திங்கள், பிப்ரவரி 15, 2016

என் நூல் அகம் 8


வணக்கம் நட்பூக்களே... கடந்த வருடம் கவிஞர் திரு. நா. முத்து நிலவன் அவர்கள் வீட்டில் புதுக்கோட்டை பதிவர்களை சந்தித்தேன் என்று சொன்னேன் அல்லவா ! பதிவர் கவிஞர். திருமதி. மு. கீதா அவர்கள் திரு. நகுலன் அவர்கள் எழுதிய ‘’நாய்கள்’’ என்ற நூலை அன்புடன் எனக்கு பரிசளித்தார்கள் அதனைப்பற்றிய எனது பார்வை....
1921-ல் கும்பகோணத்தில் பிறந்து திருவனந்தபுரத்தில் வாழ்ந்து தனது 86 வது வயதில் 2007-ல் இறந்த இவரின் இயற்பெயர் டி. கே. துரைசாமி.
இந்நூலின் முதல் பதிப்பு 1974-ல் வெளியாகி இருக்கின்றது அதாவது சுமார் 42 வருடங்களுக்கு முன்பு மூன்று நண்பர்களுக்குள் நடக்கும் சம்பாஷனைகளை வழி நெடுகிலும் சொல்லிச் செல்கிறார் வசனங்களைவிட வர்ணனைகளே அதிகமாக இருக்கிறது பல இடங்களிலும் மணிரத்னம் திரைப்படம் பார்ப்பது போலவே செல்கிறது ஒரு திரைப்படத்தில் திரைப்படநடிகர் கமல்ஹாசன் (நான் இப்படித்தான் சொல்வேன் சில நபர்களைப் போல ஒலக்கை நாயகென், சுப்புசாறு இந்த மா3யாக எனக்கு சொல்லத் தெரியாது காரணம் என்னைப் போலவே இவர்களும் உணவு களித்து மலம் கழிப்பவர்களே சுனாமி வரும் பொழுதோ, வெள்ளம் அடித்துச் செல்லும் பொழுதோ நாங்கள் மூவரும் ஒன்றாக நின்றால் ஹெலிகாப்டரில் ராணுவவீரர்கள் கண்டாலொழிய எங்களை வேறு யாரும் காப்பாற்ற முடியாது இதுதான் யதார்த்தமான உண்மை இதை ரசிகன் என்ற பாமரன் உணர்ந்தால் தமிழகம் மோட்சம் பெறும் மற்றபடி அவர்கள் கோடீஸ்வரர்கள் நான் அந்நிலையில் இல்லை) சொல்லும் வசனம் எனது நினைவோட்டத்தில் வந்து சென்றது அதுதான் அதைக் கண்டால் பயம், இதைக் கண்டால் பயம் ஒருக்கால் இந்நூலில் இருந்துதான் சுடப்பட்டு இருக்குமோ ? ஒரு இடத்தில் ஆசிரியர் கீழ் கண்டவாறு சொல்கிறார்.
// காப்பிக் கொட்டையைப் புதுசா வாங்கி அப்ப அப்ப வறுத்து பொடியாக்கிக் காப்பி போட்டுக் குடிச்சா அதுக்கு ஒரு தனி ருசி. ரவா உப்புமான்னா அதிலே நெய் தொங்க தொங்க இருக்கணும் அதெப் போலச் சாப்பாட்லெயும் பச்சடி கிச்சடின்னு நன்னா சாப்பிடணும். இப்படியெல்லாம் செய்தா நம்ப எழுத்துக்குக்கூட ஒரு தனி வலு வந்துடறது. நம்மைப் பாக்கறவனும் சொல்வான் இவரைப் போலவே இவர் எழுத்தும் நன்னாருக்குன்னு //
நல்ல உணவை நான் இருந்தும் இழந்து 25 வருடங்களாகிறது அவ்வப்பொழுது ஊருக்கு வரும் பொழுது மீண்டும் எனது தாயின் கையால் மட்டுமே கிடைக்கின்றது அந்த சந்தோஷம் இனியேனும் தொடர்ந்து மீண்டும் கடைசிவரை கிடைக்க முயல்கிறேன் நூலின் முடிவு வரை நாய்களுக்கும், மனிதர்களுக்கும் உள்ள தொடர் விடயங்களை சொல்லிக் கொண்டே போகிறார் ‘’சிந்தனை என்பது மனிதனுக்கு ஒரு வியாதி’’ என்றும் சொல்கிறார் நல்லதொரு நூலை பரிசு தந்த கவிஞர். திருமதி. மு. கீதா அவர்களுக்கு மீண்டும் எனது நன்றியை சொல்லி கொள்கிறேன்.

எனது முந்தைய விமர்சனங்கள் படிக்காதவர்கள் கீழே சொடுக்க...


தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

46 கருத்துகள்:

 1. நிறைய நூல் அகப் பகிர்வுகள் வரிசையாகத் தருகிறீர்கள். நகுலன் பெரிய எழுத்தாளர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். படித்ததில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அன்பால் கொடுத்த பரிசை நாம் படித்திருக்கின்றோம் என்பதை சொல்ல வேண்டுமல்லவா....

   நீக்கு
 2. த.ம
  அழகிய விமர்சனம். இறுதியில் உணவு பற்றிய கருத்து நெகிழ்ச்சி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்துரைக்கு நன்றி உள்ளதைச் சொன்னேன், உண்மையைச் சொன்னேன்.

   நீக்கு
 3. சிந்தனை ஒரு கொள்ளை வியாதி இல்லை போலிருக்கு ,ஏனென்றால் பெரும்பாலோருக்கு வருவதில்லையே:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிந்தனை தங்களுக்கு தினம் தினம் புதிதாக வருகின்றதே ஜி

   நீக்கு
 4. நல்லதொரு விமர்சனம்..

  >> நாய்களுக்கும் நமக்கும் உள்ள தொடர் விஷயம் <<

  நாய்களும் மனிதரும் வேறு வேறு அல்ல -
  99 சதவீத விஷயங்களில்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி குடந்தை சென்று மகாமகம் கண்டு நலமுடன் திரும்பிட எமது வாழ்த்துகள்.

   நீக்கு
 5. அருமையான விமரிசனம் உணவு பற்றிய கருத்து நெகிழ வைத்தது சகோ.

  பதிலளிநீக்கு
 6. நல்ல பதிவு நியாயமான பகிர்வு

  பதிலளிநீக்கு
 7. அன்புள்ள ஜி,

  நகுலனின் ’நாய்கள்’ பற்றி நல்ல அறிமுகம்.

  ‘நன்றி மறக்க நாங்கள் மனிதர்கள் அல்ல...!’

  நன்றி.

  த.ம.6

  பதிலளிநீக்கு
 8. உணவு பற்றிய செய்தி
  மனதை கனக்கச் செய்கிறது நண்பரே
  தம+1

  பதிலளிநீக்கு
 9. நல்லதொரு நூல் அறிமுகம். இவரைப் பற்றிக் கேட்டிருந்தாலும் நேரில் சந்திக்க முடியாமல் போனது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  கீதா: நகுலன் அவர்களின் எழுத்துகள் பற்றித் தெரியும் ஜி. திருவனந்தபுரத்தில் 8 வருடம் இருந்த போது இவரைச் சந்தித்திருக்கின்றேன். மார் இவானியஸ் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகவும் இருந்தார். வானொலியில் தமிழ் நிகழ்ச்சிகளில் நூல் மொழிபெயர்ப்பு செய்ய எனக்கு வாய்ப்பு வந்தது ஆனால் அப்புறம் அது நிறைவேற வில்லை. அப்போது இவரைச் சந்தித்துள்ளேன். அதிகம் பரிச்சயம் இல்லை எனினும்..

  மிக்க நன்றி கில்லர்ஜி நகுலன் பற்றிச் சொன்னதற்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தாங்கள் சொல்லும் விடயமும் நூலில் இருந்தது தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 10. நூல்அகம் தொடரட்டும் நூல்நிலையமாக அமையட்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 11. அருமை, நண்பரே! அதிலும் உலக நாயகனைப் பற்றி சொன்னது செம..!
  த ம 10

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 12. அன்பு நண்பர்களே
  நீங்களே என் நூலகம்...

  நண்பரே அருமையான பதிவு...

  பதிலளிநீக்கு
 13. நல்ல நூலினை அறிமுகம் செய்தீர்கள் நான் வாசிக்கவில்லை அடுத்த ஆண்டு பாண்டிபஜாரில் தேடுவேன் அப்போது என்னையும் பைரவர் போல பார்க்காத மட்டும் சந்தோஷம் குருவே[[[

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே வந்தாரை வாழவைக்கும் தமிழகம் தங்களையும் வரவேற்கும் வாருங்கள் நண்பா...

   நீக்கு
 14. நூல் விமர்சனத்தை தங்களது பாணியான நடையுடன் தந்தமை அருமை.

  பதிலளிநீக்கு
 15. உங்கள் பாணியில் அருமையான விமர்சனம்..!!

  பதிலளிநீக்கு
 16. படிக்க தூண்டும் விமர்சனம் ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருமிகு. அனுராதா ப்ரேம் அவர்களின் முதல் வருகையை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன்

   நீக்கு
  2. நன்றி .....பல பதிவுகளை படித்தாலும் மறு மொழி இடுவதில்லை ...

   நீக்கு
  3. கருத்துரையே அடையாளம் காட்டும் மீள் வருகைக்கு நன்றி

   நீக்கு
 17. எல்லாவற்றையும் படித்துவிடுகிறேன்..

  பதிலளிநீக்கு
 18. வணக்கம்
  ஜி
  படிக்க தூண்டும் விமர்சனம் வாழ்த்துக்கள் ஜி த.ம12
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே தங்களின் கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 19. ஆஹா...என்ன வாசிப்பு அதிகமாகிவிட்டதா ஜி.....உங்கள் விமர்சனம் அழகாகாகிக்கொண்டே போகிறது....வாழ்த்துக்கள் ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிடைத்த நூல்களை படித்துதானே ஆகவேண்டும் வருகைக்கு நன்றி கவிஞரே.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...