தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜனவரி 29, 2016

உசிலம்பட்டி, உடுக்கையடி உலகநாதன்


இந்தப்பதிவுக்கு முதன் முதலாக வருபவர்கள் இதன் தொடர்பான கீழ்காணும் பதிவுகளை படித்த பிறகு தொடர்ந்தால் பதிவின் காரணங்கள் விளங்கும் இதில் கொக்கி போட்டு தொடர் பதிவாக்கிய அன்பின் ஜி குவைத் மன்னர் திரு. துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி.


பக்கத்தில் வந்து நின்ற திருமுருகன் டிரான்ஸ் போர்ட்டில் மொக்கைராசுவை மந்தக்கட்டியும் சடையாண்டியும் மெதுவாக ஏற்றினார்கள் இவர்களின் சூழலை கண்ட நல்ல மனம் படைத்த இருவர் இருக்கையை காலி செய்து கொடுத்தார்கள் நடத்துனர் வரவும் சங்ககிரி மூணு என்று டிக்கெட் எடுத்தான் சடையாண்டி.
தூரத்தில் தன் கணவன் மொக்கைராசுவை கைத்தாங்களாக கொண்டு வரவும் பதறியடித்து ஓடி வந்தாள் மொக்கையின் மனைவி மொடிச்சியம்மாள்.

அட நாசமாப் போறவங்களா... எம் புருஷனை தெனம் தண்ணியடிக்க வச்சு இப்படி குடும்பத்தைக் கெடுக்குறீங்களே... அறிவு இருக்கா நீங்க நல்லாயிருப்பியளா... ? 
கீழே குனிந்து மண்ணை வாரி இறைத்தாள் மண் மூவர் முகத்திலும் அடிக்க... மந்தக்கட்டியும், சடையும் மொக்கையை விட்டு விட்டு விஜயகாந்த் மாதிரி ப்தூ... ப்தூ.. என்றனர் சட்டென கீழே விழுந்தான் மொக்கை.

இஞ்சே பாருத்தா.. ஒம் புருஷனை நாங்க ஒண்ணுஞ் செய்யலை..
ஒண்ணுஞ் செய்யாமே... எங்கே கூட்டிப்போயி இப்படி தூக்கிட்டு வாறீயே...

சொன்னவள் புருஷன் எங்கோ பார்த்துக்கொண்டு கிடக்க... வீட்டுக்குள் ஓடி சருவப் பானையை தூக்கி வந்து தண்ணீரை தலையில் ஊற்றினாள்... அப்பொழுதும் சவளைப் புள்ளையைப் போலவே கிடந்தான்....
பாவி பரப்பாங்கே... தெனம் வந்து உயிரை எடுக்குறாங்கே...

இஞ்சே பாருத்தா மரியாதையா... பேசு.
ஒனக்கு என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு.. ? 

நாங்க சடையங்காடு வரைக்கும் போனோம் அங்கே மயங்கி விழுந்துட்டான்.
அங்கே எதுக்கு ? புடுங்குறதுக்கா போனீங்கே.... எம் புருஷனை எதுக்கு ? கூட்டிப் போறீங்கே... இனிமே இந்த வீட்டுப்பக்கம் வந்தீங்க.. வெளக்கமாத்தாளை அடிப்பேன். தூ....... (பீப் போட்டுக்கொள்ளவும்) மயங்களா...

ஏதோ வாயெடுத்த மந்தக்கட்டியை கையைப்பிடித்து அழுத்தி கண்ணால் சாடை காட்டிய சடை இழுத்து வந்து...
என்னபா நீ அவதான் பேசுறானா... நீயும் பதில் சொல்லிக்கிட்டு இருக்கே...

அதுக்காக... மரியாதையில்லாமே.. பேசுறா.. அறிவு இருக்கானு கேட்கிறா... இளையராஜா மாதிரி....
விடப்பா நமக்கு எவன்தான் மரியாதை கொடுத்தான்... இவ மட்டும் கொடுத்துடப்போறா... எல்லாம் (கில்லர்ஜி) நம்ம தலையில எழுதுனது போலதான் நடக்கும் எதையும் வெளியே சொல்ல முடியுமா ? திருடனுக்கு தேள் கொட்டுன கதையா போச்சுப்பா... வா... வா... ஒரு வாரத்துக்கு யேஞ் சகலை வீட்டுக்கு தேவகோட்டை நாடி போயிட்டு பெரச்சனை ஓஞ்சதும் வருவோம்பா...

வந்ததிலிருந்து... தனது கணவன் மொக்கைராசு அப்படியே வெறித்த பார்வையுடன் இருப்பதால் சந்தேகித்த மொடிச்சியம்மாள் அடுத்த தெரு பூசாரி புல்லாலங்கடியிடம் விபூதி வாங்கி வந்து பூசி விட்டாள் நாட்கள் இரண்டு கடந்தும் இதே நிலை நீடிக்க... பக்கத்து தெரு நல்லவர் ஒருவர் வந்து தனக்குத் தெரிந்த பூசாரி உலகநாதன் இருக்கின்றார் என்று சொல்லியனுப்ப.... டாக்ஸி ஒன்றை அமர்த்தி மொக்கையை கிடத்தி துணைக்கு தனது தம்பி வடுகமுத்துவை கூட்டிக்கொண்டு உசிலம்பட்டி போனாள் மொடிச்சியம்மாள்.

உசிலம்பட்டியில் பூசாரி உலகநாதன் உடுக்கையுடன் தெய்வீகமாக காணப்பட்டார் அவரின் காலைத் தொட்டு வணங்கிய மொடிச்சிய.ம்மாளும், வடுகமுத்துவும், இரண்டு பேர் சடையங்காடு கூட்டிப் போனதும், அங்கு மயங்கி விழுந்து விட்டதாகவும் எல்லாம் விபரமாக சொன்னாள்.

நிதானமாக கேட்ட பூசாரி கொலைதெய்வத்தை SORRY குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு கண்களை மூடி சோவியை குலுக்கிப் போட்டார்...

கீழே மல்லாந்து விழுந்த சோவிகள் எத்தனை என்று கேட்டார் கோபமாக... வடுகமுத்து பயந்து நடுங்கி உடனே எண்ணி ஏழு சாமி என்றான்.

ஹா...ஹா..ஹ்..ஹா... அவரது சிரிப்பைக் கேட்டதும் சிறிது தூரத்தில் Waiting List டில் உட்கார்ந்து இருந்த 13 பேரும் கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள்.
திடீரென கத்தினார் பூசாரி...

அடியே... சடையங்காட்டு சண்டாளி எதுக்காக... என்னோட குழந்தை மேலே பாஞ்சே.. ? சொல்லு உனக்கு வேண்டியது... என்ன ?
...........................................
முடியாது உனக்கு காவு தர முடியாது... இப்போ போறியா... ? இல்லை சவுக்காலே... அடிக்கவா ?
.....................
என்ன... போகமாட்டியா ?
சொன்னவர் சட்டென பக்கத்தில் கிடந்த சாட்டையை எடுத்து மொக்கைராசுவின் தொடைப்பாகத்தில் விட்டு விளாச... ஏழெட்டு அடி விழுந்ததும் மொக்கைக்கு லேசாக உடல் அசைந்தது....
போ... போ... போ.... சண்டாளி...
விபூதியை எடுத்து மொக்கையின் முகத்தில் ஊதினார்... தலையும் முகமும் விபூதியால் மூடிய மொக்கையைப் பார்த்த மொடிச்சியம்மாளுக்கு தனது கணவன் சைத்தானைப்போல தோன்ற சிறிது நடுங்கினாள்...
ம்.. கூட்டிட்டுப் போங்க... இந்த எழுமிச்சம் பழத்தை வீட்டு வாசல்ல கட்டு எந்த தீயசக்திகளும் அண்டாது...

மீண்டும் பூசாரியின் காலில் விழுந்து வடுகமுத்தும், மொடிச்சியம்மாளும் விபூசி பூசிக்கொண்டு தட்சிணையாக 501 ரூபாய் தட்டில் வெற்றிலை பாக்குடன் வைத்துக் கொடுத்து விட்டு டாக்ஸில் மொக்கையை உட்கார வைத்து சங்ககிரிக்கு திரும்பினார்கள்.

மறுநாள் மிரண்டு கால் நீட்டி உட்கார்ந்திருந்த மொக்கையின் சவுக்கடி வாங்கி சிவந்து போன தொடையில் வெண்ணீரால் ஒற்றி எடுத்துக்கொண்டு கூரையில் தொங்கி நின்று கொண்டு ‘’யாமிருக்க பயமேன்’’ என்று சொன்ன முருகனை மனதுக்குள் இந்த வருசம் உன் வாசலுக்கு பாதயாத்திரை வர்றேன் என்று வேண்டிக் கொண்டாள் மொடிச்சியம்மாள்.

நட்புகளே நமது நல்லரசு ஆட்சியின் மகிமையால் குடியால் இந்த நிலைக்கு வந்த மொக்கைராசு விரைவில் பூரண நலம் பெற்று குடியை மறந்து இதுவரை குழந்தைச் செல்வம் இல்லாத மொடிச்சியம்மாளுடன் 6 குழந்தைகளாவது நலமுடன் பெற்று சந்தோஷமாய் பல்லாண்டு வாழ வேண்டி நானும் எனது நண்பர்கள் திரு, பகவான்ஜி அவர்களும் திரு. வலிப்போக்கன் அவர்களும் குன்னக்குடிக்கு அன்னக்காவடி எடுப்பதாக நேர்த்திக்கடன் வைத்துள்ள எங்களை வாழ்த்துவீராக...

குறிப்பு எனது மினரல் வாட்டர் பதிவுக்கு வந்து கருத்துரையில் கொக்கி போட்டு அதன் காரணமாய் தொடராக ஒன்பது பதிவுகள் எழுதக் காரணமாய் இருந்த அன்பின் ஜி குவைத் மன்னர் திரு. துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி சொல்ல உமக்கு வார்த்தை எமக்கு என்று கூறி விடை பெறுகிறேன்.

அன்புடன் கில்லர்ஜி.

முற்றியது (மொக்கைராசுக்கு பைத்தியம் அல்ல) பதிவு.
காணொளி

54 கருத்துகள்:

  1. அது சரி...
    உசிலம்பட்டி சோசியர் சொன்னது போல சடையங்காட்டு சண்டாளிதான் பிடிச்சிருப்பாளோ...

    இனி சடையங்காடு தாண்டும் போது பார்த்துப் போகணும் போலவே...

    ஒன்பது பதிவுகளில் சிரிப்பு ரகளை வரலெட்சுமியின் ஆட்டம் போல களை கட்டியது அண்ணா...

    அருமை.. அருமை...

    ஆமா அடுத்த தொடர் எப்போது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி நண்பரே அடுத்த தொடரா....ஆஆஆஆஆஆஆஆ

      நீக்கு
  2. 3 'ஜி'களின் வேண்டுதல் நடக்கட்டும்... ஹிஹி...

    பதிலளிநீக்கு
  3. முடிவு வில்லங்கமாக இருக்கும் என நினைத்தபோது ‘முற்றியது’ என ‘சுபம்’ போட்டு முடித்துவிட்டீர்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சடையாண்டி, மொக்கைராசு, மந்தக்கட்டி போன்றவர்கள் சாதாரண மனிதர்கள் இவர்கள் Dr.K 7, Dr.6 முகம், Dr.7 மலை போன்றவர்களிடம் மோத முடியுமா ? சமூகத்தில் அதற்கு வாய்ப்பு குறைவுதானே ஆகவே இப்படி முடித்தேன்.

      நீக்கு
  4. குன்னக்குடி பக்கம் போற பஸ்ஸில்கூட ஏறுவதில்லை நான் ,இனி மேலும் அதற்கு பங்கம் வராதுன்னு நினைக்கிறேன் ,ஏன்னா ..குடிகாரன் திருந்தினதா சரித்திரம் ,பூகோளம் எதுவுமே இல்லை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உண்மைதான் குடிகாரன் முடிவு சாகும்வரை மாற்றமில்லைதான்... இருப்பினும் உங்களையும், என்னையும்விட நண்பர் வலிப்போக்கன் மிகவும் பக்தியானவர் அவருடைய நேர்த்திக் கடனாவது பலிக்கட்டும்

      நீக்கு
  5. மொக்கை ராசு அவதிப்பட்டது போதையாலா பைத்தியம் பிடித்ததாலா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நலமா ? குடியின் தொடக்கமே அவனது இந்த நிலை என்பதை தொடக்கம் முதல் சொல்லி வந்தேன் ஐயா இது முடிவு

      நீக்கு
  6. அது சரி சகோ, இது போன்ற பேர்களை எங்க கண்டுபிடிக்கிறீங்க, அய்யோ வெறும் அன்னக்காவடி மட்டுமா சாமிக்குத்தம் ஆகிடும்ல, வேற எதுவும் இல்லையா? எப்படியோ கொக்கி போட்ட குவைத் மன்னர் தப்பித்தார்.
    அருமை அருமை சகோ,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இந்த பெயருடையவர்கள் எல்லோருமே அமெரிக்காவில் வாழும் எனது நண்பர்கள் அன்னக்காவடி போதாதா ? இப்பொழுது நண்பர் வலிப்போக்கன் வந்து பதில் சொல்வார்

      நீக்கு
  7. நவரத்தின பதிவுகளுக்கு உபயம் அருளாளர் அய்யாவா?
    ஆமாம் நண்பா, அவர்தான் அருளக்கூடிய அய்யாவாயிற்றே!!!
    உ உ உ உன்னதம்.
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா அவர்தானே எப்படி இருந்த என்னை இப்படியாக்கினார்.

      நீக்கு
  8. ஏழெட்டு அடி, கொஞ்சோன்னு விபூதி, ஒரு எலுபிச்சை பழத்துக்கு 501 ஓவாவா... ரெம்ப சாஸ்தியா இருக்கே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்வது ? நண்பரே விலைவாசி ஏறிப்போச்சே அவரும் என்ன செய்வார் 2 பொண்டாட்டி 7 குழந்தைகளை காப்பாற்ற வேண்டுமே.

      நீக்கு
  9. அன்னக்காவடி மட்டும் தானோ? மொட்டை இல்லையோ?
    அதற்குள் முடிந்து விட்டதா? முற்றும் போட்டாகி விட்டதா?
    எல்லாம் கில்லர்ஜி எழுதும் தலையெழுத்துப்படிதானே? நடக்கட்டும் நடக்கட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் ? எங்களை மொட்டையடிக்க ஆசையா ?
      ஹாஹாஹா எல்லாம் எழுதியபடிதான் நடக்கும்.

      நீக்கு
  10. வணக்கம்
    ஜி

    அன்னக்காவடியா? நீங்கள்மூவரும் அன்னங்கள்தான்..ஜி. போகும் போது வைபரில் சொல்லித்து போங்கள் படமும் அனுப்பிவையுங்கள் தேவைப்படும்
    ஹி...ஹி..ஹி..த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரூபன் படத்தை வைத்து உலக அரங்கில் ஏலம் விடப்போறீங்களா ? ஹாஹாஹா

      நீக்கு
  11. தங்கள் பதிவுகளின் தலைப்புகளே தனிரகம்!

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் ஜி !

    மொக்கை ராசுவின் தொடை எப்போ சரியாகும் ஆமா அதென்ன 501 ரூபாய்க் கணக்கு 500 போதாதா ???? எனக்கு இந்தப் பூ(ச்சாண்டி)சாரிகள் மேல் நம்பிக்கை இல்லை ஜி ..அருமை ஜி
    மீண்டும் ஒரு தொடரை ஆரம்பியுங்கள் நன்றி !

    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கவிஞரே தொடைப்புண் ஆறிட Dr. 6 முகத்தைப் பார்க்க வேண்டும் அவரும் 501 ரூபாய் கேட்கலாம்

      நீக்கு
  13. ஹஹஹ்..ஃபீஸ் ரொம்ப ஓவரோ...அப்படித்தான் தெரியுது...

    அது சரி இம்புட்டும் சொல்லிப்புட்டு மற்றொரு ஜியையும்,வலிப்போக்கன் அவர்களையும் உங்களுடன் சேர்த்து நேர்த்திக்கடன் அன்னக்காவடி எடுக்கச் சொல்லிப்புட்டீங்களே. உங்கள் நேர்த்திக்கடனை ரத்து செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது...தடை!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோடிக்கணக்குல அரசியல்வாதிகள் சம்பாரிக்கிறாங்க அதை கேட்க மாட்டீங்க... பாவம் 2 பொண்டாட்டி, 7 குழந்தைகளை காப்பாற்ற மிஸ்டர். உ.உ.உ. 501 ரூபாய் வாங்கியது கண்ணை உறுத்துதோ ? 4 பேர் நல்லா இருக்க நாங்க காவடி எடுக்க நினைத்தோம் அதற்கும் தடையா ?

      நீக்கு
  14. சண்டாளி பாவம் இல்ல கமடியின் உச்சம் பேய்கள் நிலை!

    பதிலளிநீக்கு
  15. அன்புள்ள ஜி,

    தொடர் பல தகவல்களைத் சொல்லி அசத்தி விட்டீர்கடள். காணொளி பகவதி அம்மை நன்றாக இருந்தது.

    நன்றி.

    த.ம.14

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளியைக் குறித்து எழுதிய மணவையாருக்கு நன்றி

      நீக்கு
  16. அடிச்ச அடியை வெறுந் தொடையில் வாங்கிக்கிட்டு
    501 ரூபாய வெத்தலையில வெச்சுக் கொடுத்திருக்கீயளே.. மக்கா!..

    காலக் கொடுமையை எங்ஙனப் போயி சொல்லுவேங்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இன்றைய விலைவாசி ஏற்றத்தையும் மனதில் வைுங்கள்.

      நீக்கு
  17. நல்ல வேளை ஜி!..
    உசிலம்பட்டி உடுக்கைப் பூசாரி உலக நாதன் -
    உலக்கையால அடிக்காம விட்டான்!..

    ரிட்டர்ன் டிக்கெட் போட்டு ஐங்கே குவைத்துக்கு அனுப்பியிருக்கலாம்..

    வீரமாகாளி விபூதி போட்டு - குவைத் சுத்தி காட்டி -
    அபுதாபிக்கு அனுப்பி வெச்சிருப்பேன்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலக்கையடி கொடுத்தால் கொலைக் கேஸாகி விடுமே ஜி

      நீக்கு
  18. மூணுபேருமா சேர்ந்து அலகுக் காவடி எடுக்கறதாத் தானே நேர்ச்சைக் கடன்..

    இப்போ - அன்னக் காவடி அப்படிங்கிறீங்களே!..
    சாமியே.. சதாசிவம்.. தெய்வ குத்தம் ஆயிடாதா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா நேர்ச்சை தவறாகிப்போச்சோ இனி மாற்றுவழி தேடணுமே....

      நீக்கு
  19. சிரித்து ரசித்தேன்.
    த ம 15

    பதிலளிநீக்கு
  20. பயணம் தொடரட்டும் தோழர்...
    தம +

    பதிலளிநீக்கு
  21. இனிமை தொடரட்டும்....சகோ...
    (வேதாவின் வலை)

    பதிலளிநீக்கு
  22. பதிவின் எண்ட் பஞ்ச் (முற்றியது...பதிவு) கிச்சு...கிச்சு.

    பதிலளிநீக்கு
  23. தங்கள் பாணியில் மீண்டும் ஒரு கலக்கல்....ஹிஹிஹி...ரசித்தேன் சகோ.
    தம +1

    பதிலளிநீக்கு
  24. நகைச்சுவையாக அருமையாக, அங்கங்கே யோசிக்கவும் வைத்த பதிவுத் தொடர்! அருமை! நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நகைச்சுவையோடு சிந்திப்பும் சேர்ந்தால்தான் அது முழுமையான நகைச்சுவை.

      நீக்கு
  25. நல்லதொரு நகைச்சுவைத்தொடர்!. அருமையாக எழுதி முடித்திருக்கிறீங்க.! சிரிக்கவும்,சிந்திக்கவும் வைத்த பதிவு.காணொளி ஏனோ தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நன்றி காணொளி உங்களுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை.

      நீக்கு