தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஏப்ரல் 08, 2016

ஊடகழியா ? மள்ளாங்கியா ?

பதிவை நீட்டிச் செல்ல 'கரு' தந்த நண்பர் திரு. வே. நடனசபாபதி அவர்களுக்கும்......

இந்தப்பதிவின் தொடக்க பதிவுகள் அறிய கீழே சொடுக்குக....

ஆட்டோவை நிறுத்தச் சொன்னதும்
ஆல்பர்ட் திரும்பிடுவோமா ?
வேண்டாம் ஜமால் வீட்ல என்னாச்சோ ?
சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுது தெருமுனை வீட்டு வாசலில் நின்று வேடிக்கை பார்த்த எஸ்தர் அம்மாள் பார்த்து விட்டார்.
ஆல்பர்ட் என்னாச்சு முகமெல்லாம் வீங்கியிருக்கு உள்ளே.. வா
ஆல்பர்ட் இறங்க, ஜமாலுதீன் ஆட்டோவுக்கு பணம் கொடுத்து விட்டு எஸ்தர் அம்மாவுடன் வீட்டுக்குள் நுழைய...
ஆன்ட்டி வீட்ல பிரச்சனையா ?
நான் உன்னை கேட்கிறேன் நீ என்னைக் கேட்கிறே... ?
நடந்து முடிந்ததை ஜமாலுதீன் தெளிவாக சொல்ல எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த எல்தர் அம்மாள் சரி நீங்க இரண்டு பேரும் வீட்டுக்குள்ளேயே இருங்க உங்க அங்கிள் அங்குதான் நிற்கின்றார் நான் போய் பேசிட்டு வர்றேன் வெளியே போக வேண்டாம் கதவை நான் பூட்டி விட்டு போகிறேன்.

இருவரையும் உள்ளே வைத்து பூட்டிய எஸ்தர் அம்மாள் நேரே ஆல்பர்ட் வீட்டுக்குப் போய் சண்டையை சமாதானப் படுத்திக் கொண்டு இருந்த கணவர் எட்வர்டை தனியாக அழைத்து வந்து விபரம் சொல்லிட...

இங்கே பாருங்க நீங்க நினைக்கிற மாதிரி எங்க பையன் ஆல்பர்ட் உங்க பெண்ணை கல்யாணம் செய்ய கோயிலுக்கு கூட்டிக்கிட்டு போகலை உங்க பெண்ணைக் கூப்பிடுங்க பொதுவுல விசாரிப்போம் எங்க பிள்ளை கல்யாணம் செய்யக் கூட்டிட்டுப் போனது நிரூபித்தால் அவனை நீங்க வெட்ட வேண்டாம் நான் ஸூட் பண்ணுறேன் இதோ அவனோட அப்பா அம்மாவை வச்சு சொல்றேன் தப்பு செய்யாத எங்க பிள்ளையை நீங்க எப்படி அடிக்கலாம் முதல்ல அதுக்கு பதில் சொல்லுங்க ? 
அவன் எதுக்கு கோயிலுக்கு போனான் ?
அது உங்களுக்கு தேவையில்லாத விசயம் உங்க பெண்ணைப்பற்றி எங்களுக்கு பேச்சு இல்லை எங்க பிள்ளை தப்பு செய்யலை இதுதான் உண்மை.
டேய் அவனும், ஜமாலுதீனும் ஆட்டோவுல வந்து இவரு வீட்டுக்கு உள்ளேதான்டா இருக்காங்கே வாங்கடா அவங்களை வெட்டுவோம் எல்லாத்துக்கும் ஜமாலுதீன்தான்டா காரணம்.
கூட்டத்தில் ஒருவன் கத்துவதற்கும், போலீஸ் ஜீப் வருவதற்கும் சரியாக இருந்தது இன்ஸ்பெக்டர் இறங்கவும் எட்வர்ட்க்கு வணக்கம் சொன்னார் எட்வர்ட் ரிடையர்ட் ராணுவ கமாண்டர்.
ஸார் இவங்க பெண்ணை எங்க பிள்ளை கல்யாணம் செய்யிறதாக சொல்லி அடிச்சு இருக்காங்க, அத்தோட இங்கே வீட்டுல வந்து தகராறு செய்யிறாங்க...
என்னையா பிரச்சனை ?
ஸார் எங்க வீட்டுப் பெண்ணை இவங்க மகன் ஆல்பர்ட் கோயில்ல வைச்சு தாலி கட்டப் பார்த்தான் வேற மதத்து ஆள் எப்படி ஸார் கல்யாணம் செய்யலாம் இதுக்கு கறிக்கடை பாய் மகன் ஜமாலுதீனும் உடந்தை.
எட்வர்ட் ஸார் சொல்லுங்க இப்ப ஆல்பர்ட்டும், ஜமாலுதீனும் எங்கே ?
இன்ஸ்பெக்டர் அவங்க ரெண்டு பேரும் எனது வீட்லதான் இருக்காங்க... நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன் நீங்க இவங்க பொண்ணை விசாரித்தால்தான் உண்மையை தெரிஞ்சுக்கிற முடியும்.
ஓகே ஸார் அவங்களை நாங்க இப்போ போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டுப் போறோம், நீங்க அந்தப் பெண்ணை அழைச்சுக்கிட்டு ஸ்டேஷனுக்கு வாங்க பெண்ணோட அப்பா யாரு அவரையும் ஜீப்ல ஏத்துங்க...
ஆல்பர்ட்டையும், ஜமாலுதீனையும், கல்யாணியின் அப்பாவையும் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போலீஸ் பட்டாளங்கள் ஸ்டேஷனுக்கு செல்ல....
உடன் எட்வர்டும், ஆல்பர்ட்டின் அம்மாவும், அப்பாவும் காரில் புறப்பட்டு ஸ்டேஷனுக்கு போனார்கள் கூட்டம் கலைந்தது.

போலீஸ் ஸ்டேஷன்
உள்ளே ஒரு ஓரமாக ஜமாலுதீனும், ஆல்பர்ட்டும் உட்கார வைக்கப்பட்டார்கள்

வெளியே இரண்டு தரப்பு ஆட்களும் காத்திருந்தார்கள் ஜமாலுதீன் அத்தா விசயத்தை கேள்விப்பட்டு அவரது பரிவாரங்களுடன் வந்து விட்டார் ஆல்பர்ட் அப்பாவிடம் சென்று விபரம் கேட்டுக் கொண்டதும் சமாதானமாக நின்றார்.
சிறிது நேரத்தில் மூணு ஆட்டோக்களில் வந்து இறங்கியது ஒரு கூட்டம் அலறிக் கொண்டு வந்தாள் கல்யாணியின் அம்மாள்.

என்னங்க... நம்ம பொண்ணு இப்படிப் பண்ணிட்டாளே... பாவி பரப்பா....
ஏய்.... என்னடீ... சொல்றே..... ?
கல்யாணியின் தாய்மாமன் கையில் ஒரு கடிதத்துடன் உள்ளே போய் இன்ஸ்பெக்டரிடம் கொடுக்க... இன்ஸ் வாங்கி படித்தார் உள்ளே....

அன்பு நிறைந்த அப்பா அம்மாவுக்கு உங்கள் மகள் கல்யாணி எழுதிக் கொள்வது நானும் எதிர்த்த வீட்டில் இருக்கும் கல்யாணராமனும் கடந்த இரண்டு வருடமாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தோம் இதை அம்மாவிடம்கூட ஒருமுறை பட்டும் படாமல் சொன்னேன் அதற்கு அம்மா அவர்கள் ஊடகழி ஜாதி நமக்கு சரியாக வராது இதற்கு அப்பா ஒத்துக் கொள்ளமாட்டார் என்று சொல்லி விட்டார்கள் ஆகவே நானும், கல்யாணராமனும் தேவதையம்மன் கோவிலில் தாலி கட்டிக் கொள்வதாக முடிவெடுத்து கோவிலுக்கு சென்றோம், ஆல்பர்ட் அண்ணனும், ஜமாலுதீன் அண்ணனும் எங்கள் கல்யாணத்துக்கு உதவி செய்யவே வந்தார்கள் அவர்கள் மீது எந்த தப்பும் இல்லை அவர்களை ஒன்றும் செய்து விடாதீர்கள் எனது கல்யாணத்துக்காக நீங்கள் சேர்த்து வைத்திருந்த 30 பவுன் நகையும் வீட்டில் இருந்த 60,000 ஆயிரம் ரூபாயும், எனது பாஸ்போர்ட்டையும், டிகிரியையும், எடுத்துக் கொண்டேன் எனது சிம் கார்டை பூஜையறையில் சாமி படத்தின் முன் வைத்து இருக்கின்றேன் நானும் கல்யாணராமனும் நல்லபடியாக வாழ உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் என்றாவது நாங்கள் திரும்பி வருவோம் என்மீது கோபம் வேண்டாம் மன்னிக்கவும்.

உங்கள் பிரியமுள்ள மகள்
கல்யாணி..

வெளியில் விசயம் கேள்விப்பட்டு கூட்டத்தில் இருந்த ஒருவன் குரல் கொடுத்தான்.
டேய் கள்ளக்குறிச்சியிலருந்து பொழைக்க வந்த ஊடகழி ஜாதிக்காரனுக்கு நம்ம மள்ளாங்கி ஜாதிக்காரி கேட்குதோ வாங்கடா வெட்டுவோம் அவங்களை.
இன்ஸ்பெக்டர் சத்தம் கேட்டு வெளியே வந்தார்...
எவன்டா சத்தம் கொடுத்தது கேட்குறேன்ல.... யாருடா ?
எங்க ஜாதிப் பெண்ணை அவன் எப்படி கூட்டிட்டு ஓடலாம் ?
அவங்க ஜாதிப் பையனை உங்க பொண்ணு எப்படி கூட்டிட்டு ஓடலாம் ?
என்ன ஸார் நீங்க பேசுறீங்க... ?
நீ கேட்ட அதே கேள்வியை நான் திருப்பிக் கேட்கிறேன்.
நாங்க மள்ளாங்கி அவங்கே ஊடகழி இது சரியா வரது...
ஏய்யா கொஞ்ச நேரம் முன்னாடி அவங்க வேற மதம்னு சொன்னீங்க இப்ப ஒரே மதம்தானே சேர்ந்து தொலைஞ்சா என்ன தப்பு
நாங்க ஒத்துக்கிற முடியாது.
அப்படின்னா பொண்ணை ஒழுங்கா வளர்த்து இருக்கணும் விட்டுப்புட்டு ஜாதி மதம்னு பேசுனா...
ஸார் நீங்க பேசுறது நடைமுறைக்கு ஒத்து வராது நாங்க மள்ளாங்கி அவங்களைவிட ஒருபடி மேலே....
யாருய்யா நீ ஒருபடி மேலே, ரெண்டுபடி மேலேன்னு நாளைக்கு செத்துட்டுட்டா எல்லோரும் ஒரு புடி சாம்பல்தான்யா....
ஸார் இப்ப முடிவாக என்ன சொல்றீங்க ?
யோவ் கான்ஸ்டபிள் ரெண்டு பேரு போயி அந்தக் கல்யாணராமனோட அப்பா அம்மாவை கூட்டிக்கிட்டு வாங்க, சொல்றதுக்கு என்ன இருக்கு கம்ப்ளைண்ட் எழுதிக் கொடுத்துட்டு போங்க, தேடிக்கண்டு பிடிக்கிறோம் அதுவரை யாரும் சண்டை போடக்கூடாது எல்லாம் தெளிவாக அந்தப் பொண்ணு எழுதி வச்சுடுச்சு தேவையில்லாமல் இவனைப் போட்டு அடிச்சு இருக்கீங்க இதுக்கு அவங்க கம்ப்ளைண்ட் கொடுத்தால் உங்க மேல் நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும் இப்போ எல்லோரும் சமாதானமாக போறீங்களா இல்லையா ?

தொடரும்...

35 கருத்துகள்:

  1. இன்னும் தொடருமா...?
    தொடருங்கள் நண்பரே
    கல்யாண ராமனின்
    கல்யாணம் நடக்குமா...?
    காத்திருப்புடன் நாங்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாருக்குத் தெரியும் நானும் உங்களைப் போலத்தான் நண்பரே நடந்தால் கல்யாணம் நடக்கா விட்டால் காடாத்து வேறென்ன செய்வது ?

      நீக்கு
  2. மணமக்களுக்கு வாழ்த்துக்கள் !
    அது சரி ,ஊடகழி,மள்ளாங்கி என்பதற்கு என்ன அர்த்தம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாருக்குத் தெரியும் ? அந்தக் காலத்துல வகுந்து வச்சுட்டாங்கே ஜி

      நீக்கு
    2. பகவான்ஜி யின் சந்தேகம் எனக்கும்!

      நீக்கு
    3. எனக்கே தெரியாது நண்பரே விளக்கம் சொன்னால் அதுவே நாலு பதிவாகி விடும் போலயே....

      நீக்கு
  3. எனக்கு விரல் விட்டு எண்ணும் அளவுக்குத்தான் சாதியின் பெயர்கள் தெரியும் உங்களிடம் ஒரு என்சைக்க்லோபிடியா அளவுக்குத் தெரிகிறதே எதனை சாதிகள் இவர்களில் என்ன வேற்றுமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நான் சார்ந்த ஜாதியைக்குறித்து எழுதினால்கூட என்னை அடிக்க 4 பேர் கிளம்பிடுவாங்கே... ஆகவேதான் கற்பனையில் ஜாதி ஐயா.
      இப்ப, ஒரு பய நம்மலிடம் வாலாட்ட முடியாது.

      நீக்கு
  4. இரண்டு பகுதியும் வாசித்தேன்...
    எங்கு பார்த்தாலும் சாதிதான் போங்க...
    நல்லாயிருக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே ஜாதி எப்படி நல்லா இருக்கும் ?

      நீக்கு
  5. நாளைக்குச் செத்துட்டுட்டா
    எல்லோரும்
    ஒரு பிடி சாம்பல் தான்யா...
    அப்படி
    நீங்கள் சொல்லலாம் ஐயா!
    ஆனால்,
    என் உளளம் நோகுதே
    ஏன் தெரியுமா?
    நான்
    சாக விருப்பம் இல்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஒவ்வொரு மனிதனும் மரணத்தை நினைத்தால் தவறுகள் குறைந்து விடுமே நண்பரே..

      எல்லா மனிதனுமே 1000 வருடங்கள் வாழப்போவது போல்தான் நினைத்துக் கொண்டு வாழ்கின்றார்கள் வருகைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  6. எல்லா மதமும் வந்து விட்டது....ஆனா என்ன ஜாதின்னு சொல்லாம தப்பிச்சிட்டீங்க...ஒருத்தர் ஒன்னும் செய்யமுடியாது தான்... சரி அடுத்து என்ன வருதுன்னு பொருத்திருந்து பார்க்கிறோம்....

    பதிவுக்கு, கருத்து...கருத்திற்கு பதிவுன்னு நல்லா பதிவு ரவுண்டு வருது...வாழ்த்துக்கள் சகோ....

    தம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ நல்லாயிருக்கே நீங்க சொல்றது.... என்னையும் ஆல்பர்ட் மாதிரி பூசை வாங்க வைத்து விடுவீங்க போலயே....

      நீக்கு
  7. கில்லர்ஜி உடுமலைப்பேட்டை நிகழ்வின் தாக்கமா...ம்ம்ம் அப்படித்தான் தெரியுது.

    கீதா: கில்லர்ஜி நீங்கள் இங்கு சொல்லியிருக்கும் சாதிகள் இந்தியாவின் லிஸ்டில் இருக்கும் என்று நினைக்கின்றேன். மகன் தேசிய அளவில் விண்ணப்பித்த போது 5 பக்கத்திற்குச் சாதிகள் கொடுக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டு விண்ணப்பத்திலும். கண்டிப்பாக இவையும் இருக்கலாம் யாருக்குத் தெரியும்? எதுக்கும் ஜாக்கிரதையாக இருங்க..நம்ம மக்கள் ஃப்ளைட் ஏறி வந்து கூட சண்டை போட ரெடியாக இருப்பாங்க அந்த அளவிற்கு சாதி வெறி தலைவிரித்து ஆடுகிறது. ஆனால் ஒன்று இந்தச் சாதி வெறி பொருளாதாரம் நன்றாக இருக்கும் வீடுகளில் படிப்பும் இருந்துவிட்டால் கொஞ்சம் அடங்கிப் போய்விடுகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நான் ஏதோ சித்தன் போக்கு 7 O'clock அப்படின்னு எழுதிக்கிட்டு போறேன்...

      ஆத்தாடி இப்படி ஒரு ஜாதி இருக்குதா ? அப்ப நான் எப்படித்தான் உங்களுக்கு விளக்கி எழுதுவது ?

      நீக்கு
  8. ஒரே சண்டைக்காடா இருக்கும் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே நாமலும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் பார்ப்போம்.

      நீக்கு
  9. ஊடகழி, மள்ளாங்கியில் தொடங்கி நீங்கள் ஒரு அகராதி எழுதலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே முதலில் நானும் இரண்டு நூல்கள் வெளியிட்டு விடுகிறேன்.

      நீக்கு
  10. எதிலும் சாதி, எங்கும் சாதி.
    நான் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன்
    நான் பெரியவன், அவன் சிறியவன்
    இது படுத்தும் பாடு

    "சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
    நீதிவழுவா நெறிமுறையின் - மேதினியில்
    இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
    பட்டாங்கி லுள்ள படி" - ஔவையார்



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஔவையாரின் பாடலை ஒப்பிட்டு கருத்துரையை முன் வைத்தமைக்கு நன்றி

      நீக்கு


  11. எனது ‘கரு’த்துக்கு மதிப்பளித்து கதையை தொடர்ந்தமைக்கு நன்றி! கதை இன்னும் முடியவில்லை போல் இருக்கிறதே. காதல் எப்போதும் தொடர் கதை தான் போலும். காத்திருக்கிறேன் என்ன நடந்ததென அறிய.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே காதல் அழிவதில்லைதான் கதையை தொடர்வதற்க்கு நன்றி

      நீக்கு
  12. ஏ... நீங்க ஊட கழின்னா...நாங்க மூடகழி.. எங்க கிட்டேய்யா!...

    யோ.. நீ மள்ளாங்கி தான்.. ஆனா நாங்கே முள்ளாங்கி!... சொல்லிட்டேன்!..

    ஏ.. சுளுக்கிய எடுடா!...

    யோ.. தீவட்டிய எடுயா!...

    சற்றைக்கெல்லாம் மணியடித்துக் கொண்டே தீயணைப்பு வண்டி வருகிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா வாங்க ஜி கலவரத்தை இப்பபவே ஆரம்பிச்சு வைச்சுட்டீங்களே... எனக்குல வயிற்றை கலக்குகின்றது...

      நீக்கு
    2. இதுக்கே வயித்தைக் கலக்குதா!.. இன்னும் இருக்கே!..

      நீக்கு
  13. சாதி மறுத்த கல்யானிக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை கல்யாணம் முடிந்தால் சொல்லுங்கள் நண்பரே...

      நீக்கு
  14. எப்படியோ தமிநாட்டு அரசியல் போல உங்கள் கதையும் சுவாரசியமாக போகிறது. தொடருங்கள்.
    t ma 10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் நாட்டு அரசியல் போலா ? அப்படின்னா எனது எழுத்து நாற்றம் அடிக்கின்றதா ? நண்பரே..

      நீக்கு
  15. இப்படி எல்லாம் ஜாதிகள் இருக்கின்றனவா! என்னவோ போங்க! :( எந்தக் காதல் கல்யாணமும் பெற்றோர் சம்மதிக்காமல் தான் நடக்கும் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை சகோ கற்பனை ஜாதிதான் பிரச்சினை வந்து விடக்கூடாதே...

      நீக்கு