தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜூலை 10, 2016

மனசுக்கு வருத்தமாயிருக்கு


சாண் ஏறினால் முழம் வழுக்கும் என்பதுபோல் எதைத் தொட்டாலும் விளங்குவது இல்லை விறகு கடை வைத்தேன் தீ பிடிச்சு விறகெல்லாம் கரியாப்போச்சு அப்பா திட்டினார் காசெல்லாம் கரியாப்போச்சே... சரின்னு கரி எல்லாம் வித்துப்புட்டு பொரி வியாபாரம் செய்வோம்னு போனால் காத்தடி காலம் பொரியெல்லாம் பறந்து போயிடுச்சு

அப்பாவுக்கு வேண்டப்பட்டவருடைய கம்பெனியில் வேலைக்கு சேர்த்து விட்டார். இந்த டேபிளில் இருந்து அந்த டேபிள்லில் இருக்கிறவருக்கு சாதாரண பேப்பர்தான் அதைக் கொடுக்ககூட என்னை கூப்பிடுறாங்க கடையில போயி டீ வாங்கிட்டு வரச்சொல்றாங்க, கையில இருக்கின்ற குமுதம் வாங்கி நாலு நாளாகியும் படிக்க முடியலை போதாக்குறைக்கு மேனேஜர் எதற்கெடுத்தாலும் எரிஞ்சு, எரிஞ்சு விழுந்தாரு கல் எடுத்து எறிஞ்சு மண்டையை மட்டும் உடைச்சிட்டு வந்துட்டேன்

நண்பன் சொன்னான் சென்னைக்குப் போ சினிமாவுல நடிச்சு கோடி கோடியாக சம்பாரிக்கலாம்னு சரின்னு அப்பா உறங்கும் பொழுது பீரோவுல பத்தாயிரம் ரூபாய் மட்டும் எடுத்துக்கிட்டு சென்னை போனேன் பஸ் ஸ்டாண்டில் இறங்கி சாப்பிட்டு விட்டு டாக்ஸி பிடித்தேன் ஏவிஎம் ஸ்டூடியோ போ என்றேன் ஸ்டூடியோ கேட் வாசலில் இறங்கியதும் டாக்ஸிக்கு பணம் கொடுத்து விட்டு உள்ளே போனேன் வாட்சுமேன் என்ன ? என்றான் சினிமாவுல நடிக்க வந்துருக்கேன் என்றேன் படக்குன்னு கழுத்தைப்பிடிச்சு வெளியே தள்ளிட்டான் ஏன் இவன் இப்படி நடந்துக்கிறான் சரி இரவு லாட்ஜில் தங்கி விட்டு நாளை காலை வாஹினி ஸ்டூடியோ போவோம் மறுநாள் வாஹினியிலும் அதே மாதிரி, அடுத்தநாள் சத்யா ஸ்டூடியோவிலும் சொல்லி வைத்தது மாதிரி எனக்கென்னவோ எல்லா வாட்சுமேன்கள் மீதும் சந்தேகம் வந்துடுச்சு ஐந்து நாட்கள்கூட ஆகவில்லை பணம் 250/ மட்டுமே மிச்சம் ஊருக்கு டிக்கெட் எடுக்க சரியாக இருந்துச்சு பஸ் ஏறி ஊருக்கு வந்துட்டேன்

துபாய்க்கு விசா எடுத்து அங்கேயாவது ஒழுங்கா வேலை செய்து முன்னேறிக்கொள் அப்படினு அப்பா அனுப்பி வச்சார் கம்பெனிகாரங்க பாஸ்போர்டை வாங்கி கொண்டு நாளைமுதல் டூட்டியில் ஜாய்ண்ட் பண்ணிக்கோ ஐந்து மணிக்கு வா என்றார்கள் பரவாயில்லையே நம்ம ஊருல பத்து மணி வரைக்கும் தூங்குவோம் இங்கே அதைவிட கூடுதலா தூங்கலாம் போலயே சந்தோஷமாக தூங்கி எந்திரிச்சு சாயங்காலம் ஐந்து மணிக்கு போனேன் ஆறு மணிக்கு பிளைட் ஏற்றி திரும்பவும் திருச்சி அனுப்பிட்டாங்கே

நான் என்னதாங்க செய்யிறது ? மனசுக்கு ரொம்ப வருத்தமாக இருக்கு இதைப்படிக்கிற நீங்களாவது ஒரு நல்ல ஐடியாவை சொல்லுங்க... உங்க ஐடியாவுக்காக காத்துக்கிட்டு திருச்சி ஏர்போட்டுலயே நிக்கேன் - கில்லர்ஜி

49 கருத்துகள்:

  1. ஹா..... ஹா.... ஹா... அப்படியே மறுபடி பிளைட் பிடிச்சு ஒபாமா கிட்டப்போய் வேலைக்குச் சேர்ந்துடுங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே அவரு பஞ்சுவாலிட்டி எதிர்பார்ப்பாரே.... நமக்கு ஒத்து வராது.

      நீக்கு
  2. அட சாயங்காலம் அஞ்சு மணிக்குப் போனீகளா! :)

    பலருக்கு வேலை செய்யப் பிடிப்பதில்லை...... சும்மா இருப்பது பிடித்திருக்கிறது. வடிவேலு ஒரு படத்தில் சொல்வதுபோல சும்மா இருப்பதும் ரொம்பவும் கடினமான விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி சொன்னபடி அஞ்சு மணிக்கு போனேன் பிறகு ஏன் அனுப்பி விட்டாங்கே.... ? அதான் புரியலை.

      நீக்கு
  3. கையில மிச்சம் ஏதும் காசு இருந்தா -
    அதையே முதலா போட்டு ஒரு மடம் ஆரம்பிக்கலாம்..

    கோட்டையானந்தா குஜால் சுவாமிகள் (!?...) அப்படின்னு -
    ஒரேஒரு பிளக்ஸ் போதும்.. சும்மா பிச்சிக்கிட்டுப் போகும்..

    ஏதாவது ஏடாகூடம் ஆகி விட்டால் -

    நான் இன்னும் பிறக்கவேயில்லை!.. - அப்படின்னு சொல்லிட்டு தப்பித்துக் கொள்ளலாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ரொம்ப காலமாகவே எனக்கும் இப்படியொரு திட்டம் இருக்கு இப்பொழுது நீங்களும் சொல்லவும் எமது எண்ணங்கள் சிறகடித்து பறக்கின்றது.

      நீக்கு
  4. உளப் (மனப்) பலம் - அது தான்
    தன்னம்பிக்கை இருந்தால்
    எங்கும் எதிலும் எப்போதும்
    வெற்றி தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துப் பகிர்வுக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  5. அந்த ஸ்டுடியோக்கள் தரைமட்டமாகி பல வருஷம் ஆகிப் போச்சே !உங்க வயசுதான் இப்போ என்ன :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி வயசு சொன்னால் சான்ஸ் கிடைக்காது...

      நீக்கு
  6. வீட்டிலேயே இருந்துவிடலாம். “தண்டச்சோத்து முண்டம்” என்ற அப்பாவின் திட்டு பழகிப்போய்விடும்!

    ஓர் ஆச்சரியம்...‘லேப்டாப்புடன் மரமேறி’ படத்தை எப்படி உருவாக்கினீர்கள்?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி நண்பரே
      இப்படி வேலைகள் நான் பெயிண்டிங் மற்றும் ஃபோட்டோ ஷாப்பில் செய்திருக்கின்றேன் என்றாலும் இது நான் செய்ததல்ல இணையத்தில் கிடைத்தது.

      ஒரு தாழ்மையான விண்ணப்பம் – தங்களது தளத்தில் கருத்துப்பெட்டி திறந்து வைக்கவும்
      அன்புடன் - கில்லர்ஜி

      நீக்கு
  7. லேப் டாப்புடன் மரமேறி மாதிரியான படங்களை எப்படி உருவாக்குவது என்று என் போன்ற மக்களுக்கு கிளாஸ் எடுக்கலாமே
    Photo Sooper !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, வாங்க ஒரு படத்துடன் மற்றொரு படத்தை இணைப்பதற்கு பெயிண்டிங் வழியே போவது நல்லது இணைத்த பிறகு அதை Microsoft Office Picture Manager மூலம் போய் டிம்-ப்ரைட் சரியான தேவைக்கு செய்தால் நாம் செய்த சித்து வேலைகளின் தவறுகள் 90 % மறைந்து விடும் அல்லது Photo Shop மூலம் சென்று மாற்று முறையில் தவறுகளை தெரியாமலும் செய்து விடலாம்.

      Nero Cover Designer மற்றும் Nero Photo Snap Viewer வழியே போனால் புதிய புகைப்படத்தைக்கூட சிதிலமடைந்த கருப்பு-வெள்ளை பழைய படம் போலவே செய்து விடலாம்.

      Photofunia வழியே போனால் நமது புகைப்படத்தை பேனர், போஸ்டர், கட்டவுட் இப்படி விதவிதமாக செய்ய வழிகள் கிடைக்கும் மேலும் அழகில்லாதவர்களைகூட அழகானவர்களாக மாற்றமுடியும், என்னைக்கூட அழகில்லாதவனாக மாற்றமுடியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

      மேலும் 100 % Natural லாக வரவேண்டுமெனில் யாராவது 40 வயது முதல் 65 வயது வரையிலான தென்னைமரம் அல்லது பனைமரம் ஏறுபவர்களிடம் நமது HP, SAMSUNG, அல்லது Toshiba போன்ற Laptop ஐ கொடுத்து மையத்தில் இருந்து கொள்ளச் சொல்லி Canon X800-100-E Camera மூலம் 90 % கோணத்தில் ஃபோகஸ் செய்து புகைப்படம் எடுத்தால் மிகவும் அற்புதமாக இருக்கும் இதுவே சுலபமான வழி – கில்லர்ஜி

      குறிப்பு – எனக்கும் சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு பக்குவம் இல்லை நான் சித்தன் போக்கு 7 O'clock என்று வலைத்தளத்துக்குள் போகின்றவன்.

      நீக்கு
    2. நானும் கணினி விரிவுரையாளராக இருந்தமையால், தங்கள் கற்பித்தல் எப்படி என அறிய முனைந்தேன். சிறந்த வழிகாட்டல்.
      தங்கள் சகலகலா வல்லைமையைப் பாராட்டுகின்றேன்.

      தாங்கள் சுட்டிய Graphics Application எல்லாமே சிறந்தது.
      வெட்டி, ஒட்டுதல், மற்றும் Layers ஒழுங்கு படுத்துதல் தெரிந்தால் நன்று.
      இதற்கு முன் image size சமனாகவுள்ள படங்களில் தான் வெட்டி, ஒட்டுதல் கையாள வேண்டும். அவ்வேளை Zoom ஐப் பெரிதாக்கிச் செய்தால் நன்று.

      நீக்கு
    3. வருக நண்பரே எனக்கு முறையாக தெரியாது நானாக முயன்று ஏதோவொரு வழியில் சென்று எனது வேலையை முடித்து விடுவேன் மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  8. சிரிப்பு வந்து உங்களிற்குத் தர நினைத்த ஐடியா மறந்து போச்சு சகோ
    நன்று சகோதரா நேரமிருக்கும் போது
    என் தளத்திலும் கருத்திடுங்கள். நன்றி.
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நல்ல ஐடியா கிடைக்குபோது மறக்காமல் வந்து சொல்லுங்கள்
      நான் தங்களது பதிவைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன் சகோ.

      நீக்கு
  9. நீங்களே நாலு பேருக்கு ஐடியா கொடுக்கிறவர்...ஆதனாலே...நீங்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே டெக்னிக்கலாக சமாளிக்கின்றீர்களே...

      நீக்கு
  10. வீட்டுக்கு வீடு வாசப்படி!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா உண்மைதான் வருகைக்கு நன்றி

      நீக்கு
  11. ஹா... ஹா...
    அடுத்த பிளைட்ல அமெரிக்கா போங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே அமெரிக்க 'விசா' வாங்கி பீரோவில் வைத்தேன் 'சாவி' தொலைந்து விட்டது

      நீக்கு
  12. நல்ல ஐடியாவா.... நல்லா கதையை கெடுத்தி்ட்டிங்க போங்க நண்பரெ... நீங்க கேட்டுட்டீங்க...நா..... கேட்கல... ஹி.ஹி.ஹி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே உங்களுக்கும் கேட்கணும்னு தோனுச்சோ... ?

      நீக்கு
  13. பேசாமல் வலைப்பூ எழுதுங்கள்! அதுதான் உங்களுக்கு ஏற்ற வேலை! ;-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைப்பூ பிழைப்புக்குள் அடங்காதே நண்பரே...

      நீக்கு
  14. இப்படிக்கு - ஏறத்தாழ உங்கள் நிலைமையிலேயே இருக்கும் இன்னொருவன்.

    பதிலளிநீக்கு
  15. அப்படியே ஏர்போர்ட்லயே துண்டை விரிச்சு உக்காந்திடுங்க. தினமும் எப்படியும் ஆயிரம் இரண்டாயிரம் தேறும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் ஐயாவின் தெய்வீக வாக்கு நன்று.

      நீக்கு
  16. ஹாஹா, படம் நல்லா இருந்தது. ஆனாலும் எல்லோரும் சொன்னதுக்கப்புறமாத் தான் லாப்டாப்பையே கவனிச்சேன்! ஹிஹிஹி! திருச்சி ஏர்போர்ட்டிலா நிக்கறீங்க? அங்கேருந்து நம்ம வீட்டுக்கு வாங்க! அரை மணி நேரம் தான் ஆகும். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிட்டி பஸ்ல ஏறக்கூட காசு கொடுக்காமல் ஃப்ளைட்ல ஏற்றி விட்டுட்டாங்களே....

      நீக்கு
  17. வணக்கம்
    ஜி

    நீண்ட நாள் வலைப்பக்கம் வந்து இனி வருகை தொடரும் எல்லாவற்றுக்கும் மன உறுதி வேண்டும் தென்னை மரத்தில் இருந்து லப் பார்ப்பது எவ்வளவு சுகம்நெற்வேக் அதிகமா கிடைக்குமோ.?ஹீ...ஹீ....த.ம9
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆயுதப்பூ சிறுகதை நூல் வெளியீடு.-மலேசியா-சிங்கப்பூர...:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை நண்பரே அவர் தேங்காய் வெட்டியதும் கவுண்டிங் அப்டேட் செய்த பிறகுதான் கீழே இறங்குவாராம்

      நீக்கு
  18. நீங்க வேலை செய்ய லாயக்கில்லை! பிறருக்கு வேலை கொடுக்க லாயக்கானவருன்னு தோணுது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா உங்களுக்கு வித்தியாசமாக தோன்றி இருக்கின்றதே நண்பரே

      நீக்கு
  19. பிறரிடம் வேலைபார்க்க பல தகுதிகள் வேண்டும் இல்லாவிட்டால் ஏதாவது தொழில் செய்வதுதான் சிறந்தது அங்கும் சில கட்டுப்பாடுகள் வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா உண்மைதான் தங்களின் கருத்துப்பகிர்வுக்கு நன்றி

      நீக்கு
  20. ஹஹஹஹஹ் கில்லர்ஜி இந்த மாதிரி பதிவுகள் போடுங்கள் ஜி...அதுதான் உங்களுக்கு ஏற்ற வேலை..சரி அது ஒரு புறம் இருக்கட்டும்....

    உங்களுக்கு ஒரு நல்ல ஐடியா கொடுக்கறேன்..ஏர்போர்ட்ல இருந்து வெளில வாங்க...நெத்தில விபூதி அடிச்சுக்கங்க...காவி உடை அது இல்லைனா லும் பரவால்ல,அங்க உக்காந்து கண்ணை மூடி ஜபிக்கறா மாதிரி இருந்தீங்கனு வைங்க...அப்படியே ஜபிக்கும் போதே சத்தமா என்ன நடக்கப் போகுதுனு ஏதாவது உளறுங்க. நாலு பேர் கண்டிப்பா சேருவாங்க...கதை வுடுங்க...பைசா கிடைக்கும்...காவி உடை...ஏர்ப்பொர்ட்டுக்கு வரும் வி ஐ பிஸ்/அரசியல்வாதிகள் உங்ககிட்ட ஆரூடம் கேப்பாங்க....நீங்க அதை நல்லா யூஸ் பண்ணிக்கங்க....நீ இப்படி இருந்தாதான் மக்கள் உன்னை அடுத்த தலைவனா எடுத்துக்குவாங்கநு....பணமும் கிடைக்கும்.....செல்வாக்கும் கிடைக்கும்...அப்புறம் என்ன எல்லா நாட்டு ப்ரசிடெண்டும் உங்ககிட்டா வந்துருவாங்க...அதுவும் ஜி க்கு இருக்கும் மவுசு.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க எனக்கும் நீங்கள் சொல்வது நல்ல ஐடியாவாக இருக்கின்றது முயற்சிக்கிறேன்
      வேற ஏதும் மனசுக்குள்ளே திட்டம் இல்லையே.,..?

      நீக்கு
  21. எனது யோசனை ஊருக்கு திரும்பப் போய் விவசாயத்தை ஒழுங்காய் செய்வதுதான்!

    திருமதி அபயா அருணா அவரக்ளின் பின்னூட்டதிற்கு பதில் அளிக்கையில் 100 விழுக்காடு அந்த படம் இயற்கையாக இருக்க தாங்கள் தந்த யோசனையைப் படித்து விழுந்து விழுந்து சிரித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி யோசனை உண்மதானே...

      நீக்கு