தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், மார்ச் 17, 2016

சத்திரக்குடி, சந்தேகப்புயல் சந்திரன்


எனக்கு நெடுங்காலமாகவே சந்தேகம்.

அதாவது திரைப்படங்களில் கோவில் திருவிழாட்களை காண்பிக்கின்றார்கள் அதில் பூ மிதித்தல் என்று சொல்லப்படும் தீ மிதி சடங்கு, சாமி அலங்காரம், பால்குடம், பால்காவடி, பறவைக் காவடி, வானவேடிக்கைகள், தேர்த்திருவிழா, கரகாட்டம், ஒயிலாட்டம், கேளிக்கை விளையாட்டுக்களுடன் எல்லாக் காரியங்களுமே தெய்வக்குறை ஏற்பட்டு விடாத வண்ணம் ஒரு தெய்வீக மணத்துடன் நடக்கிறது. எல்லாக் காரியங்களுமே தேவகோட்டையில் நடக்கும் கோவில் திருவிழாக்களையே மிஞ்சும் அளவுக்கு மிகமிகச் சரியான முறையில் எடுக்கிறார்கள் ஆனால் ? படத்தில் வரும் கசாநாயகனோ கசாநாயகியோ பூக்குழி இறங்கும்போது மட்டும்
சீரியல் செட்டில் இறங்குகிறார்களே ஏன் ?
 

அப்புறம் இன்னுமொரு சந்தேகம் ?
கசாநாயகன் மீது வேண்டாத வில்லனால் கொலைப்பழி விழுகிறது உண்மையிலேயே அவர் கொலை செய்யவில்லை இது எனக்கு மட்டுமல்ல நூறு முறைக்கு மேல் கண்ட சாட்சியான தியேட்டர் ஆப்ரேட்டருக்கும் தெரியும் ஆனால் காவல் துறையினர் சாட்சிகளை ஆதாரமாய் வைத்து அவரை கைது செய்கிறார்கள் நமது கசாநாயகன்தான் வீரன் வீரபத்ரனாயிற்றே காவல் துறையினரை ஏமாற்றி விட்டு தப்பித்து வந்து வில்லன் வகையறாக்களை தேடிவந்து அடித்து நொறுக்கி உண்மையான உண்மையை நீதி மன்றத்தில் வில்லன் வாயிலாக நிரூபிக்கிறார் நமது நீதிப்பேரரசு நீலகண்டனும் அவரை நிரபராதி என்று விடுவிக்கிறார்.


எமது சந்தேகத்தின் மையமே இனிமேல்தான்.

அதாவது தப்பித்து வந்த கசாநாயகன் தான் நிரபராதி என்பதை நிரூபிப்பதற்குள் வில்லனுக்குச் சொந்தமான 2 பெட்ரோல் பங்க்கள், 5 LAND CRUISERS, 8 YAMAHA ,  6 BAJAJ PULSAR பைக்குகள், ஒரு மினி லாரி, 3 மாட்டு வண்டிகள், 6 மாடுகள், ஒரு ஓட்டு வீடு, அந்த வீட்டிற்குள் ஒரு வயதான பாட்டி, ஒரு நாய், 2 பூனைகள், 18 ஆடுகள் இத்தனையையும் கொஞ்சம்கூட ஈவு இரக்கமில்லாமல் டைம்பாம் வீசிவெடித்துச் சிதற விடுவதோடு, 28 அடியாட்களை கைத் துப்பாக்கியால் சுட்டும், டைம்பாம் வீசியும் கொன்று விட்டு வில்லு வண்டியில் குதிரைக்கு கொள்ளு வாங்க ஏர்வாடியிலிருந்து பக்கத்திலுள்ள முள்ளுவாடிக்கு குதிரையோடு போய்க் கொண்டிருந்த வில்லனை விரட்டிப் போய் பிடித்து மிகமிகக் கொடூரமாக மூஞ்சியில் அடித்து காயப்படுத்தி அந்தக் குதிரையிலேயே கட்டி கீழக்கரை காவல் நிலையம் வழியாக ராமநாதபுரம் நீதி மன்றத்திற்கு இழுத்து வருகிறார் இத்தனை குற்றங்களுக்கும் தண்டனை கிடையாதா ? இதுதான் எமது சந்தேகம்.


சாம்பசிவம்-
ஏலே இந்த மாதிரி தீர்ப்பு சொல்ற ஆளுக்கு யாருலே ‘’நீதிப்பேரரசு’’ பட்டம் கொடுத்தது ?

குறிப்பு - சந்தேகங்கள் இனியும் தொடரும். 

46 கருத்துகள்:

  1. இது மாதிரி ஏராளமான சந்தேகம் இன்னும் இருக்கே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறிப்பு கொடுத்து இருக்கின்றேன் நண்பரே இன்னும் வரும்....

      நீக்கு
  2. ஆமாங்க.. சாமியோவ்!..

    நமக்கும் அந்தாக்கில ஏகப்பட்ட சந்தேகமுங்க..

    அந்த பெரிய மீசக்காரன்(!)ஆனையாம்பட்டி அழகு (?)சுந்தரியோட கையத் தொட்டாங்கிறதுக்கா அவனைப் போட்டு அந்தப் புரட்டு புரட்டி எடுத்துட்டு -

    இந்தக் கசாநாயகேங் அடுத்த சீன்லய - அதே அழகு சுந்தரியோட கன்னம் கழுத்து அங்கே இங்கேன்னு தொட்டுத் தடவிக்கிட்டு பாட்டு பாடறான்னா -

    எந்த ஊரு நியாயமுங்கோ இது?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் தமிழ் நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்ட நியாயம்தான் ஜி
      ஒரு அடிக்கு 10 நபர்கள் பறப்பதை ரசித்து கைதட்டும் பாமரன் உள்ளவரை இப்படித்தான்...

      நீக்கு
  3. பதில்கள்
    1. முதலில் வந்த நண்பர் ஸ்ரீராம் அவர்கள் என்ன சொல்லி இருக்கின்றார் என்பதை பாருங்கள் ஜி

      நீக்கு
  4. கில்லர்ஜி அவர்களே!

    Eyebrow pencil இல் மீசை போட்ட வயதான கதாநாயகர்கள்;

    இரட்டை வேடங்களில் கெட்ட எம்ஜிஆர், நல்ல எம்ஜிஆர் யார் என்று படத்தைப் பார்க்கும் சின்ன பிள்ளைகள் கூட சொல்லி விடுவார்கள்; ஆனால் வில்லன் நம்பியாருக்கு மட்டும் தெரியாது;

    தில்லு முல்லு படத்தில் இரட்டைவேடத்தில் ரஜினி சொல்லும் ஒரு வசனம். ’மீசை வச்சு இருந்தால் சந்திரன்; மீசை இல்லாமல் இருந்தால் இந்திரன்.” - ஆனால் ரஜினியின் காதலி மாதவியின் அப்பா தேங்காய் சினிவாசனால் மட்டும் கண்டு பிடிக்கவே முடியாது;

    எம்ஜிஆர், செந்தில், கவுண்டமணி, சத்யராஜ் இவர்கள் விக் வைக்காமல் நடித்து இருந்தால் சினிமாவுலகில் என்ன நடந்து இருக்கும்?

    நமது ஏழை கதாநாயகன் கார், டிராக்டர், போட், கப்பல், பிளேன், ஹெலிகாப்டர் எல்லாம் ஓட்டுவதற்கு எப்போது, எப்படி கற்றுக் கொண்டார்?

    என்றெல்லாம் நமது தமிழ் சினிமாவில் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டு இருக்க முடியாது. இவை எல்லாம் சினிமாத்தனம் என்று தெரிந்து இருந்தும் இதையே ஒரு சுவாரஸ்யமான பதிவாக்கும் திறமை உங்களுக்கு அன்றி வேறு யாருக்கு வரும். பதிவை ரசித்தேன். பாராட்டுக்கள்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எல்லாமே விரிவாக சொல்லி விட்டீர்கள் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை முடிவில் பாராட்டையும் சொல்லி விட்டீர்கள் நன்றி

      நீக்கு
  5. பேரு வச்சவன் கணடிப்பா...ஒரு மாங்கா... மடையனாத்தான் இருப்பான் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே நீதிபதி நீல'ம'ண்டனுக்குத்தானே ?

      நீக்கு
  6. கசா நாயகியோட தாவணிய (!) அந்த பெரிய மீசைக்காரன் தொட்டதுமே - அடி உதை வெட்டு குத்து!..

    ஆனா -

    அதே தாவணிய - கசா நாயகன் தொட்டதும் - இடி மின்னல்,மழை சாரல், ஈரச் சேலை - காதல் பாட்டு!...

    அதெப்படிங்க வாத்யாரே!.. ஒன்னுமே புரியலையே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இதில பாருங்க... ஜி கரும்பையும் கொடுத்து கூலியும் கொடுக்கிறாங்கே... இதற்கு காரணம் யாரு ? ரசிகர் மன்றத்து கூமுட்டைகள்தானே..

      நீக்கு
  7. இப்படியே போனால் நீங்க யாரு, உசிரோட இருக்கேனா இல்லே செத்துப்போய் ஆவியா இருக்கேனா, நான் கில்லர்ஜியா இல்லே வேறு யாரச்சும் இப்படி வேசம் கட்டியிருக்காங்களா அப்படீன்னு நெறய சந்தேகங்கள் ஏற்பட்டு அப்புறம் கீழ்ப்பாக்கம் போய்ச் சேருவது உறுதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா அங்கே போயிட்டு வந்தவுடன் நிறைய அனுபவங்கள் கிடைக்கும் அதை வச்சு நிறைய நகைச்சுவை பதிவுகள் போடவாமே....

      நீக்கு
  8. இப்படியெல்லாம் சந்தேகம் வருவதால் ,நான் படம் பார்ப்பதேயில்லை :)

    பதிலளிநீக்கு
  9. இன்னும் நிறைய சந்தேகங்கள் வரும் போல இருக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ இதற்க்காகத்தான் சினிமா பார்ப்பதை நிறுத்தியே 20 வருடங்களுக்கும் மேலாகி விட்டது

      நீக்கு
  10. வணக்கம்
    ஜி
    சந்தேசம் நிறையவே உள்ளது.தங்களின் சந்தேகமே எனக்கும் நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரூபன் இன்னும் சந்தேகம் இருக்கு வரும் இப்பத்தானே தொடங்கி இருக்கேன்.

      நீக்கு
  11. ஆஹா நண்பரே
    பயங்கரமான சந்தேமா இருக்கே....
    அந்த சந்தேக புயல்
    தாங்கள் தானோ...
    எனக்கும் பல சந்தேகங்கள்
    இருக்கு நட்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இல்லை நண்பரே அது சத்திரக்குடி சந்திரன்

      நீக்கு
  12. ஜி! இப்படி நிறைய இருக்கின்றன. எல்லோருக்குமே இது தெரியும். தெரியாமல் இல்லை. ஆனால் இவை சினிமாத்தனம் என்பது எல்லோருக்கும் தெரியும். 2 1/2 மணி நேரக்காட்சி. பொழுதுபோக்கு அவ்வளவே. சினிமாத்தனத்திற்கு நீதி அரசர் தேவையில்லை. அதை விட்டுத் தள்ளுங்கள். அதில் நீதி இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன...தீ மிதித்தால் என்ன மிதிக்கலைனா என்ன

    இதோ இதற்கு என்ன பதில் நம்மிடம்??
    நேரிலேயே பட்டபகலில் உடுமலைப்பேட்டைக் கௌரவக் கொலைகள் போல் எத்தனைக் கௌரவக் கொலைகள், எத்தனைக் கொலைகள், கற்பழிப்புகள், பழிகள், நிரபராதிகள் ஜெயிலிலும், கொலையாளிகள் வெளியிலும்....இதற்கெல்லாம் நிஜமாகவே சரியான நீதி வழங்கப்படுகிறதா? கண் முன்னே இத்தனை நடப்பதற்கும் நம்மால் எதுவும் செய்ய முடியாத போது, யாரிடமும் கேள்விகள் கேட்க முடியாத போது, சினிமாவில் நடப்பதற்கு எதற்கு ஜி?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக இத்தனைக் கொலைகளுக்கும் முன்னோடி இந்த திரைப்படங்களை நமது சமூகம் பொழுது போக்காக நினைத்திருந்தால் அதன் வழியே நமக்கு நல்ல சிந்தனைகள் கிடைத்து இருக்கும் என்பதையும் நான் சொல்வேன்

      நமக்கு எதையும் அறிவுப்பூர்வமாக சிந்திக்கும் திறன் இல்லாமல் கூத்தாடிகளை ஆட்சியில் அமர்த்தினோம் இது இன்னும் தொடரும் காரணம் திரைப்படங்களில் மனிதன் மூழ்கி நடை பிணமாகி விட்டான் தமிழனுக்கு சுயசிந்தனை வரவதில்லை வரும்போதுதான் இதையும் நிறுத்த முடியும்.

      நீக்கு
    2. ஜி சினிமாவோ, இல்லை எந்த ஊடகமோ, இல்லை நம் அறிவுரைகளோ யாரையும் திருத்த முடியாது ஜி. சினிமாவினால் கெடுகிறது என்பது சிறிதுதான். வீட்டில் வளர்ப்பு முறையும், சூழலும்தான், பெற்றோர் சரியில்லாமைதான், சுய சிந்தனை இல்லாததுதான் பல சமூகச் சீரழிவுகளுக்குக் காரணம்

      நீக்கு
    3. உண்மைதான் மீண்டு எழ வேண்டும் என்ற சிந்தை யாருக்கும் வருவதில்லையே....

      நீக்கு
  13. எந்த விஷயத்தையும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் . அதில் நீங்கள் என் கட்சி. இருந்தால்தானே விமரிசிக்க முடியும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
  14. கில்லர்ஜியின் சந்தேகங்கள் தொடரட்டும்.
    த ம 10

    பதிலளிநீக்கு
  15. ஆராய்ச்சியில் இறங்கினால் இன்னும் நிறைய ஆராயலாம் அண்ணா..

    பதிலளிநீக்கு
  16. நிஜத்தில் நடக்க முடியாத ஒன்றை கற்பனையாக வாழ்ந்து காட்டுவது தானே பெரும்பாலான சினிமா?

    நான் சினிமா பார்ப்பதில்லை என்பதனால் எந்த சந்தேகமும் எனக்கு வரவில்லை! நீங்களும் பார்க்காமல் விட்டால் சந்தேகம் வரவே வராது என தீர்ப்பு சொல்லி விட்டேன்! கேட்டுக்கொல்ல்ல்ல்ல்ல்ல்லுங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் தீர்ப்பு சொல்லிட்டீங்களா ? நீலகண்டன் சொந்தக்காரரோ...

      நீக்கு
  17. சந்தேகங்களை அதிகப்படுத்தி சங்கடங்கள் உண்டாக்கவேண்டாம். சரிசரி என்று கூறிவிட்டுச் செல்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே எல்லாமே தெரிந்த விடயம்தானே நகைச்சுவைக்காகத்தான் எழுதினேன் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  18. ஒவ்வொரு சந்தேகமும் ஒரு பதிவாக மாறுகிறது
    அருமை நண்பரே
    சந்தேகங்கள் தொடரட்டும் பதிவுகள் தொடரட்டும்
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மையிலேயே நிறைய இருக்கின்றது.

      நீக்கு
  19. சந்தேகம் தீராத வியாதி.அது இருக்கும்வரை இந்த மாதிரி சந்தேகங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும். எனவே தங்களின் சந்தேகங்களுக்கு விடை தேடவேண்டாம்.

    பதிவை இரசித்தேன்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கண்டிப்பாக விடை கிடைக்காது பதிவை ரசித்தீர்களே அதுவே எமது குறிக்கோள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  20. நண்பர் நடனசாப பதிலே என் பதிலாகும்

    பதிலளிநீக்கு
  21. சினிமாவை பொழுதுபோக்கு என்ற நிலையில் இருந்து வாழ்வியல் என்ற நிலைக்கு உயர்த்திக் கொண்டதால் வந்த விளைவுகள். திரையில எம்.ஜி.ஆர். கத்தியைத் தவற விட்டதற்காக தன் கையில் இருந்த அருவாளை திரையை நோக்கி விட்டெறிஞ்ச பயலுக தானே நம்ம பயலுக! இன்னும் வரும் என்பதாய் சொல்லி இருக்கும் உங்களின் சந்தேகங்களுக்காக காத்திருக்கிறோம் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு