தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, செப்டம்பர் 25, 2015

மனிதம் மறக்காதே மனிதா !

 
மதம் சொன்னதாம் மறந்து விடு மனிதா
மனிதம் உண்டே மறக்காதே மனிதா
மெய்ஞானமாம், விஞ்ஞானமாம் மனிதா
உன் ஞானம் பேச புறப்படுவாய் மனிதா

ஏசுவோரும், போற்றுவோரும் மனிதா
ஏதும் செவியில் ஏற்றிடாதே மனிதா
இனமாம், ஜாதியாம் கணக்கில்லை மனிதா
அன்பாய், அறமாய் கடந்து வா மனிதா

துன்பம் வரும் போதெல்லாம் மனிதா
துவண்டு போய் விடாதே மனிதா
துணிவே துணை என்று மனிதா
துணிச்சலுடன் எதிர் கொள் மனிதா

 லட்சங்களை இழந்தாலும் மனிதா
லட்சியங்களை மறக்காதே மனிதா
கோடிகளை துறந்தாலும் மனிதா
கொள்கைகளை கடைப்பிடி மனிதா

நாடு விட்டு பறந்தாலும் மனிதா
நாகரீகம் மறந்திடாதே மனிதா
கண்டம் விட்டு கடந்தாலும் மனிதா
கலாச்சாரம் மறவாதே மனிதா

திரைகடல் ஓடினாலும் மனிதா
திரும்பி வந்து விடு மனிதா
இங்கிலாந்து போனாலும் மனிதா
இந்தியனாய் வாழ்ந்து வா மனிதா

தரணியெங்கும் போனாலும் மனிதா
தமிழனாய் நிமிர்ந்து நில் மனிதா
தலைவனாக ஆனாலும் மனிதா
தலைக்கணம் கொள்ளாதே மனிதா

கற்றவைகளை களையாதே மனிதா
உற்றாரின் உறவு வேண்டும் மனிதா
பெற்றோர்களை மறவாதே மனிதா
பெற்ற செல்வமும் பறந்திடுமே மனிதா

பணம் மட்டும் வாழ்க்கையில்லை மனிதா
பந்த பாசங்களும் வேண்டியதே மனிதா
இன்பம் மட்டும் இணைந்து வராது மனிதா
இணைந்தே துன்பமும் கூட வரும் மனிதா

புதுக்கோட்டை பதிவர் திருவிழா நடத்தும் மின் இலக்கிய போட்டிகள் 2015க்காக எழுதப்பட்டது (வகை 4) கவிதை
பரிசு என அறிவித்து இருந்தார்கள் எனவே ‘’புதுக்கவிதை’’ என்ற வகையில் நான் எழுதியிருக்கும் இந்தக் கவிதையை என்னுடையது என்று உறுதி தருவதோடு போட்டிகள் முடியும் வரை வேறு தளங்களில் வெளியிட மாட்டேன் என்றும் உறுதி தருகிறேன்.
தமிழ் வாழ ! அந்தத் தமிழோடு நாமும் வாழ !
2015 புதுக்கோட்டை பதிவர் விழாவுக்கு அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கும்
தேவகோட்டையான்
கில்லர்ஜி किल्लरजि കില്ലർജി  కిల్లర్ జి  Killergee كـــيللرجــــي

48 கருத்துகள்:

  1. வணக்கம் ஜி!! மனிதனின் மாண்புகளை அழகாக வடித்துள்ளீர்கள்!! அருமை! வெற்றி பெற நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே..

      நீக்கு
  2. அருமை அன்பரே ஆயிரமும் உங்களுக்கே

    வாழ்த்துக்கள் அருமை.. வெற்றி என்பது ஒன்றுமில்லை முயற்சியின் முன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே கிடைத்தால் தங்களுக்கு பாட்டி உண்டு

      நீக்கு
  3. தத்துவப் பெட்டியைச் சடசடவென்று
    சரித்துக் கொட்டிவிட்டீர்கள் சகோதரரே!..
    கொட்டிப் பரவிய எல்லாமே தகதகவென மின்னுகின்றன!
    அசத்திவிட்டீர்கள்! மிக அருமை!

    எட்டிவிடும் வெற்றி முகட்டை உங்கள் கவிதை!
    வாழ்த்துக்கள்!

    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

      நீக்கு
  4. வாழ்த்துகள்
    அருமை பெருமை சேர்க்கும்!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே வாழ்த்துகளுக்கு....

      நீக்கு
  5. அன்புள்ள ஜி,

    மனிதம் மறக்காமல் இருக்க மனிதனுக்கு நல்ல அறிவுரைப் பாடல்.
    த.ம.4

    பதிலளிநீக்கு
  6. ஆகா
    அனைத்து வகை போட்டிகளிலும் பங்கு பெறுவது என்று முடிவு செய்துவிட்டீர்கள்
    நிச்சயம் 50,000 மும் உங்களுக்குத்தான்
    வாழ்த்துக்கள் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எல்லாம் தங்களைப் போன்றவர்கள் தரும் ஊக்கமே...

      நீக்கு
  7. திரு கரந்தை ஜெயக்குமார் . அவர்கள் சொல்வதுபோல் அனைத்துப் போட்டிகளிலும் கலந்துகொள்ள எண்ணியுள்ளீர்கள் போலும். தாங்கள் போட்டிகளில் வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! கருத்தோடோடு கூடிய கவிதை அருமை. பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி

      நீக்கு
  8. அருமை நண்பரே.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. ஆகா.. தத்துவ முத்துக்கள்!.. அருமை!..

    வெற்றிக்கு நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
  10. ஆமாம் தத்துவத்தைப் பொழிந்து தள்ளிவிட்டீர்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பாவலரே மிக்க நன்றி வாழ்த்துகளுக்கு.

      நீக்கு
  11. "தரணியெங்கும் போனாலும் மனிதா
    தமிழனாய் நிமிர்ந்து நில் மனிதா" என்று தான்
    நானும் சொல்லுகிறேன்!

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே உண்மைதானே... வருகைக்கு நன்றி

      நீக்கு
  12. அருமை சகோ, அழகாக கொட்டியிள்ளீர், அள்ளிக்கொண்டோம், தாங்கள் அள்ளுங்கள் போட்டியில் வென்ற காசுகளை,,,,,,,
    வாழ்த்துக்கள் சகோ,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ மிக்க நன்றி காசுகளை அள்ளிக்கொள்ள சொன்னமைக்கு...

      நீக்கு
  13. இங்கிலாந்து போனாலும் மனிதா இந்தியனாய் வாழ்ந்துவிடு மனிதா....! அப்படியானால் பி எ ரோமன் இன் ரோம் என்று சொல்வது....?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்தியனாய் வாழ்ந்து வா மனிதா// என்றுதான் ஐயா சொல்லி இருக்கிறேன்... வருகைக்கு நன்றி

      நீக்கு
  14. மனிதம் தழைக்கட்டும். சிறப்பான பகிர்வு.

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. மனிதா மனிதா பரிசு உங்களுக்குத்தான் மனிதா.

    பதிலளிநீக்கு
  16. மின் இலக்கியப் போட்டியில் முன்னுக்கு வந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. 50 லட்சம் பொற்காசுகள் உங்களுக்கே.......வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  18. வணக்கம்
    ஜி
    கவிதை வெகு சிறப்பாக உள்ளது... கவிஞர். அப்துல் ரகுமானின் புதுக்கவிதை புத்தகம் வேண்டி படியுங்கள்.. இன்னும் எழுத உறுதுணையாக இருக்கும் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.

    எல்லாவற்றையும் படித்துவந்து பதிவர் திருவிழா படத்துக்குமேல் பார்த்தால் தங்களின் மொழிப்பாண்டியத்தை அறிந்தேன் 6 மொழிகளில் பெயரை எழுதுள்ளீர்கள் கில்லர்ஜி என்று.ஆகா...ஆகா... த.ம12

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரூபன் நலம்தானே ? தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  19. சிறப்பான கவிதை
    பரிசு பெற வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  20. கலக்குங்க அண்ணா... வகைக்கு ஒன்றாய்...
    வாங்குங்க பரிசுகளை...

    பதிலளிநீக்கு
  21. தாமதம் என்றாலும் மனிதம் காக்க வந்து விட்டேன் கில்லர் ஜி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதம் பகவான்(ஜி)தானே காக்க வேண்டும்

      நீக்கு
  22. பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே வாழ்த்துகளுக்கு....

      நீக்கு
  23. கலக்கிறீங்க கவிதையில்...வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா ஜி.

    பதிலளிநீக்கு
  24. லட்சங்களை இழந்தாலும் மனிதா
    லட்சியங்களை மறக்காதே மனிதா
    கோடிகளைத் துறந்தாலும் மனிதா
    கொள்கைகளைக் கடைபிடி மனிதா
    இந்நாளைக்குத் தேவையான அறிவுரை! பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என்ற உயரிய பொன்மொழியை அறிவுறுத்தும் கவிதைக்கு வாழ்த்துக்கள் கில்லர்ஜி சார்! போட்டியில் பரிசு கிடைக்க வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி பரிசு கிடைத்ததைப் போன்ற உணர்வு

      நீக்கு