புதன், செப்டம்பர் 30, 2015

தடையாக மாறும் அடையாளச் சின்னங்கள்

நம் முன்னோர்கள் தான் வாழ்ந்ததின் அடையாளமாக பல விடயங்களை நமக்கு கொடுத்து விட்டுச்சென்றார்கள் அந்த வகையில் நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள் நம் இந்தியாவில் ஏராளம் அப்படி நமக்கு கிடைத்தவைகளில் தஞ்சை பெரியகோவில், பூதங்கள் கட்டியதாக சொல்லப்படும் ஆவுடையார் கோவில், செஞ்சி கோட்டை, தாஜ்மஹால், மைசூர் அரண்மனை, மதுரை திருமலை நாயகர் மஹால், வீரபாண்டிய கட்டப்பொம்மன் மறைந்திருந்த தேவகோட்டை சங்கரபதிக்கோட்டை இங்கிருந்து புதுக்கோட்டை தொண்டைமான் அரண்மனைவரை பூமிக்குள் குதிரையில் போகும் சுரங்கப்பாதை உள்ளது இப்பொழுது பராமரிப்பின்றி மூடிவிட்டது இப்படி எவ்வளவோ விடயங்கள் சொல்லலாம் கணக்கில் அடங்காது புதிதாக கட்டவில்லை என்றாலும் பரவாயில்லை இருக்கும் பழமை வாய்ந்த கட்டடங்களை பராமரிப்பதில் அரசு கவனம் செலுத்துவதில்லை பழனி கோவில் போன்று மக்களிடமிருந்து வருமானம் வரும் இடமெல்லாம் பராமரிப்பு சிறப்பாக இருக்கிறது சென்னையில் பல பாலங்கள் கட்டி முடிக்கப்படாமல் அரையும், குறையுமாக நிற்கிறது காரணம் தொடங்கியது மற்றொருவர் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி அவைகள் முடிக்கப்படாமல் இருந்தால் இதுவரை கட்டியவைகளும் வீணாகும் என்பது அரசுக்கு தெரியாமல் இல்லை போனால் போகட்டும் நமக்கென்ன ? மக்களின் வரிப்பணம்தானே எவன் கேட்கப்போகிறான் கேட்டாலும் காவல்துறை நமது கையில்தானே.. பிறகு பார்த்துக்கொல்லலாம் புதிதாக கட்டப்பட்ட சட்டமன்றம் கூட மீண்டும் மாற்றப்பட்டு அவை மருத்துவமனையாக மாற்றப்பட்டது ஏதோ பங்காளிச்சண்டை போல் பரிமாறிக் கொள்கிறார்கள் ஒரு அரசு அலுவலகத்தை இடம் மாற்றுவது என்றால் சாதாரண காரியமா ? நாமெல்லாம் நமது வாடகை வீட்டை மாற்றுவதற்க்கே எவ்வளவு செலவு செய்யவேண்டியது இருக்கிறது இவர்கள் நமது பணத்தை இப்படியெல்லாம் வீண் விரயமாக்குகின்றார்கள் காரணம் என்ன ? மக்கள் நிச்சயமாக கேள்வி கேட்கப்போவதில்லை 5 வருடத்துக்கு ஒருமுறை சென்று கும்பிட்டு கைத்தடிகள் மூலம் ஓட்டுக்கு 500 ரூபாய் வீதம் எறிந்தால் போதுமே வேலை முடிந்து விட்டது பிறகு விலைவாசி ஏறும்போது மட்டும் டீக்கடையில் உட்கார்ந்து வாய் கிழியப்பேசுவது அர்த்தமற்ற பேச்சுக்களால் பயன் என்ன ? அவசியமற்ற வார்த்தைகளை பேசிக்கொண்டே இருப்பவனும் முட்டாள், அவசியம் வரும்பொழுது பேசாமல் இருப்பவனும் முட்டாள்.

நாம் பல நல்ல வாய்ப்புகளை தவற விட்டு விடுகிறோம் இன்றைய அரசியல்வாதிகளின் செயல் கோமாளித்தனமாகவே இருக்கிறது காரணம் அவர்கள் அடிப்படையில் கூத்தாடிகள் என்பதே உண்மை நாம்தான் ஒரு கூத்தாடி இரண்டொரு திரைப்படங்களில் அநியாயத்தை தட்டிக்கேட்கும் வீரனாக (டப்பிங் வாய்ஸ் காரணம் தமிழ் தெரியாது) பேசி நடித்தவுடன் வருங்கால முதல்வரே வா என்று பதாகைகள் வைத்து விடுகின்றோமே.. அவனும் மனிதன்தானே ஆசைகள் இருக்காதா ? அவன் புத்தன் இல்லையே உடனே அவனது கைத்தடிகளான வீட்டில் வளர்த்த விட்டில் பூச்சிகளை வைத்து மன்றம் தொடங்குகிறான் அதை அப்படியே கட்சியாக்குகின்றான், கொடி பிடிக்கின்றான் மிகவும் சுலபமாக தலைவனாகி முதல்வனும் ஆகிவிடுகிறான் அவர்களது பழக்கதோஷம் கோமாளி ஆட்சி நடத்துகின்றார்கள் இதைத்தான் நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள் கேனப்பய ஊருல கிறுக்குப்பய நாட்டாமை என்று உண்மைதானே ஆண்டாண்டு காலமாக கொடிப்பிடித்து மக்களுக்காக தெருவில் நின்று குரல் கொடுத்தவனை, மக்கள் என்றுமே மதிப்பதில்லை காரணம் அவர்கள் பகட்டாக இல்லையே இது பகட்டு உலகம் (நான் கம்யூனிஸ்டுகாரர்களை சொல்வதாக கூட நினைக்கலாம் அதுவும் பொருத்தமாகத்தான் இருக்கிறது) நான் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவன் இதிலொரு வேடிக்கை சொல்லட்டுமா ? உழைக்கும் வர்க்கமான தமிழர்கள் உழைப்பாளிகளுக்கு ஆதரவு கொடுக்கும் கம்யூனிஸ்டுகளை மதிப்பதில்லை ஆனால் ? உழைக்க மறுக்கும் சோம்பேறிகளான மலையாளிகள் தக்க தருணத்தில் கம்யூனிஸ்டுகளை ஆதரிப்பார்கள் காரணம் அவர்கள் உழைக்காமலே பிழைக்கத் தெரிந்தவர்கள் நம்மவர்கள் உழைத்தும் பிழைக்கத் தெரியாதவர்கள் இதுதான் உண்மை.

அதனால்தான் பிழைக்க வந்த பிற மாநிலத்தான் தமிழ் திரைப்படத்துறையில் பெரிய அளவில் நட்சத்திரம் என்று அறியாமைகள் சொல்கின்றார்களே ஆகவே நானும் அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காக சொல்கிறேன் தமிழ் நட்சத்திரமாக ஜொலிக்கின்றார்கள் தமிழர்கள் வயிற்றுப்பசி போக்க அன்றாடக்கூலிக்கு அவர்கள் ஜொலிப்பதற்காக லைட்பாய்களாகவும், கசக்கி எறியப்பட்டு முழுதும் நனைந்த பிறகு முக்காடு எதற்க்கு என்ற நிலைக்கு வந்த தமிழச்சிகள் பலரும் டூயட் பாட்டுக்கு லாலா லாலா லா... லா.. லா... என்று பாடிவருகின்றார்கள் அடுத்தொரு முறை திரைப்படம் காணும்பொழுது கவனியுங்கள் கோஷ்டியில் பாடும் பெண்களின் முகத்தை அதிகபட்சமாக தமிழச்சிகளின் முகமே... பிற மாநிலத்தான் ஆணும், சரி பெண்ணும் சரி கோடிகள் சம்பளம் பெறுகின்றார்கள் அதை அவர்கள் உடனடியாக அவர்களது மாநிலத்திலேயே முதலீடு செய்கின்றார்கள் இதை தொலைநோக்கு பார்வையுடன் கூர்ந்து கவனித்தால் தெரியும் நம்மில் பலருக்கு தொலைநோக்கு பார்வை கிடையாது தொலைந்து போன பார்வையே உண்டு தமிழா விழிப்புணர்வு பெறு இல்லையேல் விழி இல்லாமல் இரு.

என்று தமிழன் கட்டவுட்டிற்க்கு பாலாபிஷேகம் செய்வதை நிறுத்துகின்றானோ ? என்று தமிழன் விபச்சாரிகளுக்கு கோவில் கட்டுவதை நிறுத்துகின்றானோ ? என்று தமிழன் பிறமொழிக்காரனை தலைவா என்று சொல்வதை மறக்கின்றானோ ? அன்றுதான் தமிழ்நாடு மோட்சம் பெறும் இல்லையேல் பி.எஸ்.வீரப்பா அவர்கள் வசனம் பேசியது போல் இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாகப் போட்டும் என்று சொன்னது உண்மையாகும்.

புதுக்கோட்டை பதிவர் திருவிழா நடத்தும் மின் இலக்கிய போட்டிகள் 2015க்காக எழுதப்பட்டது (வகை 2) விழிப்புணர்வு கட்டுரைப்போட்டிக்கு ‘’கட்டுரை’’ என்ற வகையில் நான் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரையை என்னுடையது என்று உறுதி தருவதோடு போட்டிகள் முடியும் வரை வேறு தளங்களில் வெளியிட மாட்டேன் என்றும் உறுதி தருகிறேன்.

நான் போட்டிக்கு அனுப்பிய பிற படைப்புகளை காண கீழே சொடுக்குக...






2015 புதுக்கோட்டை பதிவர் விழாவுக்கு அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கும்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

குறிப்பு - நேற்றோடு எமது போட்டிக்கான பதிவுகளை நிறுத்தி விடுவோம் என்று நினைக்கும் தருவாயில் நேற்றைய பதிவுக்கு கருத்துரையிட்ட நண்பர் திரு. கரந்தையார் அவர்கள் என்னை உசுப்பேற்றி விட்டார்கள் ஆகவே உடனடியாக யோசிக்காமல் எழுதியது காரணம் போட்டியில் நுழைய இன்னும் நான்கு மணி நேரம் மட்டுமே உள்ளது இதற்க்கு பரிசு கிடைத்தால் அதற்க்கு காரணம் நண்பரே..

செவ்வாய், செப்டம்பர் 29, 2015

பெரியப்பாவின் சிலைகளை ஆற்றில் கரைப்பது ஏன் ?


நம் முன்னோர்கள் சில செயல்களை நமக்கு எல்லோருக்கும் புரியாமலே சொல்லி விட்டு சென்று விட்டார்கள்.
ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணல்களை கரைத்துக்கொண்டு போயிருக்கும் அதனால் அங்கே நீர் நிலத்தில் இறங்காமல் ஓடி கடலை அடையும் ஆனால் ? களிமண் உள்ள இடத்தில் நீர் கீழே பூமியில் இறங்கும். அதனால் விநாயகர் சதுர்த்தியன்று சிலைகளை களி மண்ணால் செய்து ஆற்றில் கரைக்கச் செய்தார்கள். அதை ஏன் ? 3 அல்லது 5 நாட்கள் கழித்து ஆற்றில் போடவேண்டும் ? ஈர களிமண் சீக்கிரம் கரைந்து நீரின் வேகத்தோடு சென்று விடும் சற்று காய்ந்த களிமண் நீரின் வேகத்தை தாங்கிக்கொண்டு அதே இடத்தில் படிந்து விடும். இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியின் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீர் பிரட்சினையை தீர்க்கும் ஆற்றில் மட்டுமே கரைக்க வேண்டும் இதையே இன்றைய இளைஞர்களை களி மண்ணை ஆற்றில் போடவேண்டும் என்றால் வரமாட்டார்கள்.
எப்படி நம் முன்னோர்களின் சாமர்த்தியம் ?
பண்டாகால நம் முன்னோர்கள் இதன் வழியே பண்டிகைகளை புகுத்தி மனிதன் சந்தோஷமாக வாழ்வதற்க்கு வழி வகுத்தார்கள் இவ்வாறாக பிறந்ததாகத்தான் இருக்க வேண்டும் பிற பண்டிகைகளும், திருவிழாக்களும்.
கணபதி பப்பா மோரியா
இன்றைய விநாயகர் சதுர்த்தி எப்படி இருக்கிறது ?
டண் கணக்கான அளவுகளில் கிரேனில் தூக்கிப்போய் கடலில் இறக்குகின்றார்கள் அவைகளில் கெமிக்கல் கலந்த சுண்ணாம்பு கடல் தண்ணிரில் கலந்து கடலை மாசு படுத்துகின்றன அவைகளை மீன்கள் உண்டு அந்த மீன்களை நாம் உண்ணுகிறோம் புதிய வியாதிகளை நாமே உருவாக்குகின்றோம் வீண் செலவுகள், வேதனைகள் எவ்வளவு கொடுமை யாராவது நினைத்துப் பார்க்கின்றோமா ? இல்லை காரணம் மூளைச்சலவை அரசியல்வாதிகளின் ஆர்ப்பாட்டத்துக்கு மக்களாகிய நாமும் ஒத்துழைக்கின்றோம் ஆகவே இவர்கள் வருடத்துக்கு வருடம் விழாவின் பிரமாண்டம் வலிமையாகிறது இது பக்தியா ? இந்தப்படை போதுமா ? இன்னும் கொஞ்சம் வேண்டுமா ? என்பதுதானே... கடந்த 20 வருடங்களில் இந்த விழாக்கள் அளப்பெரிய வளர்ச்சியைப் பெற்று விட்டன இந்தியாவில் இந்த விழாவின் வருடாந்திர செலவு மட்டும் வருடத்துக்கு 20,000 ஆயிரம் கோடி செலவு ஆகிறதாம் நண்பர்களே பிள்ளையார் என்னை இப்படி கொண்டாடுங்கள் என்று சொன்னாரா ? இந்தப்பணத்தை வைத்து கல்யாணம் ஆகாத எத்தனை ஏழைப்பெண்களுக்கு வாழ்வு அளிக்கலாம் அப்படிச்செய்தால் பிள்ளையார் ஏற்றுக்கொள்ள மாட்டாரா ? அப்படி ஏற்கவில்லையெனில் அவர் கடவுளே இல்லையே பக்தி வேண்டியதுதான் அவை அறிவுப்பூர்வமாக இருத்தல் அவசியம் இல்லையா ? தங்களுக்கு நினைவிருக்கலாம் சில வருடங்களுக்கு முன்பு பிள்ளையார் பால் குடிக்கின்றார் என்று ஒரே பரபரப்பு ஊடகங்களுக்கு சொல்லவும் வேண்டுமா ? எவ்வளவு வேகமாக பரப்பினார்கள் அந்த அலை ஓய்ந்ததும் ஒருவர் சொன்னார் பிள்ளையாரை நான்தான் பால் குடிக்கச்சொன்னேன் என்று சொல்லி மக்களிடம் மேலும் பீதியைக் கிளப்பினார் அவரை பிள்ளையார் ஒன்றுமே செய்யவில்லை இதன் காரணமாகத்தான் பலரும் பல வித்தைகளை கையாள்கின்றார்கள்.

அற்புத கீர்த்தி வேண்டின்
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற் பொருள் குவிதல் வேண்டின்
நலமெல்லாம் பெருக வேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக் 
களஞ்சிய திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர்
பொய்யில்லை கண்ட உண்மை
- கவியரசர் கண்ணதாசன்

இப்பொழுதெல்லாம் மதங்களின் திருவிழாக்கள் பக்தியின் வழியில் இல்லை என்பது மட்டும் நிச்சயமாகி விட்டது ஒரு காலத்தில் ஐயப்பன் கோவிலுக்கு மாலையணிந்து விரதமிருந்து போகின்றவர்களை அனுப்பி வைக்கின்ற பொழுது அதை அவரின் கடைசியாத்திரை என்ற கணக்கிலே அனுப்பி வைத்தோம் அவர்கள் வீடு திரும்ப 1 மாதம்கூட ஆனது காரணம் காடு, மலை கடந்து போய் வந்தார்கள் அவர்களை புலிகள் அடித்திருக்கலாம் என்று நம்பப்பட்டது இப்பொழுது அப்படியில்லை காலையில் புறப்பட்டால் மறுநாளில்கூட வீடு திரும்புகின்றார்கள் அதேபோல வயது முதிர்ந்த பக்கவப்பட்டவர்களே மலைக்குப் போய் வந்தார்கள் இன்று அந்த பழக்கமும் மலையேறி விட்டது //டேய் மாப்ளே என்னடா மாலை போட்ருக்கே ? ஆமாடா ஐயப்பன் கோயிலுக்கு போறேன் நீயும் வாயேன்... சரிடா நானும் நாளைக்கே மாலை போடுறேன்..// இதுதானே நடக்கின்றது இதுதான் பக்தியா ? இதில் பக்தியின் மார்க்கம் உண்டா ? ஒரு நேர்த்திக்கடன்தான் உண்டா ? இதில் பழனி பாதயாத்திரையும் சேரும் ஐயப்பனுக்கு மாலையணிபவர்கள் கோவில் போய்விட்டு வீடு திரும்பி மாலையை கழட்டும்வரை விரத முறைகள் மாறக்கூடாது விரதமுறைகள் நான் சொல்லவேண்டியதில்லை அனைவரும் அறிந்தவையே... மலைவாசலில் கள்ளு விற்கப்படுகின்றதே  யாருக்காக  நான் நேரில் கண்ட உண்மை எப்பொழுது தெரியுமா ? 1989-ல் இன்று நிலை என்னவோ ? யாமறியேன் பராபரமே... நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாற்றங்கள் மலையை விட்டு இறங்கியதும் மாலையை கழட்டி விடும் சாமிகள் பலரும் உண்டு இறைவனை வணங்காதவர்கள், இல்லை என்று சொல்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம், வாழட்டும் ஆனால் ? இறைவனை வணங்குபவர்கள் அப்பழுக்கற்றவர்களாக வாழ்ந்து காண்பிப்பதே இறை பக்தியை உயர்வு படுத்தும் இல்லையேல் தாழ்வு படுத்தும் என்பதே எமது கருத்து இறை நம்பிக்கையுடையோரே மதம் வளர்க்க வேண்டாம் சரியாக இருக்கும் அதை மழுங்கடிக்காமல் வாழ்வதே சிறப்பு மதம் மறந்தால் மனிதனாகலாம் ஆகவே...
மதம் மறப்போம் மனிதம் வளரப்போம்.
புதுக்கோட்டை பதிவர் திருவிழா நடத்தும் மின் இலக்கிய போட்டிகள் 2015க்காக எழுதப்பட்டது (வகை 2) விழிப்புணர்வு கட்டுரைப்போட்டிக்கு ‘’கட்டுரை’’ என்ற வகையில் நான் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரையை என்னுடையது என்று உறுதி தருவதோடு போட்டிகள் முடியும் வரை வேறு தளங்களில் வெளியிட மாட்டேன் என்றும் உறுதி தருகிறேன்.

நான் போட்டிக்கு அனுப்பிய பிற படைப்புகளை காண கீழே சொடுக்குக...





video
காணொளி

 2015 புதுக்கோட்டை பதிவர் விழாவுக்கு அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கும்
தேவகோட்டையான்
கில்லர்ஜி किल्लरजि കില്ലർജി  కిల్లర్ జి  Killergee كـــيللرجــــي

திங்கள், செப்டம்பர் 28, 2015

Dr. 6 முகம்


 அன்பு நண்பர்களே... வணக்கம் எமது கடந்த Mineral Water பதிவுக்கு வந்த அன்பின் ஜி குவைத் திரு. துரை செல்வராஜூ அவர்கள் படித்து விட்டு பின்னூட்டத்தில் எனது கழுத்தில் இப்படியொரு கொக்கியை போட்டு விட்டு போய் விட்டார்கள் நானும் மறுமொழியில் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியாமல் இப்படியொரு வாக்கு கொடுத்து விட்டேன் பிறகுதான் புரிந்தது எமது தவறு இருப்பினும் வாக்கு கொடுத்ததை காப்பாற்றுவது எமது கடமை இல்லையெனில் தி கிரேட் தேவகோட்டைக்காரன் வாக்கு கொடுக்க வக்கு இல்லாதவன் என்று இந்த பொல்லாத சமூகத்தில் முத்திரை குத்தி விடுவார்களே... ஆகவே அதன் சிந்தனையில் உதித்த அவசர பதிவு அன்றே எழுதி விட்டேன் இருப்பினும் புதுக்கோட்டை போட்டிகளில் கலந்து கொண்ட பதிவுகளால் வெளியிட தாமதம் இதை முதன் முதலாக படிப்பவர்கள் மேலேயுள்ள மினரல் வாட்டர் இணைப்பைச் சொடுக்கி படித்து விட்டு பிறகு தொடர்வது நலம் – கில்லர்ஜி

குட் ஈவ்னிங் டாக்டர்.
குட் ஈவ்னிங் ட்டூ யூ வாங்க, டாக்டர் திருமுகம் எப்படி இருக்கீங்க ?
இருக்கேன் டாக்டர் நீங்க நல்லா இருக்கீங்களா ? க்ளப்ல முன்னே மா3 பார்க்க முடியலையே...
இல்லை டாக்டர் இப்ப கொஞ்சம் பிஸி அதான் வர முடியலை அப்புறம் கிளினிக் எல்லாம் எப்படி போகுது ?
ஏதோ போகுது ஒரு நாளைக்கு 10க்குள்ளேதான் வர்றாங்க வர வர பேஷண்டோட எண்ணிக்கை குறையுது ஏன் ? அதான் எனக்கும் புரியலை.
நானும் கேள்விப்பட்டேன் டாக்டர் நீங்க பேஷண்டுகளுக்கு ஒரே மா3 ட்ரீட்மெண்ட் கொடுக்காமல் ஏதோ மாற்றி மாற்றி டாப்லெட் கொடுக்கிறீங்களாமே...
அதான் மிஸ்டர் 6 முகம் அதைப்பற்றிதான் நான் டிஸ்கஸ் பண்ண வந்தேன்.
6 முகமா ? மிஸ்டர். திருமுகம் நீங்க யாருனு நினைச்சு பேசுறீங்க... நான் டாக்டர் 7 மலை.
ஓ.... மை காட் நான் நீங்க சைக்யாட்ரிஸ்ட் டாக்டர் 6 முகம்’’னு நினைச்சு வந்துட்டேன் ஸாரி.
இட்ஸ் ஓகே டாக்டர் சொல்லுங்க உங்களுக்கு என்னதான் பிரட்சினை..
அது.... வந்து... டாக்டர்...
சும்மா சொல்லுங்க டாக்டர் நான் வெளியில சொல்ல மாட்டேன்..
அது வந்து டாக்டர் கொஞ்ச காலமாகவே எனக்கு மறதி அதிகமாயிடுச்சு என்ன செய்யுறோம் யாருக்கு என்ன மருந்து எழுதிக் கொடுகிறோம்னு தெரியாமல் சில நேரங்களில் பழைய ஸ்க்ரிப்ட்டை பார்த்து எழுதிக் கொடுத்துடுறேன் அது பேஷண்ட்களுக்கு பல விளைவுகளை உண்டாக்கி பிரட்சினையை கொண்டு வருது...
பின்னே இது தப்பு இல்லையா ? முதலில் உங்களுக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கங்க டாக்டர் 6 முகம் உங்களோட க்ளாஸ்மேட் இல்லையா.. அவரையே கன்ஸல்ட் பண்ணுங்க.. என்ன திடீர்னு ஏதும் அதிர்ச்சியான சம்பவங்கள்... அப்படி... இப்படினு...
கடந்த சில மாதமாக ஒரு குடிகார மட்டைக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தேன் அவன் வந்தாலே எனக்கு வயித்துல புளியைக் கரைக்கிற மா3யிருக்கும்..
ஏன் ?
எடக்கு மடக்கா பேசுவான், வார்த்தைகளை குண்டக்க மண்டக்க போட்டு பேசி என் மண்டையை காயவச்சுட்டுப் போயிடுவான் அவன் போனதும் நினைச்சு நினைச்சு நெஞ்சுவலி வந்துடும் ஏற்கனவே 2 முறை அட்டாக் வந்துடுச்சு டாப்லெட் எடுத்துக்கிட்டு தூங்கிடுவேன் இப்பவெல்லாம் கனவுலயும் வர்றான் பல நேரங்கள்ல அவனிடம் பணமே வேண்டாம் நீ வரவும் வேண்டாம் போடானு சொல்லிப் பார்த்துட்டேன் இருந்தாலும் தொடர்ந்து வர்றான் அவனாலத்தான் நான் இப்படி ஆகிட்டேன்.
யாரு, அவன் ?
இதோ ஃபோட்டோவைப் பாருங்கள் இவன்தான்.
இவன் ஃபோட்டோவை ஏன் ? கையில வச்சுக்கிட்டு இருக்கீங்க ?
தெரிஞ்ச டாக்டர்களிடம் இவன் வந்தால் பார்க்காதீங்க அப்படினு சொல்லி அவங்களையாவது காப்பாற்றுவோம் அப்படினுதான்...
தவறு உங்கள் மீதுதான் டாக்டர் நீங்க ஏன் ? பணம் வாங்காமல் விட்டீங்க ? நாமென்ன, மெடிக்கல் காலேஜ்ல பணம் கட்டாமல் சும்மாவா படித்தோம் ? அடுத்த முறை இவன் வந்தால் பக்குவமாக பேசி என்னிடம் அனுப்பி வையுங்கள் இவனை நான் பார்த்துக்கிறேன் என்னோட ட்ரீட்மெண்ட் வேற மா3 கொஞ்சம் ஹார்டாத்தான் இருக்கும் ஒரே வாரத்துல சரியாக்கிடலாம்.
நல்லது டாக்டர் இந்த ஃபோட்டோவை நீங்களே வச்சுக்கங்க.. அப்புறம் டாக்டர் நம்ம விசயத்தை வெளியில யாருட்டயும் சொல்லிடாதீங்க.. தெரிஞ்சா கில்லர்ஜி மா3 ஆளுங்க வெப்ஸைடில் போட்டு கிழிச்சுடுவாங்க..
இல்லை டாக்டர் கண்டிப்பாக சொல்ல மாட்டேன் நீங்க உடனே டாக்டர் 6 முகத்தைப் பாருங்க... அப்புறம் இந்த கில்லர்ஜி வெப்ஸைடெல்லாம் படிக்கிறீங்களா ?
ஆமா டாக்டர்..
முதல்ல அதை நிறுத்துங்க...
ஏன் ? டாக்டர்...
உங்களுக்கு இப்படி ஆனதுக்கு அடிப்படை காரணமே கில்லர்ஜி வெப்ஸைடுதான்.
ஐயய்யோ சரி டாக்டர் ரொம்ப நன்றி ஏன் ? இவனோட ஃபோட்டோவை எக்ஸ்ரேயிலே மாட்டுறீங்க ?
நம்மகிட்ட மாட்டுனான்ல... நம்மலோட ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் ஆகிடுச்சு அவன் மனசை படிக்க ஆரம்பிச்சுட்டேன், நீங்க ஆளை மட்டும் அனுப்புங்க..
ஹ...ஹ்...ஹா என்னமோ டாக்டர் நீங்களாச்சு, அவனாச்சு எனக்கு பீடை விட்டுச்சு அப்படினு போறேன் நல்லது டாக்டர் பை ஸீ யூ..
ஓகே பை.

சாம்பசிவம்-
ஆஹா இனி கெட்டகாலம் யாருக்கோ ?
Related Posts Plugin for WordPress, Blogger...