தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜூன் 19, 2016

அப்பா என்னும் தாரகமந்திரம்


‘’அப்பா’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய் பிரிந்த பிறகே உணர்கின்றார்கள் இதில் அனுபவப்பட்டு உணர்ந்தவர்களில் நானே முதலாமாவன் என்பதை வெட்கப்பட்டு ஒத்துக்கொள்கின்றேன் இந்த வட்டத்துக்குள் பெரும்பான்மை வரக்காரணம் என்ன ? வாழும் காலத்தில் தந்தையும், மகனும் நண்பர்களைப் போல வாழ்ந்து கடக்க முடியாதா ? இளவயதில் தந்தையை இழந்தவன் தந்தையின் பாசத்துக்கு ஏங்கி வாழ்கின்றான்.

தந்தையைப் பெற்ற பாக்கியசாலி முதியோர் இல்லத்தில் சேர்க்கின்றான் இவன் நாளை நாம் இந்நிலைக்கு வரமாட்டோம் என்பதை ஆணித்தரமாக நம்புகின்றான் நிச்சயமாக இந்நிலை வரும் பொழுது தந்தையை நினைத்துப் பார்க்கின்றான் குற்ற உணர்ச்சியால் மனம் கனத்து அழுகின்றான் அனாதை ஆஸ்ரமங்கள் இந்த சமூகம் தோன்றிய காலத்திருந்து உள்ளது உண்மையே... இது சமூக ஆண்வர்க்கங்களின் ஒழுக்கமின்மையே அன்றி வேறென்ன ? 

சரி அது கிடக்கட்டும் தற்பொழுது முதியோர் இல்லங்கள் எங்கெங்கு காணினும் நவீன வசதிகளுடன்.... இதுவும் ஒரு வியாபார நோக்கத்தில் பெருகி விட்டதே இது எதனைக் குறிக்கின்றது ரத்தபந்த உணர்வுகளின் சுறுக்கத்தையா ? இல்லை தான்தோன்றித்தனமாக குறுகிய எண்ணப் பாட்டுகளுடன் இன்றைய இளைய சமூகம் எதிர் நோக்கிச்செல்லும் எண்ணிக்கைகளின் பெருக்கத்தையா ? இந்த தவறுகளின் தொடக்கம் எங்கே ? தந்தையர்களின் அணுகுமுறையிலா ? இல்லை பிள்ளைகள் புரிதலின் தவறான கோணத்திலா ? ஏதுவாயினும் இதன் பாதிப்பு யாருக்கு ? நமக்குத்தானே... அதாவது இன்றைய மகன் நாளை அப்பாவாகின்றான், அவனே பிறகு தாத்தாவாகவும் ஆகின்றார் இதுதானே இயல்பு வாழ்க்கை. இதை மனிதன் என்று உணர்கின்றானோ அன்றுதான் முதியோர் இல்லக் கட்டிடங்கள் தகர்த்து எறியப்படும்.

தந்தையை புரிந்து கொள்ள தந்தையானால்தான் முடியுமா ? அப்படியானால் பிரமச்சாரிகள் எப்படி புரிந்து கொள்வது ? அப்பா உங்களை விதைத்த திசையை நோக்கி உங்களை நினைவு கூர்ந்து இந்த நாளில் இரு சொட்டு கண்ணீரை காணிக்கை ஆக்குகின்றேன் உங்களை புரிந்து கொள்ள முயற்சிக்காத மடந்தையாகிய உங்கள் மகன்.

நட்பூக்கள் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்.
இன்று தந்தையர் தினத்தை கொண்டாடும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
- தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
கேளொலி

49 கருத்துகள்:

  1. தாயிற் சிறந்த கோவிலுமில்லை
    தந்தை சொல்மிக்க மந்திரமுமில்லை

    வாழ்த்துகள்

    http://ypvn.myartsonline.com/

    பதிலளிநீக்கு
  2. ம்ம்ம்...

    தந்தையர் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும், தந்தையர் தினவாழ்த்துகள் நண்பரே

      நீக்கு
  3. தந்தையர் தின வாழ்த்துக்கள் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களுக்கும், தந்தையர் தினவாழ்த்துகள்

      நீக்கு
  4. யதார்த்த வாழ்வின் நிலையைப் பகிர்ந்தமைக்கு நன்றி. ஒவ்வொருவருக்கும் அமையும் சூழலே அவரவர்களது வாழ்வின் நிலையைத் தீர்மானிக்கின்றன. தந்தை தொடங்கி அனைத்திற்கும் இது பொருந்தும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  5. தந்தை பற்றிய எண்ணங்கள் உங்கள் சிந்தனைகளை எங்கெல்லாமோ இழுத்துச் செல்கிறது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா பிரிவின் வலி இப்பொழுதுதானே புரிகின்றது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  6. தந்தையர்களை சிறப்பிக்கும் பதிவு சிறப்பு! இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களுக்கும் தந்தையர் தினவாழ்த்துகள்

      நீக்கு
  7. அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் தந்தையர் தினவாழ்த்துகள் சகோ

      நீக்கு
  8. அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.
    என் அன்பான அப்பா தன் 50வது வயதில் எங்களை விட்டு பிரிந்தார். அப்பா என்றால் என்றும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் தான் எங்களுக்கு. எப்போது உடல் குலுங்க கண்ணின் ஓரம் நீர் துளிர்க்க சிரிக்கும் அப்பா நினைவில் இருப்பார். கவலை படாதே எல்லாம் அவர் பார்த்து கொள்வார் என்று 50 வயதில் (அம்மாவுக்கு 40 ) அம்மாவிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு மறைந்தவர். அம்மாவே அப்பாவாகவும் இருந்து எல்லோரையும் வாழவைத்தார்கள்.

    பிள்ளைகள் வேலை நிமித்தம் வெளிநாடு, மற்றும் வேறு ஊர்களில் தங்க நேரிடும் போது தனியாக இருப்பதை விட அவர்கள் 24 மணி நேர நவீன வசதி குடியிருப்பில் இருப்பதில் தவறு இல்லை.
    பிள்ளைகளும் நிம்மதியாக வேலை பார்க்கலாம், முதியவர்களும் குழந்தைகள் விடுமுறைக்கு வந்து பார்க்கும் வரை ஆரோக்கியமாய் இருக்கலாம். கால மாற்றம் உடன் இருக்க முடியாத நிலை இதை உணர்ந்தால் நிம்மதி அடையலாம். உடன் இருக்க வேண்டும் என்றால் சொந்த தொழில் செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான அனுபவத்தை கருத்துரை அறிய தந்தமைக்கு மகிழ்ச்சி.

      விஞ்ஞான வளர்ச்சியில் மனிதன் மாறிவிட்டான் இதுதான் அடிப்படை காரணம் இருப்பினும் கூட்டுக் குடும்பத்தில் இருந்த சந்தோஷங்கள் இப்பொழுது யாருக்கும் கிடைக்கவில்லை வருகைக்கு நன்றி

      நீக்கு
  9. மகன் மகள் தினம் கொண்டாட ஏற்பாடு செய்யுங்கள் அய்யா ... பிள்ளைகளின் வலியும் அப்பா அம்மாக்கள் உணர வேண்டும் ... நானும் அனுபவத்தில் எழுதுகிறேன் ... தவறாக எண்ண வேண்டாம் ... https://ethilumpudhumai.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரும் நண்பரே இப்பொழுது கொண்டாடும் தினங்கள் போக வருடத்தில் 65 தினம்தான் பாக்கி இருக்கின்றதாம் கொழுந்தியாள் தினமே வந்து விட்டபோது....

      நீக்கு
    2. இது வேறயா..
      சொல்லவே இல்லை!..

      நீக்கு
  10. தந்தையர் தின வாழ்த்துகள் ஐயா.மனதை வருடிய பதிவுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கு நன்றியும், தந்தையர் தினவாழ்த்துகளும் சகோ.

      நீக்கு
  11. முதியோர் இல்லங்களில் பெற்றோரைச் சேர்ப்பது
    தவறாக எனக்குத் தோன்றவில்லை.

    ஒரு சில நிறுவனங்கள் மிகவும் பொறுப்புடன்
    செயல் படுகின்றன.

    பணம் ஒரு பிரச்சனை இல்லை என்றால்
    நிம்மதியுடன் வாழ இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன.


    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தாத்தா எவ்வளவுதான் வசதிகள் செய்து கொடுத்தாலும் அவைகள் பணத்திற்கான கூலிதானே தாத்தா

      வயதான காலத்ததில், விடை பெறும் நேரத்தில் குழந்தைகள் அருகில் இருப்பது அவசியமான ஒன்றல்லவா... இவைதானே நாளை சந்ததிகளுக்கும் கிடைக்கும்
      வருகைக்கு நன்றி தாத்தா.

      நீக்கு
  12. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் தானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புலவர் ஐயா அவர்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  13. அன்பின் ஜி..

    மனதை நெகிழச் செய்யும் பதிவு..

    அம்மா - ஒரு சொல் கவிதை..
    அப்பா - ஒரு சொல் காவியம்!..

    நமது தளத்திற்கு அன்புடன் அழைக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி வந்தேன் தங்களது தள(ல)ம் கண்டேன் அம்மை அப்பனை.... வாழ்க நலம்.

      நீக்கு
  14. மனதை நெகிழ வைத்த அருமையான பதிவு சகோ. அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் ! நான் அப்பாவை இழந்து 10 ஆண்டுகள் ஆகிறது. நான் அப்பாவின் பாசத்தை நன்கு அனுபவித்திருக்கிறேன். எனது வலைப்பூவில் அப்பாவின் நினைவுகள் என்ற தலைப்பில் பதிவாக கொடுத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களுக்கும் தந்தையர் தினவாழ்த்துகள்

      தங்களது 2014 ஏப்ரல் 7-ம்தேதி பதிவான அப்பாவின் நினைவுகள் பதிவை படித்தேன் சகோ மனதை உருக்கிய பதிவு

      நீக்கு
    2. என்னுடைய பதிவை பார்த்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி சகோ.

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி சகோ

      நீக்கு
  15. தந்தையர் தின வாழ்த்துகள்...சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் தந்தையர் தினவாழ்த்துகள் சகோ

      நீக்கு
  16. நெக்குருக வைத்த பதிவு,இல்லாதபோதுதான் எதனின் அருமையும் உணரப்படுகிறது,அதில் தந்தையின் அருமையும் ஒன்று என்பது முதன்மையானதாய்,,/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே நிழலின் அருமை வெயிலியே தெரிகின்றது.

      நீக்கு
  17. தாயைப் போல தந்தையின் தியாகங்கள் அறியப் படுவதில்லை.
    நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  18. //வாழும் காலத்தில் தந்தையும் மகனும் நண்பர்களைப் போல வாழ்ந்து கடக்க முடியாதா?// - நியாயமான ஆதங்கம். ஏனோ தந்தைக்கும் மகனுக்கும் நல்ல உறவு பெரும்பாலும் அமைவதில்லை. உங்கள் பதிவு இதயத்தை கணக்க வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்துரை மனதுக்கு இதமாக இருக்கின்றது வருகைக்கு நன்றி

      நீக்கு
  19. தந்தையர் நாள் வாழ்த்துகள்! உண்மையில் தந்தைக்கும் மகனுக்கும் ஏனோ தெரியவில்லை ஒரு இடைவெளி இருக்கத்தான் செய்கிறது. அதற்குக் காரணம் மகனுக்கு தந்தையின் பேரில் உள்ள பயமா அல்லது மரியாதையா எனத்தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே எனக்கும் அந்த குழப்பம் வெகுகாலமாக உண்டு

      நீக்கு
  20. நான் தந்தையாகவுமில்லை..என் தந்தை பாசத்தையும் பெற்றதில்லை நணபரே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கணேசர் திருமணம் ஆகாதவர்தானே.... இருப்பினும் எல்லோருக்கும் பெரியப்பாதான்.

      நீக்கு
  21. முற்றத்து முல்லையைன் அருமை தெரியாமல் வாழ்கிறோம்ப. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பது உண்மைதான். ஆனால், இங்கு மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். பெற்றோரும் அதாவது இங்கு தந்தையைப் பற்றி என்பதால் தந்தையும் தன் குழந்தைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். தான் சொல்வதுதான் சரி என்று முயலுக்கு மூன்று கால் என்றும் இருக்கக் கூடாது. குழந்தைகளுக்கும் எவ்வளவோ வேதனைகள் இருக்கின்றன. எனவே நல்ல நட்பு ரீதியான உறவு இருந்தால் மட்டுமே எந்த உறவுமே வலுக்கும். ட்ததந்தை ஒரு சிறந்த ரோல் மாடலாக இருந்துவிட்டால் குழந்தைகள் அவ்வழியே செல்வார்கள். தந்தை குழந்தைகளுக்கும் இடையிலும். அது போன்று குழந்தைகளைச் சரியாக வளர்த்தால் எந்தப் பிரச்சனையும் வராது.

    டாஸ்மாக்கிலேயோ, இல்லை வீட்டிலேயே குழந்தைகள் முன் குடிக்கும் பழக்கம் உள்ள தந்தைகள், புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் (கேரளத்தில் இது மிகச் சாதாரணம், அது போல இப்போது தமிழ்நாட்டிலும் வரத் தொடங்கியிருக்கிறாது பல தந்தைகள் இருந்தால் அந்தக் குழந்தைகளாகப் புரிந்து கொண்டு அவ்வழியில் செல்லாமல் இருந்தால் நல்லது. அதற்காகக் குடிப்பவர்களோம் புகைப்பிடிப்பவர்களோ நல்ல தந்தைகளாக இருக்க முடியாது என்றும் சொல்ல முடியாதுதான்.

    உங்கள் வேதனையையும் புரிந்து கொள்ள முடிகின்றது. எல்லா நாளும் தந்தையர், தாய் தினம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பலரது வீட்டில் தந்தையர்கள் மனைவி மக்கள் முன் குடிக்கின்றார்கள் இதை அவர்கள் தவறென்று உணர்வதில்லை அவர்களுக்கு தனது மகனை கண்டித்து நல்வழிபடுத்தும் யோக்யதை இல்லைதான் வருகைக்கு நன்றி

      நீக்கு
  22. தந்தையார் தின வாழ்த்துக்கள்! "தெளிவு" கவிதையும் நன்று.

    பதிலளிநீக்கு