தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜூன் 29, 2016

உயிரின் விலை உயருமா ?


இப்படி தொங்கி கொண்டு போவது யார் படிக்காத பாமரனா ? இல்லையே பட்டம் படிக்கும் கல்லூரி மாணவன்தானே இவனுக்கு உயிரின் மதிப்பு தெரியாதா ? அப்படியென்ன அவசரமாக போகவேண்டும் கணினியில் உலக எவ்வளவு விடயங்கள் படிக்கின்றான் ஓட்டுனர் சிறிய பிரேக் அடித்தால்  இவன் நிலையென்ன என்பது தெரியாதவனா ? இவன் அடிபட்டு இறந்து விட்டால் அதற்கு காரணம் ஓட்டுனரா ஓட்டுனராகவே இருக்கட்டும் இழப்பு யாருக்கு ? பெற்றோருக்குத்தானே இனி கொள்ளி வைக்க மகன் ? இனி பிறக்க வழியில்லை காரணம் நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று அன்றே குடும்பக் கட்டுப்பாடு செய்தாகி விட்டது நாம் அரசாங்கத்தை குறை சொல்கிறோம் இந்த பேருந்தில் முதல்வரோ, போக்குவரத்துதுறை அமைச்சரோ பயணம் செய்யப்போவதில்லை தெரிந்தாலும் அவர்களுக்கு இதைப்பற்றி சிந்திக்க நேரமில்லை அவர்கள் பங்குக்கு படியில் பயணம் நொடியில் மரணம் என்று மக்(கு)களுக்கு சித்தாந்த வரிகளை எழுதி வைத்து விடுகின்றார்கள் டாஸ்மாக்கை திறந்து வைத்து குடி குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும், என்றும் சிகரெட் கம்பெனிகளுக்கு தாராளமாக சலுகைகளை வழங்கி விட்டு புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது என்பது போன்ற வசனங்களை எழுதி வைக்கின்றார்கள் மேலும் அவர்களுக்கு தலைக்குமேல் ஆரிரமாயிரம் வேலைகள் இருக்கிறது (சலூனில் அல்ல) மக்களின் (தன்மக்களின்) வாழ்வாதாரத்தை உயர்த்துவது எப்படி என்று.


இந்த பயணிகள் பேருந்தில் கதவுகள் கண்டிப்பாக வைத்துதான் தயாரிக்க வேண்டுமென்ற கட்டாய சட்டத்தை இயற்றினால் என்ன ? அயல் நாடுகளில் கதவுகள் மூடினால்தான் பேருந்து நகரும் அப்படியொரு தொழில் நுற்பம் தாங்கள் கேட்ககலாம் நீ அயல் நாட்டில் பார்த்து விட்டு இப்படி சொல்கிறாய் என்று இல்லை நண்பர்களே... கீழே பாருங்கள்.


இதுவும் நமது நாட்டில் ஓடும் பேருந்துகள்தானே இந்த முரண்பாடுகளால் மனித உயிர்களுக்குதானே நஷ்டம் அந்த உயிர்கள் கண்டிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கும், அடித்தட்டு மக்களுக்கும் மட்டுமே ஒழிய பணக்கார வர்க்கங்களுக்கோ அல்லது அதிகார வர்க்கங்களுக்கோ அல்ல !

சரி இந்த அதிகார வர்க்கங்களுக்கு அதிகாரம் எங்கிருந்து கிடைத்தது  யார் கொடுத்தது ? நடுத்தர மக்களும், அடித்தட்டு மக்களும்தானே பிச்சை (ஓட்டு) போடும் மக்களுக்கு நல்ல வாழ்க்கை இல்லை, ஆனால் பிச்சை பெறுபவர்களுக்கு நல்ல வாழ்க்கை இது எந்தக்கடவுள் இட்ட சாபமோ தெரியவில்லை ஓட்டுரிமையின் தன்மை தெரியாத நமக்கு ஓட்டுரிமை எதற்கு ? மன்னர் ஆட்சியை பிரகடணப்படுத்தி விடலாம் இன்றைய ஆட்சியாளர்களும் வாரிசுகளைத்தானே கொண்டு வருகிறார்கள் மன்னர் ஆட்சி நடந்தாலும் கொள்ளை அடிக்க மாட்டார்கள் காரணம் நாம்தானே ஆள்கிறோம் என்ற எண்ணங்களால் சரித்திரத்தில் இடம் பெறுவோம் என்ற சிந்தனைகள் தோன்றக்கூடும் இவ்வுலகில் பெரும்பாலான மன்னர் ஆட்சி நடைபெறும் நாடுகளில் மக்கள் நல்ல வாழ்க்கையே வாழ்கின்றார்கள் கீழேயுள்ள புகைப்படத்தைப் பாருங்கள்.

இவர் யார் தெரியுமா ?

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் திரு. டேவிட் காமரூன் (தகவல் தந்த சகோ திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்கு நன்றி) ரயிலில் அலுவலகத்துக்கு (பாராளுமன்றம்) செல்கிறார் உட்கார இருக்கை இல்லை காரணமென்ன ? அங்குள்ளவர்கள் நீயும் நானும் சமம் உனது வேலைதான் பிரதமர் நீ எங்களுக்கு கடவுள் இல்லை அதுவும் நாங்கள் உனக்கு போட்டுக்கொடுத்த வேலை என்ற சிந்தனையாளர்கள் நம் நாட்டில் ? 

ஒருமுறை சென்னை விமான நிலையத்தில் ஒரு அரசியல்வாதியின் சின்னவீடு ஏதோ வெளிநாட்டுக்கு போகின்றாள் நுழைவாயிலில் நின்ற சிலர் அவளின் காலை தொட்டு வணங்கினர் (இவன் பெற்ற தாயை வணங்கி இருப்பானா ?) மற்ற அனைவரும் அவளை வணங்கினர் அனைவர் முகத்திலும் ஒளிவட்டம் கடவுளைக் கண்டதைப்போல் அவள் அதை சட்டையோ, பேண்டோ செய்யாமல் போய்க்கொண்டே இருந்தாள் அந்த இடத்தில் அவளையும் சட்டை செய்யாமல் சிந்தனைக் கண்ணோட்டத்துடன் முகத்தில் சலனமின்றி ஒருவன் பார்த்துக்கொண்டு நின்றான் அவன்தான் கில்லர்ஜி.


நண்பர்களே... நண்பிகளே... மக்களாகிய நாம் ஐந்து  ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது சிந்திக்கும் எண்ணமில்லை இனியாவது சிந்திப்போமே... நமக்கு வாக்குரிமை தேவையா... தேவையில்லையா ? வாக்கால் நமது வாய்க்கே வாக்கரிசி விழுகிறது மக்கள் எண்ணங்களில் மாற்றம் வராதவரை மாற்றமில்லை நமது வாழ்வில் ஏற்றமில்லை.

CHIVAS REGAL சிவசம்போ-
இந்த ஆளு விபத்தைக்குறித்து பதிவு போடுறார இல்லை அரசியல்வாதிகளை தாக்கி பதிவு போடுறாரா ?

சாம்பசிவம்-
விபத்து நடக்குறதுக்கு காரணமே அரசியல்வாதிகள்தானே...

சிவாதாமஸ்அலி-
டாஸ்மாக்குலே கிடக்கிற கூமுட்டை எல்லாம் கேள்வி கேட்குது.

காணொளி

திங்கள், ஜூன் 27, 2016

தெக்ஷ்ணாமூர்த்தி விரதம்


நிருபர் நிருபமாராவ்-
ஐயா நம் நாட்டில் நல்லவர் ஆட்சி எப்பொழுது வரும் ?
Killergee -
உலகம் அழியும் நாள்வரை, அதற்கு சாத்தியமில்லை.
நிருபர் நிருபமாராவ்-
முன் கூட்டியே வருவது போல் தங்களது யோசனையில் ஏதாவது.....
Killergee -
ஹிட்லரைப் போல நான்தான் பெரியவன் என்ற அகந்தையுடனும், காமராஜரைப் போல நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதொன்றே குறிக்கோள் என்ற எண்ணத்துடனும், கக்கனைப்போல எந்த நிலையிலும் எளிமையாய் வாழ்வது என்ற மனப்பக்குவத்துடனும், இந்த மூன்று குணங்களும் ஒருங்கே அமையப் பெற்ற ஒரு குழந்தையை இன்றாவது ஜனிக்க''வை'' இறைவா ! என நம் நாட்டு புதுமணத்தம்பதிகள் அனைவரும் மும்மூர்த்திகளிடம் வேண்டி வியாழக்கிழமை தோறும் தெக்ஷ்ணா மூர்த்திக்கு விரதம் இருந்து வந்தால் ? ? ? ஒரு வேளை நமது அடுத்த சந்ததியினருக்கு நல்வாழ்வு கிடைக்கலாம்.
நிருபர் நிருபமாராவ்-
ஐயா இது எல்லோரும் கடைப்பிடிப்பது சாத்தியப்படவில்லை, காரணம் மதவேறுபாடு நிறைந்தது நமது நாடு.
Killergee-
அதற்காகத்தான் ''மும்மூர்த்தி'' களிடமும் என்று சொன்னேன்.
நிருபர் நிருபமாராவ்-
ஐயா மாற்று யோசனை ஏதாவது...
Killergee -
உலக அழிவை உடனே கொண்டுவர ஒரு விரதம் இருக்கிறது, அதா... 
நிருபர் நிருபமாராவ்-
ஐயோ வேண்டாம் ஐயா போன வாரம்தான் எனக்கு கல்யாணம் ஆச்சு கேள்வியை இத்தோடு முடித்துக் கொள்கிறேன் நன்றி.
  
CHIVAS REGAL சிவசம்போ- (தனக்குள்)
கல்யாணத்துக்கு கத்திரிக்கா கேட்டா ? காடாத்துக்கு முருங்கக்கா வாங்கி கொடுப்பான் போலயே இந்த ஆளு.

 காணொளி

சனி, ஜூன் 25, 2016

கொரியா மாடல் 4 ½ சவரன்

இதன் முன் பகுதியை காண இதோ... ராஜபார்வை

மதுரை மீனாம்பாள்புரம் ஏரியாவில்...
ஹலோ கில்லர்ஜி நல்லாயிருக்கீங்களா ?
வாங்க பகவான்ஜி எப்படி ? இருக்கீங்க ? வீட்டில் எல்லோரும் நலமா ?
நல்லா இருக்காங்க, உங்க குழந்தைகள் எப்படி ?
பகவான் அருளால் நல்லா இருக்காங்க ஜி
என்ன ? திடீர்னு சேட்டுகள் கடைப்பக்கம் சொல்லவே இல்லை...
ஒரு திடீர் கல்யாணம் நகை வாங்க வந்தேன்.
அதுக்கு நகைக்கடைக்குத்தானே போகணும்...
அங்கே போனால் ? அவன் செய்கூலி போட்டு நம்மை சேதாரமாக்கிடுவான் அதான் இந்த மார்வாடி சேட்டுகள்ட்ட ஏதாவது மூழ்கிப்போனது இருக்கும்.
அதுவும் சரிதான், நான்கூட சங்கிலி விற்கத்தான் வந்தேன்.
அப்படியா ? எத்தனை சவரன் ?
இதோ பாருங்க கொரியா மாடல் 4 ½ சவரன் இருக்கும்.
இருக்குமா ?
இல்லை..... இருக்குனு சொல்ல வந்தேன்.
ஏன் ? விற்கிறீங்க ?
அது வந்து புதுசா நைஜீரியா மாடல் கம்ப்யூட்டர் வந்துருக்கு வாங்கலாம்னுதான்.
சரி பில்லைக் கொடுங்க ?
என்ன ஜி ? ''பில்லா, ரங்கா''னு கேட்டுக்கிட்டு என்னோட முதல் கல்யாணத்துக்கு போட்டது பில்லு கிடையாது.
சரி எடை போட தராசு ?
வாங்க அந்த முக்குல ஒரு விறகு கடை இருக்கு அங்கே போடுவோம்.
சரி வாங்க...
அண்ணே வணக்கம் ஒரு பொருளை எடை போடணும்....
போட்டுக்கங்க, ஆமா பொருள் எங்கே ?
இதோ இந்தா இருக்கு.
பகவான்ஜி பாக்கெட்டிலிருந்து வெளியே எடுக்க, கடைக்காரர் இருவரையும் மேலிருந்து கீழாக ஒரு மாதிரியாக பார்த்தார்.
நல்லாத்தானே இருக்கீங்க ? எங்கேயாவது பிட்பாக்கெட் அடிச்சிட்டு வர்றீங்களா ? டேய் முனியாண்டி, கருப்பையா, மாயாண்டி இங்கே வாங்கடா...
மறு நிமிடம் பகவான்ஜியும், கில்லர்ஜியும் ஓட்டம் பிடித்தவர்கள் திருப்பரங்குன்றம் கோயிலில் வந்து நின்றார்கள்.
என்ன ? பகவான்ஜி இப்படிக்கொண்டு வந்து நிறுத்திட்டீங்க ?
என்ன செய்யிறது ? அப்பவே நீங்க வாங்கி இருந்தால் பிரச்சினை இல்லை என்மேல சந்தேகப்பட்டு பில் கேட்கிறீங்க...
சரி விலையை சொல்லுங்க ஜி ?
சந்தையில இப்ப சவரன் விலை என்ன ?
இப்ப சவரன் 6 வராகன்.
சரி 4 ½ சவரனுக்கு எவ்வளவு கணக்கு பாருங்க ?
நீங்களே, பாருங்க...
எனக்குத் தெரியாது நீங்கதான் 13 வது வரைக்கும் படிச்சு இருக்கீங்க, உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும்.
சரி பகவான்ஜி 4 சவரனா போட்டுக்கிருவோமே.... நமக்குள்ளே என்னயிருக்குநான் உங்களுக்கு தினம் தமிழ் மணம் ஓட்டெல்லாம் போடுறேன்....
(ஆஹா இனிமேல் எந்த மாக்கானும் மாட்ட மாட்டான் நமக்கும் கீழே கிடந்ததுதானே ? எப்படியும் போலீஸ் விரட்டி வந்து நகையைப் புடிங்கிருவாங்கே... அதுக்குள்ளே கிடைச்சதுவரை தள்ளி விட்டுப்புட்டு நாம கழண்டுக்கிருவோம் ஒத்துக்கிறலைனா நாளைப் பின்னே தமிழ் மணம் ஓட்டு போடமாட்டாரு)
என்ன ? பகவான்ஜி யோசனை ?
சரி ஜி நமக்குள்ளே என்னயிருக்கு ? நீங்க கணக்கு பாருங்க...
நல்லது ஜி சவரனுக்கு 5 வராகனா போட்டுக்கிருவோமே...
என்ன ஜி நீங்க... ? சரி உங்களுக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம்...
கோயில் உண்டியல்ல போட்டுருவோமா ?
ஐயய்யோ அப்படிச் சொல்லலை 5 ½ வராகனா போட்டு கணக்கை முடிங்க.
சரி ஜி 4 சவரனுக்கு 5 ½ வராகன் வீதம் நாலு இண்டு அஞ்சரை முப்பத்தி ஆறு முப்பத்தி ஆறே, பனிரெண்டாலே வகுத்தால் நூற்றி பதிமூணு வராகனை தொன்னூற்றி அஞ்சைக் கழிச்சு எட்டாலே பெருக்கி அறுபத்தி ஏழு அதுல ஒன்பதைக்கூட்டி நாற்பத்தி மூணு கழிச்சால் மொத்தம் பதினேழு வராகன் ஆமா ஜி மொத்தம்17 வராகன் வருது.
நல்லது ஜி வெட்டுங்க17 வராகனை.
ஜி ஒரு யோசனை...
...? ? ? சொல்லுங்க... ?
இந்த 17 வராகன்ல ஒரு வராகனுக்கு நல்ல கலப்புக் கடையாப்பார்த்து சாப்பிடுவோமே... 16 வராகனோட வீட்டுக்கு போனீங்கன்னா, பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழ்வீங்க திருப்தியாக போகலாம் திருப்பதி ஏழுமலையானோட ஆசியும் இருக்கும்.
சரி நமக்குள்ள கணக்கு எதுக்கு ? வாங்க சாப்பிடுவோம்.
இருவரும் பக்கத்தில் உள்ள அன்னக்கிளி ஆப்பக்கடையில் வயிறு முட்ட ஒரு வராகனுக்கு சாப்பிட்டவுடன் பெரியார் பேரூந்தில் ஏற பகவான்ஜி நான்தான் டிக்கெட் எடுப்பேன் என்று நாலனா கொடுத்து 2 டிக்கெட் எடுத்தார்.
கில்லர்ஜி நகை பத்திரம் பிட்பாக்கெட் அடிச்சுருவாங்கே...
இதோ சட்டைப் பாக்கெட் முன்புறத்துல வச்சு இருக்கேன் நம்மகிட்டே எவனும் கைவரிசை காட்டமுடியாது நீங்க பணத்தை பத்திரமா வச்சுக்கங்க ஜி
நான் உள்ளூர்க்காரன் நமக்குத் தெரியாதா ? இதோ ஜீன்ஸ் பாக்கெட் பின்னேலே வச்சு இருக்கேன்.
இருவரும் பெரியார் பேரூந்து நிலையத்தில் இறங்கினர்.
வாங்க கில்லர்ஜி டீ சாப்பிட்டு அப்புறமா தேவகோட்டை பஸ்ஸுல ஏறுங்க.
கில்லர்ஜியின் முன்புற சட்டைப் பாக்கெட்டும், பகவான்ஜியின் பின்புற ஜீன்ஸ் பாக்கெட்டும் கிழிந்து தொங்கியது தெரியாமல் இருவரும் நடந்தனர் டீ கடையை நோக்கி...
இந்த மாற்றம் உலக நியதியாகும்
நண்பர் திரு. பகவான்ஜி அவர்களுக்கு நன்றி எதற்கு ? 

வெள்ளி, ஜூன் 24, 2016

ராஜபார்வை

இது பலரும் கேட்டு அறிந்த கதையாக இருக்கலாம் இருப்பினும் எனது பாணியில்.... கொஞ்சம் சொதப்பி உங்கள் பார்வைக்கு....

சிவனும், பார்வதியும் ஒருநாள் சிட்அவுட்டில் நின்று கொண்டு நாட்டு நடப்பைப்பற்றி விவாதித்துக் கொண்டு இருந்தார்கள்
பிரபு தங்களது பக்தன் பக்தவச்சலம் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுகிறானே, கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா ? 

என்ன செய்வது ? பார்வதி எல்லாம் அவனுக்கு எழுதியபடிதானே நடக்கும்
தங்களின் Testக்கு ஒரு Limit வேண்டாமா இப்படியா பக்தர்களை சோதிப்பது ?
வேண்டுமானால் நீ உதவி செய்து பாரேன்
இதோ நான் உதவுகிறேன்

புதன், ஜூன் 22, 2016

கனடா கனவில், கனகா

Just click one time photo inside

கணவன் கனகரத்தினம் கனகாவுக்கு கனகாம்பரம் பூ வாங்கி தலையில் வைத்துவிட்டான் திடீரென மூஞ்சியில் தண்ணீர் அடிக்க விழித்துப் பார்த்தால் சே... கனவு. மாமியார் கனகவள்ளி எதிரில் கையில் தண்ணீர் வாளியுடன் நின்றிருந்தாள் யேன்டி மூதேவி கனவா காணுரே கனவு எந்திரிச்சி வாசலைத் தெளிடி நெற்றிக்கண் இன்றி சுட்டெறிக்கும் பார்வை பார்த்தாள் கனகவள்ளி கனகா எந்திரித்து தனது வேலைகளை தொடங்கினாள் கணவன் கனடாவில் எஞ்சினீயராக வேலை பார்க்கிறான் கூடிய சீக்கிரம் கனகரத்தினம் அவளையும் அழைத்துப் போவதாக சொல்லிக் கொண்டே இருக்கிறான்.... கனகவள்ளியோ பிறகு பார்க்கலாமென நாட்களை தள்ளிக் கொண்டே இருக்கிறாள் மாமனார் கனகசுப்புவோ கனரா பேங்கில் வேலை செய்கிறார் ஆனால் ஒண்ணும் தெரியாத பச்சமண்ணு நமது மன்மோகன்சிங் போல அவரால் இவளுக்கு ஒண்ணும் செய்யமுடியாது வேணும்னா ஒண்ணு செய்வார் அவளுக்கு கேணியில ரெண்டு வாளி தண்ணீர் இறைத்துக் கொடுப்பார் அதையும் கனகவள்ளி இவள் மூஞ்சியில இறைஞ்சு விடுவாள்.

 

காலையில் வேலை முடிந்து குளித்து விட்டு அவள் பூஜையறையில் நுழையும் போதுதான் மாமியார் குளிக்கப் போவாள் பூஜையில் பெருமாளிடம் மெதுவாக முணுமுணுத்து பிரார்த்திப்பாள், கணவன் கனடாவுக்கு சீக்கிரம் அழைத்துப் போக வேண்டுவதற்கு மறந்தாலும் தன் மாமியாளை சீக்கிரம் அழைத்துப் போய்விடு என வேண்டுவதற்க்கு மறக்க மாட்டாள் அத்தனை ஞாபகசக்தி உள்ளவள் எப்படியோ பிரார்த்தனை ஒருநாள் பலித்தும் விட்டது கனகரத்தினம் ஒருநாள் விசாவோடு வந்து விட்டான் கனகா சந்தோசமாக புறப்பட்டாள் அப்பா கனகராஜனும் மனைவி கனகாம்பாளுடன் வந்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தார் கனடாவில் அவனது கம்பெனி பெரிய அளவு பிளாட் கொடுத்திருந்தது அதிலொரு அறையை பூஜை அறையாக்கினாள் கணவன் காலை 8.00 மணிக்கு வேலைக்கு போனதும் குளித்து விட்டு பூஜை அறையில் நுழைந்தா(ள்)ல் ? ஒருமணி நேரமாவது மனமுருகி சத்தமாக பிரார்த்திப்பாள் வீட்டில் யாரும் இல்லாததால் ஊரில் போலமெதுவாக முணுமுணுப்பதில்லை ஆறு நாட்களும் ஆனந்தமாக போனது வரும் ஞாயிற்றுக்கிழமை கனகாவை முக்கியமான இடத்திற்கு அழைத்துப் போவதாக சொல்லி இருந்தான்.

 

அன்று ஞாயிற்றுக்கிழமை ஆபீஸ் விடுமுறை கனகரத்தினம் காலை 9.00 மணிவரை தூங்கிக் கொண்டிருந்தான் பூஜையறையிலிருந்து கனகாவின் பிராத்தனை ஒலி காதில் நுழைந்து உறக்கத்தை கெடுத்தது கேட்டதும் அர்த்தம் வலித்தது எழுந்து வந்து பூஜையறையின் வாசலில் நின்றான் உள்ளே கனகா மெய் மறந்து கண்மூடி சத்தமாக வழக்கம் போல 108 தடவை...

‘’பெருமாளே என் மாமியாளை சீக்கிரமே கூட்டிட்டு போயிடு’’ 

என ஸ்லோகம் சொல்லிக் கொண்டு இருந்தாள் ஒரு நிமிடம் நின்று கேட்டவன் தீர்மானத்திற்கு வந்தவனாய் உள்ளே போய் Laptop எடுத்து Open செய்து Google போய் AIR CANADA  வை Click செய்தான் பிறகு என்னமோ செய்தான் English என் உடம்புக்கு ஒத்து வராததால் படிக்க முடியவில்லை அடுத்த ஒருமணி நேரத்தில் இருவரும் CANADA HALIFAX STANFIELD INTERNATIONAL AIRPORT டில் நின்றிருந்தார்கள் அவன் கையில் ஒரேயொரு TICKET இருந்தது என்னவோ யாருக்குத் தெரியும்

எல்லாம் அந்த பெருமாளுக்கே வெளிச்சம்.
 

சாம்பசிவம்-
ஞாயிற்றுக்கிழமை முக்கியமான இடம்னு சொன்னது AIRPORTடா ?

CHIVAS REGAL சிவசம்போ-
மாமியாருடைய பிரார்த்தனையும் பலிச்சுடுச்சோ...

 காணொளி