தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், மே 11, 2016

அண்ணந்தம்பீஈஈஈ...


நட்பூக்களே... திரு. அண்ணாதுரை அவர்களுடன் இந்தப் பையனை இணைத்து புகைப்படம் இட்டது எதற்கு ? என்பதுதானே தங்களது கேள்வி இவன்தான் எதிர்கால தமிழ்நாட்டின் பிரபல சூப்பர் ஸ்டார் பிறகு கட்சி ஆரம்பித்து இவனும் அண்ணாவின் புகைப்படத்தைப் போட்டு ஓட்டு கேட்பான் மன்னிக்கவும் கேட்பார் அப்பவும் மக்கள் ஓட்டுப் போட்டு அமோக வெற்றி பெறுவார் இப்பொழுது எனக்கு குழப்பம் என்னவென்றால் அண்ணாதுரை எல்லா கட்சிகளிலும் காணப்படுகிறார் இது எப்படி ?
 

அண்ணே உங்கள்ட்ட ஒரு சந்தோஷமான செய்தி சொல்ல வந்தேன்.
சொல்லுடா தம்பி என்ன விசயம் ?
எங்களோட தேர்தல் அறிக்கையில எலக்ட்ரிக் பொருட்கள் அனைத்தும் வீட்டுக்கு வீடு இலவசமாக கொடுக்கப் போறதாக அறிவிச்சு  இருக்கோம்ண்ணே...
அப்படின்னா இனிமேல் தேர்தலுக்குப் பிறகு தமிழ் நாட்டுக்கு கரண்டு வராதுன்னு சொல்லு.
? ? ?
*  *  *  *  *  01  *  *  *  *  *
அண்ணே உங்கள்ட்ட ஒரு சந்தோஷமான செய்தி சொல்ல வந்தேன்.
சொல்லுடா தம்பி என்ன விசயம் ?
நான் ஆட்சியில் பதவி ஏற்றதும் பெண்களுக்கு முதலிடம் கொடுத்து அரசியலில் ஈடுபட வைக்கப்போறேன்.
அப்படின்னா தமிழ் நாட்டுக்கு உனக்குப் பிறகு அடுத்த முதல்வர் கொழுந்தியாள்னு சொல்ல வர்றே...
? ? ?
*  *  *  *  *  02  *  *  *  *  *
அண்ணே உங்கள்ட்ட ஒரு சந்தோஷமான செய்தி சொல்ல வந்தேன்.
சொல்லுடா தம்பி என்ன விசயம் ?
என்னோட கட்சியில அஞ்சு கட்சிக்காங்க கூட்டணி சேர்ந்துக்கிறதா சொல்லி இருக்காங்கண்ணே...
அப்படின்னா நீ எல்லாத்தையும் இழந்துட்டு நாசமாப் போயி முச்சந்தியில நிற்கப்போறேனு சொல்லு.
? ? ?
*  *  *  *  *  03  *  *  *  *  *
அண்ணே உங்கள்ட்ட ஒரு சந்தோஷமான செய்தி சொல்ல வந்தேன்.
சொல்லுடா தம்பி என்ன விசயம் ?
கட்சியில் என்னை நம்ம தொகுதி வேட்பாளராக அறிவிச்சு இருக்காங்கண்ணே...
அப்படியா ? சந்தோஷம் எதுக்கும் நீ தேர்தலுக்கு முதல்நாள் உறுதியாக வந்து சொல்லு உனக்கு ஓட்டுப்போடுறேன்.
? ? ?
*  *  *  *  *  04  *  *  *  *  *
அண்ணே உங்கள்ட்ட ஒரு சந்தோஷமான செய்தி சொல்ல வந்தேன்.
சொல்லுடா தம்பி என்ன விசயம் ?
கட்சியில் என்னை கொள்கை பரப்பு செயலாளராக அறிவிச்சு இருக்காங்கண்ணே...
ஏன்டா உங்க கட்சிக்கு கொள்கையே இல்லையே பின்னே எதுக்கு உனக்கு வேண்டாத வேலை.
? ? ?
*  *  *  *  *  05  *  *  *  *  *

36 கருத்துகள்:

  1. உங்கள்ட்ட ஒரு சோகமான விஷயம் சொல்லணுமே... தேர்தல் பதிவுகள் இன்னும் ஐந்து நாட்களில் முடிவுக்கு வந்து விடும்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஆம் நண்பரே அப்புறம் ஆளுங்கட்டி எதிர்க்கட்சி லட்சணங்களை அலசுவோம்.

      நீக்கு
  2. தேர்தலுக்குப் பின்னும் இந்த சந்தோஷமான செய்திகள் தொடருமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே கண்டிப்பாக தொடரும் ஆனால் அது வேறு வகையாக இருக்கும்.

      நீக்கு
  3. எல்லா கட்சியிலும் அண்ணாதுரை காணப்படுகிறார் என்றால்..அது அண்ணாயிசம் நண்பரே...இந்த அண்ணன் லேசுபட்டவர் இ்ல்லை.. பிழைப்பு வாதத்திற்கே இவர்தான் பிதாமகன் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே மிகச்சரியான வார்த்தை அவர் தனது சுயநலத்துக்காக மலையாளியைக் கொண்டு வந்தார் அதன் விளைவு இன்று தமிழன் கன்னடத்தியிடம் அடிமை வேறன்ன.... ?

      நீக்கு
  4. சந்தோஷமான செய்தி னு சொல்லி சொல்லி சங்கடமான விஷயத்த சொல்லிருக்காங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே ஒரே விடயம் சிலருக்கு சந்தோஷமாகவும், சிலருக்கு வருத்தமாகவும் உள்ளதுதான் வாழ்க்கை உதாரணத்துக்கு ஒரு கட்சியில் இப்பொழுது இழவு விழுந்தால் மறு கட்சி அதை கொண்டாடுமே...

      நீக்கு
  5. கொள்கையே இல்லாத கூட்டங்கள் எப்போது தான் மாற்றம் வருமோ)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கொள்கை உள்ள கட்சி எதுவென்று தேடும் நிலைதான் இன்று.

      நீக்கு
  6. இனி ஐம்பது ஆண்டுகளுக்கு திராவிடக் கட்சிகளின் ஆட்சிதான் என்று அண்ணா கூறி இருக்காராம் .அவர் வாக்கு பலிக்கிறதா என்று பார்ப்போம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி பலிக்கின்றதோ இல்லையோ.. பலியாவது மக்கள்தானே... ஜி

      நீக்கு
  7. ஒரே பையனின் படத்தை இடம் வலமாகத் திருப்பிப் போட்டதன் அர்த்தம் என்னங்க?..

    இடப்பக்கமும் போக விடமாட்டோம்.. வலப்பக்கமும் போக விடமாட்டோம்!..

    நேரா நடுப்பக்கம் போனா!?...

    அங்கேதான் எங்கள் இலட்சியமான நரிக்கூட்டம் இருக்கின்றதே.. நடுவில் பிடுங்கி விடாதா!?...

    பின்னாலே - திரும்பி ஓடினால் -?..

    அங்கே தான் பெருங்குழி வெட்டி தீ மூட்டி இருக்கின்றோமே!..

    அப்ப - எங்க கதி!?...

    அதோகதி தான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஸூப்பர் டயலாக் ஜி வாழ்த்துகள்.

      நீக்கு
  8. அண்ணே உங்கள்ட ஒரு சந்தோஷமான செய்தி சொல்ல வந்தேன்
    சொல்லுடா தம்பி என்ன விசயம் ?
    தமிழ்நாட்டுல கட்சிகளும் வேட்பாளர்களும் உங்களுக்கு அங்கு ஓட்டு இல்லைன்னு சந்தோஷப்படறாங்களாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இதுவும் நல்லாத்தான் இருக்கு ஹாஹாஹா இருந்தாலும் நானும் வீட்டி வரியெல்லாம் கட்டுறேன் என்னை இப்படி கழட்டி விடலாமா ?

      நீக்கு
  9. சகோ இன்னும் 3 நாள் தான்,, பார்ப்போம் ,,, புகைப்படம் சூப்பர்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ பார்ப்போம் தேர்தலுக்குப் பிறகு...

      நீக்கு

  10. எந்த சந்தோஷமான செய்தியும் சந்தோஷத்தை தராது என புரிந்துகொண்டேன். 19 ஆம் தேதிக்குப் பிறகு அரசியல் பதிவுகள் இருக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இருக்காது என்று சொல்ல முடியாது ஆனால் இதுபோல தொடர்ந்து அரசியல் பதிவுகள் வராது.

      நீக்கு
  11. :))

    இன்னும் சில நாட்களில் முடிவு.. பார்க்கலாம்!

    பதிலளிநீக்கு
  12. சிந்திக்க வைக்கும் நகைச்சுவைகள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  13. நல்லா இருக்கு. ஆனால் என்ன வருத்தம்னா படம் தான் தெரியலை! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ உங்களுக்கு மட்டும் எப்படி தெரியலை... ?

      நீக்கு
  14. மக்கள் நீங்கள் என்ன சொன்னாலும் கேட்க போவது இல்லை.
    அவர்கள் தலைவிதிப்படி நடக்கப் போகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோ என் கடன் எழுதிக்கிடப்பதே இதுதான் எனது கொள்கை.

      நீக்கு
  15. நாட்கள் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.
    த ம 1

    பதிலளிநீக்கு
  16. அனைத்தும் நன்று!

    பதிலளிநீக்கு
  17. அண்ணே அண்ணே ஒரு சந்தோஷமான விஷயம்....

    என்ன தம்பி சொல்லு சொல்லு..

    கொடுவாமீசைக்காரருக்கு இங்க ஓட்டர் ஐடியே கிடையாது. ஆனா அவரு இப்படி இங்க நம்மள, கட்சியை எல்லாம் இப்படிக் கலாய்ச்சுக்கிட்டுருக்காருனு கோபம்...

    கொடுவா மீசைக்காரருக்கே கொடுவா கெடுவா??!!!!

    அவரு இங்க இந்தியா பக்கமே வரக்கூடாதுனு தடா போடணுமாம்...

    அதுதான் சந்தோஷமான செய்தியா....தம்பி...நல்லாருப்பு...

    கீதா: கில்லர்ஜி ஒரு சோகமான விஷயம்....தேர்தல் முடிவுகள் ஹும்...

    பதிலளிநீக்கு