தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஆகஸ்ட் 19, 2015

கெட்டவனுக்கு 8


01. ஆதரவற்று ஒதுக்கப்பட்ட இவரை பார்த்த பிறகும் பெற்றோர்களை அழைக்க மறுக்கும் மடையனா நீ ? இல்லை, அறிவாளி நீ
 
02. இதைக் கண்டும் திருந்தா விட்டால் நாளை இறைவன் தண்டிப்பான் 80தை அறியா நாத்திகனா நீ ? இல்லை, அறிந்த ஆத்திகன் நீ
 
03. சொந்த பந்தங்கள் உன்னை வெறுத்துப் பேசும் அளவுக்கு நடக்க கெட்டவனா நீ ? இல்லை, நல்லவன் நீ
 
04. உனது சந்ததிகளுக்கு வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொடுக்க தெரியாத ஆட்டு மந்தையா நீ ? இல்லை வீட்டு தந்தை நீ
 
05. பெற்றோருக்கு உணவுக்கு செலவு செய்ய தயங்கும் அளவுக்கு கஞ்சன் ஜங்காவா நீ ? இல்லை, பாரிவள்ளல் நீ
 
06. மனைவிக்கு பயந்து பெற்றோர்களை வீட்டுக்கு அழைக்க பயப்படும் கோழையா நீ ? இல்லை, வீரன் வீராச்சாமி நீ  
 
07. நாளை உனக்கும் வயதாகும் நீயும் கிழவனாவாய் 80தை அறியா ஐந்தறிவு மிருகமா நீ ? இல்லை, ஆறறிவு மனிதன் நீ
 
08. வயதான, தாய்-தந்தையர்களை ஒதுக்க நினைக்கும், நன்றியில்லா மனிதனா நீ ? இல்லை, நன்றியுள்ள நாய் நீ

சாம்பசிவம் -
செருப்பால அடிச்சுட்டு வெல்லம் கொடுக்கிற மாதிரி தெரியுதே...
* * * * * * * *

48 கருத்துகள்:

  1. சொல்லவேண்டிய அறிவுரைகள்தான்.

    பதிலளிநீக்கு
  2. எல்லாம் சரிதான்!..
    கேட்பார் கேட்க வேண்டுமே!..

    (6) வீரன் வீராசாமியோட விஷயம் என்னவென்றால் -

    வேண்டாம்.. பாவம் அவன்!... அந்த நிலை யாருக்கும் வரக்கூடாது..

    ஆனாலும் - அந்த நிலைப்பாடு தான் வீட்டுக்கு வீடு காணப்படுகின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி எல்லோரையும் அப்படி ‘’ஜொள்ள’’ முடியாதே.... நாட்டில் வீராசாமிகளே கிடையாதா ?

      நீக்கு
  3. வணக்கம்
    ஜி
    யாவரும் அறிய வேண்டி கருத்தை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஜி
    த.ம5

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரூபன் நலம்தானே ? வருகைக்கு நன்றி.

      நீக்கு
  4. வடிவேலு நெற்றியில் ஒரு விரலை நீட்டிக் கொண்டு பேசின வசனம் போலிருக்கு :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் ஒரு வகையான ஊமைக்குத்துதான் ஜி.

      நீக்கு
  5. செருப்பை சிம்மானத்தில் வைத்து ஆண்ட நாடுதானே..இது. அதனால் செருப்பால் அடித்து சொன்னாலும் அதையும வணங்கும் ஆறறிவு படைத்தவர்கள் நிறைந்து வாழும் நாடு இது.....நண்பா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே மனிதனுக்கு 6 அறிவு இல்லை 80தே எனது அறிவுக்கு 8கிறது.

      நீக்கு
  6. கெட்டவனுக்கு எட்டு திட்டுக்கள் தானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே வாழ்த்துவதாய் இருந்தால் 16 சொல்லலாம் திட்டுவதை 8+8-16 என்று கூட்டிக்கொண்டே போகவேண்டும்.

      நீக்கு
  7. வரிசைப்படுத்திய வசைப்பாடல் தொடரும்......இல்லையா ஜீ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொ....ட....ர...லா....ம்...சகோ வருகைக்கு நன்றி

      நீக்கு
  8. நல்ல அறிவுரைகள் நண்பரே! ...

    ஐந்தறிவினை இப்படிக் கீழ போட்டுட்டீங்களே நம்மள திட்டற வேளையில...அவங்க ரொம்ப நல்லவங்க...நாம்தான்..ஆறறிவுதான் ரொம்ப கீழ....

    பதிலளிநீக்கு
  9. அருமையான கருத்தை உங்கள் பாணியில் அழகாக சொல்லி இருக்கீங்க சகோ.

    பதிலளிநீக்கு
  10. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றி இருக்கிறீர்கள்! சிறப்பான பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேறென்ன செய்வது படக்குனு குத்தினால் ஊசி சடக்குனு ஒடிஞ்சு நம்மளை குத்திடுமே...

      நீக்கு
  11. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு. கில்லர்ஜியின் பாணியே அதுதான். அந்த பாணியை இதிலும் காணமுடிந்தது-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் தெளிவான கருத்துக்கணிப்புக்கு நன்றி

      நீக்கு
  12. அன்புள்ள ஜி,

    கெட்டவனுக்கு எட்டு போடச்சொல்லி பாஸ் பெயில் போடுற பிரேக் இன்ஸ்பெக்கடர் போல வந்து பெற்றோரை மைனஸ் ஆக்காமல் பிளஸ் ஆக்கச் சொல்லி ஆக்கபூர்வமாக இருக்கச் சொன்னதைக் காதுள்ளோர் கேட்டக் கடவர்.

    நன்றி.
    த.ம.11

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி ஆசிரியர் பாணியிலேயே கருத்துரை தந்தமைக்கு நன்றி

      நீக்கு
  13. உலக மனித நேயம் தினத்தில் ஆகஸ்ட் 19ல்
    மனித நேயத்தை மாவிளக்கு ஏற்றி வரவேற்று இருப்பது பாராட்டுக்குரியது நண்பா!
    வாழ்த்துகள்.
    நன்றியுள்ள...............(கோடிட்ட இடத்தை நிரப்பிக் கொள்க நண்பா!)
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா பொருத்தமான நாளுக்கு பொருத்தமாக இருக்க வேண்டுமே...

      நீக்கு
  14. அருமையாக சொல்லியுள்ளீர்கள் நண்பரே!
    த ம 12

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  15. முதலில் போட்ட கருத்து வந்ததா. ஒவ்வொரு வாக்கியத்துக்கும் பின்னால் வருவதே செருப்படி என்று நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களது கருத்துரை வரவில்லையே... மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  16. கில்லரின் கில்லிங்க் அடி!

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே.

    நல்ல பதிவு. படமும்,தங்களுக்கே உரிய பாணியில் சொல்லிச் சென்ற, எட்டு பொன் மொழிகளென வார்த்தை கோர்வைகளும் படித்தவுடன் மனதை வருத்தின. அனைவரும் இதை உணர்ந்து பெரியவர்களை மதித்து நடந்தால், நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லது. புரிந்து கொள்ள ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். அருமையான வரிகள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், பொன்னான கருத்துரைக்கும் நன்றி சகோ.

      நீக்கு
  18. பெற்றோரை காக்க வேண்டும், நன்றி மறப்பது நன்றல்ல. இதை இன்றைய இளைஞர்கள் பின்பற்றுவதில்லை, வேதனைக்குரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது வேதனையின் விளைவே இந்தப்பதிவு நண்பரே...

      நீக்கு
  19. மனிதம் காக்கப்பட வேண்டும்,
    படத்தைப் பார்த்தாலே மனம் கனக்கிறது,,,,,,
    அருமையாக சொல்லியுள்ளீர்கள்,
    நன்றி சகோ,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு