தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், நவம்பர் 19, 2015

வி(தண்ட)வாதம்


சிலபேர் எப்பொழுதும் எதற்கெடுத்தாலும் விதண்டவாதமாக பேசுவார்கள், அதேநேரம் தான் சொன்னது தவறென்று தெரிந்தும் அதே ரீதியில் பேசிக்கொண்டு இருப்பார்கள் உதாரணத்திற்கு, தான் பார்த்த கழுதைக்குகால் என்பது போல், அவர் பார்த்த நேரம் 5 கால் இருந்திருக்கலாம் (Maybe or may not be) ஆனால் ? அதுதான் பொதுவான உண்மை என்பதை ஏற்கமுடியாது தனது தவறை ஒத்துக்கொண்டால், தான் முட்டாள் என்பது நிரூபணமாகி விடுமோ ? என்ற பயம் இதுகூட ஒரு வகை தாழ்வு மனப்பான்மை தான், (Inferiority Complex)  இதை ஆரம்பத்திலேயே களைவது எதிர்கால உரத்த சிந்தனையாளர்களுக்கு நல்லது, தவறு செய்வது என்பது மனித இயல்பு, தான்அறிவாளி எனநினைத்தால் அது நம்மீது உள்ள நம்பிக்கை இதில் தவறில்லை, நாம்தான் அறிவாளி எனநினைத்தால் அது அகம்பாவம் இது தவறு, மாற்றுக்கருத்து என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய விசயம்.
 மாற்றுக் கருத்துக்களால் தான் புதுமையை கொண்டு வரமுடியும், தந்தை பெரியார், சுபாஸ் சந்திரபோஸ், பாரதிதாசன், முண்டாசுக்கவிஞன் பாரதியார், Dr. எம்.எஸ்.உதயமூர்த்தி போன்ற அரிய பெருமக்கள் இந்த சமூகத்திற்கு நல்ல மாற்றுக் கருத்துக்களை தைரியமாக எடுத்துரைத்தவர்கள், தவறுகளை ஒப்புக் கொள்ளும்போது அதை திருத்திக் கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது, விவாதம் செய்வதென்பது மூளையை சலவை செய்வது போல் இதுவும் நன்மைதான் அதற்காக விதண்டவாதம் என்பது அவசியமில்லாதது எல்லாம் தெரிந்தவர்கள் யாருமே கிடையாது இவ்வுலகில்.
 I.A.S படித்தவருக்கு தெரியாத ஒரு விசயம் மாடு மேய்ப்பவனுக்கு தெரியும் அதற்காக அவர் இவனைவிட தாழ்ந்தவர் என்று அர்த்தமில்லை, வீண் விவாதங்களுக்கு முக்கிய காரணம் பிறரின் வார்த்தைகளை காதில் வாங்காமல் பேசிக் கொண்டிருப்பது, ஆகவே பேசும்போது எதிராளியின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்துப் பாருங்கள் விவாதம் சர்ச்சை இல்லாமல் சுமூகமாக முடிவுக்கு வரும்.


விட்டுக் கொடுப்பதால் கெட்டுப் போவதில்லை.
 நானே பெரியவன் (Ego) என்ற அகந்தையை கை விட்டுப்பார, நீயே சிறந்தவன் என்ற பெயர் உன் கால் தேடிவரும்.
- கில்லர்ஜி -

70 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. முதல் கருத்தை பதிந்த முனைவர் ஐயாவுக்கு நன்றி

      நீக்கு
  2. உண்மைதான் நண்பரே
    ஆளைப் பார்க்காமல்,செய்தியை மட்டும் பார்க்க வேண்டும்
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்தியை மட்டுமே நாம் பார்த்திருந்தால் மதக்கலவரங்கள் கூட நடந்திருக்காதுதான் நண்பரே வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. பெரும்பான்மையானோர் கொண்டுள்ள ஒரு தவறான பழக்கத்தை கைவிட வேண்டிய அவசியத்தை தங்களுக்கேயுரிய பாணியில் பகிர்ந்துள்ள விதம் அருமை. நானும் சில சமயத்தில் விதண்டாவாதத்தில் ஈடுபட்டுள்ளேன். தற்போது குறைந்துவிட்டது. இனி இன்னும் குறையும். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே உண்மையே சமூகத்தில் நிறைய பேரிடம் இந்த குணம் இருக்கின்றது தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  4. >>> விட்டுக் கொடுப்பதால் கெட்டுப் போவதில்லை..<<<

    நல்ல கருத்துடன் இனிய பதிவு..

    பதிலளிநீக்கு
  5. அகந்தை ஒழிந்தால் அக(மு)ம் சிறக்கும் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி உண்மையான கருத்து சொன்னீர்கள் நன்றி

      நீக்கு
  6. தங்களுடன் விதண்டாவாதம் செய்யமுடியாத கருத்தை சொல்லியிருப்பதால் வாக்கும் பாராட்டும்.
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வாதம் நல்லதே.. பிடிவாதமே.. அவசியமற்றது தங்களது கருத்துரை எனக்கு ஒரு பதிவெழுதும் ‘’கரு’’ தந்து விட்டது அதற்க்கு முதலில் நன்றி

      நீக்கு
  7. ஐயோ. நீங்க " கையை விட்டால் கால் தேடி வரும்" என்று அருமையான serious பதிவு எழுதினாலும் எழுதினீங்க. பின்னூட்டத்தில் நம்ம பதிவர்கள் எத்தனை பொன்மொழிகள் கொடுத்திருக்காக பார்த்தீங்களா?

    ஆளைப் பார்க்காமல் செய்தியைப் பார்க்கவேண்டும்.

    விட்டுக்கொடுப்பதால் கேட்டுப் போவதில்லை.

    அகந்தை ஒழிந்தால் அகமும் சிறக்கும்.

    நீங்கள் பதிவர் நம்பள்கி பற்றி குறிப்பிடவில்லை என்று நினைக்கிறேன்.
    -
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் திரு. ஜெயக்குமார் அவர்களுக்கு எனது பதிவைப் பற்றிய தங்களது கருத்தை மட்டும் முன் வைப்பது நன்று நன்றி.

      நீக்கு
  8. உண்மை சகோ, தானென்ற அகந்தை அழிந்தால் நன்மையே!
    த.ம.+1

    பதிலளிநீக்கு
  9. அருமையான பதிவு கில்லர்ஜி! டாப்பான பதிவு. இதைக் கொண்டுவிட்டால் எல்லோருமே டாப் பில்தான்!!! பாராட்டுகள்! வாழ்த்துகள்! ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பாராட்டுகளுக்கும், கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  10. பதிவு, பழமொழி, கருத்து அனைத்தும் அருமை சகோ.

    பதிலளிநீக்கு
  11. எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு...

    வாழ்க வள்ளுவன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வள்ளுவனின் வாக்கோடு வந்தமைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு

  12. தன் முனைப்பை (Ego) விட்டோழித்து, விட்டுக்கொடுத்தல் என்பது எல்லோருக்கும் வருவதில்லை. அதை வாழ்வில் கடைப்பிடித்தால் எங்கும் எவருக்கும் மகிழ்ச்சியே தங்கும். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நல்ல கருத்தை முன் வைத்தீர்கள் வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  13. வணக்கம் சகோ,
    எல்லோரும் சேர்ந்து நல்லா இருக்கும் ஒருவரைப் பைத்தியம் என்று சொன்னால்,,,,,,,,,,
    அவர் பைத்தியமா சகோ,

    இப்பவும் விட்டுக்கொடுக்கனுமா?

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ அதெப்படி ஏற்றுக் கொள்ளமுடியும் ? அதேநேரம் மஹாத்மா காந்தியின் பொன்மொழியை நினைத்துப் பார்ப்போம்.

      //ஒருவன் முட்டாள் என்று தெரிந்து விட்டால் அவனிடம் வாதம் செய்யாதே ஏனெனில் யார் முட்டாள் என்பது தெரியாமல் போய் விடும்//

      நான் இதைத்தான் செய்வேன் சகோ கேள்வி கேட்டமைக்கு நன்றி

      நீக்கு
  14. வணக்கம் கில்லர் ஜி !

    என்ன தத்துவம் எல்லாம் சும்மா அதிருது ? அனைவருக்கும் பொருந்தக் கூடியதும் அவசியமானதுமான பதிவு அதிலும் கடைசி பஞ் சுப்பர் தொடர வாழ்த்துக்கள் ஜி வாழ்க வளமுடன் !
    தமிழ்மணம் +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களின் விரிவான பாராட்டுகளுக்கு நன்றி

      நீக்கு
  15. விட்டுக் கொடுப்பதால் கெட்டுப் போவதில்லை..என்ற வசனம் நல்லாத்தான் இருக்கிறது.. ஆனால் நடை முறைக்கு ஒத்துவருதில்லை... தவறுகளை ஏற்றுக் கொண்டாலும் மன்னிப்பார்தான் இல்லை நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே இப்பொழுது விட்டுக் கொடுப்பவனை ‘’இளிச்சவாயன்’’ என்றும் சொல்கின்றார்கள் என்னசெய்வது நான் சொல்வது மனித நேயமுள்ள மானிடர்களுக்கே பொருந்தும் இப்பொழுதுதான் எல்லாம் மானிட்டர்களாகி விட்டார்களே நன்றி நண்பரே..

      நீக்கு
  16. நாலு வரியில் நச்சென சொன்னது அசத்தல்!

    விட்டுக்கொடுத்தால் கெட்டுப்போக மாட்டோம் தான். அதுக்காக எதை எவ்வளவு விட்டுக்கொடுக்கின்றோம், கொடுக்கணும் என்பதிலும் லிமிட் வைத்துக்கொள்ள வேண்டுமா? வேண்டாமா சார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாங்க... வந்துட்டீங்களா...
      ஆத்தாடி... இப்படியெல்லாம் குறுக்கு கேள்வி கேட்குறீங்களே... உங்களோட பதிவுகளைப் பார்த்து கதி கலங்கிப் போயிருக்கேன் நான் உங்களுக்கு விளக்கம் கொடுக்க முடியுமா ? இருந்தாலும் வேற வழி சொல்றேன்..

      இரண்டு நபர்கள் வேலை கேட்டு செல்கிறார்கள் ஒருவன் பணக்காரன் மகன்தான் மற்றவன் அன்றாடங்காச்சி ஒருவருக்கே வேலை உண்டு வேண்டியவர் வரலாம் என்று முதலாளி சொல்கிறார் அன்றாடக்காச்சியின் குடும்பநிலை அறிந்து அவனுக்கு வேலையை விட்டுக் கொடுக்கலாம்.
      அப்படிக் கொடுத்தால் பணக்கராரின் மகன் மகான் ஆகி விடுவான் பெரும்பாலும் இன்று யாரும் இப்படி இல்லை என்பதே உண்மை.

      இது சிந்தனைக்காக சொன்னேன் இன்னொன்று சொல்லலாம் ஆனால் பல்லைக் கடித்து சண்டைக்கு வந்துடுவீங்களோனு எனக்கு பயமாகீது....

      நீக்கு
    2. அது சரி! நீங்க இந்த மாதிரி விடயத்தில் விட்டு கொடுங்க என சொன்னிங்க என விபரமா சொல்லி இருந்தால் நான் ஏன் கேள்வி கேட்கின்றேனாம்?

      இந்த திரியில் நான் இதே போல் தொடர்ந்தேன்னு வையுங்க.. நீங்க சொன்ன கழுதைக்கு ஐந்து கால் என வாதாடும் அதி மேதாவியும் அறிவாளியும் நானாகத்தான் இருப்பேன்.அதனால் நிஷா எஸ்கேப்!

      ஹாஹா! கில்லர்ஜி சார், தகர டப்பா போடும் சத்தத்துகெல்லாம் கதிகலங்கினால் உங்க பேருக்கும் மீசைக்கும் மதிப்பில்லாது போயிரும் சார். அதனால் எதையும் கலக்காமல் ஸ்ராங்காக இருங்க..!

      நீக்கு
    3. வாங்க வாங்க இப்படியே உசுப்பேத்தித்தானே ரத்தக்களரி ஆக்கிட்டீங்க....

      நீக்கு
    4. அந்த இன்னொன்னு என்னன்னு இன்னும் சொல்லல்ல! சொன்னால் தான் தெரியும் என்ன செய்வது எனும் முடிவும்எடுக்க முடியும் ! உங்க பதிவுக்கு உரம் சேர்க்கின்றேன் சார்.

      நீக்கு
    5. இப்போ நாம வீட்டுக்குள்ளே இருக்கும் பொழுது ஒருத்தர் வந்து ஐயா தர்மம் பண்ணுங்க சாமீ... அப்படினு கேட்கிறாரு... அவரிடம் ஏப்பா பிச்சை எடுக்கிறே அப்படினு கேட்கிறோம்
      என்னோட புள்ளைங்க விரட்டி விட்டுடாங்க வீடு இல்லாமல் கஷ்டப்படுறேனு சொல்றாங்க..
      நாம என்ன செய்யணும் சரி இந்தாங்க இந்த வீட்டுலைனா நீங்க இருந்துக்கங்க நான் மேலத்தெரு மேகலா வீட்டுக்கு போறேன் அப்படினு விட்டு கொடுத்து போகணும்

      இதுக்குத்தான் சமூக சேவகி நமீதா மேடம் அன்றே சொல்லி வச்சாங்க ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்னு..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
    6. ஹாஹா! ஹைய்ய்ய்யோ அஹ்ய்ய்ய்ய்ய்ய்யோ! அம்மாடி முடியல்லப்பா சாமியோவ்! சிரிப்பை அடக்க முடியவில்ல என்றால் நம்பணும் சார்.

      நீங்க இத்தனை தர்மப்பிரபு என எனக்கு நிஜமாக தெரியல்லங்க சார். சிபிச்சக்கரவர்த்தி உங்களிடம் தோத்து விடுவார்.

      நீங்களும் நமீதாவின் ரசிகையா? சரிதான்! நல்லாருங்க மக்களே!

      நீக்கு
    7. சுத்தி வளைத்து சிபிச்சக்கரவர்த்தி வகையறா யாருனு தெரியமல் சொல்லிட்டீங்களே... அந்தப்பரம்பரை வந்தவன்தான் இந்த கில்லர்ஜி

      நான் சினிமா நடிகைக்கு ரசிகனா ? இப்படிச் சொன்னதுக்கு என்மீது வெடிகுண்டை வீசியிருக்கலாம்

      நீக்கு
    8. அட! ஏனுங்க இத்தனை காட்டம்?

      நமீதா சொன்னாங்க என சொன்னது யாருங்க? அதனால் கேட்டேன். தவறெனில் மன்னிக்கவும். நமக்கும் சினிமாவுக்கும் ரெம்ப தூரம். உங்களுக்கும் அப்படித்தான் எனில் ரெம்ப சந்தோஷம் .

      சிபிச்சங்கரவர்த்தி பரம்பரையில் வந்தீர்களா? ரெம்ப மகிழ்ச்சி. பராட்டுகள்.

      நீக்கு
    9. நான் இன்றைக்கும் அலுவலகத்துக்கு தேரில்தானே போகிறேன்

      நீக்கு
  17. நான் அறிவாளி என்பது தன்னம்பிக்கை.. நான்தான் அறிவாளி என்பது அகம்பாவம்.. மிக அழகாகச் சொன்னீர்கள்.. விட்டுக்கொடுத்தல் பற்றியும் நல்லதொரு கருத்து. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  18. அருமையாக சொன்னீர்கள்! நான் போனால் எல்லாம் தேடிவரும்! சிறப்பான பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே..

      நீக்கு
  19. உளவியல் நோக்கில்
    Id - இயல்பான எண்ணங்கள்
    ego - நான் என்ற தன்சார் எண்ணங்கள்
    super-ego - மக்களாயம் (சமூகம்) சார் எண்ணங்கள்

    Id தோன்ற
    ego முனைப்படைய
    super-ego தடைபோட
    போர் தான் - இந்த
    போரில் super-ego வென்றால்
    நற்பெயர் / நன்மை
    ஆனால் - இந்த
    போரில் ego வென்றால்
    கெட்டபெயர் / தீமை
    அப்படி என்றால்
    ego ஐக் குறைத்தவர்
    வெற்றியாளர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் விளக்கவுரை நன்று நண்பரே நன்றி

      நீக்கு
  20. என்னவோ சொல்ல வந்து எதிலோ முடித்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். ( பூநக்கி ( அதாவது வண்டிற்கு) ஆறு கால் என்று ஒரு தனிப்பாடல் உண்டு.

    பதிலளிநீக்கு
  21. பேசுவதற்கு முன் காத்து கொடுத்துக் கேளுங்கள் என்று சொல்வார்கள். முழு மனதுடன் அடுத்தவர் கருத்தை காதில் வாங்கினால் நம் மனதிலும் மாற்றம் ஏற்படும். நட்பிலும் மேன்மை உண்டாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மையான வார்த்தையை முன் வைத்தீர்கள் நன்றி

      நீக்கு
  22. அன்புள்ள ஜி,

    நான் பார்த்த பூனைக்கு எட்டுக் கால் என்று சொன்னால் நம்பித்தான் ஆக வேண்டும். அகம்பாவம் பாவம் என்று அறிவுறுத்தியது நன்று. எல்லாம் தெரிந்தவர் என்று யாரும் இல்லை... அதுபோல எதுவும் தெரியாதவர் என்று யாரும் இல்லை!

    த.ம.14

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே இதுதான்..
      எட்டுக்கால் நடந்து வர
      ரெண்டு கால் நீண்டிருக்க
      பத்துக்கால் மனிதருக்கு
      பார்வையோ கிடையாது
      என்று பாடி இருப்பார்களோ....

      நீக்கு
  23. வணக்கம்
    ஜி

    எல்லோரும் உணருவார்கள் என்றால் பூமியில் பிரச்சினை ஏது.... அற்புதமாக சொல்லியுள்ளீர் வாழ்த்துக்கள்.த.ம15

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ரூபன் தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  24. நண்பா,

    தேவையான பாடம்.

    வாழ்த்துக்கள்.

    கோ

    பதிலளிநீக்கு
  25. உண்மைதான் அண்ணா...
    ஈகோ துறந்தால் வாழ்வில் வெற்றி நம்மைத் தேடி வரும்... வசந்தமாகவும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துப்பகிர்வுக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  26. சுயகௌரவர்கள் அடிக்கும் சுய தம்'பட்டம்'
    நிலை வானில் பறக்காது. உண்மை நண்பரே!
    சீரிய சிந்தனை இது! சீரியல் சிந்தனை அல்ல!
    நன்றி
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  27. நல்ல விவாதம் நண்பரே. எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை. எதுவுமே தெரியாதவரும் யாருமில்லை. ஒவ்வொருவரிடமும் யாதேனும் ஒரு திறமை நிச்சயமாக இருக்கும். இதைப் புரிந்து கொண்டால் அவரவர் வாழ்வும் செழிக்கும். இவ்வளவுதான். விட்டுக் கொடுத்தவர் கெட்டுப்போனதில்லை என்பது போலவே, கெட்டுப் போனவர்கள் விட்டுக் கொடுத்ததில்லை என்பதும் உண்மை.நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கவிஞரே கெட்டுப் போனவர்களிடம் விட்டுக் கொடுக்க ஒன்றும் இல்லையோ.... என்பதும் எனது தாழ்வான கருத்து வருகைக்கு நன்றி

      நீக்கு
  28. வந்துவிட்டேன்...அங்கிள்..இங்கே மின்சாரத் தட்டுப்பாடு...இன்னும் நீர் வடியவில்லை. அதனால் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணிநேரம் அவ்ளோதான்.அதனால் தான் வர இயலவில்லை. புடிச்ச முயலுக்கு மூணே கால்னு சொல்வாங்க அம்மா...நீங்க பூனை படம் அதுவும் பல கால்களில்..படத்தை ரசித்தேன்...நாங்க விட்டுக் கொடுத்து வாழ்வோம்...பெரியவங்க தான்....?????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்மா எல்லோருமே குழந்தை மனதுடன் இருந்து விட்டால் என்றும் துன்பமில்லை.

      நீக்கு
  29. இப்பவும் முயலுக்கு மூணு கால்தான் என சொல்றவங்க தான் அதிகம். இக்காலத்தில் ஈகோ இல்லாதவங்களை பார்க்கமுடியவில்லை. இதனால் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுது. அவரவர்கள் திருந்தினால்தான்...

    பதிலளிநீக்கு
  30. அருமையான கருத்து. தன்னம்பிக்கை தவறில்லை. தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும், தான் சொல்வது மட்டுமே சரி என்பது சரியல்ல.

    சிறப்பான கருத்தினைச் சொன்ன பதிவு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  31. யார் கேட்கிறாங்க!

    பதிலளிநீக்கு