தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஏப்ரல் 05, 2016

மலச்சாணி


இந்த உறக்கம் திரு. அம்பானி அவர்களுக்கு கிடைக்குமா ?

மலத்திற்கும் சாணிக்கும் இறைவன் கொடுத்த வித்தியாசம் என்ன ? மனிதனோ, மிருகமோ எவை மாமிசம் உண்கின்றதோ ? அவைகள் கழிப்பது மலமாகும் தாவரங்களை உண்பவை கழிப்பது சாணியாகும் ஆகவேதான் சாணி வகைகளை அதாவது யானை, மாடு, ஆடு, ஒட்டகம் போன்றவைகளின் கழிவுகளை மனிதன் கையால் எடுக்கிறான் இதில் யானையின் சாணியை மிதித்தால் அறிவு வளரும் என்று சொல்கிறார்கள்.

இது உண்மையா ? என்று தெரிந்து கொள்ள இந்தியாவுக்கு வந்த பொழுது யானையின் சாணியை எடுத்துக் கொண்டு ஒரு ஐந்து கிலோ இருக்கும், தேவகோட்டையில் ஒரு பிரபலமான லேப்புக்கு போனேன் ஒரு மாதிரியாக பார்த்தார்கள் ஆனால் ஒன்றும் சொல்லவில்லை வேறு லேப்புக்கு போனேன் எல்லா லேப்பிலுமே ஒரே மாதிரியாக பார்க்கவும் சரியென அபுதாபியில் போய் பார்த்துக் கொள்வோம் என்று அந்த முயற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளேன்.

ஜந்துக்கள் வகைகளில் எறும்புகள்கூட மாமிசம் உண்பவையே... மனிதனின் பின்புறக் காற்று நாறுவதற்கும் காரணம் மாமிசமே... நையாண்டிக்காரர்களுக்கு அப்படியானால் ஒரு சமூகத்தினர் மாமிசம் களிப்பதில்லையே அது எப்படியென ? கேட்டு விடாதீர்கள் அதுவும் இன்றைய மாமிச உணவுகள் என்றைய உணவு எனத்தேடும் நிலைக்கு வந்து விட்டோம் அதேநேரம் இன்று தாவரவகை உணவுகளிலும் கலப்படம் கலந்து விட்டது மண்ணை உரம் போட்டு அதனை கொன்று விட்டோம்

 இனி என்ன செய்வது ?

விவசாய பூமியை சுமார் பத்தடிக்கு மண்ணைத் தோண்டி கடலில் போட்டு விட்டு விவசாயத்தை தொடரலாம் என்றால் அதையும் ஃபிளாட் போட்டு விற்று விட்டார்கள், செல்வந்தர்களும் வாங்கி நான் சொன்னபடியே பத்தடி தோண்டி கார் பார்க்கிங் போட்டு மேலே காம்ப்ளக்ஸ் கட்டி விட்டார்கள், சரி ஜப்பான் நாட்டவரைப்போல் கப்பலில் விவசாயம் செய்யலாம் என்றால் ? யெமன் நாட்டு கடல் கொள்ளைக்காரர்கள் கப்பலையே கடத்திப் போய் விடுகிறார்கள் .

இனி என்னதான் செய்வது ? சொல்லுங்கள் நட்புகளே....

54 கருத்துகள்:

  1. மலம் சொல்லி வலம் வந்து
    பலமான அறிவு உயர - ஆனை
    சாணி மிதித்து வாவென - தங்கள்
    பாணியில் சொன்னதே தனி அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கவிதை அழகு வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. நம் நாட்டில் வேளாண்மை செய்ய, வேண்டிய நிலங்கள் இருக்கும்போது கடலிலும் கப்பலிலும் வேளாண்மை செய்யவேண்டியதில்லையே. பின் ஏன் உங்களுக்கு இந்த கவலை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விவசாய நிலத்தைத்தான் மனிதன் கூறு போட்டு கூவி விற்று விட்டானே...

      நீக்கு
  3. யாணை சாணியை எல்லோருக்கும் (தமிழ் நாட்டில்) இலவசமாக (?​) வாங்கிக்கொடுத்து மிதிக்கச் சொல்லலாம்! அப்போது அறிவு வ்ரும். இந்த பிரச்னைகளிலிருந்து விடுபட புதியதாய் சிந்தித்து செயல் படலாம். இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் திரு. பழனி வேலு அவர்களின் முதல் வருகைக்கு நன்றி தங்களின் கருத்தை அரசியல்வாதிகள் கண்டால் தேர்தல் இலவசமாக கொடுத்து ஓட்டு வாங்கி விடுவார்களே...

      நீக்கு
  4. யானை சாணி மிதித்தால் அறிவு வளருமா? அட, சுலப வழியாய் இருக்கிறதே...!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே நாம்தான் அவசியமில்லாமல் செலவு செய்து ஐ.ஏ.எஸ் வரை படிக்கின்றோம் தேவையா ?

      நீக்கு
  5. பாம்பு நாகரத்தினக் கல்லை கக்குமாம்,சாணியை தயாராய் வைத்துக் கொள்ளுங்கள் :)

    பதிலளிநீக்கு
  6. ஆமாம் ஜி பல நேரங்களில் சாணி கிடைக்காமல் அவஸ்தைபட்டு இருக்கின்றேன் சாணி கிடைத்தபோது பாம்பு கிடைக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  7. எங்கள் ஊரில் கூட தேரோட்டத் திருவிழாவுக்கு வரும் யானை ஊர்வலம் வரும். வரும் போது சாணி போட்டால் அதில் எங்களை துள்ளிக் குதித்து மித்திக்கச் சொல்வார்கள். அப்போது ஜாலியாகக் குதித்தது உண்டு. ம்ம்ம் மற்றொன்று...பின்புறக் காற்று மாமிசம் உண்பவர்களுக்கு மட்டும் நாறுவதில்லை ஜி. மாமிசம் உண்ணாதவர்களுக்கும் அவர்கள் வெங்காயம் பூண்டு, மசாலா உண்பவர்களாக இருந்தால் நாறும். அதுவும் சாப்பிடாதவர்களுக்கும் நாறும். உணவில் உளுந்து, கொண்டைக்கடலை, காராமணிப்பயறு சேர்த்துக் கொண்டால்!!!!

    அப்போ...கில்லர்ஜி ஒரு கோடி (போதுமா?) யானைகள் பார்சல்!!! எதற்கா? எல்லாம் மே 16 வருதுல்ல...நம்ம மக்களுக்கு வாங்கிக் கொடுத்தால், அப்படியாவது அறிவு வளருதானு பார்ப்பமேனுதான்....ஹிஹி யானை வாங்கினா தொரட்டி வேற வாங்கணுமோ...ம்ம்ம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யானையை விரட்டி விட்டு விளையாண்டது அதெல்லாம் ஒரு கனாக்காலம்

      நான் ஏற்கனவே பதிவில் சொல்லி விட்டேன் நையாண்டிக்காரர்களுக்கு.... என்று வில்லங்கத்தார்களுக்கு என்று சொல்லி இருக்க வேண்டும்

      நீக்கு
  8. இனி என்னதான் செய்வது... வெயில் மண்டையைப் பிளப்பதால் என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை..நண்பரே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா யானையின் சாணியை மிதித்தால் குளிர்ச்சி நண்பரே...

      நீக்கு
    2. யாணையின் சாணியை மிதித்தால் காலுக்குத்தானே குளிர்ச்சி..மண்டைக்கு அல்லவே.. ஒருவேல....யாணையை மித்தால்....???

      நீக்கு
    3. ஹாஹாஹா யானையை மிதிக்க நமக்கு பலம் இல்லையே நண்பரே

      நீக்கு
  9. இது உண்மையா ? என்று தெரிந்து கொள்ள இந்தியாவுக்கு வந்த பொழுது யானையின் சாணியை எடுத்துக்கொண்டு ஒரு 5 கிலோ இருக்கும் தேவகோட்டையில் ஒரு பிரபலமான லேப்புக்கு போனேன் ஒரு மாதிரியாக பார்த்தார்கள் ஆனால் ஒன்றும் சொல்லவில்லை வேறு லேப்புக்கு போனேன் எல்லா லேப்பிலுமே ஒரே மாதிரியாக பார்க்கவும் சரியென அபுதாபியில் போய் பார்த்துக்கொள்வோம் என்று அந்த முயற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளேன்.


    இது சரியான காமெடி நண்பரே...


    எங்கள் ஊரில் கோவில் ஊர்வலங்களில்
    யானைகள் வரும் என்றால்
    எப்படா யானை சாணி போடும்
    என்று சிறுவர்கள் சாணி மிதிக்க
    தயாராக நிற்பார்கள்......
    யானைச் சாணி அறிவு வளர்க்குமா
    என்று தெரியாது....
    ஆனால் அதை மிதித்தால்
    அறிவியல் ரீதியாக உடலுக்கு நல்லது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே உடலுக்கு நன்மை என்பதற்காகத்தான் அறிவு வளரும் என்று சிறியவர்களை பெரியவர்கள் ஏமாற்றி செய்ய வைத்தார்கள் காரணம் படிப்பு குழந்தைகளுக்கு பாகற்காய் மாதிரி சுலபமாக அறிவு வளருமே என்று நம்பி சிறுவர்களும் மிதித்தார்கள்.

      நீக்கு
  10. குழந்தைகள் யானைப் பிண்டியை ( கவனிக்கவும் சாணி என்று சொல்ல வில்லை )மிதிப்பது அறிவு வளரும் என்பதால் அல்ல அறியாப்பருவத்தில் கிடைக்கும் ஒரு கிளர்ச்சிக்காகவே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
  11. புகைப்படம் அருமை
    மெத்தையில் படுத்தும் தூக்கம் வராது
    அவதிப்படுபவர்கள் இதைப் பார்த்தால்
    நொந்தே செத்துவிடுவார்கள்
    பதிவு மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே உண்மையான வார்த்தை சொன்னீர்கள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  12. கிராமங்களில் கோவில் திருவிழாக்களில் யானை ஊர்வலம் வரும் போது போடும் சாணியை சிறுவர்கள் மிதித்து விளையாடுவார்கள். ஆனால் இப்போ யானை சாணியை மிதித்து எல்லோரும் அறிவை வளர்த்து கொள்ளலாம் போல ! நகைச்சுவை கலந்தும் இருக்கு சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
  13. த.ம 6

    யானை சாணியை மிதித்தால் நல்லதுன்னு சிறுவயதில் கேட்டு இருக்கிறேன். யானை காலடியில் நிம்மதியாக தூங்குகிறார். நல்ல தூக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ நானும் அதை நம்பித்தான் 5 கிலோ சாணியை தூக்கி கிட்டு அலைஞ்சேன்.

      நீக்கு
  14. நண்பரே! யானையின் சாணத்தை மிதித்தாலே நமக்கு அறிவு வளரும் என்றால், அந்தச் சாணியைப் போடும் யானைக்கு எவ்வளவு அறிவு இருக்க வேண்டும்? இருக்கிறதா? அவ்வளவு பெரிய உயிரினம் நம்மிடம் அடிமையாய் வேலை செய்கிறதே! இதிலிருந்தே இது மூட நம்பிக்கை எனப் புரிகிறது இல்லையா?

    எது எப்படியோ! நீங்கள் அப்படி 5 கிலோ சாணியைத் தூக்கிக் கொண்டு அலைந்திருக்கவெல்லாம் மாட்டீர்கள். விளையாட்டுக்குச் சொல்கிறீர்கள் என்றே நான் நம்புகிறேன். காரணம், நீங்கள் மூட நம்பிக்கையாளர் இல்லை என நான் அறிவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் விரிவான கருத்துரைக்கும் எம்மை சரியான கோணத்தில் புரிந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  15. தோழர்
    அருமை
    தொடர்க
    தம
    ஹை செவென்

    பதிலளிநீக்கு
  16. மலம், சாணி இரண்டினுக்கும் தங்கள் பாணியில் நகைச்சுவை மிளிர ஒரு அருமையான விளக்கம்.

    பொதுவாக ( உண்ணும் முறையானது, சைவம், அசைவம் எதுவாக இருந்தாலும்) மனிதனின் கழிவு மலம் எனப்படும்.; அதேபோல விலங்குகளின் கழிவு சாணி எனப்படும்.

    சின்ன வயதில் நானும் பிள்ளைகளோடு பிள்ளைகளாய் யானைச் சாணியை கால்களில் அதிக நேரம் மிதித்ததுண்டு. அறிவு வளர இல்லை; உடம்பில் பித்தம் இருந்தால் குறையும் என்ற பெரியவர்களின் நம்பிக்கைதான். யானைச்சாணி என்பதை விட, யானை லத்தி என்று சொல்வதுதான், பேசும் வழக்கில் அதிகம் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் தெளிவாகச் சொல்வதானால், ஆட்டுச் சாணம், மாட்டுச் சாணம், குதிரைச் சாணம், யானைச் சாணம் என்றுதான் எழுதுகிறோம்.

      நீக்கு
    2. வருக நண்பரே நல்லதொரு விளக்கம் லத்தி என்ற வார்த்தைகளை நானும் கேட்டு இருக்கின்றேன் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  17. பொதுவாக இயற்கை உணவை பழங்கள், காய்கள் போன்றவற்றை அப்படியே பறித்து எந்த மாற்றமும் செய்யாமல் உண்டுவந்தால், மனிதன் பல் விளக்கத் தேவையில்லை. ஏனென்றால் வாய் துர்நாற்றம் வராது. குளிக்க தேவையில்லை, ஏனென்றால் வியர்வையில் நாற்றம் இருக்காது. மலம் மற்றும் பின்புறக் காற்றிலும் நாற்றம் இருக்காது. இது இயற்கையின் விதி. ஆனால், நாம் இயற்கையாக எதையுமே உண்ணுவதில்லை. எல்லாவற்றையும் அடுப்பில் வைத்து சமைத்து விடுகிறோம். இயற்கைக்கு விரோதமாக நடப்பதால் கிடைக்கும் தண்டனைதான் இந்த நாற்றமேல்லாம். மற்றபடி சைவம் அசைவம் என்பதெல்லாம் கிடையாது.
    நல்ல பதிவு நண்பரே!
    த ம 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இயற்கையான இயல்பான விடயங்களை விளக்கிய விதம் அருமை வருகைக்கு நன்றி.

      நீக்கு
  18. இன்று விடியற்காலையில் – சுழி மாறிப் போகும் காற்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன்..

    காலையில் வந்து பார்த்தால் - ???...

    ஆச்சர்யம்!..

    யானைச் சாணியையும் பதிவு செய்து பெருமைப்படுத்திய சிறப்பு தங்களையே சேர்கின்றது..

    மற்றபடி -

    ஆடு - அதன் வகையறாக்களின் கழிவு புழுக்கை..
    மாடு - அதன் வகையறாக்களின் கழிவு சாணி..
    யானை - அதன் கழிவு லத்தி..
    குதிரை - அதன் வகையறாக்களின் கழிவு விட்டை..
    நாய் பன்றி அதன் வகையறாக்களின் கழிவு –
    தற்கால மக்களின் வழக்கத்தில் உள்ள சொல்..
    அனைத்துப் பறவை வகையறாக்களின் கழிவு எச்சம்..

    அதெல்லாம் சரி.. சிங்கம் புலி கரடி வகையறாக்களின் கழிவு ???
    அதுங்க கிட்ட கேட்டுத் தான் சொல்லணும்!..

    மனிதனின் உச்சகட்ட புற அழுக்கு மலம்..
    இந்த வார்த்தை சமஸ்க்ருதம்..

    பின்புறக் காற்றின் பெயர் அபான வாயு..
    பிராண வாயு நுரையீரலை விட்டு நிரந்தரமாக வெளியேறும் சமயத்தில் – இதுவும் பெருங்குடலை விட்டு வெளியேறும்..

    இன்னும் நிறையவே சொல்லலாம்..

    பதிலளிநீக்கு
  19. மறந்தே போனேன்..

    யானைச் சாணியை மிதித்தால் பித்த வெடிப்பு குணமாகி விடும்..

    மறுபடியும் வராது..

    அதற்காக - யானைகளை வைத்து சாணி விநியோகம் செய்யலாம் என்று நினைத்தால் எவனாவது வந்து -

    யானைகளைக் கொடுமை செய்வதாக தடை வாங்கி விடக்கூடும்..

    அப்புறம் யானை சாணி போடாமலே போய்விடும்..

    ஏதேது - உங்கள் பதிவைப் படிக்க வந்தால் புதிதாக ஒரு பதிவு போடும்படியாக ஆகிவிடும் போலிருக்கிறதே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின்ஜி தங்களிடமிருந்து இதனைக் குறித்து விரிவான கருத்துரை வரும் என்று கணித்திருந்தேன் அது வீணாகவில்லை உண்மையிலேயே நீங்கள் சொல்லும் விடயங்கள் மனிதர்களுக்கு தெரிந்தால் யானையை வாழ விடமாட்டார்கள் அருமையாக சொன்னீர்கள்.

      நீக்கு
  20. யானை சாணியை மிதித்தால் குதிங்கால் வலி போகும் என்பார்கள். அதுவும் யானை சாணி போட்ட உடனே மிதிக்க வேண்டும் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.

    தரிசு நிலங்களை ஒன்றுபடுத்தி கூட்டுபண்ணை விவசாயம் செய்தாலே போதும். விளைநிலங்களை துண்டு செய்து விற்க கூடாது என்று சட்டம் போடலாம். நம்மாழ்வார் பிறந்தநாள் நேற்றோ, இன்றோ! மறந்து விட்டது. அவர் போல் நாட்டுக்கு நன்மை செய்யும் விஷயத்தைப்பற்றி சிந்திதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நல்லதொரு மனிதரைப்பற்றி குறிப்பிட்டமைக்கு நன்றி இந்த சமூகம் அவரைப் போன்ற மனிதர்களை மறந்து விடுவது வேதனையான விடயம் திரு. காமராஜர் அவர்களை தோற்கடித்தது, திரு. கக்கனின் மகன் இன்றுவரை குணமடைந்தும் மனநல மருத்துவமனையில் வைத்திருக்கின்றது அதை தட்டிக் கேட்க நாதியில்லை சிம்புவை கைது செய்யக்கூடாது என்று மாணவர்கள் தீக்குளிப்பு மானமுள்ளவர்களுக்கு கேவலமாக இருக்கின்றது இவர்களுக்கு தலையின் மூலையோரம் மூளை என்று ஒன்று இருக்கின்றதா ? தெரியவில்லை வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  21. குதிகால் வலி போகும் என்பது கேள்வி,, அதுவும் அது சூடா இருக்கும் போதே மிதிக்கனும்,,
    சாணிக்கு ஒரு அக்கப்போரா,,
    நல்லா இருக்கு சகோ,, அந்த 5 கிலோ சாணி என்னாயிற்று????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நலம்தானே... 5 கிலோவும் காய வைத்து எரு ராட்டியாக்கி சந்தையில் கொண்டு போய் விற்று விட்டேன்.

      நீக்கு
  22. சிந்திக்க வேண்டியகால கட்டம்))யானைச்சாணி மிதித்தால் அறிவு வருமா??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சிந்தித்தால் சிரிப்பு வரும்....

      நீக்கு
  23. இராஜாக்கள் எல்லாம் நிறைய யானை இதற்காகத் தான் வைத்திருந்தார்களா?

    சே.... கில்லர்ஜி அப்பவே பதிவிட்டிருந்தா பின்னாடி வந்து ஆட்சி செய்திருக்கிறவங்களுக்கும் உபயோகமான டிப்ஸ்ஸா இருந்திருக்கும்....

    கில்லர்ஜி நவ் டேக் ஆன் டூ 19 வது செஞ்சுரி இயர்ஸ்.....

    அடுத்த பதிவு வரும் வரை காத்திருக்கின்றேன் நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ரொம்பவே லேட்தான் கணினியைக் கண்டு பிடித்தது

      நீக்கு
  24. யானை பார்க்கச் செல்வதை விட அது போடும் விட்டையை மிதித்துப் பார்த்த சந்தோசத்தை தெருவெல்லாம் சொல்லித் திரிய அலைந்த பால்ய பருவத்திற்கு சென்று வர வைத்தமைக்கு நன்றி ஜி. நீங்கள் யானை சாணியை லேபுக்கு எடுத்துச் சென்றதையும், அங்கிருந்தவர் உங்களைப் பார்த்தையும் எழுதி இருந்ததை வாசித்த போது ஒரு பாகிஸ்தானி தன் சாணியை டப்பாவில் அள்ளிக் கொண்டு லேபுக்கு சோதனைக்குக் கொடுக்க வந்ததையும், அதைக் கண்டதும் அங்கு பணியில் இருந்த நண்பர் துரை அவர்களின் முகபாவனையும் நினைவுக்கு வந்து போகிறது, நான் அல்லைனில் வேலை பார்த்த போது நிகழ்ந்த சம்பவம் இது. பின்னாளில் வடிவேல் படத்தில் இது காட்சியாக வந்தது.
    மண்ணை மலடாக்கி விட்டதை பற்றிச் சொல்லி இருக்கிறீர்கள், இப்போது கூட இதில் கவனம் செலுத்த மறந்தோமானால் எதிர்காலத்தில் மலட்டு மரங்கள் போல மனிதர்களும் செயற்கை உரங்களால் மலட்டுத் தன்மை உடையவர்களாக ஆகிவிடுவது திண்ணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தாங்கள் சொல்வது இப்பொழுது நடைமுறைக்கு வந்து விட்டதே.... விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  25. ஹிஹிஹிஹிஹி, நகைச்சுவையாக ஆரம்பிச்சுக் கடைசியில் தீவிர சிந்தனையில் ஆழ்த்தி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுதானே நம்ம வேலையே... வருகைக்கு நன்றி சகோ

      நீக்கு