தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜனவரி 02, 2016

தூ


வணக்கம் சார் எப்பவுமே உங்கள் கண்ணு சிவப்பாக இருக்கிறதே ?
இரவு பூராம் தூக்கமே இல்லை அதுதான் காரணம்.

எல்லா இரவுகளுமா ?
இதைப்பற்றி மறுபடியும் கேட்டால் தூக்கி அடிச்சுருவேன்.

சாரி சார் இந்த முறை தேர்தலில் எந்த தொகுதியில் நிற்கப்போறீங்க ?
தூத்துக்குடி.

தங்களது தேர்தல் சின்னம் மாறுவதாக செய்தி எந்த சின்னம் ?
தூக்குச்சட்டி.

தாங்கள் தொகுதியில் வெற்றி பெற்றால் தொகுதிக்கு சிறப்பான திட்டங்கள் இருக்கின்றதா ?
சுமை தூக்குவோரின் வாழ்வு பலப்படுத்தப்படும்.

சார், பலப்படுத்தப்படுமா ? வளப்படுத்தப்படுமா ?
காலையிலேயே.. தூங்குறியா ?

இந்த தேர்தல் முடிவுகள் வெளியானால் எதிர் கட்சிகளின் நிலைப்பாடு ?
தூக்குப்போட்டு சாவார்கள்.

உங்கள் கட்சித் தொண்டர்களுக்கு தேர்தல் அறிவுரைகள்... ?
வெற்றி பெரும்வரை தூங்காதே தம்பி தூங்காதே.

உங்கள் கட்சி வெற்றி பெற்றால், தொண்டர்களுக்கு பரிசு ?
அனைவருக்கும் வாழ்நாள்வரை தூக்க மாத்திரைகள் இலவசம்.

ஆட்சிக்கு வந்தால் தங்களின் முதல் பணி ?
பழைய ஊழல்களின் கோப்புகளை தூசி தட்டி கிளறுவேன்.

டெல்லிக்கும், சென்னைக்கும் இடைவெளி எப்படி இருக்கும் ?
தற்காலத்தில் இருக்கும் தூரத்தின் அளவுகள் உடனடியாக குறைக்கப்படும்.

முந்தைய ஆட்சியில் விமானங்கள் பறக்கும் வழியமைப்பில் ஊழல் நடந்ததே... குற்றவாளிகள் பிடிபட்டால் ?
உடனடியாக தூக்கு தண்டனை வழங்கப்படும்.

மற்ற கட்சித்தலைவர்கள் பஸ், ஆட்டோ, மாட்டு வண்டி, டிராக்டர், ரிக்ஷாக்களில் போகின்றார்கள் நீங்கள் மட்டும் காரிலேயே செல்கின்றீர்களே ?
மக்களின் பார்வைக்கு மட்டுமே கார் தெரியும் ஆனால் நான் காரிலும் இருப்பேன், தூரிலும் இருப்பேன்.

தங்களின் முன்னாள் மனைவி திரையுலகில் இருப்பதால் திரையுலகினருக்கு சலுகைகள் உண்டா ?
கண்டிப்பாக ‘’தூ’’ என்ற தூய்மையான எழுத்தில் பெயர் வைக்கும் தமிழ் திரைப்படங்களுக்கு தமிழ்நாடு அரசின் வரி விலக்கு அளிக்கப்படும்.

தங்களது ஆட்சியில் முதியோர்களுக்கு சலுகைகள் உண்டா ?
முதியவர்களுக்கு மரணகாலம் வரை மூக்குப் பொடித்தூள், தாய்மார்களுக்கு டீத்தூள் இலவசம்.

தேசிய பறவையை மாற்ற வேண்டும் என்ற செய்தி உண்மையா ?
ஆம் தூக்கணாங் குருவியை தேசிய பறவையாக மாற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

தங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஊழல் செய்தால் ?
மறு நொடியே கட்சியை விட்டே தூக்கி அடிப்பேன்.

சட்டமன்றத்தில் மாற்றம் உண்டா ?
உடனடியாக அனைத்து நாற்காலிகளையும் தூக்கி விட்டு ஷோஃபா போடச்சொல்வேன்.

உள்ளே ஷோஃபா போட்டால் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏஸியின் சுகத்தில் உறங்கி விட்டால் ?
ஷோஃபாவோடு தூக்கி வெளியில் எறிவேன்.

தமிழில் தங்களுக்கு பிடித்தமான வார்த்தை ?
தூ

சார்.... எங்கள் மேல் எச்சில்... ?
தூ மட்டுமே பிடிக்கும் என்று சொன்னேன்.

அப்படியா சரி ரத்தினச் சுருக்கமாக சொல்லுங்கள் தமிழகத்தில் தங்களின் ஆட்சி எப்படியிருக்கும் ?
தூய்மையான ஆட்சி நடக்கும்.

நல்ல முறையில் எங்களுக்கு பதில் சொன்ன தங்களுக்கு மனமார்ந்த நன்றி.
எங்கள் தூங்கு மூஞ்சி கழகம் சார்பாக நன்றி வணக்கம்.

தூ என்ற காணொளியை தேடிச்சொன்ன வில்லங்கத்தாருக்கு நன்றி.

சிவாதாமஸ்அலி-
நிருபர் விபரமானவர்தான் ஒரு இடத்தில் கூட (து-தூ) இந்த இரண்டு எழுத்தும் இல்லாமல் கேள்வி கேட்டு இருக்கின்றாரே...

சாம்பசிவம்-
துப்பத்தான் வர்றானு தூக்கி அடிச்சிட்டா... அதனாலதான்.

Chivas Regal சிவசம்போ-
கேள்வி தூள்மா.

68 கருத்துகள்:

  1. 'தூ' என்கிற என்கிற எழுத்தை வைத்து சிலம்பம் ஆடி விட்டீர்களே... அவருக்கு ஏண்டா சொன்னோம் என்று ஆகிவிடும்!

    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  2. என்ன சொல்றதுன்னே தெரியலை..

    ஏதாவது சொல்லப்போய் - ஏடாகூடம் ஆகிடுமேன்னு.. இருக்கு!..

    இரவு வேலை முடித்து விட்டு வந்தேன்..

    எனக்கும் வருகின்றது.. தூ.. தூ.. தூக்கம் !..

    பதிலளிநீக்கு
  3. ஹஹஹாஹ்ஹ து..து...து...து..து...தூள்!!!! (ஒண்ணும் இல்ல..கொஞ்சம் திக்கிருச்சு..அதான்...ஹிஹி)

    வில்லங்கத்தாருக்கு எதற்கு நன்றி??!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாங்க நன்றி எதற்கு நாளை பின்னே வில்லங்கம் வந்தால் பார்ட்னராக்கி விடத்தான்.

      நீக்கு
    2. ஹை பார்ட்னர்ஷிப்!!!வின் வின் கேம்!!!

      நீக்கு
    3. நான் சொன்னது அந்தக் கட்சிகளிடமிருந்து வில்லங்கம் வந்தால் வில்லங்கத்தார்தான் இந்த மா3 பதிவு எழுதச்சொன்னாங்க அப்படினு நழுவிடத்தான்.

      நீக்கு
  4. ‘தூ’என்ற எழுத்தை வைத்து இத்தனை சொற்சிலம்பமா? விஜயகாந்த் அவர்களின் ‘தூ’ உங்களுக்கு இந்த பதிவை எழுத தூண்டுகோலாக இருந்திருக்கிறது என நினைக்கிறேன். மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல் இருக்கிறது உங்கள் பதிவு. பதிவில் தூள் கிளப்பிவிட்டீர்கள்.வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விஜயகாந்த் யாரு ? அவர் எஸ். ஏ. சந்திரசேகரின் சட்டம் ஒரு இருட்டறை படத்தில் அறிமுகமாகி வளர்ந்து தி.மு.க வில் சேர்ந்து பிறகு மனஸ்தாபமாகி தனிக்கட்சி அமைத்து குடும்பத்தினர் படைசூழ தமிழ் நாட்டை வலம் வருவதோ.... மேடைகளில் உளறுவதோ.. வேட்பாளரை செவுல் தெறிக்க விடுவதோ... இது போன்ற அரசியல் விபரங்கள் எதுவுமே எனக்கு தெரியாது நண்பரே...

      நீக்கு
  5. தூரத்தில் புலி
    துரத்தி அடி
    துப்பாக்கி ரெடி
    துப்பாக்கி/புலி = கில்லர்ஜி
    "வாங்கண்ணா வணக்கம் அண்ணா"
    சொல்றத கேக்குறோம் அண்ணா"
    ஓட்டு போட்டோம் அண்ணா!
    அது தமிழ் மணம் ஓட்டு அண்ணா!
    (ஆமாம் அண்ணா ஒரே வருடத்தில்
    சவூதியில் 157 பேருக்கு தூக்காம்= செய்தி
    தூக்கம் வரவில்லை!!!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா.... தூக்கு நமது நாட்டுக்கும் வேண்டும் நண்பா...

      நீக்கு
  6. தூ ,தூ என்று துப்பியவருக்கு நன்றி ,நாங்கள் சிரித்து மகிழ காரணமாகி விட்டாரே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி யாரு ? யாரைத் துப்பினாங்க ? எனக்கு ஒன்றும் புரியவில்லை ஜி

      நீக்கு
  7. தூக்கி சாப்பிட்டிட்டீங்க மத்த பதிவுகளை! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. தூ க்கு இவ்வளவு தூ வா சகோ.

    ஆனாலும் தூ சூப்பர்.

    வாழ்த்துக்கள் சகோ

    பதிலளிநீக்கு
  9. இதைவிட நாசுக்காக அரசியல் அங்கதம் செய்ய முடியும் எனத் தோன்றவில்லை. எழுத்தாற்றலில் சிறந்த இதழாளர்களின் தரத்துக்கு இருக்கிறது! அட்டகாசம்! ஒரு கேள்வியில் கூடத் 'து', 'தூ' ஆகிய எழுத்துக்கள் இல்லை என்பதைப் பின் குறிப்பு எனும் பெயரில் குறிப்பிட்டு அசட்டுத்தனம் செய்யாமல், அதையும் உரையாடல் போல் குறிப்பிட்டிருந்த விதம் அசத்தல்! வருகை நாகரிகத்துக்காகச் சொல்லவில்லை. உண்மையிலேயே சொல்கிறேன். வெகு அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மிக அழகாக கருத்துரை தந்தமை அறிந்து மகிழ்ச்சி பதிலை விட கேள்வியில் (து-தூ) வராமல் பார்த்துக் கொள்வதில் எனக்கு இருந்த சிரமம் தங்களது கருத்தால் பறந்து விட்டது மிகச்சரியாக புரிந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே வாக்கிற்க்கும்...

      நீக்கு
  10. அவர் தூ என்று சொன்னாலும் சொன்னார். அதைவைத்தே கற்பனை ஊற்றைத் திறந்து விட்டு தூள் கிளப்பி விட்டீர்கள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  11. கற்பனை கேள்வி - பதில், சும்மா 'தூ'ள்!

    பதிலளிநீக்கு
  12. //முன்னால் மனைவி//

    முன்னாள் மனைவி
    - என்று திருத்தலாமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவனக்குறைவான தவறுக்கு வருத்துகிறேன் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி மாற்றி விட்டேன் நண்பரே.

      நீக்கு
  13. உங்களுக்கு பிடித்த குருவி

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ஜி !

    அதெப்படி ஓரெழுத்தை தலைப்பாய் இட்டு இவ்வளவு அழகாய் நடைமுறையோடு ஒப்பிட்டு எழுதி இருக்கீங்க இதுவும் தனிக்கலைதான் இல்லையா ! கற்பனையாய் இருந்தாலும் கலக்கல் பதிவு ஜி தொடர வாழ்த்துக்கள் ,,,,நான் நேற்றே மொபைலில் பார்த்தேன் ஆனால் கருத்திட முடியவில்லை வருந்துகிறேன்
    வாழ்க வளமுடன் !
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவலரின் விரிவான கருத்துரைக்கு நன்றி தாமதமானாலும் வந்தால் நலமே....

      நீக்கு
  15. கலக்குறீங்க....செம செம

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உங்களை விடவா உண்மைகளை சொல்லி விட்டேன் ? வருகைக்கு நன்றி.

      நீக்கு
  16. SSSSSuuuuuuuuuuuPPPPPPer.......
    (வேதாவின் வலை)

    பதிலளிநீக்கு
  17. தூ பார்த்தவுடனே
    தூ க்கிவாரிப் போட்டுடுச்சு!
    தூ படிச்சவுடனே
    நெஞ்சம் கனத்தூடிச்சு!

    தூ இவ்வளவு பாதிப்பு
    தருமான்னு.... அதையும்
    சுவாரசியமாய் தந்தமைக்கு
    நன்றி சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்துரை தூக்கலா இருக்கு நன்றி.

      நீக்கு
  18. அன்புள்ள ஜி,

    தூங்க மூஞ்சி கழகத்திலிருந்து நன்றாகப் பேட்டி கொடுத்தத் தலைவருக்கு நன்றி.

    நீங்கள்ளலாம் பத்திரிக்கைக்காரங்களா...? என்ன பத்திரிக்கை ...? ‘தூக்கு தூக்கி’யா? ’தூ’

    த.ம.15

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே பதிவை வெளியிட்ட பிறகு இன்னும் நீட்டித்து இருக்கலாமோ என்று தோன்றிய யோசனைகளில் தாங்கள் சொன்னதும் ஒன்று இதை நினைத்து ஆச்சர்யமாக இருக்கின்றது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  19. சிரித்து இல்லை சிரித்தூ மகிழ்ந்தோம்.சூப்பர் கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மகிழ்ச்சிக்கு வாழ்த்துகள்.

      நீக்கு
  20. தூரிலும் இருப்பேன்? கார் சரி. தூர் சரியாக வரவில்லையே. மற்ற எல்லாம் அருமை. தூள் கிளப்பிவிட்டீர்கள் என்று சொல்லலாம்தான். அடுத்த முறை பார்த்தால் என் கண்ணில் தூசியை அப்பிவிடுவீர்களோ என்ற பயம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் நெல்லைத் தமிழனின் முதல் வருகையை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன் பூமழை ‘’தூ’’வி வரவேற்கிறேன்
      நண்பரே தூரிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்பதை உல்டாவாக எழுதினேன் வருகைக்கு நன்றி நண்பரே தொடர்க...

      நீக்கு
  21. அச்த்தல் அண்ணா ஜி. அருமையாக எழுதியிருக்கீறீங்க. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. 'தூ' வை வைத்து இத்தனை கேள்வி பதிலா ஆச்சரியமாக இருக்கிறது. பேசாமல் சினிமா பக்கம் வந்தால் காமெடியில் முன்னுக்கு வந்திடலாம். அவ்வளவு நகைச்சுவை உணர்வுகளை உள்ளுக்குள் ஒழித்து வைத்திருக்கிறீர்கள்.
    நானும் எனது நன்பருக் ஒரு குறும்படம் எடுத்தோம். அந்த படத்தின் பெயர் 'தூ..!' ஒரு குடிகாரனைப் பற்றிய படம். மதுவுக்கு எதிரான படம். அதனால் அப்படியொரு பெயர். இந்த 'தூ' பதிவு எனக்கு அந்த ஞாபகத்தை கொண்டுவந்துவிட்டது.
    த ம 18

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நலம்தானே பதிவுகளையும் காணோம்
      குடிகாரர்களைப்பற்றி படம் எடுத்தால் 'தூ' என்றுதானே தலைப்பிட முடியும் வருகைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  23. தூ என்ற எழுத்தை வைத்து அருமையான பதிவு.
    திறமைகள் நிறைய இருக்கிறது. யாருமே வைக்காத சின்னம் தூக்குசட்டி. கவலைகளை மறந்து சிரிக்கலாம்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  24. ஹாஹா! தூ............தூ.என் காண்பார்வையிலிருந்து தூரமாய் போனதை மெயிலெனும் தூதின் மூலம் தூண்டியே துடிப்புடன் செயல்படும் தூதன் கில்லர்ஜி சார் வாழக்.. தூ.... தூ.....ச்ச்சே ...தும்ம்மல் வந்திச்சி சார். நீங்க அப்படிங்க் இப்படிங்க் நினைத்தால் எப்படிங்க் நினைத்ததுக்கும் நான் காரணமில்லை என துணிவுடன் சொல்லிட்டேன்.

    இருந்தாலும் தூ வை துடைத்து விட்டு அடுத்த தூண்டிலை வீசுங்க சார்.....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம் மொத்தமாக துப்பி விட்டீர்கள் என்று புரிந்து கொண்டேன்....
      அழைப்பின்பால் பதிவுக்கு வந்தமைக்கு நன்றி

      நீக்கு
  25. தூ..வை இப்படி மொத்தமாக துப்பி விட்டீர்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எச்சில் இவ்வளவுதான் நண்பரே இருந்தது இனி ஊறினால் மீண்டும் துப்புவேன்.

      நீக்கு
  26. வணக்கம்
    ஜி
    பதிவை தூ,..போட்டு தூல்கிளப்பிட்டீங்கள்..ஹா..ஹா... இரசித்தேன் ஜி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு