தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஆகஸ்ட் 30, 2015

திரு (மண்) நாள்

30.08.2015

வயல் வெளியோரம் போகும் காற்றே...
என் வேதனையை கொஞ்சம் ஆற்றே...

பாதையோரம் விளையும் புல்லே...
என் பாவமென்ன நீயும் சொல்லே...

கண்ணுக்குள்ளே கண்ணாய் வந்தாள்
நெஞ்சுக்குள்ளே கனலைத் தந்தாள்

மீளாத் துயரில் என்னைத் தள்ளி
தூரப் போய் விட்டாயடி கள்ளி

எந்தன் நிலையை நீயும் கண்டோ
எனக்கும் ஒரு மாற்றம் உண்டோ

சதி செய்தது இறைவன் தானே
கதியற்று இப்படி நிற்பது நானே

காணவேண்டும் உன்னைக் கனியே
வாடுகின்றேன் நானும் தனியே

சதி என்று என்னிடம் வந்தாய்
பதியை விட்டு தீயில் வெந்தாய்

மீண்டும் நான் மட்டுமே உனக்கு
தவறுமோ என் மனக் கணக்கு

எனை அழைக்க வருவாய் என்றே
நானும் இங்கே தயாராய் இன்றே.
(30.08.1991)
இன்று எங்களது திருமண நாள் என்னவளுக்காக எமது வழக்கமான காணிக்கையாக இந்தக் கவிதையை அர்ப்பணிக்கின்றேன்.
கடைசிவரை.... உண்னவன்.


என்னவளுக்கு நான் எழுதிய கவிதையை படிக்காத நண்பர் – நண்பிகள் கீழே சொடுக்குக....

41 கருத்துகள்:

  1. கவிதை வாசிக்கும் போது ரொம்பக் கஷ்டமா இருக்கு அண்ணே...
    அண்ணியார் உங்க கூட இருக்காங்கன்னு நினைச்சிக்கங்க.... :(

    பதிலளிநீக்கு
  2. தங்களைத் தேற்றும் சக்தி எனக்கு இல்லை. வேதனை மிகுந்தது என்றாலும் மிக அழகாக உள்ளது கவிதை கவிதையை மட்டும் ரசித்தேன்.
    அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.நன்றி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள ஜி,

    மணநாள்... மனம் நொந்த கவிதை...
    சொந்த கதையில் சோகத்தின் நிழல்...
    ஈடு செய்யமுடியாத இழப்பு...!

    நெஞ்சம் கனக்கிறது.
    த.ம. +1

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் கில்லர் ஜி !

    வாழ்த்துச் சொல்லும் நிலையில் மனம் இல்லையே நண்பரே !
    கவிதை அருமை கண்ணீர் கலந்ததனால் !
    தம +1

    பதிலளிநீக்கு
  5. படிக்கும்போதே கண்ணிரை வரவழைக்கிறது!!

    பதிலளிநீக்கு
  6. எப்படித் தேற்றுவேன்? என்னவெனக் கூறுவேன்?
    கனத்த மனத்துடன் உங்களுக்கு மன அமைதி வேண்டிப்
    பிரார்த்திக்கின்றேன் சகோ!

    த ம.+1

    பதிலளிநீக்கு
  7. துக்கங்களும் வாழ்க்கையின் ஒரு அங்கமே.

    பதிலளிநீக்கு
  8. வாழ்வென்பதே மேடு பள்ளங்கள் நிரம்பியதுதானே
    நடந்தவற்றை மாற்ற இயலுமா நண்பரே
    உள்ளத்தால் இன்றும் இணைந்தேதான் இருக்கின்றீர்கள்
    என்றென்றும் இணைந்தே இருப்பீர்கள்

    பதிலளிநீக்கு
  9. அவ்வப்போது இவ்வாறு நீங்கள் பகிர்வதைப் படித்திருக்கிறேன். உங்கள் மனதிற்கு போதிய ஆறுதலைத் தர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. என்ன சொல்ல என்று தெரியவில்லை நண்பரே! வழக்கமாக கலாய்ப்போம் இந்த வில்லங்கத்தார்... இன்று மௌனம்! இதுவும் கடந்து போகும் அதுதான் வாழ்க்கை!

    பதிலளிநீக்கு
  11. மனதை அமைதிப் படுத்திக் கொள்ளுங்கள் ஜி...

    பதிலளிநீக்கு
  12. மறக்கமுடியாததுதான். ஆனாலும் தங்கள் துணைவியாரோடு வாழ்ந்த நாளை நினைத்து ஆறுதல் அடையுங்கள்.

    பதிலளிநீக்கு
  13. கவிதையை படிக்கும் போதே மனம் வலிக்கிறது. தேற்ற வார்த்தைகள் இல்லை!

    பதிலளிநீக்கு
  14. மண்ணுக்குள் சென்ற மா சக்தியை
    விண்ணுக்குள் ஒளிரச் செய்தாய்
    எண்ணத்துள் வார்த்தெடுத்த கவி நிலவாய்
    உன்னுள் உறங்கும் உயிருக்கு
    உயர்வினை தந்த நாள்
    நினைவெல்லாம் நிற்கும் நித்தியக் கவி நண்பா!
    நட்புடன்,
    புதுவை வேலு
    த ம 7

    பதிலளிநீக்கு
  15. கள்ள இல்லா உள்ளத்திலிருந்து
    மெள்ள வெளிப்படும்
    உள்ளத்துத் துயரம் கண்டு - என்
    உள்ளமும் நோகுறதே நண்பா!
    ஆண்டவன் தந்த உறவுகளை
    ஆண்டவனே பறித்தெடுத்து நோகடிப்பதும்
    ஆண்டவன் பணியாச்சே!
    தங்களவள் தூரச் செல்லவில்லை
    தங்கள் பிள்ளைச் செல்வங்களில்
    வாழ்கின்றாள்! - தங்கள் பிள்ளைகளை
    அறிஞர்களாக்கி வாழ வையுங்கள் - அதில்
    மகிழ்வைக் காணுங்கள்!

    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
  16. கவிதை படிக்கும் போது மனம் கனத்து போனது.
    இறைவனின் கணக்கு புரியவில்லை.
    குழந்தைகளுக்கு தாயுமானவராக இருங்கள் என்றும்.

    பதிலளிநீக்கு
  17. மனம் கனத்துப்போனது படிக்கும்போதே...
    என்ன சொல்ல......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு கணம் அதிர்ச்சியில் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது கில்லர்ஜியின் வரிகள்.

      நீக்கு
  18. கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்!..
    - என்று சிலப்பதிகாரத்தில் - கோப்பெருந்தேவி வாயிலாக இளங்கோவடிகள் கூறுவார்..

    உங்களைப் பிரிந்த - அவர்களது ஆன்மா எப்படியெல்லாம் வேதனையடைகின்றதோ..

    இயற்கை இது - என எண்ணி, பிள்ளைகள் முகம் பார்த்து ஆறுதல் கொள்ளவும்..

    காலம் - தங்களது வேதனைகளை மாற்றுவதாக!..

    பதிலளிநீக்கு
  19. உடலால் உங்களைப் பிரிந்தாலும் உள்ளத்தில் உங்களுடனே இருக்கிறார் உங்கள் துணைவி.

    பதிலளிநீக்கு
  20. கவலை இல்லா மனம் இல்லைபோலும்....நிலவும் உலகில....

    பதிலளிநீக்கு
  21. நினைவுகளை நெஞ்சில் சுமக்கலாம் கவலைகளைச்சுமக்கக் கூடாது. இனிய நினைவுகளில் மண நாளை நினைத்துப் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை ஐயா..... நல்ல நினைவுகளை சுமந்தே நாட்களை கடந்துவிட வேண்டும். கவலைகள் மனதை மட்டுமல்ல... உடலையும் உருக்கி விடும்...!

      நீக்கு
  22. உங்களது மன வலி புரிகிறது. மனைவி மீது கொண்ட நேசம் புரிகிறது...கவிதை வரிகள் அல்ல.. கண்ணீர் வரிகள்...!

    பதிலளிநீக்கு
  23. நானும் உங்களைப் போன்றவனே !நீர் படும் வேதனயை அறிவேன்!

    பதிலளிநீக்கு
  24. உங்கள் கண்ணீரை துடைத்து விட விரும்புகிறேன்............. [உங்க ஃபோட்டோ கீழே ஆரம்ப தேதி மட்டும் தான் இருக்கணும்.........மரபை மீற வேண்டாம் .........பிளீஸ்]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றி விட்டேன் நண்பரே அன்புக்கு நன்றி.

      நீக்கு
  25. நண்பரே! இந்த பதிவிற்கு காலையில் இருந்தே கருத்துரை எழுதுவதா வேண்டாமா என்று ஒரே குழப்பம். காரணம், உங்கள் மனைவி உயிரோடு இருந்து, இன்று எமது திருமணநாள் என்று, உங்கள் இருவரது போட்டோவையும் போடுவதில் அர்த்தம் இருக்கிறது. திருமணநாள் என்பதற்காக வாழ்த்துரை சொல்வதா? அல்லது அந்த சகோதரி இன்று நம்மிடையே இல்லையே என்று வேதனைப் படுவதா என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  26. நெஞ்சு கனக்கிறது.
    வேதனை புரிகிறது.

    நான் பாடவேண்டுமென நினைக்கிறீர்கள் போலும்.
    அது உங்கள் கண்ணீரைத் துடைக்குமா இன்னும் பெருக்குமா என எனக்குத்
    தெரியவில்லை.

    இருப்பினும் பாடுகிறேன். பகுதாரி என்னும் ராகத்தில்.

    தொடர்பு லிங்க் அனுப்புவேன்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthathacomments.blogspot.com

    பதிலளிநீக்கு
  27. இதுவும் கடந்து போகும் ,மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள் !

    பதிலளிநீக்கு
  28. உங்களுடைய திருமண நாளான இன்று இந்த சோக கவிதையை படித்து மனம் கனத்தது என்னவோ உண்மை சகோ.

    பதிலளிநீக்கு
  29. என்ன சொல்வது இப்பதிவுக்கு. எப்பவும் உங்க கூடவே உங்க மனைவி இருக்காங்க. மனதை திடமாக வைத்திருங்க. தளர்ந்து போகவேண்டாம்.

    பதிலளிநீக்கு
  30. தங்களை நேரில் சந்தித்தபோது இந்தத் துயர் செய்தியைக் கேட்டு மனம் வருந்தினேன். உங்கள் சொற்களால் நல்லமனதையும் அறிந்தேன்.அகத்தில் இருக்கும் சோகத்தை முகத்தில் மறைப்பது எளிதல்ல .அதை மறைக்கத்தான் பெரிய மீசை வைத்திருக்கிறீர்கள் போலிருக்ருகிறது. கலக்கம் வேண்டாம் அமைதியுறுக

    சாவெனும் வடிவம் கொண்டு
    ---சடுதியில் காலன் வந்து
    தா!வென உந்தன் உறவை
    -----தட்டியே பறித்து சென்றான்
    ஆ!வென அலறி நின்றீர்
    -----ஆருயிர் மனையாள் பிரிவால்
    தீவென ஆனீர்! ஆயினும்
    ----திடத்துடன் தேற்றிக் கொள்வீர்

    பதிலளிநீக்கு
  31. நினைவுகளே ஓர் ஆறுதல்.காலமே ஒரு மருந்து,

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் சகோ,
    சதி செய்வது இறைவன் தானே,,,,,,,,
    ஆற்றுப்படுத்துதல் எளிது,,,,,,,,,

    பதிலளிநீக்கு
  33. இந்த சோகம் தீர்க்க முடியாதது!

    பதிலளிநீக்கு
  34. உங்கள் துணைவியின் இழப்பு ஆறாத ரணம். அழுதால் தீரப்போவதில்லை. சுமைதாங்கிக்கல் போல இந்த ரணம் தரும் வலியை நீங்கள் தாங்கித்தான் ஆக வேண்டும். மாறாக உங்கள் இருவருக்கிடையே மலர்ந்திருந்த மகிழ்ச்சியான தருணங்களை இந்த மண நாளில் நினைத்திருந்தால் வலி குறைந்து மனம் சற்றே நிம்மதி பெறும்!

    பதிலளிநீக்கு
  35. நண்பரே! கவிதை மாதிரி ஒரு முயற்சி என்றீர்கள் இதை. ஆனால், உண்மையில் இது பாடல். நல்ல இயைபு! கவித்தன்மை கொஞ்சம் குறைவுதான் எனினும், அவையெல்லாம் இதற்கொரு பொருட்டு அல்ல. இது தன் பாத்திறனைக் காட்டுவதற்கான அறிமுகப் பாவலனின் முயற்சி இல்லை; திரைப்படப் பாடலாசிரியனாவதற்காகத் துறைக்கு வரும் புதியவர் செய்த கற்பனை இல்லை; யாரோ ஒருவரின் மறைவுக்காக யாரோ ஒருவர் சாற்றும் இரங்கற்பா இல்லை; இது தன் காதலுக்கும் மதிப்பிற்கும் உரிய மனைவியை இழந்து வாழ்நாளெல்லாம் அவரையே நினைத்து வாழும் காவியக் காதலர் ஒருவரின் உள்ளக் குரல்! உண்மைக் குரல்! இதில் பாத்தன்மை முதன்மையன்று! உண்மைத்தன்மையே இதன் சிறப்பு!

    உங்கள் துக்கத்தை இத்தகைய வரிகள் மூலம் ஆற்ற முடியாது எனினும், இவை உங்கள் மனக்காயத்தை ஆற்ற வல்ல மருந்தாகா விட்டாலும் அதைத் தற்காலிகமாகவேனும் ஆறுதல்படுத்தும் மயிற்பீலியின் வருடலாக அமையட்டும்!

    பதிலளிநீக்கு
  36. உங்களுடைய முழு பாசத்தையும் பெறாமலே இருந்து விட்டார்கள் .....

    பதிலளிநீக்கு
  37. ரொம்ப வருத்தமாய் இருக்கிறது! மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்வதெல்லாம் வெறும் வார்த்தை தான். குழந்தைகள் இருக்கிறார்கள் அல்லவா? அவர்களுக்காக நீங்கள் சிரித்துத் தான் ஆக வேண்டும். வளர வேண்டிய வயதில் பெற்றவளைப் பிரிவது என்பது அவர்கலுக்கும் கஷ்டம் தான்.

    பதிலளிநீக்கு