தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, அக்டோபர் 09, 2015

புதுக்கோட்டையை நோக்கி வேட்டைக்குப் போகும்...



இவ்வளவு வேலைகளுக்கு மத்தியிலும் எமக்கு நேரடியாக வருகை தந்து அழைப்பிதழ் தந்த கவிஞர் திருமிகு. நா. முத்து நிலவன் அவர்களுக்கு நன்றி.


ஏண்டி, செல்லாயி நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன் எல்லா பஸ்ஸுமே புதுக்கோட்டை பக்கமாவே போகுதே என்ன விசயம் ?
எங்கேயிருந்து பார்த்தே ?

நேத்து திருச்சி மலைக்கோட்டை ஏரியாவுல சுத்திக்கிட்டு திரிஞ்சேன் அப்ப யதார்த்தமா கவனிக்கிறேன் எல்லா பஸ்ஸும் புதுக்கோட்டை பக்கமாவே போகுது... அப்புறம் நேத்து ராத்திரி அப்படியே திருமயம் ஊமையன் கோட்டை ஓரமா திரிஞ்சேன் இங்கிட்டு இருந்தும் பஸ்ஸு பூராம் புதுக்கோட்டை பக்கமாத்தான் போகுது நீ நாலு எழுத்து படிச்சவளாச்சே... அதான் கேட்டேன்.
அப்படினா  உனக்கு விசயம் தெரியாதா ?

தெரியாமத்தானடி கேட்குறேன்...
அட கொதக்கு புதுக்கோட்டையிலே பதிவர்கள் மாநாடு ரொம்ப சிறப்பா நடக்கப்போகுது உலகம் முழுக்க இருந்து தமிழ் பதிவர்கள் வர்றாங்க அதுக்குத்தான் போறாங்க....

பதிவர்னா... நம்ம புள்ளக்குட்டிங்க பேசிக்கிட்டு திரியுமே வலைப்பூ அதுவா ?
அதேதான்...

அடியாத்தி அப்ப புதுக்கோட்டை ஹோட்டல்காரங்களுக்கு நல்ல வியாபாரம்தான்னு சொல்லு.
அதெல்லாம் இல்லை மாநாடு நடக்குற ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்துலயே வர்றவங்க எல்லோருக்கும் விருந்து கொடுப்பாங்க...

விருந்தா...  அப்ப நாமலும் போவோம்.
அங்கேதான் மகமாயி இடிக்குது.

என்ன  இடிக்குது... ?
விழா நடக்குறது மாதா மன்றத்துல.. வேற சக்தி மண்டபம், ஆஞ்சநேயா மண்டபம் இந்த மாதிரி இடத்துல நடந்தால் நாம ஒரு எலுமிச்சம் பழத்தை நசுக்கி விட்டுப்புட்டு ஈசியா தன்னக்கட்டிப்புட்டு நுழைஞ்சு ஒரு கட்டு கட்டிக்கிட்டு வந்துறலாம்.

அதனால என்ன  நாம போயி வயிறு நிறைய பூட்டிப்புட்டு வந்துருவோம்.
ஏண்டி கூறு கெட்டசிறுக்கி ஏதும் விளங்கித்தான் பேசுறியா மாதா மன்றத்துக்குள்ளே நாம எப்படிடீ போக முடியும் ?

ஓஹோ எனக்கு இப்பத்தான் புரியுது...
நீ தான் லேட் பிக்கப்தானே..

சரி சாப்பாடு போகும் வண்டியை ரோட்டுலயே மறிச்சு நமக்கு வேண்டியதை அள்ளிக்கிட்டு விட்ருவோம்.
அதத்தான்டி சொல்றேன் நேத்தோ.. முந்தாநாளோ... பார்த்தேன் இந்த விழா நடத்துறரே... கவிஞர் முத்து நிலவன் அவரு நம்ம கில்லர்ஜி பதிவுல பின்னூட்டம் கொடுத்து இருந்தாரு பதிவர்கள் யாராச்சும் பேய் ஓட்டுறவங்க இருந்தால் உடனே வாங்க அப்படினு... பாவம் நம்ம கில்லர்ஜி அப்பாவிப்புள்ள அவரைப்போயி மிரட்டலாமா...  இந்த பெரிய மனுஷன். ?

இதென்ன  காலக்கொடுமை ?
பேசிக்கொண்டு இருக்கும் போதே அந்த வழியே போய்க்கொண்டு இருந்த கருப்பாயி வந்து சேர்ந்தாள்.
என்னாங்கடி ... மீட்டிங்கா ?

வாக்கா  நீ வேற... சரி உங்கிட்டே ஐடியா கேட்கலாமே...?
எது  முத்து நிலவன் ஐயா அப்பாவி கில்லர்ஜி மேட்டரா ?

ப்படிக்கா கரைக்ட்டா.. சொல்லிப்புட்டே ?
முட்டைமாஸ் திங்கிற மூஞ்சியைப் பார்த்தால் தெரியாது... நீங்க நேத்து வந்தவளுகடி... இப்பத்தான் லாப்டாப்ல பார்த்துட்டு வர்றேன் இப்ப நாம ஞாயிற்றுக்கிழமை அன்னிக்கு மூக்கு முட்ட கரைக்கனும் அதானே மேட்டரு...

சரிக்கா.. யோசனை சொல்லு அக்கா இன்னொன்னு வில்லங்க கோஷ்டிகள் ஜீபூம்பா புடிக்கிற பாலக்காட்டு ஜக்குகளோட வர்றாங்களாம்.
அது யாருடி  வில்லங்க கோஷ்டி.. ?
.
தில்லைஅகத்தார் துளசிதரன் – கீதா அவங்கதான்.
அடி போடீ அவங்க எங்கே வந்து... யாருக்கிட்டே நம்ம ஏரியாவுலயா ? அதுக்கு முத்து நிலவன் ஐயாவை சமாளிக்கிறதுதான் கஷ்டம் ஏன்னா அவரு இங்கேயே... பழம் திண்ணு கொட்டை போட்டவரு...

ஏக்கா, நம்ம மகமாயியை விட்டு நைசா முத்து நிலவன் ஐயாக்கிட்டே பேச சொல்லி மடக்கிடலாமா ?
அடி போடி அவரு சாமியவே நம்பாதவரு... பட்டிமன்றத்துல சிரிச்சு சிரிச்சு பேசியே கூட்டத்தோட ஆளுகளை கவுத்திடுவாரு... இவ எம்மாத்திரம்.

ஆத்தாடி.. நான் மாட்டேன் கண்டுபுடிச்சுட்டாருனா... நாம செத்தோம்.
அடி விளங்காதவளே இப்பவே நாம செத்த கிராக்கிதான்...

ஆமாவுல மறந்துட்டேன்க்கா...
ஏக்கா பொம்பளைப்பதிவர்கள் வர்றாங்களாமே அவங்களை வச்சு சோத்து அண்டாவை மடக்க முடியாதா ?

அடி போடீ வர்றவங்கள்லாம் யாருனு நினைச்சே.. ? தென்றல் மா3த்தான் தெரியும் எல்லாம் வேலு நாச்சியார் வகையறா வாளை எடுத்து வீசிடுவாங்க...
யோசிக்கா... உனக்கு ஐடியா வரும்...

அதாவது அவருகிட்டே தமிழ்ல பேசினால் சமாளிக்க முடியாது அதனாலே வேற பாஷையிலே பேசினால் இங்கிலீஷ்ல பேசலாமா ?
எவளுக்கு தெரியும் இங்கிலீசு ?

நீ எத்தனையாவதுடி படிச்சே ?
மூணாப்பு

அடச்சீ பேசுறாளுக பேச்சு நாந்தேன் பழைய கட்டை நீங்களாவது பேசுவீங்கனு பார்த்தால்... சரிடீ ஒண்ணு செய்யலாம் நம்ம மருதகாசி மாமியா இருக்காள்ல அவ சின்ன வயசுல துபாய்ல வேலை செஞ்சவ நல்லா அரபி பேசுவாளாம் அவளை வச்சு அரபி பேசுனா.. அவரை பயமுறுத்திடலாம்.
சரிக்கா.. உடனே கூப்புடு அது எங்கிட்டு திரியுதோ... ?

தனது செல்லில் பேலன்ஸ் இல்லாத்தால் கருப்பாயி நம்பர் சொல்ல செல்லாயி செல்லில் அடித்துக் கொடுத்தாள்.
ஹலோ யாரு பேசுறது ?

ஹலோ நான் மருதகாசி பேசுறேன்.
மருதகாசி நல்லாயிருக்கியா ? நான்தாப்பா கருப்பாயி பேசுறேன் உன் மாமியா எங்கேப்பா ?

ஏத்தா.. அவுங்க அவசர ஜோலியா குஜராத் பக்கம் போயிருக்காங்க வர இரண்டு மாசம் ஆகும் என்னக்கா விசயம் ?
நீ இப்ப எங்கே இருக்கே....

ஊள்ளூருதான் மச்சுவாடி பக்கம் திரியிறேன்.
நீ உடனே ஆலங்குடி ரோட்டுப்பக்கம் வா

இதோ வாறேன்த்தா...
சில நொடிகளில் வந்த மருதகாசி மகமாயியை வழக்கம்போல தமாஷுக்கு தலையில் ஒரு தட்டு தட்டி விட்டு விபரம் அனைத்தையும் கேட்டு முடிந்ததும் சொன்னான்.

என்னத்தா நீயே இப்படி செய்யலாமா ? விழா நடத்துறது யாரு ? நம்ம தமிழ்ப்பதிவர்கள் அதுக்கு நம்ம ஆதரவைக் கொடுக்காமல் இப்படியா ? குண்டக்க... மண்டக்க... அங்கிட்டு நம்ம கில்லர்ஜி நம்மளை மாதிரி விழாவுக்கு வர்றாரு.. நமக்கு வேண்டப்பட்டவரு... நான் முத்து நிலவன் ஐயா கனவுல போயி சொல்லுறேன் அவரே நமக்காக 15 அண்டாச்சோறும் 8 வாளி ஜெமினி கணே.... சாரி சாம்பாரும் கொடுப்பாரு. சரியா ?
சரிடாத்தம்பி உனக்கு வர்ற யோசனை எங்களுக்கு வராமல் போச்சே ‘’ச்சே’’

அதுக்குத்தான் கில்லர்ஜி பதிவை விடாமல் படிக்கணும்.. நான் உடனே படிச்சு தமிழ் மண வாக்கும் போட்ருவேன்.
இனிமேல் நாங்களும் படிக்கிறோம்டா.. தம்பி.

சரி ஞாயிற்றுக்கிழமை விழா நல்லபடியா நடக்கனும்னு.. நம்ம சங்கத்து ஆளுகள்ட்ட சொல்லி கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் அதாவது விழா முடிந்ததும் நம்மளோட வாழ்த்து பதிவர்களுக்கு தெரியப்படுத்த மாலை 6 மணிக்கு மேலே மழை வருவதற்க்கு வருண பகவானை வேண்டுவோம் சரியா ? அந்த நேரம் நாம் எல்லோரும் கூட்டாக சேர்ந்துகிட்டு..


பூ.. மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த...
மாநாடு நடக்கிறது... பதிவர்கள் கூடி
செந்தமிழ் பாடி... வலைப்பூ கூட்டம்
நடக்கிறது தமிழ் வலைப்பூ நடக்கிறது
அப்படினு பாடி மழை வரவழைக்கிறோம் OK
OK DONE
மருதகாசி & மகமாயி
அடடே பதிவர் கையேட்டில் எனது புகைப்படமா ?
Flight will Land on Pudukkottai 11.10.2015 @ 05.43 am  
Start Camera

வலையுலக பெருந்த(லை)கைகளுக்கு கில்லர்ஜியின் வணக்கம் இந்த பதிவர் விழாவில் அரிய பெரும் புலவர்களும், கவிஞர்களும் கூடும் இந்த தருணத்தில் நமக்கென்று ஒரு அமைப்பை உருவாக்கும்படி தாழ்மையுடன் எமது கோரிக்கை மனுவை முன் வைக்கின்றேன் அமைப்பின் முதல் சந்தா பணம் என்னுடையதாக இருப்பின் எமக்கு கூடுதல் சந்தோஷம்.

நன்றியுடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
தமிழ் வாழ ! அந்தத் தமிழோடு நாமும் வாழ !

2015 புதுக்கோட்டை பதிவர் விழாவுக்கு அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கும்

- தேவகோட்டை கில்ர்ஜி அபுதாபி -

  காணொளி

76 கருத்துகள்:

  1. சிறப்பான முன்னோட்டம்
    அழகான படங்கள்
    கலக்க இருப்பது பதிவர் சந்திப்பல்லவா...

    பதிலளிநீக்கு
  2. ஆஹா ]பதிவு நீண்டது ஜீ[[ என்றாலும் சந்திப்பு விழா சிறப்பாக அமைய உங்களைப்போல நானும் தூரதேசத்தில் இருந்து வாழ்த்துக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  3. அற்புதமான பதிவு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. விழாப்போலவே விழாவுக்கான பதிவும் அமர்க்களம் சகோதரரே!

    வாழ்த்துக்கள்!

    த ம1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

      நீக்கு
  5. காணொளி ஓடவில்லை. பதிவை சிரித்து ரசித்தேன். விழா சிறக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முயற்சி செய்யுங்கள் நண்பரே மிகவும் சிரத்தையுடன் வேலை செய்தேன்

      நீக்கு
  6. உங்களின் எண்ணம் செயல் எல்லாம் புதுகை வலைப்பதிவர் விழாவிலேயே இருக்கிறதென்பதை உணர முடிகின்றது..தூய்மையான உங்களின் அன்பு மனதை நெகிழ வைக்கின்றது....உங்களை நினைக்காமல் எங்களால் விழாவினை கொண்டாட முடியாது....வலைப்பூ தந்த உறவுகள் காலம் முழுதும் மறக்கவியாத ஒன்று....சகோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோவின் விரிவான கருத்துரைக்கு மிக்க நன்றி விழா சிறக்க எமது வாழ்த்துகளும்....

      நீக்கு
  7. அஹஹஹஹ் கருப்பாயி என்ன இப்படி எங்கள வாருது!!!?? ஹஹஹ அதென்ன கருப்பாயி ஜீபூம்பா ஜக்கு?!!!? ம்ம் எங்கள வில்லங்க கோஷ்டினு சொல்லலைனா கில்லருக்குத் தூக்கம் வராதே!

    அப்போ கில்லர்ஜி ஸ்பெஷல் ஹெலிக்காப்டர்ல வந்து இறங்குறாரோ? அப்போ புதுக்கோட்டைல ஹெலிகாப்டர் இறங்குற தளம்/ஹெலிபாட் போட்டுட்டாங்களோ.......கில்லர்ஜி டாட்டா பிர்லா போல...

    நாங்கள் எல்லாம் அப்பாவிங்கப்பா...நடராஜா சர்வீஸுதேன்..!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நீங்கதானே சொன்னீங்க.. கூஜாவுல புடிச்சு அடைக்கிறோம்னு.. அது கருப்பாயிக்கு தெரிஞ்சு போச்சாம் விழாவுக்கு ஜாக்கிரதையாக போயிட்டு வாங்க..

      நீக்கு
  8. ஆகா அற்புதம் நண்பரே
    ஒரு அரைமணி நேரம்
    அலுவலகத்தில் அனுமதி பெற்றுக் கொண்டு
    புதுகைக்கு வந்துவிட்டுத்தான் செல்லுங்களேன்
    தமம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நான் அங்குதான் சுற்றிக்கொண்டு இருப்பேன் நண்பர் கோவை ஆவியுடன்...

      நீக்கு
  9. அசத்தல் ஜி...

    நன்றிகள் பல...

    நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

    இணைப்பு : →பதிவர்களின் பார்வையில் "பதிவர் திருவிழா-2015"

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இணைப்பில் கொடுத்தமைக்கு நன்றி

      நீக்கு
  10. பதிவர் சந்திப்பு சிறக்க நமது பிரார்த்தனைகளும்....

    பதிலளிநீக்கு
  11. எங்களுக்கெல்லாம் குறையென்று சொன்னால்
    கில்லர்ஜி போல மனதிற்கு நெருக்கமான சில
    பதிவர்கள் வரமுடியாத சூழலில் இருப்பதுதான்
    அற்புதமான பதிவு
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் கருத்துரை கண்டு மனம் சிலிர்க்கிறது நன்றி கவிஞரே..
      எமது கோரிக்கை மீது ஒரு கண் வையுங்கள்...

      நீக்கு
  12. நான் உங்களுக்கு அடுத்துதான்
    உட்கார்ந்திருக்கிறேன்
    எங்கே எனச் சொல்லுங்க்கள் பார்க்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா காணொளியை கூர்ந்து கவனித்தமைக்கு நன்றி கவிஞரே...

      நீக்கு
  13. அருமை.

    விழா சிறக்க எனது வாழ்த்துகளும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி தாங்களும் இடம் பெற்ற (புதுக்கோட்டை போறேங்க...) பதிவுக்கு வரவில்லையே...

      நீக்கு
  14. தேவ கோட்டையாரின் கோரிக்கையை புதுக்கோட்டையாரின் பார்வைக்கு வழி மொழிகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எமது கருத்தை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி நண்பா..

      நீக்கு
  15. நேரில் அழைப்பு நிச்சயம்!
    வாழ்த்துகள்
    விழா சிறப்புற தங்கள் பதிவின் மூலம் நானும்
    வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் நண்பா!
    நன்றி! த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பா வாழ்த்துவோம் தமிழர் ஒற்றுமை வெல்லட்டும்

      நீக்கு
  16. நீண்ட அற்புதமான பதிவு சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நானென்ன ? செய்வது சகோ அந்தக் கூட்டங்கள் பேச்சைத் தொடங்கினால் நிறுத்த மாட்டுதே...

      பதிவு நீள்கிறதே என்ற கவலை எனக்கும் இருந்தது அற்புதமான பதிவு என்ற கருத்துரை கேட்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  17. அருமை நண்பரே, கடைசியில் வைத்த கோரிக்கையும் அசத்தல்.
    த ம 12

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே கோரிக்கையை ஏற்றமைக்கு நன்றி

      நீக்கு
  18. மனதில் கவலையிருந்தாலும்,இப்படி பதிவெழுதி ஆறுதல் படுத்தி(க்கி)றீங்க. அட்டகாசமான பதிவு. காணொளி.,படத்தொகுப்பு எல்லாம் அருமை. அண்ணா ஜி.
    விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்..!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோ பதிவின் பிறப்பு மனதின் வேதனை என்றும் கூட சொல்லலாம் வருகைக்கு நன்றி

      நீக்கு
  19. ஆமாம் சகோ. தங்களைக் காண முடியாது என்ற எண்ணம் தவிர விழாவிற்கு செல்லும் ஆவல் இன்னும ;அதிகமாகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அடுத்த பதிவர் சந்திப்பில் திருச்சியில் சந்திப்போம் வருகைக்கு நன்றி

      நீக்கு
  20. இதோ..
    பெட்டியைக் கட்டிட்டேன்!..
    பேரு எழுதியும் ஒட்டிட்டேன்!..

    ஆனா.. என்ன..
    வண்டி அபுதாபி பக்கமால்ல போவுது!?..

    !!??...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நாம அதைப்பற்றி பேசியாவது ஆசையை தீர்த்துக் கொ(ல்)வோம்

      நீக்கு
  21. இந்தமாதிரி எல்லாம் எழுத கில்லர்ஜிக்குத் தான் முடியும் பயண ஏற்பாடுகளில் இருக்கும் நான் இடும் தற்போதைய கடைசி காமெண்ட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா என்ன ஐயா இப்படி சொல்லிப்புட்டீங்க.....
      சென்று வென்று வாருங்கள் ஐயா வாழ்த்துகள் காணொளியில் தங்களைக் கண்டீர்களா ?

      நீக்கு
  22. கலக்கல் பகிர்வு அண்ணா....
    விழா சிறக்க வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  23. அடேங்கப்பா ,பில் டப்பு பயங்கரமா இருக்கே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி போகத்தான் முடியவில்லை இப்படியாவது.... ஹி...ஹி...

      நீக்கு
  24. வணக்கம் சகோ,
    பேய் எல்லாம் சேர்ந்து போட்ட மாநாடு சூப்பர்,
    மாநாட்டுக்கு முன் மாநாடு ம்ம்,,,,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ அவர்களையும் கொஞ்சம் பார்த்துக்கொல்லுங்கள்

      நீக்கு
  25. வணக்கம் ஜி! நான் பதிவுல கடைசி போல? எல்லாரும் முன்னமே வந்துட்டாங்க! தங்களை, சந்திக்க முடியாது என்பது வருத்தமாயிருக்கிறது! எப்பவும் போல கலக்கல்தான் ஜி! நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா.. தாமதமானாலும் வந்துடுறீங்களே..... நன்றி

      நீக்கு
  26. அழைப்பிலும் கலக்கல்! நன்று!

    பதிலளிநீக்கு
  27. அட்டகாசம்! அசத்திட்டீங்க! விழா சிறக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  28. நீங்கள் நேரில் (?) அழைப்பிதழை திரு முத்துநிலவன் அவர்களிடமிருந்து பெற்றதறிந்து மகிழ்ச்சி. எப்படியய்யா உங்களால் இப்படியெல்லாம் முடிகிறது? பதிவர் கையேட்டில் படம் கண்டு (?) மகிழ்ந்தேன். தங்களது கற்பனாசக்திக்கு ஈடு இணை எதுவுமில்லை. தங்களுடைய அன்புக்கு முன் அதுவும் சற்று சிறிதே. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே தங்களின் கருத்துரைக்கு மகிழ்ச்சியான நன்றி

      நீக்கு
  29. உங்கள் கற்பனைக்கு எல்லையே இல்லையா? காணொளியையும் பதிவையும் இரசித்தேன்.வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைப்பூ பகிர்வை வாசிப்போம்...
      வானம் அளவு யோசிப்போம்...
      பதிவுகள் என்ற ஒன்றை மட்டும்...
      பகிர்ந்து கொண்டு சிறப்பிப்போம்...
      - திண்டுக்கல் தனபாலன்

      இதற்கெல்லாம் காரணம் தங்களைப் போன்றவர்களின் பாராட்டேயன்றி வேறென்ன ? நண்பரே...

      நீக்கு
  30. ஹாஹா
    உங்களுக்கு மட்டும் நேர்ல வந்து அதுவும் ஏரோப்பிளேனுல வந்ந்ந்து அழைப்பிதழ் குடுத்தாங்களா? ,,, முத்துநிலவன் அண்ணா.......ஆ .... :) :)

    சகோ, கலக்குறீங்க சகோ..பதிவோடு படங்கள் எல்லாம் அசத்தல். தென்றல் மாதிரி..ஆனா வேலுநாட்சியார் . அருமை அருமை

    த.ம.18

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ கவிஞர் எனக்கு வேண்டப்பட்டவரு இல்லையா அதனாலதான்.... தென்றல் வந்துட்டு போயிட்டாங்க சகோ போட்டு கொடுத்துடாதீங்க,,,,, பயமாகீது...

      நீக்கு
  31. வணக்கம்
    ஜி
    நலமா?,. நீங்கள்போக விட்டாலும் போனது போல ஒரு நிகழ்வை ஏற்படுத்தி விட்டீர்கள்.. பதிவில்.. வாழ்த்துக்கள் ஜி த.ம19

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ரூபன் இது ஒத்திகைதான் வருகைக்கு நன்றி

      நீக்கு
  32. ஆஹா.. அழைப்பு அருமை... வாசிக்கும்போதே நாமும் அங்கு சென்றுவிடவேண்டும்போல மனம் பரபரக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்று வாருங்கள் சகோ வருகைக்கு நன்றி

      நீக்கு
  33. புதுக்கோட்டையை நோக்கி வேட்டைக்குப் போகும் தேவகோட்டைக்காரர் பதிவில போட்டேன் என் வோட்டை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன்னைப் போன்ற சென்னை ஐயாவின் வாக்கிற்க்கு நன்றி

      நீக்கு
  34. காணொளியில் மட்டும் இல்லை
    தமிழ்மணத்திலும் கூட....

    பதிலளிநீக்கு
  35. கொஞ்சம் அசந்தாலும் நீங்க கோட்டையை பிடித்துவிடுவீர்கள் ...அதுதான் அந்த கொட்டையைத்தான் சொன்னேன்...... நாங்க சிதம்பரம்............., ரகசியத்தை சொல்லமாட்டோம் .....அன்புடன் கோகி-ரேடியோ மார்கோனி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மக்கள் அசரும் பொழுதுதானே அரசியல்வாதிகளும் கோட்டையை பிடித்து விடுகின்றார்கள் வருகைக்கு நன்றி நண்பரே..

      நீக்கு
  36. வணக்கம் சகோதரரே.

    வழக்கம் போல் தங்கள் பாணியில் அருமையான அட்டகாசமான பதிவு. ஒவ்வொன்றையும், தங்கள் கற்பனையின் துணை கொண்டு அற்புதமாக வடித்திருக்கிறீர்கள். பதிவையும், கருத்துரைகளையும், பதில்களையும் படித்து ரசித்தேன். காணொளியில் தங்கள் உழைப்பைக் கண்டு வியந்தேன். தங்கள் மனமெல்லாம், புதுக்கோட்டையிலேயே இருப்பதை தங்களின் ஒவ்வொரு பதிவும் உணர்த்துகிறது. பதிவர் திருவிழாவிற்கு வருகைத் தரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    நான்தான் வழக்கம் போல் கடைசியாக வந்து கருத்துரை ௬றுகிறேன். ஆயினும், தங்கள் பதிவை படித்த திருப்தியுடன்.... எனினும், தாமதத்திற்கு மன்னிக்கவும்.

    தங்களுக்கும் இவ்விழாவில் கண்டிப்பாக பரிசு உண்டு என என் மனது நிச்சயமாக சொல்கிறது.. அடுத்த வருடம் பதிவர் திருவிழா திருச்சியிலா.? உறுதியாகி விட்டதா.?

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் பிரமாண்டமான விரிவான கருத்துரை மகிழ்ச்சி அளிக்கின்றது காணொளியை கண்டு பாராட்டியமைக்கு நன்றி எனது கடுமையான உழைப்பு அதில் இருந்தது பாராட்டின் மூலம் கஷ்டம் பறந்து விட்டது

      அடுத்த வருடம் திருச்சி என்று சொல்லி வைப்போமே... நாளை உண்மையிலேயே அங்கு நடந்தால் கில்லர்ஜி சொன்னது நடந்து விட்டது என்று சரித்திரம் சொல்லுமே...

      நீக்கு
  37. கிள்லிர்ஜி அண்ணா!
    நம் தலைவர் முத்துநிலவன் பற்றி இரண்டொரு பாரட்டுக்கள்....அதை அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன்,

    முத்துநிலவன் மற்றும் அவர் குழுவிற்கு என் அநேக நமஸ்காரங்கள்! இப் படை வெற்றி அடையாவிடின் எப்படை வெற்றி கொள்ளும். இனி, அடுத்த பதிவர் விழாவிற்கு புதுக்கோட்டை சந்திப்பை தான் எல்லோரும் உதாரணமாக கொள்வார்கள்------கொள்ளவேன்டும்!

    புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு ஒரு Bench Mark--என்று எடுத்துக் கொள்ளவேண்டும். இது மாதிரி இனிமேல் இப்படி ஒரு விழாவை, முத்துநிலவன் குழுக்கள், மாதிரி மற்றவர்கள் நடத்துவது கடினம் என்று சொல்வதைவிட---Impossible---என்று சொல்லலாம்.

    முத்துநிலவன் குழு உழைப்ப்பு வாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் திரு. அன்பே தமிழ் அவர்களின் முதல் வருகையை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன்... அருமையான விடயத்தை அழகாக சொன்னீர்கள் நன்றி

      நீக்கு
  38. அருமையான முன்னோட்டம். பேய்ங்கல்லாம் வந்தா பயந்துட மாட்டாங்க! ஹிஹிஹி! வரவேற்றுப் பரிசு தான் கொடுப்பாங்க! போய்த் தான் பாருங்களேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ போகலாந்தான் மந்திரவாதிகளை நினைச்(சாத்தான்) பயமாகீது

      நீக்கு