தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜூலை 11, 2015

நெடுங்குடி, நெட்வொர்க் நெடுமாறன்


இந்த நெடுஞ்சாலை துறையினருக்கும், (Highway Department) குடிநீர் வடிகால் வாரியத்தினருக்கும் (Water Supply & Drainage Board) எவ்வளவு தைரியம், நெஞ்சழுத்தம் இருந்திருக்க வேண்டும் நம்மைக் கேட்க யார் ? என்ற இறுமாப்பு, சாலை போட்ட பிறகு குழாய் பதித்தார்களா ? குழாய் பதித்த பிறகு சாலை போட்டார்களா ?

புதிய சாலை எனசொல்ல சாத்தியமில்லை, சாலையும் புதுப்பித்திருக்கிறது ஆகவே இது இருவரையும் சேரும், சர்வ சாதாரணமாக இந்த தவறை செய்து விட்டு போய் விட்டார்களே ! இது தவறென்று இவர்களுக்கு சொல்வது யார் ? சொல்ல வேண்டியவர்கள்  இவர்களுக்கு மேல் தவறுகளை செய்து கொண்டிருக்கின்றார்களே ! கேட்க கூடிய சந்தர்ப்பம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது அப்பொழுதும் மக்கள் தேர்தலை திருவிழாபோல நடத்தி அவர்களை அனுப்பி விடுகிறார்கள், வேறு யார்தான் இவர்களுக்கு இந்த தவறை உணர்த்துவது

முதல்வன் மாதிரி திரைப்படம் எடுத்துக் காண்பித்தால் சரியான செயலென காட்சிக்கு காட்சி கைதட்டும் மக்கள் தியேட்டரை விட்டுவெளியே வந்ததும் மறந்துபோய் விடுகிறார்களே ஏன் ? இது சரியெனில் வாழ்க்கைக்கும் எடுத்து கொள்ள வேண்டியதுதானே ! அப்படியானால் கை தட்டியது முட்டாள்த்தனமான செயலா
இந்த மாதிரியான அதிகாரிகள் திருந்த ஒரே வழி, 

இந்த செயலுக்கு காரணமான அதிகாரிகள் இதே வழியாக அவசர வேலையாக இரவு நேரத்தில் அவர்களே மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு வந்து முட்டிமோதி மண்டை உடைந்து, கால் ஒடிந்து மருத்துவனையில் ஒரு மாதம் கிடத்தி வருவோரும், போவோரும் நலகுசலம் கேட்டு துன்புறுத்தும் போதுதான் உடல் வேதனையும், மன வேதனையும் சேர்ந்துதான், செய்தது தவறென உணர்த்தும்

சரி இந்த சந்தர்ப்பத்தை யார் அமைப்பது ? வேறுயார் ? இறைவன்தான் ? ? ? 

அதே நேரம் இறைவன் இவர்களுக்கு மரணத்தை கொடுத்து விடக்கூடாது, குறைந்த பட்சமாக 10 ஆண்டுகளாவது நுடமாக வாழ்ந்து மரணிக்க வேண்டும்.

CHIVAS REGAL சிவசம்போ-
நாட்டுல, நீதிபதிகளுக்கு பஞ்சம்னு சொல்றாங்க, இந்த மாதிரி ஆளுகளை ''போடச் சொன்னா'' குடிகாரப்பய ஒழர்ர்ர்ர்ர்ரான்னு சொல்வாங்க....

22 கருத்துகள்:

  1. இப்படித்தான் இருக்கிறது நாடு.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் சாபம் பலிக்கட்டும்,
    மக்கள் புரட்சி ஒன்றே மாற்றம் தரும்.
    தமிழ்நாட்டு "குடி"மகன்களை பார்த்தால் புரியும் புரட்சி உருவாகுமா, புர்ர்ர்.....ட்ச்ச்சி உருவாகுமா என்று.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் சாபம் பலிக்கட்டும்.

    மக்கள் புரட்சி ஒன்றே மாற்றம் தரும்

    தமிழ் குடிமகன்களிடம் அதை எதிர்பார்ப்பது மடத்தனம்.

    பதிலளிநீக்கு
  4. படத்தினைப் பார்க்கப் பார்க்க வியப்புதான் மிஞ்சுகிறது நண்பரே
    இப்படியுமா சாலை அமைப்பார்கள்
    நன்றி
    தம+1

    பதிலளிநீக்கு
  5. என்னத்தச் சொல்ல...? சில இடங்களில் இங்கு நடு ரோட்டிலே இருக்கு ஜி...

    பதிலளிநீக்கு
  6. சாலையும் வேண்டும், அங்கே இருக்கும் அடி பைப்பும் போகக் கூடாது என நினைத்து இப்படி செய்திருப்பார்களாக இருக்கும்! :))

    ஆனால் அது விபத்தில் முடியும் என்பது புரியாமல் போய்விட்டதே!

    த.ம. 4

    பதிலளிநீக்கு
  7. வாகனங்களின் ரேடியேட்டர்களுக்கு தண்ணீர் ஊற்ற வசதி செய்து தந்தால்,இதையுமா குறை சொல்வது :)

    பதிலளிநீக்கு
  8. எல்லா இடங்களிலும் இதே கதிதான்! யாரை நோவது?

    பதிலளிநீக்கு
  9. இதுபோல நிறைய இடங்களில் இருக்கு அண்ணா...
    எல்லாம் அலட்சியப் போக்கே...

    பதிலளிநீக்கு
  10. சாபம் கொடுக்காதீர்கள். இதைவிடவும் மோசமாக ஆகிவிடப்போகிறது.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோ,
    ஏப்பா வந்தோமா, போனோமா என்று இல்லாம,,,,,
    இன்னும் நிறைய இருக்கு சகோ இங்கே,
    எல்லாம் அடுத்தவரை நோக்கியே,
    அருமை, வாழ்த்துக்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடக்கும் என்று முன்பெல்லாம் விளம்பரம் செய்வார்கள். அதுபோல் எங்கிருந்தாலும் கில்லர்ஜியின் அரசியல்வாதிகளைத் தாக்கும் பணி தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. படம் போட்டுப் பதிவெழுதி
    பலர் மூளைக்கு
    வேலை வைத்தது சரி...
    ஆனால்,
    சாவைக் கொடுக்காதே
    பத்தாண்டுகள் முடமாக்கென
    தண்டனை வழங்குவது பிழை...

    பதிலளிநீக்கு
  14. அதிகாரிகளாவது மோட்டார் சைக்கிளில் வருவதாவது. அவர்கள் வருவது ஜீப்பில் அல்லவா? எனவே அவர்களுக்கு கைகால் உடைந்து மருத்துவமனை செல்வது சாத்தியமில்லை. ஆதலால் உங்கள் சாபம் அவர்களை ஒன்றும் செய்யாது. பொது மக்களாகிய நாம் தான் அதை பிடுங்கி எறிந்து மற்ற வாகன ஓட்டிகளை காப்பாற்றவேண்டும்.

    பதிலளிநீக்கு
  15. வா.. ராஜா.. வா...
    வா.. ராஜா.. வா...

    ரோட் மேலே..போவணுமா.. போய்க்கோ.. போய்க்கோ!..
    குழாய்த் தண்ணி வோணுமா.. குடிச்சுக்கோ.. குடிச்சுக்கோ!..

    அட்ச்சு வேணா குடி.. புட்ச்சு வேணா குடி..
    குழாய மட்டும் வெச்சுட்டுப் போய்டு!..

    பதிலளிநீக்கு
  16. நடுரோட்டில் மின்கம்பம் நட்டு வைப்பவர்கள் நம் ஆட்கள்! இதெல்லாம் அவர்களுக்கு ஜுஜுபி!

    பதிலளிநீக்கு
  17. நிலத்தடி நீரே வற்றிய பிறகு கை பம்பு எதற்கு நண்பா?
    டாஸ்மார்க் போகும் வழி என்பதன் லேண்ட் மார்க் இதுவா இருக்க போகிறது!
    ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் காசு இல்லாதபோது பெருங்குடிமகன் விற்று குடிக்க உதவும்!
    சரி விடுங்க நண்பா!
    நம்ம சாபம் நமக்கே திரும்பி விடப் போகிறது! எச்சரிக்கை! எனக்கும் சேர்த்துதான் சொன்னேன் நண்பா!
    த ம11
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  18. ஜி! நாம் கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும் என்பது போல் தான் நான் அனைவரும் எழுதிக் கொண்டிருக்கின்றோம். எழுதி விட்டுச் சும்மாதானே நாம் செல்கின்றோம். கேட்டால் விழிப்புணர்வு என்ற ஒரு சாக்கு போக்கு சொல்லி விடுவோம் நாம்.

    ஃப்ரென்சு புரட்சி போல நம் நாட்டிலும் மக்கல் ஒரு பெரும் புரட்சி செய்தால் மட்டுமே இது மாறும்...நாம் இங்கு சொல்லி வரும் எல்லாமே....நடக்கும்...மாறும். புரட்சி இரஷ்ய புரட்சிம் ஃப்ரென்சு புரட்சி போல..

    ஐயையோ அப்ப அத்தனை பேருமெ "புரட்சித் தலைவர்கள்" ஆகிடுவாங்களோ....ஹ்ஹஹ

    பதிலளிநீக்கு
  19. காலைலயே கமென்ட் போட்டு போகாம இப்பதான் போக வைச்சோம்...

    பதிலளிநீக்கு
  20. இப்படிதான் இருக்கின்றன வளர்ச்சி திட்டங்கள்
    தம +

    பதிலளிநீக்கு
  21. வருந்தத் தக்க செயலே ஜி ஏன் இப்படி செய்கிறார்களோ. ஆமா இதற்கு பின்னூட்டம் இட்டேனே ஜி என்னாச்சு ம்...ம்..ம்

    பதிலளிநீக்கு
  22. இது நம் நாட்டில் சர்வ சாதாரணம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அந்த ஏரியா மக்களும் இதைக் கண்டு கொள்ள மாட்டார்கள். ஏதாவது அசம்பாவிதம் நடந்து பத்திரிகளில் வந்தால் மட்டுமே சரி செய்வார்கள். தமிழ்நாடு நல்ல தமிழ்நாடு.
    த.ம.16

    பதிலளிநீக்கு