்பரே.

      நீக்கு
  14. உனக்கும் கீழே உள்ளவர் கோடி...
    நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இந்த வரிகளை எமது வாழ்வில் நான் கேட்காத நாட்கள் இல்லை இவைகளே எமக்கு 6தல் மொழிகள்.

      நீக்கு
    2. ஜி மறக்காம வந்துடுங்க... (http://www.tamilvaasi.com/2015/06/blog-post.html)

      நீக்கு
  15. இதயத்தில் ஏற்படும் வலிகள் பற்றிய அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வருகைக்கும், கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் நன்றி.

      நீக்கு
  16. எதையும் தாங்கும் இதயம் இருந்தால்... என்ற பாடல் வரிகளே நினைவுக்கு வந்தது சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான பாடல் வரிகள்தான் சகோ வருகைக்கு நன்றி.

      நீக்கு
  17. சுயநல இதய வலிகள் தாங்கள் சொன்ன 4,5,6 , மிகுந்த வலிகள்,
    இந்த பொதுநல வலிகள் தாங்கிக்கொண்டு, கடந்து போக வேண்டும்.
    இது இதயம் உள்ளவர்களுக்கு மட்டும் தானே சகோ,
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்தானே அருமை சகோ

      நீக்கு
  18. தவிர்க்க முடியாதவை பொறுத்துக் கொள்ளப்பட வேண்டும் நான் என் மக்களிடம் அவ்வப்போது கூறும் வார்த்தைகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  19. இதய வலி அருமையான பதிவு சகோ.

    பதிலளிநீக்கு
  20. பெயரில்லா6/18/2015 1:12 PM

    வான் புகழ்கொண்ட பாரதியையும் சுயநலமில்லா வாஞ்சிநாதனையும் கொச்சைப்படுத்தி சில அரைகுறைகள் பதிவிடும் போது வருவது நிஜ வலி.அதற்கு சிலர் ஆமாம் நண்பரே என்று ஜல்லியடிக்கும் போது வருவது வலியல்ல கோபம் கூடவே அவர்களுக்கு இதழ்கள் தரும் சாபம்.பாராதியை வாஞ்சியை இகழ்பவன் நாசமாகப் போகட்டும்

    வின்னைமுட்டும் பெருமைகொண்ட டிபிரிட்டோ பள்ளி வாழ்க!
    “டெராபைட்” தாமஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பருக்கு... தாங்கள் கருத்துரை தந்தால் இந்தப்பதிவின் நிறை குறைகளைக் குறித்து மட்டுமே எழுதவும்.

      பிறரின் பதிவுகளையோ, பதிவர்களை விமர்சிப்பதற்க்கு எமது தளத்தில் இடமில்லை அது அவசியமின்றி எமக்கு நண்பர்களின் மனக்கஷ்டத்தை கொடுத்து விடும் கடைசியாக சொல்கிறேன் எனது பதிவுகளைக் குறித்து மட்டுமே கருத்துரை எழுதவும் இல்லையெனில் தங்களது கருத்துரை வெளியிடப்பட மாட்டாது தாங்களுக்கு நான் ஏற்கனவே ‘’குட்பை’’ சொல்லி இருக்கிறேன் என்பதை நினைவில் கொள்க.
      நட்பு நீடிக்க... மறபு மீறாத கருத்துரை தேவை.
      - கில்லர்ஜி

      நீக்கு
  21. வலிகளை வரிசைப் பட, சொன்னது நன்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புலவர் ஐயாவின் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  22. வலி தான்...

    ஆனால் இதுவும் கடந்து போகும்..

    God Bless :You

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் வெட்டிப்பேச்சு அவர்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  23. வலிகளை வரிசைப்படுத்தி சொல்லிவிட்டீர்கள்! வலிக்கு மருந்தும் இந்த உலகில் உண்டு! எனவே இதையும் கடப்போம்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் சுரேஷ் அவர்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  24. வலியில்லாத வாழ்க்கை உண்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையான வார்த்தை ஐயா வருகைக்கு நன்றி.

      நீக்கு
  25. இவ்வுலகில்
    நம் இதயம் துடித்துக் கொண்டிருக்கும் வரை
    இதுபோன்ற வலிகளை தாங்கித்தான் ஆக வேண்டும் நண்பரே
    சுய நல மனிதர்கள் மிகுந்தஉலகமாகி விட்டதே நம் உலகம்
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மையை சொன்னீர்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  26. ஒருசில இதய வலிகள் நியாயமானவையே. சிலவற்றில் எனக்கு உண்டபாடில்லை.

    \\ 7. பதவி அதிகாரத்தால், தான்செய்த தவறை பிறர் நம்மீது, சுமத்தப்படும்போது.... ஏற்படுவது.\\ எளியதை வலியது அடித்துத் தின்னுவது இயற்கை. மனிதன் ஆடு, கோழி, ஒட்டகம் என்று விலங்குகளை அடித்துத் தின்னுகிறான். காரணம் அவற்றுக்காக கேள்வி கேட்க நாதியில்லை என்பதால் தானே? தாங்கள் படும் துன்பத்தையும், வலியையும் அவை எங்கே போய் முறையிடும்? அதே மாதிரி இளிச்சவாயனை வலியவன் அடிக்கிறான். முன்னது தப்பில்லை என்றால் இதுவும் தப்பில்லை.


    \\ 3. கிரிக்கெட்டைப்பற்றி, ஒன்றுமே தெரியாத சினிமாக்காரர்கள் தான் சம்பாரிப்பதற்காகத்தான் கூடுகிறார்கள், என்பதை அறியாமல் ஏமாறும் மக்களைக் காணும்போது.... ஏற்படுவது.
    4. விபச்சாரியென, தெரிந்திருந்தும் அவர்களுக்கு கோயில் கட்டுவதைக் காணும்போது.... ஏற்படுவது. \\
    யாரும் 100% யோக்யன் இல்லை, என்னையும் சேர்த்தே சொல்கிறேன். தங்களுக்கு பிடித்த நபர்களை மனதுக்கு பிடித்த வண்ணம் ஒருத்தர் கொண்டாடுவது தனி மனித சுதந்திரம், அதை யாரும் தவறென்று சொல்ல முடியாது. ஒருத்தர் செய்யும் செயல் அவரைப் பொருத்தவரையில் அது நியாயமானதாகவே இருந்தாலும், இன்னொருவருக்கு அது தவறாகத் தோன்றக் கூடும். அந்த வகையில் பார்த்தால் யாரும் எந்த செயலுமே செய்ய இயலாது.

    \\
    6. ஊழல்வாதியென, தெரிந்திருந்தும் அவர்களுக்கு மக்கள் ஓட்டுப் போடுவதைக் காணும்போது.... ஏற்படுவது. \\ ஓட்டு போடுவது ஜனநாயக கடமை. நிற்ப்பவர்களில் அனைவரும் அயோக்யர்கள் என்றால் குறைந்த அளவு அயோக்யன் யாரோ அவனைத் தேர்ந்தெடுப்பதே ஒரே வழி. இல்லாவிட்டால் NOTA வுக்கு வாக்களிக்கலாம்.
    \\
    7. விலைவாசி ஏறுவதை தட்டிக்கேட்க கூடாத மக்கள் மதப்பிரட்சினைக்கு கூடுவதைக் காணும்போது.... ஏற்படுவது.

    \\ தட்டிக் கேட்கப் போனால் அந்த கட்சியின் ரவுடிகள் நம்மை தட்டி விடுவார்களே??!! மக்களுக்கு இறைநம்பிக்கை அவசியம், ஆனால் அது போலியானதாக இருக்கலாகாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவாக அலசி கருத்துரை இட்டமைக்கு நன்றி நண்பரே NOTAவுக்கு நான் என்றுமே ஆதரவாளனே,,,

      நீக்கு
  27. இதய வலிப் பதிவு உண்மையில் வலியை உண்டாக்கியது. எப்பொழுது திருந்தப் போகின்றோமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  28. நீங்கள் சொன்ன எல்லா இதய வலியும் எனக்கும் உண்டு நண்பரே!
    த ம 19

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எல்லோருக்கும் உள்ள அனுபவமாகத்தான் இருக்கும் நண்பரே....

      நீக்கு
  29. வலிகளை அறிந்தவ்ர்களுக்குத்தான் அதன் வேதனைகள் தெரியும்...

    பதிலளிநீக்கு
  30. தாங்கள் சொல்லியிருக்கும் வலிகள் எல்லாமே உண்மைதான்... சுயநல வலிகள் நிறைய அனுபவித்தது உண்டு... இன்றும்...

    பதிலளிநீக்கு
  31. சிந்திக்க வைக்கும் கருத்துகள்

    பதிலளிநீக்கு
  32. வணக்கம்
    ஜி
    தங்களின் பதிவை படித்த போது இத்தனை வலிகள் உண்டா என்பதை அறியமுடிந்தது. பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  33. ஜி! எல்லா வலிகளும் உண்மைதான்!!! ஆனால், எதையும் தாங்கும் இதயத்துடன், நம்க்கும் கீழே உள்ளவர் கோடி என்று நினைத்து, மனதை அடக்கி, தாமரை இலை மேல் உள்ள நீர் போல விலகி நின்று மனதை ரணப்படுத்திக் கொள்ளாமல், ஒரு பார்வையாளராக இருந்து அதே சமயம் நம்மால் இயன்றதை செய்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்ந்துவிட்டால் இந்த வலிகளும் கடந்து போகும்.....ரணப்படுத்தாமல்....நமக்கும் மகிழ்வு வரும் இதில் எதற்கேனும் உதவ முடிந்தால்......அகற்ற முடிந்தால்....

    பதிலளிநீக்கு