தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜூன் 05, 2016

லண்டனில், மஞ்சப்பைக்காரன்


இந்த பதிவின் முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக

 

ஜியெம்பி சார் இங்கே பார்த்தீங்களா ?
என்ன ?

முந்தா நாளோடு Expiry Date முடிஞ்சுருச்சு...
அப்படியா...?

எழுந்து சவுச்சாலயம் சென்றவரை...
எங்கே போறீங்க ?
இதோ வர்றேன்...
உள்ளே போனவர் பெரிய பக்கெட்டில் தண்ணீரோடு வந்தார்.

சார் என்ன செய்யப் போறீங்க ?
தலையில ஊத்தி எழுப்பி விடுவோம்.

மெத்தை முழுவதும் நனைஞ்சு போனால் அதுக்கும் பில் போடுவான்.
சரி ஆளை கீழே இழுத்துப் போட்டு தலைல தண்ணியை ஊத்துவோம் நீங்க ஒரு பக்கம் புடிங்க...

இருங்க மண்டை உடைஞ்சிடப் போகுது கீழே ரெண்டு தலையணையை போடுங்க... எதைச் செய்தாலும் ப்ளான் போட்டு செய்யணும் சார்...
கீழே தலையணையைப் போட்டு பெட்ஷீட்டோடு இழுத்து விட கீழே விழுந்தும் குறட்டை சத்தம் வந்து கொண்டு இருந்தது... ஜியெம்பி ஐயா பெட்ஷீட்டை உருவ, கந்தசாமி ஐயா தலையணையை எடுத்து கட்டிலின் மேலே போட்டு விட்டு பக்கெட்டைத் தூக்கி கில்லர்ஜியின் தலையில் ‘’சலப்’’ என்று ஊற்றினார்.
காலை நேரம் 6:15 ஐத் தாண்டியது... பதறி எழுந்த கில்லர்ஜி.....

என்னங்கையா... அதுக்குள்ளே குளிக்க வச்சுட்டீங்க... ? விடிஞ்சுருச்சா ? இதுவும் நல்லதுதான் நான் நேற்று சரியா சாப்பிடாமல் அலாரம் வைக்க மறந்துட்டேன் சரி நான் வெளியே வாக்கிங் போயிட்டு வாறேன்.

‘’கில்லர்ஜி’’
என்னங்கய்யா பதட்டமா இருக்கீங்க ? ஏதும் பிரச்சனையா ?

எங்களுக்கு மேல்ட்மெல்ட் வாங்கிட்டு வந்தீங்களே... Expiry Date பார்த்தீங்களா ?
என்னாச்சு ?

என்னாச்சா ? இங்கே பாருங்க... முடிஞ்சு போய் ரெண்டு நாளாச்சு ?
ஆஹா... நான் முதல்தடவை குடிக்கும் பொழுது மிஷினில் 2 டாலர் போட்டுருந்தான் இப்பத்தான் புரியுது...

இப்பத்தான் புரியுதா ? கிளம்புங்க... இப்பவே அந்தக் கடைகாரனைப் புடிச்சு நகரும் நுகர்வோர் நீதி மன்றத்துல வழக்குப் போட்டு பணத்தை வசூல் பண்ணிடுவோம் லண்டன் வந்த எக்ஸ்ட்ரா செலவை சரி கட்டிடலாம்.
கில்லர்ஜி நீங்க ரெண்டும் ஒரு டாலர்னு சொன்னீங்களே... ?

ஆமாய்யா.... அவன்தான் ஏமாற்றி விட்டான்.
சரி கிளம்புங்க ஷாப்புக்கு போவோம்...

ஐயா..... அது.... வந்து....
என்ன வந்து.... ?

அது கடையில்லை கடைக்குப் பின்னாலே ஒருத்தன் மஞ்சப்பையில வச்சு வித்துக்கிட்டு இருந்தான் டாலருக்கு ரெண்டுன்னு தமிழ்ல கூவிக்கிட்டு இருந்தான் அவன்ட்டதான் வாங்குனேன்....
தமிழ்ல கூவுனானா ? லண்டன்ல வந்து இப்படி மஞ்சப்பைக்காரன்ட்ட ஏமாந்து இருக்கீங்களே..... கில்லர்ஜி

ஐயா..... இப்ப அவன் அந்த இடத்தில் நிற்பானா ?
எப்படி நிற்பான் ? நல்ல மஞ்சமாக்கான்னு நினைச்சு உங்களை மாவரைச்சுட்டுப் போயிட்டான் இப்ப எங்களுக்கு மாவு ஓடிக்கிட்டு இருக்கு.

என்ன... கில்லர்ஜி ? உங்களை விபரமானவருன்னு நினைச்சேன் பாருங்க ச்சே இன்றைக்கு மியூசியம் போகலாம்னு நினைச்சேன் நாளைக்கு இந்தியாவுக்கு ஃப்ளைட் ஏறணும் எங்கணக்கு தப்பா போயிடுச்சே...
ஜியெம்பி சார் நீங்க கணக்குல வீக்குதான்

எங்கேயோ தவறு நடந்துருச்சு ஐயா.
எங்கேயோவா ? 2 டாலர் விலையுள்ள டின்னை டாலருக்கு ரெண்டு’’ன்னு வித்துருக்கானே... அப்பவாவது கொஞ்சம் யோசிக்க வேணாம் ? பதிவு எழுதுறதுக்கு மட்டும் குண்டக்க, மண்டக்க யோசிக்கிறீங்க ?

கந்தசாமி சார் எனக்கு மாந்தோப்பு கிளியே படத்துல சுருளிராஜன் காமெடி ஞாபகத்துக்கு வருது...
ஆமா சார் உங்களுக்கு இது காமெடி டைம்’’மா... ?

சொன்னவர் மீண்டும் Final லாக சவுச்சாலயம் சென்றார் அவர் வந்ததும், இவர் இவர் வந்ததும் அவர்...

என்ன ஜியெம்பி சார் கில்லர்ஜி எங்கே ?
இங்கேதானே இருந்தாரு... லேசா அயர்ந்துட்டேன் காணோமே... இங்கே பதிவர் கோயில் பிள்ளை பக்கத்துல அங்காளம்மன் நகர்ல இருக்கிறதாக பார்க்க போகணும்னு நேற்று சொன்னாரு...

முடுமை வாக்கிங் போகணும்னு சொல்லுச்சுல சுத்திட்டு வரட்டும் காஃபியில பேதி மாத்திரையை கலந்து வைப்போம் நான் லேசா சாயிறேன் டயர்டா இருக்கு அப்படியே மூணு காஃபி ஆர்டர் பண்ணுங்க சார்..
வேண்டாம் சார் ரெண்டு பேருக்கே Toilet House Fullலா இருக்கு இதுல அவரும் சேர்ந்தால் விளங்குனாப்பலதான் கந்தசாமி சார் மேல்ட்மெல்ட் விசயத்தை இத்தோடு மறந்திடுங்க... இந்தியாவுக்கு போயி பதிவுல எழுதிடாதீங்க நமக்குத்தான் மானக்கேடு கில்லர்ஜி கிட்டேயும் சொல்லி வைக்கணும்.

ஆமா சார் பெரிய சரித்திர நிகழ்வு கரந்தை ஜெயக்குமார் மாதிரி எழுதுறதுக்கு நீங்க எழுதாமல் இருக்கணும், முதல்ல இந்த முடுதாரு வரட்டும் எழுதக் கூடாதுனு சொல்லி வைக்கணும்.

சிறிது நேரத்தில் டிங்டாங் சப்தம் கேட்டு காஃபி வருகிறதென்று ஆவலோடு கந்தசாமி ஐயா பட்டனைத்தட்ட கதவைத் திறந்து கொண்டு கில்லர்ஜி கையில் ஒரு ப்ளாஷ்டிக் பேக்.

ஐயா சந்தோசமான செய்தி......
என்ன ?

நான் அவனைப் புடிச்சிடலாம்னு அதே பார்க்குக்கு போனேன் கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல வழியில் முட்டுச்சந்துல அதே தமிழ்க்குரல் டாலருக்கு ரெண்டு, டாலருக்கு ரெண்டுன்னு வேகமாப்போயி அவன் சட்டைக் காலரைப் புடிச்சு வாடா போலீஸ் ஸ்டேஷனுக்கு அப்படின்னு கூப்பிட்டேன் அவன் பயந்துக்கிட்டு வெளியில சொல்லிடாதே... வேணும்னா இன்னும் ரெண்டு தாரேன் டாலர் வேண்டாம்னு சொன்னான் நான் விட்ருவேனா ? நாங்க லாட்ஜ் ரூம்ல மூணு பேர் இருக்கோம்னு அவனை மிரட்டி மூணு டின் கொடுடா’’ன்னு வாங்கிட்டு வந்துட்டேன் எப்பூடி ?
? ? ?
? ? ?

ஐயாக்கள் இருவரும் கண்களால் பேசிக்கொன்றார்கள்.

முற்றும்.

காணொளி
இப்பதிவு நான் எழுதி வைத்து ஒரு வருடமாகப் போகின்றது நேரில் அனுமதி கேட்போம் என்று இருந்தவன் திடீரென்று மின்னஞ்சலில் கேட்டு விட்டேன் பதிவின் முக்கிய அம்சம் சவுச்சாலயம் விடயத்தை நான் முன் கூட்டியே அறிய வைத்தும் இன்முகத்துடன் ஏற்று முன்மொழிந்த ஐயா திரு. ஜியெம்பி அவர்களுக்கும்...

அதை உடன் வழிமொழிந்த ஐயா முனைவர் திரு. பழனி கந்தசாமி அவர்களுக்கும், இப்பதிவில் ஏதாவதொரு இடத்தில் தங்களது மனதை சஞ்சலப்படுத்தி இருந்தால் ? அதற்காக இந்த பரந்த வலையுலக மன்றத்தில் ஐயாக்கள் இருவரிடமும் எமது மன்னிப்பு கோரலோடு எமது நெஞ்சார்ந்த நன்றியும் - கில்லர்ஜி

40 கருத்துகள்:

  1. ஆகா... எல்லாருமா கூடிப் பேசி நாடகம் ஆடிட்டாங்களே.. சோலந்தூர் சோசியர் அன்னைக்கே சொன்னார்... நாம தான் கேக்கலை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அவரு நம்ம சோசியராச்சே நம்மளைப்பற்றி தவறாக சொல்லி இருக்க மாட்டாரே...

      நீக்கு
  2. இதென்ன கில்லர்ஜி, லண்டனுக்குப் போறதுங்கிறது இதுதானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இது பயணத்தின் சிறு பகுதிதானே மற்ற விடயங்கள் புகைப்படங்கள் எல்லாம் வெளியிடவில்லையே.....

      நீக்கு

    2. 'லண்டனுக்கு போறது' என்றால் என்ன என்று முனைவர் ஐயா அவர்கள் இலை மறை காயாக விளக்கிவிட்டார். நீங்கள் அதை புரிந்துகொள்ளவில்லை!

      மூத்த பதிவர்கள் இருவரின் ஒப்புதலோடு இந்த நாடகத்தை அரங்கேற்றி சிரிக்க வைத்தமைக்கு நன்றி!

      நீக்கு
    3. வருக நண்பரே நானும் குழம்பிப் போய்தான் இருக்கின்றேன்

      நீக்கு
  3. ரசித்தேன் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  4. மூன்று பதிவுகளையும் ஒரு சேர படித்தேன்..... செம கலாட்டா...

    பதிலளிநீக்கு
  5. அங்கேயுமா.... மஞ்சப்பை....???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பரே நம்ம ஆளுன்னு நினைச்சு ஏமாந்துட்டேன்.

      நீக்கு
  6. மஞ்சள் பைகள் எங்கும் நிறைந்திருக்கிறதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மைதான் வருகைக்கு நன்றி

      நீக்கு
  7. மதுரை வரும் போது கிப்ட் எதுவும் கொண்டு வராதீங்க ஜி:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொல்றதைப் பார்த்தால் ? உங்களுக்கும் ‘’மேல்ட்மெல்ட்’’ வேணும் போலயே...

      நீக்கு
  8. மறுபடியும்.. அதுவும் மூன்று டின்னா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே... மூன்று பேர் என்றால் கணக்கு சரிதானே..

      நீக்கு
  9. ஒ1 மஞ்சப் பை இலண்டனிலுமா?...ஆகா நல்ல பகிடி.........
    இரசித்தேன் சகோ....
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  10. ஹிஹிஹிஹி, சொல்லி வைச்சு அடிச்சுட்டீங்க மூணு பேரும்! அருமை! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூணு பேரும் ஒன்றாகத்தானே போனோம் வருகைக்கு நன்றி சகோ

      நீக்கு
  11. தமிழன் என்று சொல்லாமல் சைனாக்காரன் என்றிருந்தால் நன்றாய் இருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தமிழன் பிறநாட்டானிடம் ஏமாந்து விட்டான் என்று சொல்வதை நான் என்றுமே விரும்புவதில்லை கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாததுபோல் பேசுவதுதானே தமிழனின் மரபு குணம் மேலும் மஞ்சப்பை விவகாரம் தமிழில்தான் பொருந்தி வந்தது இருப்பினும் மேல்ட்மெல்ட்டின் தயாரிப்பு Made in China தான் வருகைக்கு நன்றி கவிஞரே.

      நீக்கு
  12. லண்டனுக்குப் போவது என்ன என்பதை இந்தப் பதிவு மூலம் தெரிந்துகொண்டேன் வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி

      நீக்கு
  13. மஞ்சல்பை எங்கும் கலவரத்தை தரும் என்பதை அறிந்துகொண்டேன்))))

    பதிலளிநீக்கு
  14. நல்ல வேளை முற்றும் போட்டுட்டீங்க...
    ஹ ஹா மூன்று பதிவுகளையும் ரசித்தே
    படித்தேன் நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்றையும் படித்தமைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  15. அந்த மஞ்சப்பைக்காரன கூட்டிக்கிட்டுப் போனதே நீங்கதானே ஜி! அதைச் சொல்லாம ரகசியாமாக்கிட்டீங்களே!!!! ஹஹஹஹ (ஹப்பா நல்ல காலம் இந்த வில்லங்கத்தார் வில்லங்கம்னு எதுவும் இல்லை...ஹிஹிஹி)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளை லேட்டாக வந்து கருத்துரை போட்டீங்க இல்லையென்றால் ஐயாக்கள் சண்டைக்கு வந்து இருப்பார்கள்

      நீக்கு
  16. நண்பா,

    நல்ல பதிவு. ஒரு சின்ன திருத்தம், நான் யார்கிட்டேயும் சரியான விலாசம் கொடுப்பதில்லை. எனது இருப்பிடம் அங்காளம்மன் நகர் இல்ல , யார் கிட்டேயும் சொல்லிடாதீங்க.. நான் இருப்பது, வங்காளம்மன் நகர் , 8 ஆவது வார்டு மூணாவது குறுக்கு சந்து, கூர் கட்டு மார்க்கட்டு அருகில்.

    அங்க வந்து எந்த மஞ்சப்பைக்காரன் கிட்ட கேட்டாலும் சரியா கொண்டாந்து விட்டுடுவாங்க.


    அடுத்தமுறை வந்தா என்னை அவசியம் சந்திக்கணும் தெளிவாக.

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே ஆஹா இது முன்னாலயே சொல்லி இருக்ககூடாதா.... தேவையில்லாமல் குதிரை வண்டிக்காரனுக்கு செலவு செய்து விட்டேன்.

      நீக்கு
  17. மூன்று பகுதிகளையும் இன்றைக்குத்தான் படித்தேன் கில்லர்ஜி. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. நல்ல, ஆனால் புண்படுத்தாத நகைச்சுவை.

    கடைசிவரைல மேல்ட்மெல்ட் என்ன என்றே புரியவில்லை. ஏதேனும் எனெர்ஜி டிரிங்கா?

    இன்றைக்குத்தான் 'சவுக்காலயம்' என்ன என்று அறிந்துகொண்டேன்.

    நல்ல எழுத்துத் திறமை கில்லர்ஜி. பாராட்டுக்கள்.

    மற்ற இரண்டு இடுகையிலும் பின்னூட்டமிடலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடன் படித்து கருத்திட்டமைக்கு நன்றி நண்பரே மூன்றுமே ஒரே பதிவுதான் ஆகவே பின்னூட்டம் இதுவே நன்று.

      //கடைசிவரை மேல்ட்மெல்ட் என்ன என்றே புரியவில்லை//

      யாருக்கு தெரியும் ? எனக்கு தெரிந்தால் இந்நேரம் அமெரிக்காவில் இருந்திருப்பேனே....
      (பேரே உல்டா முல்டாதானே)

      நீக்கு
    2. முனைவர் ஐயாவையும் ஜிஎம்பி ஐயாவையும் நேரில் பார்த்துப் பேசியதில்லை. உங்க பதிவைப் பார்த்து அவங்களும் ஜாலியா பேசறவங்கதான்னு நினைக்கறேன்.

      உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இந்த எனர்ஜி டிரிங்க்ஸ் பத்தி எழுதி வாரணும்.

      நீக்கு
    3. வருக நண்பரே எனர்ஜி டிரிங்க்ஸ்க்கு நான் எங்கே போவேன் ? அது கற்பனைதானே....

      நீக்கு