தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜூன் 20, 2015

மெய்யம்புளி, மெய் மெய்யப்பன்

அழகாபுரி நடுத்தெருவுலகூட ஒரு பொண்ணு ரெடியா இருக்கு தம்பி,  பொண்ணு பார்க்குறதுன்னா, உங்களைப்பத்தி உண்மையான எல்லா விபரமும் எனக்கு தெரியனும் பேரென்ன, சொன்னீங்க ? 
மெய்யப்பன். எல்லோரும் மெய், மெய்யப்பனுதான் கூப்புடுவாங்க,

நல்லது இப்படித்தான் பேர் எடுக்கணும் ஆமா... சொந்த ஊரு எது ? 
மெய்யம்புளி.

உங்க, அம்மா அப்பா எங்கே இருக்காங்க ? 
செத்துப் போயிட்டாங்கன்னு சொல்லுங்க !

கூடப்பொறந்தவங்க...
யாருமே, இல்லைனு சொல்லிடுங்க !

எங்கே வேலை செய்றீங்க ?
பாங்க் ஆப் பரோடாவுல வேலை செய்றேன்னு சொல்லுங்க ! 

தவறா நினைக்காதீங்க, தம்பிக்கு தண்ணீ... சாப்டுற பழக்கம்... ஏதாவது... 
அய்யய்யோ அந்தப்பழக்கமே, கிடையாதுன்னு சொல்லிடுங்க !  

பீடி, சிகரெட் புகைப்பீங்களா ?  
சேச்சே, கண்ணுல கண்டாலே ஆகாதுன்னு சொல்லுங்க ! 

வெத்தலை பாக்கு, புகையிலை போடுவீயலா ?
எங்க பரம்பரையில யாருமே, போட்டதில்லைனு சொல்லிடுங்க   

பொண்ணுங்க, பழக்கம் லவ்வு அப்படி இப்படின்னு.... ஏதாவது...
பொண்ணுகளை கண்டாலே எனக்கு அலர்ஜின்னு சொல்லுங்க ! 

தம்பிக்கு, சொந்தமா வீடு, இடம்...
கிராமத்துல நிறைய கிடக்குன்னு, சொல்லிடுங்க ! சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுருக்கோம்னு சொல்லுங்க ! லட்சுமி தியேட்டரைக்கூட லீசுக்கு விட்ருக்கோம்னு சொல்லிடுங்களேன்.  

(தனக்குள்) என்ன... எல்லாத்தையுமே சொல்லுங்க, சொல்லிடுங்கன்னு சொல்றானே... நம்மளை மாட்டி விட்ருவானோ ? எதுக்கும் நேரடியாவே கேட்ருவோம்.

தம்பி, கோவிச்சுக்கிடாதீங்க பொய் ஏதும் பேச மாட்டியலே... 
ஹி.. ஹி.. அது, மட்டும்தான் பேசுவேன்.

(தனக்குள்) அடப்பாவி இவ்வளவு நேரம், பேசியதெல்லாம் பொய்யா ? 

டேய், மெய்யப்பா முதலாளி புரோட்டாவுக்கு மாவு வாங்க பணம் கொடுத்தாராமே, அதுல மிச்சத்துக்கு எண்ணெய் வாங்கிட்டு வரச்சொன்னாரு, ஆமா தரகர்ட்ட என்ன பேசிக்கிட்டு இருக்கே ? 

சரி, தரகரே நான் கிளம்புறேன் ஏதும் மாட்டுனா போன் பண்ணுங்க, யேன் நம்பரு 9977777788     
(தனக்குள்) மாட்டுனாவா ? ? ? அட மூதேவி நம்பருகூட சனியன், பிடிச்ச மாதிரிதான் வாங்கி வச்சுருக்கான், அட்டுப்பிடிச்ச பய.

குறிப்பு - 
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மூன்று வரியில் நான் கேள்விப்பட்ட ஒரு விசயத்தை எனது பாணியில் கொஞ்சம் மிகைப்படுத்தி, ஜவ்வு மிட்டாய் போல் இழுத்து மெருகூட்டி வர்ணம் பூசியிருக்கிறேன், இந்த உண்மையை நான் எழுதக் காரணம் எனக்கு சொன்னவர் 
(சகோதரர் G. கணேசன் ஸ்வீட் ஸ்டால் வெள்ளையன் ஊரணி, பிள்ளையார் கோவில் தேவகோட்டை) 
ஒருக்கால் இதை எதேச்சையாக அவர் படிக்க நேர்ந்தால் ? என்னை தவறாக நினைக்கக் கூடும் அதற்காகத்தான்.

61 கருத்துகள்:

  1. அவரும் அவரோட பெயரும் என்று திட்டத் தான் தோன்றுகிறது
    ஜி . நிஜத்திலும் இப்படி இருக்கத் தானே செய்கிறார்கள். நல்லாவே சொல்லியிருக்கீங்க ஜி .நன்றி பதிவுக்கு.! சும்மா சொல்லக் கூடாது இப்போ எல்லாம் ஒரே கலக்கல் தான். வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கவிஞரே நல்லாத்தான் ரசித்து கருத்துரை இடுகிறீர்கள் அடுத்து வரவது எப்போதோ.... வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. சகோதரர் G.கணேசன், உப்பு மண்டிதானே வைத்து இருக்கிறார்!
    பிறவு எப்படி ஸ்வீட் ஸ்டால்னு புரளி பேசறீங்க!
    எதுக்கும் அந்த புரோக்கர்கிட்ட கேட்டு சொல்லுங்க நண்பா!
    ஏன்னா? அவர்தான் "உண்மை உரைக்கும் உம்புரோக்கர்" ஆயிற்றே!
    நண்பா மூன்று வரி விசயத்தை 30 ஆண்டு கழித்து பதிவாக்கும் பகவானே!
    இந்த வித்தையை சொல்வதற்கு தே தே தே வை வரச் சொல்லுங்கள்!
    த ம 2
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  3. உங்கள் பாணியில் சொன்னதால்
    கூடுதல் சுவை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் வருகைக்கும் வாக்கிற்க்கும் நன்றி.

      நீக்கு
  4. ஆயிரம் பொய் சொல்லி - ஒரு
    திருமணத்தையே நடாத்தி வைக்கிறாங்க
    ஆயிரம் ஆயிரம் பொய் சொல்லி - ஒரு
    பெண்ணை விரும்ப வைக்கிறதில
    மெய்யம்புளி மெய் மெய்யப்பன்
    பொய்யின்றி ஒத்துழைப்பான் போல
    இணைப்பாளர் (தரகர்) மாட்டிக்கிட்டு
    சாகவேண்டியது தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பரே கடைசியில் தரகர்தானே கஷ்டப்படனும்...

      நீக்கு
  5. ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்தலாம் என்பதை அந்த மெய்யப்பனுக்கு தெரிந்திருக்கும்போல! இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே... புரோட்டாக் கடையில் வேலை செய்பவன் பாங்க் ஆஃப் பரோடாவில் வேலை செய்கிறேன் எனச்சொல்லச் சொல்வது தவறுதானே...

      நீக்கு
  6. உங்கள் பாணியில் ஒரு உண்மைக்கதை ரசிக்கும் விதமாய்...
    அருமை அண்ணா.

    பதிலளிநீக்கு
  7. இன்னும் இது போல் தகரார்கள்... சே... தரகர்கள் இருக்கிறார்கள் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே மாப்பிள்ளையே தகராறு செய்யிறானே... ஜி

      நீக்கு
  8. ரசிக்கும்படியான பேச்சுநடை..

    பதிலளிநீக்கு
  9. உண்மையை இல்ல உண்மையா ரசித்தேன் சகோ, வாழ்த்துக்கள் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ இந்த மா3 உண்மைகள் நிறைய இருக்கின்றதே....

      நீக்கு
  10. இப்படி பொய்யை மெய்யா சொல்றவங்களுக்குதானே..இனினிக்கு கலியாணமே நடக்குது. உண்மையைச் சொன்னா பொழைக்கத் தெரியாத ஆளு மகா பட்டம் கொடுத்துடுறாங்களே!!! நண்பா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுக்காக இப்படியா ? இது ஓவரு இல்லையா ? நண்பா...

      நீக்கு
  11. 3 வரியில கேள்விப்பட்டதை....30 வருடம் கழித்து 30...35 வரியா...நாங்க ரசித்து மகிழ தந்தமைக்கு நன்றி..

    தங்கவேலுவின்...மன்னார் & கோ நகைச்சுவை ...நினைவில் வந்தது என்றும் ரசிக்கும் படியானது அது.......உங்கள் பதிவுகள் நல்ல ரசனையான பதிவுகள். நீங்கள் விரைவில் சினிமாவிற்கு அழகாய் எழுதலாம் சகோ....அம்புட்டு விஷயங்கள் உங்க கிட்ட இருக்கு....யாராவது...பாருங்கப்பா....இவரை....!!!!

    நன்றி சகோ
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ தெரிந்தவர் மூலம் கமல்ஹாசனிடம் எனது வலைப்பூ முகவரி கொடுக்கப்பட்டுள்ளது அவர் பார்த்தாரா ? இல்லையா ? 80 தெரியவில்லை.

      25 வருடத்துக்கு முன்பு கமல்ஹாசனிடம் நான் யாருக்குமே ரசிகர் கிடையாது என்று வெளிப்படையாக சொன்னவன் ஒருவேளை அந்த ஞாபகம் இன்றும் உள்ளதோ என்னவோ...
      ஆனால் கமல் என்னை வெரிகுட் இப்படியே கடைசிவரை இரு என்று பாராட்டினார்..

      நீக்கு
  12. அன்னைக்கு பிச்சுமணிக்கு சாத்து விழுந்த மாதிரி -
    மெய்யம்புளியானுக்கு விழ வில்லையா!?..

    இந்த மாதிரியெல்லாம் பித்தலாட்டம் பண்ணினால் - மெய்யப்பனுக்கு மொய் கூட கெடைக்காமப் போய்டும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அந்த மா3 சட்டீர் விட்டால்தான் இவனுகள் சரியா வருவாங்கே...

      நீக்கு
  13. ரசித்தேன் நண்பரே!
    த ம 12

    பதிலளிநீக்கு
  14. அன்றாட வாழ்க்கையில் இப்ப்டிச் சிலர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா இதுவும் உண்மைதான்... வருகைக்கு நன்றி.

      நீக்கு
  15. கதையை உங்கள் பாணியில் சொல்லி இருப்பதால் வழக்கம் போல் ரசித்தேன் சகோ.

    பதிலளிநீக்கு
  16. இப்போது அவர் அரசியல்வாதியாக இருப்பாரோ ?
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் தோழரே கண்டிப்பாக இன்று எம்.பியாக இருக்க வேண்டும்.

      நீக்கு
  17. ஆயிரம் பொய் சொல்லியாவது.... அதுமாதிரி இருக்குமோ. எப்பவுமே இடைத்தரகர்கள் பாடு கஷ்டம்தான் .....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா 1000 பேருக்கு போய் சொல்லி கல்யாணம் செய் 80தை.
      1000 பொய் சொல்லி கல்யாணம் செய் என்று புரிந்து கொண்டானோ....

      நீக்கு
  18. எனக்கு மேலே பொய் சொல்கிறானே என்று தரகர் நினைத்து இருப்பார் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவண் புரோட்டா கடை வேலையை விட்டுப்புட்டு தரகர் வேலைக்கே போகலாமோ... ஜி

      நீக்கு
  19. வணக்கம் கில்லர் ஜி !

    சிரிக்கும் ஆற்றல் உயிரினங்களில் மனிதர்க்கு மட்டுமே உண்டு அந்த ஆற்றலின் தூண்டுகோல்களில் ஒன்றான நகைச்சுவையை கொடுக்கும் தங்களுக்கும் ஒரு கும்பிடு போடத்தான் வேண்டும் !

    அருமை அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    தமிழ்மணம் கூடுதல் ஒரு வாக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் வருகையும் கருத்துரையுமே போதுமானது கும்பிடு வேண்டாமே...

      நீக்கு
  20. ஆகா
    அருமை அருமை
    ரசித்தேன் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  21. ஜவ்வு மிட்டாயாக இருந்தாலும் இனிப்பாகத்தானே உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனித்தால் சந்தோஷமே முனைவரின் வருகைக்கு நன்றி,

      நீக்கு
  22. அருமையான உரையாடல்! இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  23. பெயரில்லா6/21/2015 12:28 PM

    இப்படிப் பொய் பேசுறவங்களைப் புழுகுணி
    என்று சொல்லுவோம்
    சிரிப்புத்தான்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  24. மெய்யப்பன் மாதிரியானவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்! ஹாஹாஹா! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் சுரேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  25. கடைசியா நான் பேசுறது எல்லாம் பொய்தான்கிற உண்மையை ஒத்துகிட்டானே, அதை நிச்சயம் பாராட்டனும்!!

    பதிலளிநீக்கு
  26. வரிக்கு வரி அருமை

    பதிலளிநீக்கு
  27. வணக்கம்
    ஜி
    ஏமாற்றப்பட்டவர்கள் பலர்.. அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 21
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  28. ஹஹஹஹ் தரகர் நினைத்திருப்பார்....அட நமக்கே அல்வா கொடுத்துருவான் போல இருக்கேனு....தரகரையும் மிஞ்சிப்புடுவான் மெய்யப்பன் அலைஸ் பொய்யப்பன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹ நீங்கதான் பெயர் சரியா சொல்லி இருக்கீங்க...

      நீக்கு
  29. உண்மை எல்லாம் இருக்கட்டும். வாழ்வே மாயம் ஸ்டில் எடுத்து ..கில்லர்ஜின்னு போட்டுண்டு இருக்கேளே ... அடுக்கு என்ன சொல்ல போறேள்..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ... இதெல்லாம் கண்டுக்கிறாதேள்....

      நீக்கு