தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், அக்டோபர் 11, 2016

தலைவர் வாழ்க !



சாலையில், சிலைகளாய்  மாலையுடன் தலைவர்கள்.

சாம்பசிவம்-
நாட்டில் சிலைகள் பெருகி வருவதும் அதற்கு மாலைகள் இடுவதும் வழக்கமாகி விட்டதே இதற்கு காரணம் என்ன ?
Killergee-
விஞ்ஞான வளர்ச்சிதான்.
சாம்பசிவம்-
என்னய்யா நீரு மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுறீரு கல்லுல வடிச்ச சிலைக்கு, செடியில வளர்ந்த பூவை மனுஷன் மாலையா போடுறான் இதுக்குள்ளே என்னய்யா விஞ்ஞானம் இருக்கு ?
Killergee-
விஞ்ஞானம் வளரத் தொடங்கி என்று மனிதன் புகைப்படக் கருவியை கண்டு பிடித்தானோ அன்றிலிருந்தே மனிதன் தன்னை அழகு படுத்திக் கொண்டும், புகைப்படம் எடுத்தும், அதை பிறரிடம் வெளிப்படுத்திக் கொண்டும், தற்பெருமையடித்துக் கொள்ளத் தொடங்கினான். போதாக்குறைக்கு வீடியோ என்ற பெயரில் நிழல் செயல்தடம் வேறு, பத்திரிக்கைக்காரர்கள் இவர்களை போட்டோ எடுத்தும், வீடியோ எடுத்தும் விளம்பரப்படுத்தி அவர்கள் அதை வியாபாரமாக்கி பணம் உண்டாக்குகிறார்கள். தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவதை போட்டோ எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ கூடாது, அதனால் தெய்வகுற்றம் ஏற்பட்டு விட்டது. என்று அரசாங்கம் இதற்கு தடைச்சட்டம் கொண்டு வந்தால் ? எந்தவொரு அரசியல்வாதியும் இதைச் செய்ய மாட்டார்கள். இதனால் ஜாதிப் பிரச்சினைகள், சண்டைகள் ஒழிவதோடு, ஜாதிச் சங்கங்கள் தானாகவே கலைந்து விடும், நாளடைவில் சிலைகள் அகற்றப்பட்டு போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் இருக்கும். சிலைக்கு மாலை அணிவதுதான் தலைவருக்கு செலுத்தும் மரியாதை, என்று கருதுவதை விட்டு, விட்டு அந்த தலைவர்களின் வாரிசுகளுக்கு பொருளாதார உதவி செய்தால் அந்த தலைவர்களின் குடும்பங்களுக்கு ஆத்மதிருப்தி கிடைக்கும் தலைவருடைய ஆத்மாவுக்கும் திருப்தி கிடைக்கும். இவை நடைமுறைக்கு எப்போது வரும் ? அரசியல்வாதிகள் வரும்போது, அவர்களுக்கு பின்னால் ஒரு கூட்டம் இறந்துபோன தலைவர்கள் சிலைக்கு பக்கத்தில் நின்று கொண்டு இறந்தவருக்கு மௌனஅஞ்சலி செய்யாமல், இங்கிதம் தெரியாமல் அரசியல்வாதிகள் தரும் பணத்திற்காக 'தலைவர் வாழ்க' என்று சொல்லும் அறியாமைவாதிகள் இருக்கும்வரை இது தொடரும். மேலும் இனி வரும் காலங்களில், தலைவருடைய வாரிசுகளுக்கு உதவ வேண்டிய அவசியம் ஏற்படாது என்றே கருதுகின்றேன். காரணம் இப்பொழுது இந்தியா முழுவதும் வாரிசு அரசியல்தான் நடந்து கொண்டு இருக்கிறது. அரசியல்வாதி மகன் அரசியல்வாதி, நடிகர் மகன் நடிகர், நடிகை மகள் நடிகை, கிரிக்கெட்காரர் மகன் கிரிக்கெட்காரர், கூலிக்காரன் மகன் கூலிக்காரன், தொழிலாளி மகன் தொழிலாளி, இதனால் முதலாளி மகன் முதலாளியே இந்நிலை, தொடர்வதற்கு யார் காரணம் ? கூலிக்காரனும், தொழிலாளியும் சிந்தனை உணர்வு இன்றி மதுவுக்கு அடிமையாகி வெளியுலகை காணாது வீழ்ந்து கிடப்பதுதான், இதனால் அவன் சந்ததியும் இதே வழியில் சென்று கொண்டே இருக்கிறது. இந்த மானி(ட்)டர்களுக்கு, வீழ்வது தவறல்ல வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு என்று யார் செவிட்டில் அறைந்து செவியுரைப்பது  ? 
சாம்பசிவம்-
என்னய்யா இது எங்கேயோ கொண்டு போயிட்டீரு நீரு
எப்பவுமே இப்படித்தானா.. இல்லே இப்படித்தான் எப்பவுமா ? 

34 கருத்துகள்:

  1. ஆகா
    தாங்கள் இப்படித்தான் எப்பவுமே, இல்லை இல்லை எப்பவுமே இப்படித்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  2. . சில நேரங்களில் எனக்குத் தோன்றுவது கில்லர்ஜி நினைக்கும் வேகத்தில் எழுத நினைக்கிறார் அதனால் இப்படித்தான் எப்பவும் எப்பவும் இப்படித்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நான் இறுதிவரை இப்படித்தான் வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. ஆம், தகுதியானவர்களின் சிலைகளின் அருகில்....? தங்கள் கருத்து நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தகுதியற்றவர்கள் சிலையும் பெறுகி விட்டதே...

      நீக்கு
  4. சிலைகளை வைப்பதற்கு உந்து சக்தியே அரசாங்கம்தான் தலைவரே...

    பதிலளிநீக்கு
  5. மாலை என்பது மரியாதையின் வெளிப்பாடுதானே,,,,?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மரியாதை கொடுப்பதற்க்கு அருகதையற்றவர்கள் பெறுகி விட்டனரே...

      நீக்கு
  6. பதில்கள்
    1. வருக கவிஞரே இது டூ மச் போல தெரிகிறது

      நீக்கு
  7. ஹாஹா... புகைப்படம், வீடியோ எடுப்பது தான் பிரச்சனையா.... :)

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  8. take the case of cinestars sons daughters
    they only take up acting jobs
    because it is lucrative... no actor sons are good educated to take up independent jobs....sivaji prabhu sivakumar surya karti kamal sruthi ashara... satyaraj sibi and the list is endless... these actors want to exploit the people only to earn huge money...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இவர்களுக்கு முதலீடு நடிப்பு மட்டுமே மற்றபடி சமூகத்தைப்பற்றி கவலை இல்லை.

      நீக்கு
  9. தேசீயத் தலைவர்களை ,சாதீயத் தலைவர்கள் ஆக்குவதால் ..அந்தந்த சாதியைச் சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்துவதை தடை செய்து விடலாம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நல்ல யோசனைதான் தந்தீர்கள் உண்மையிலேயே இப்படித்தான் செய்ய வேண்டும்.

      நீக்கு
  10. செவிட்டில் ஓங்கி ஒரு அறை விடலாம் தான்!..

    ஆனால் -
    சேற்று எருமைகளுக்கு செவிட்டில் அறை ஒரு கேடா!?..


    பதிலளிநீக்கு
  11. ’வீழ்வது தவறல்ல.வீழ்ந்து கிடப்பதுதான் தவறு.’ சரியாய்ச் சொன்னீர்கள். தனி நபர் துதி இருக்கும்வரை இது நடந்து கொண்டுதான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே தனிநபர் துதிதான்.
      வருகைக்கு நன்றி

      நீக்கு
  12. ஹஹஹஹஹ் அது சரி!!!சாம்பசிவம் சரியாத்தான் சொல்லியிருக்கிறார்!!!

    பதிலளிநீக்கு
  13. நல்ல பதிவு. என்றாலும் யாரும் மாறப் போவதில்லை.

    பதிலளிநீக்கு