தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், செப்டம்பர் 30, 2015

தடையாக மாறும் அடையாளச் சின்னங்கள்


நம் முன்னோர்கள் தான் வாழ்ந்ததின் அடையாளமாக பல விடயங்களை நமக்கு கொடுத்து விட்டுச் சென்றார்கள் அந்த வகையில் நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள் நம் இந்தியாவில் ஏராளம் அப்படி நமக்கு கிடைத்தவைகளில் தஞ்சை பெரியகோவில், பூதங்கள் கட்டியதாக சொல்லப்படும் ஆவுடையார் கோவில், செஞ்சி கோட்டை, தாஜ்மஹால், மைசூர் அரண்மனை, மதுரை திருமலை நாயகர் மஹால், வீரபாண்டிய கட்டப்பொம்மன் மறைந்திருந்த தேவகோட்டை சங்கரபதிக்கோட்டை இங்கிருந்து புதுக்கோட்டை தொண்டைமான் அரண்மனைவரை பூமிக்குள் குதிரையில் போகும் சுரங்கப்பாதை உள்ளது இப்பொழுது பராமரிப்பின்றி மூடிவிட்டது இப்படி எவ்வளவோ விடயங்கள் சொல்லலாம் கணக்கில் அடங்காது புதிதாக கட்டவில்லை என்றாலும் பரவாயில்லை இருக்கும் பழமை வாய்ந்த கட்டடங்களை பராமரிப்பதில் அரசு கவனம் செலுத்துவதில்லை.

பழனி கோவில் போன்று மக்களிடமிருந்து வருமானம் வரும் இடமெல்லாம் பராமரிப்பு சிறப்பாக இருக்கிறது சென்னையில் பல பாலங்கள் கட்டி முடிக்கப்படாமல் அரையும், குறையுமாக நிற்கிறது காரணம் தொடங்கியது மற்றொருவர் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி அவைகள் முடிக்கப்படாமல் இருந்தால் இதுவரை கட்டியவைகளும் வீணாகும் என்பது அரசுக்கு தெரியாமல் இல்லை போனால் போகட்டும் நமக்கென்ன ? மக்களின் வரிப்பணம்தானே எவன் கேட்கப்போகிறான் கேட்டாலும் காவல்துறை நமது கையில்தானே.. பிறகு பார்த்துக்கொல்லலாம் புதிதாக கட்டப்பட்ட சட்டமன்றம் கூட மீண்டும் மாற்றப்பட்டு அவை மருத்துவமனையாக மாற்றப்பட்டது ஏதோ பங்காளிச்சண்டை போல் பரிமாறிக் கொள்கிறார்கள் ஒரு அரசு அலுவலகத்தை இடம் மாற்றுவது என்றால் சாதாரண காரியமா ? நாமெல்லாம் நமது வாடகை வீட்டை மாற்றுவதற்க்கே எவ்வளவு செலவு செய்யவேண்டியது இருக்கிறது இவர்கள் நமது பணத்தை இப்படியெல்லாம் வீண் விரயமாக்குகின்றார்கள் காரணம் என்ன ? மக்கள் நிச்சயமாக கேள்வி கேட்கப்போவதில்லை.

ஐந்து  வருடத்துக்கு ஒருமுறை சென்று கும்பிட்டு கைத்தடிகள் மூலம் ஓட்டுக்கு ஐநூறு ரூபாய் வீதம் எறிந்தால் போதுமே வேலை முடிந்து விட்டது பிறகு விலைவாசி ஏறும்போது மட்டும் டீக்கடையில் உட்கார்ந்து வாய் கிழியப்பேசுவது அர்த்தமற்ற பேச்சுக்களால் பயன் என்ன ? அவசியமற்ற வார்த்தைகளை பேசிக்கொண்டே இருப்பவனும் முட்டாள், அவசியம் வரும்பொழுது பேசாமல் இருப்பவனும் முட்டாள்.

நாம் பல நல்ல வாய்ப்புகளை தவற விட்டு விடுகிறோம் இன்றைய அரசியல்வாதிகளின் செயல் கோமாளித்தனமாகவே இருக்கிறது காரணம் அவர்கள் அடிப்படையில் கூத்தாடிகள் என்பதே உண்மை நாம்தான் ஒரு கூத்தாடி இரண்டொரு திரைப்படங்களில் அநியாயத்தை தட்டிக்கேட்கும் வீரனாக
(டப்பிங் வாய்ஸ் காரணம் தமிழ் தெரியாது) 
பேசி நடித்தவுடன் வருங்கால முதல்வரே வா என்று பதாகைகள் வைத்து விடுகின்றோமே.. அவனும் மனிதன்தானே ஆசைகள் இருக்காதா ? அவன் புத்தன் இல்லையே உடனே அவனது கைத்தடிகளான வீட்டில் வளர்த்த விட்டில் பூச்சிகளை வைத்து மன்றம் தொடங்குகிறான் அதை அப்படியே கட்சியாக்குகின்றான், கொடி பிடிக்கின்றான் மிகவும் சுலபமாக தலைவனாகி முதல்வனும் ஆகிவிடுகிறான் அவர்களது பழக்கதோஷம் கோமாளி ஆட்சி நடத்துகின்றார்கள் இதைத்தான் நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள் கேனப்பய ஊருல கிறுக்குப்பய நாட்டாமை என்று உண்மைதானே ஆண்டாண்டு காலமாக கொடிப்பிடித்து மக்களுக்காக தெருவில் நின்று குரல் கொடுத்தவனை, மக்கள் என்றுமே மதிப்பதில்லை காரணம் அவர்கள் பகட்டாக இல்லையே இது பகட்டு உலகம் 
(நான் கம்யூனிஸ்டுகாரர்களை சொல்வதாக கூட நினைக்கலாம் அதுவும் பொருத்தமாகத்தான் இருக்கிறது) 
நான் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவன் இதிலொரு வேடிக்கை சொல்லட்டுமா ? உழைக்கும் வர்க்கமான தமிழர்கள் உழைப்பாளிகளுக்கு ஆதரவு கொடுக்கும் கம்யூனிஸ்டுகளை மதிப்பதில்லை ஆனால் உழைக்க மறுக்கும் சோம்பேறிகளான மலையாளிகள் தக்க தருணத்தில் கம்யூனிஸ்டுகளை ஆதரிப்பார்கள் காரணம் அவர்கள் உழைக்காமலே பிழைக்கத் தெரிந்தவர்கள் நம்மவர்கள் உழைத்தும் பிழைக்கத் தெரியாதவர்கள் இதுதான் உண்மை.

அதனால்தான் பிழைக்க வந்த பிற மாநிலத்தான் தமிழ் திரைப்படத்துறையில் பெரிய அளவில் நட்சத்திரம் என்று அறியாமைகள் சொல்கின்றார்களே ஆகவே நானும் அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காக சொல்கிறேன் தமிழ் நட்சத்திரமாக ஜொலிக்கின்றார்கள் தமிழர்கள் வயிற்றுப்பசி போக்க அன்றாடக் கூலிக்கு அவர்கள் ஜொலிப்பதற்காக லைட்பாய்களாகவும், கசக்கி எறியப்பட்டு முழுதும் நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்ற நிலைக்கு வந்த தமிழச்சிகள் பலரும் டூயட் பாட்டுக்கு லாலா லாலா லா... லா.. லா... என்று பாடிவருகின்றார்கள் அடுத்தொரு முறை திரைப்படம் காணும்பொழுது கவனியுங்கள் கோஷ்டியில் பாடும் பெண்களின் முகத்தை அதிகபட்சமாக தமிழச்சிகளின் முகமே... பிற மாநிலத்தான் ஆணும், சரி பெண்ணும் சரி கோடிகள் சம்பளம் பெறுகின்றார்கள் அதை அவர்கள் உடனடியாக அவர்களது மாநிலத்திலேயே முதலீடு செய்கின்றார்கள் இதை தொலைநோக்கு பார்வையுடன் கூர்ந்து கவனித்தால் தெரியும் நம்மில் பலருக்கு தொலைநோக்கு பார்வை கிடையாது தொலைந்து போன பார்வையே உண்டு தமிழா விழிப்புணர்வு பெறு இல்லையேல் விழி இல்லாமல் இரு.

என்று தமிழன் கட்டவுட்டிற்க்கு பாலாபிஷேகம் செய்வதை நிறுத்துகின்றானோ ? என்று தமிழன் விபச்சாரிகளுக்கு கோவில் கட்டுவதை நிறுத்துகின்றானோ ? என்று தமிழன் பிறமொழிக்காரனை தலைவா என்று சொல்வதை மறக்கின்றானோ ? அன்றுதான் தமிழ்நாடு மோட்சம் பெறும் இல்லையேல் பி.எஸ்.வீரப்பா அவர்கள் வசனம் பேசியது போல் இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாகப் போட்டும் என்று சொன்னது உண்மையாகும்.

புதுக்கோட்டை பதிவர் திருவிழா நடத்தும் மின் இலக்கிய போட்டிகள் 2015க்காக எழுதப்பட்டது (வகை 2) விழிப்புணர்வு கட்டுரைப்போட்டிக்கு ‘’கட்டுரை’’ என்ற வகையில் நான் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரையை என்னுடையது என்று உறுதி தருவதோடு போட்டிகள் முடியும் வரை வேறு தளங்களில் வெளியிட மாட்டேன் என்றும் உறுதி தருகிறேன்.

நான் போட்டிக்கு அனுப்பிய பிற படைப்புகளை காண கீழே சொடுக்குக...







2015 புதுக்கோட்டை பதிவர் விழாவுக்கு அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கும்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

குறிப்பு - நேற்றோடு எமது போட்டிக்கான பதிவுகளை நிறுத்தி விடுவோம் என்று நினைக்கும் தருவாயில் நேற்றைய பதிவுக்கு கருத்துரையிட்ட நண்பர் திரு. கரந்தையார் அவர்கள் என்னை உசுப்பேற்றி விட்டார்கள் ஆகவே உடனடியாக யோசிக்காமல் எழுதியது காரணம் போட்டியில் நுழைய இன்னும் நான்கு மணி நேரம் மட்டுமே உள்ளது இதற்க்கு பரிசு கிடைத்தால் அதற்கு காரணம் நண்பரே..

64 கருத்துகள்:

  1. வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. வேதனை புரிகிறது! வெற்றிபெற வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் நண்பரே! நாம் எவ்வளவு சொன்னாலும் "அவிங்களும் "திருந்தப்போறதில்ல! அள்ளிதரும் மனசும் ஒயப்போவதில்லை! நறுக்
    குனு சொன்னதால ஒரு சல்யூட்! நன்றி!

    பதிலளிநீக்கு
  4. விடாது கருப்பு!..

    வெற்றி பெறும் வரையில் விடாது கருப்பு!..

    வெற்றியடைவதற்கு நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி இன்றோடு கால அவகாசம் முடிந்து விட்டதாமே...

      நீக்கு
    2. நேற்றிரவில் இருந்தே எதிர்பார்த்திருந்தேன். பட்சி சொல்லிற்று..
      அதேபோல 2/10 வரை நீட்டித்திருக்கின்றார்கள்.. மகிழ்ச்சி தானே!..

      நீக்கு
    3. வாங்க ஜி தூண்டி விடுறீங்களா ? சரக்கு இல்லையே ஜி

      நீக்கு

  5. வாழ்த்துகள் நண்பா!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  6. ஆகா என்னால் மீண்டும் ஒரு போட்டிப் பதிவு
    மகிழ்ச்சி நண்பரே
    முழு பரிசுகளும் தங்களுக்குத்தான்
    வாழ்த்துக்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களால் எழுதிய பதிவே வாழ்த்தியமைக்கு நன்றி

      நீக்கு
  7. அன்புள்ள ஜி,

    தொல் கட்டடங்கள் பல பாதுகாக்கப்படாமல் இருப்பது உண்மைதான். அரசியல்வாதிகளையும் திரைப்ட நடிகர் நடிகைகளையும் சாட்டை எடுத்து சுழற்றியது அருமை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    த.ம. 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே தங்களின் பாராட்டுகளுக்கு நன்றி

      நீக்கு
  8. கரந்தையாரின் கனவு நனவாகட்டும் :)

    பதிலளிநீக்கு
  9. சிறப்பு அண்ணா...
    வெற்றி பெற வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  10. சிந்திக்க வைக்கும் விடயம். போட்டியில் கேடயம் வாங்க வாழ்த்துக்கள் ஜீ.

    பதிலளிநீக்கு
  11. மிக அருமை! நல்ல கருத்து மிக்க கட்டுரை சகோதரரே!

    வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கவிஞரே தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி ‘’பாவலர்’’ பட்டம் பெற்று வந்தமை அறிந்து மகிழ்ச்சியான வாழ்த்துகள்.

      நீக்கு
  12. சிந்தையை தூண்டும் சிறந்த கருத்துக்கள். நியாயமான அறச்சீற்றம். வாழ்த்துக்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்ளுக்கு நன்றி

      நீக்கு
  13. சிறப்பான கட்டுரை சகோ. வெற்றி பெற வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  14. மனதின் ஆதங்கங்கள் கட்டுரை வடிவில். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா எப்பொழுதுமே என் மனதில் உள்ளதை சொல்லத் தயங்குவதில்லை வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  15. பெயரில்லா10/01/2015 12:25 PM

    நன்று நன்று
    வெற்றியடைய இனிய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. நம்மவர்களின் திரைப்பட மோகத்தை சரியாக சாடியுள்ளீர்கள். பாராட்டுக்கள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  17. சிந்திக்கவே மாட்டோம் என்று அடம்பிடிக்கும் மனம் என்ன செய்வது,,,, இப்படி கத்திக்கொண்டே இருந்தாலாவது,,, மாறுமா? பார்ப்போம்,,,,
    அருமை சகோ, எல்லாம் தங்களுக்கு தான்,,,,
    வாழ்த்துக்கள்,,,,, தொடருங்கள் இன்னும் இரண்டு நாட்கள் இருக்கே,,,,,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ ஊதுகின்ற சங்கை ஊதி வைப்போமே.... கேட்பவன் செவிடனாய் இருந்தால் என்ன செய்வது ?

      நீக்கு
  18. போட்டிகளுக்கான படைப்புகளை அனுப்ப இறுதி தேதியை மேலும் இரண்டு நாட்கள் நீட்டித்திருக்கிறார்கள். http://bloggersmeet2015.blogspot.com/2015/10/blog-post_1.html

    மேலும் சில படைப்புகளை அனுப்ப முயற்சியுங்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் ஊக்கத்திற்க்கு நன்றி

      நீக்கு
  19. ஒரே பதிவில், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மக்களின் வரிப்பணம் விரயமாவதையும், தேவைக்கும் அதிகமாக திரைத்துறையினர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தால் வரும் விளைவையும், பணத்திற்காக வாக்களிப்பவர்களால் வரும் கேட்டையும் நன்கு அலசியிருக்கிறீர்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் திரு. சம்பத் கல்யாண் அவர்களின் விரிவான அலசலுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி

      நீக்கு
  20. கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டும் சில கறை படிந்த (போலி) கரங்கள் வந்தாயிற்று நன்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே என்னையும் கட்சிக்காரன் என நினைத்து விடக்கூடாது என்பதற்க்காகத்தான் முன் கூட்டியே சொல்லி விட்டேன் வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை வருகைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  21. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. திரைப்பட மோகம் துவங்கி அரசியல் வரை உங்கள் மனதில் இருந்த ஆதங்கங்களைக் கொட்டித் தீர்த்துவிட்டீர்கள். நம்மவர்க்கு என்று தான் உறைக்குமோ? வெற்றி பெற வாழ்த்துகிறேன் கில்லர்ஜி சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

      நீக்கு
  23. கேனப்பய..பயச்சி ஊருல..கிருக்கு பய..போயி கிருக்கு பயச்சி நாட்டமைதான் நடந்துகிட்டு இருக்க நண்பரே...

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் கில்லர் ஜி !

    ஒரு மனிதன் மக்களோடு வாழ்வதற்கும் மக்கள் மனதில் வாழ்வதற்கும் உள்ள வேறுபாடு எப்படியோ அப்படி இருக்கிறது தங்கள் ஆதங்கம் இது மக்களுக்கான பதிவு ஆகையால் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் கில்லர் ஜி !
    வாழ்க வளமுடன்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே நலம்தானே.... என்மீது கோபமில்லையே.... வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  25. பல்வேறு தலைப்புகளில் கலந்துகொண்டு அசத்தும் தங்களுக்கு பாராட்டுக்கள். அவற்றில் பல விழிப்புணர்வை உண்டாக்குவன, இப்பதிவு உட்பட. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி

      நீக்கு
  26. இன்றைய அரசியல் முறை தன்னையும் தன் குடும்பத்தையும் தான் முன்னேற்ற வழி பார்க்கிறது. அதிலும் பொதுச்சொத்தை அழிப்பதில் அத்தனை வேகமும் காட்டுகிறது. சினிமா மோகத்தில் அழியும் இளைய சமூகத்தையும் சாடியுள்ள விதம் சிறப்புங்க சகோ. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீள் வருகை தந்து அலசலான கருத்துரையை தந்தமைக்கு நன்றி சகோ

      நீக்கு
  27. வெற்றி பெற வாழ்த்துகள். சினிமா மோகத்தில் அழிந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறையை விழிக்க வைக்கப் பாடு படுவதற்குப் பாராட்டுகள். உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவான கருத்துரை தந்து என்னை ஊக்கப்படுத்திய சகோவுக்கு நன்றி

      நீக்கு
  28. அரசியல்வாதிகளாலும் சினிமாகாரர்களாலும் திசைமாறிய மாறிக்கொண்டிருக்கும் சமூகத்தை சாடும் கட்டுரை.அருமையான விழிப்புணர்வு கட்டுரை. எவ்வளவு பிரயத்தனமாக போட்டியில் பங்குகொள்கிறீங்க. கண்டிப்பா நீங்க பரிசு பெறுவீங்க அண்ணா ஜி. வெற்றி பெற என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரை மனதுக்கு சந்தோஷத்தை தருகிறது சகோ.

      நீக்கு
  29. சினிமா மோகம் பலரது கண்களை மறைத்து விடுவது சோகம் தான்!

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஜி வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  30. கார,சாரமான தங்களின் கருத்துக்கு வாழ்த்துகள்.
    .நலமா? நலமே விளைக..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இன்றாவது வழி அறிந்ததே நன்றி

      நீக்கு