தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, நவம்பர் 25, 2016

இன்றே கடைசி


வனவாசமா ? பணவாசமா ?
எதுவாயினும். இன்றே கடைசி ஆம் எனக்கு U.A.E இன்றே கடைசி

 U.A.E யில் கால் வைத்த தேதி 26.01.1996

U.A.E யை விட்டு கால் எடுத்த தேதி 25.11.2016

இந்த நாள் வரை சுமார் இருபது ஆண்டு காலம், என் இனிய INDIA வை விட்டு பணவாசம் வந்திருந்தேன் இப்பொழுது இந்த U.A.Eயை விட்டு சந்தோஷமாகப் போகிறேன்.

இந்த U.A.E க்கு வந்ததால் நான் பெற்றவை, பணம், பணம். முடிவில் போனஸாக பெற்றது மனஅழுத்தம் (PRESSURE) Extra & Extcetra.

இந்த U.A.E-க்கு வந்ததால் நான் இழந்தவை...

01. எங்கும், எதிலும் என் இனிய தமிழ் எழுத்துக்களை காண்பது.
02. பிறவிப்பயன் (தாம்பத்யம்)
03. என் உயிரினும் அரிய என் குழந்தைகளின் அரவணைப்பு.
04. உயிர் கொடுத்த தாயின் கையில் உணவருந்துவது.
05. சுற்றத்தாருடன் கூடி வாழும் வாய்ப்பு.
06. அறிந்தோரின், தெரிந்தோரின், திருமண வைபவம்.
07. சுற்றத்தாரின், அறிந்தோரின் கடைசி யாத்திரை.
08. காதுகுத்து.
09. சடங்கு.
10. இனிய தீபாவளி.
11. பொங்கல்.
12. புது வருடப்பிறப்பு.
13. ஆயுதபூஜை.
14. ரம்ஜான்.
15. பக்ரீத்.
16. கிரிஸ்துமஸ்.
17. கோவில் கும்பாபிஷேகம்.
18. திருவிழாக்கள்.
19. முளைக்கொட்டு.
20. வேஷ்டி உடுத்துவது.
21. வெடி போடுவது.
22. கொண்டக்கடலை.
23. கொழுக்கட்டை.
24. பாணக்கம்.
25. மோர்.
26. பதனீர்.
27. நுங்கு.
28. முந்திரிப்பழம்.
29. நவாப்பழம்.
30. கரும்பு.
31. பனங்கிழங்கு.
32. பழைய கஞ்சி.
33. துவையல்.
34. கம்மங்கஞ்சி.
35. கேப்பக்கூழ்.
36. நோன்புக்கஞ்சி.
37. சந்தனக்கூடு.
38. தேர்தல்.
39. பாட்டுக்கச்சேரி.
40. கரகாட்டம்.
41. தெருவில் சினிமா.
42. நாடகம்.
43. பட்டி மன்றம்.
44. மஞ்சு விரட்டு.
45. மாட்டு வண்டியில் பயணம்.
46. பிஞ்சுக் குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பது.
47. மழலைமொழி கேட்டல்.
48. மாமன் மகள், அத்தை மகளுடன் கேலிப்பேச்சு.
49. மல்லிகைபூ மணம்.
50. கதிர் அறுப்பது.
51. களை எடுப்பது.
52. முளைப்பாரிபாட்டு.
53. தாலாட்டுப்பாட்டு.
54. ஒப்பாரிச்சத்தம்.
55. நாதஸ்வர ஓசை.
56. மார்கழி மாத கோலங்கள்.
57. ரயில் பயணங்கள்.
58. மழை.
59. தவளைச்சத்தம்.
60. ஓணான் பிடிப்பது.
61. தட்டாண் பிடிப்பது.
62. கண்மாயில் மீன்பிடிப்பது.
63. ஊரணியில் குளிப்பது.
64. இத்துடன், எனது நீண்ட கரிய ஹிப்பிமுடி.

சாம்பசிவம்-
கண்ணை விற்று சித்திரம் வாங்குறவன்தான் நிறையபேர் இந்த சமூகத்துல வாழ்ந்துக்கிட்டு இருக்கான், அதுல நீரும் ஒருத்தரு U.A.E-யை விட்டு வெட்டிக்கிட்டு போறீரு இனியாவது ஊரோடு ஒட்டிக்கிட்டு வாழும் கண்போன பின்னே சூரிய நமஸ்காரமாம்.

Chivas Regal சிவசம்போ-
ஆயக்கலையும் 64 தான் ஜொள்ளு’’வாங்க...


காணொளி

நட்பூக்களே... இப்பதிவு உங்கள் பார்வைக்கு கிடைத்த இந்த நொடிதான் நான் இந்த நாட்டை விட்டு என் இந்தியாவை நோக்கி விமானத்தில் பறக்க தொடங்கிய நொடி 12.32 am

விமானத்தின் உள்ளிருந்து... தேவகோட்டை கில்லர்ஜி

Share this post with your FRIENDS…

30 கருத்துகள்:

  1. அன்பின் ஜி..
    தொலைவுகள் அன்பைப் பிரிப்பதில்லை.. நலமுடன் தாயகம் செல்க.. மீண்டும் அபுதாபி செல்லும்போது அங்கே தங்களை என் கண்கள் தேடும்..

    என்றும் அன்புடன்..

    பதிலளிநீக்கு
  2. அனைத்தும் நல்மே நடக்கும் சார்,பத்திரமாக வீட்டுக்கு போய் சேர்ந்து இழந்தயைகளை மீண்டும் பெற்று மனம் போல் நிறைவாய் வாழுங்கள். அடிக்கடி இந்தப்பக்கமும் வாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிஸ்டம் டிரபிள் ய,ழ வாகுது. ழ ய வாகுது, . இடையில் வருகின்றது. திருத்திக்கோங்க.

      நீக்கு
  3. அடடே.... வெல்கம் டு இந்தியா! எவ்வளவு விஷயங்களை இழந்தவைகளாக பட்டியிட்டிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  4. தாய் நாட்டிற்கு நல்வரவு! உங்கள் இழப்புப் பட்டியல் பெரிதாகவே உள்ளது. என்றாலும் அவற்றில் எல்லாமும் நிறைவேறும் சாத்தியம் உண்டா என்பது கேள்விக்குறியே. பின்னர் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. இந்தியா உங்களை இரு கரம் கொண்டு வரவேற்கிறது. வாருங்கள். தமிழகம் வரும்போது சந்திப்போம்......

    பதிலளிநீக்கு
  6. இருபது ஆண்டுகள் அமீரக வாசம் முடித்து தாய் நாடு திரும்பும் உங்களை வருக வருக என் இரு கரம் கூப்பி வரவேற்கிறேன். ‘எந்த ஊரானாலும் நம்ம ஊர் போலாகுமா? என்பது உண்மைதான். தாயகத்தில் நீங்கள் விரும்பியது கிடைத்து மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
  7. இருபது வருடங்களைத் தொலைத்து விட்டீர்களா?

    வருக வருக...

    பதிலளிநீக்கு
  8. இனி அனைத்தும் நல்லதாகவே நடக்கும் ஜி...

    பதிலளிநீக்கு
  9. வாருங்கள் வாருங்கள் நண்பரே
    அன்போடு அழைக்கின்றோம்
    வாருங்கள்

    பதிலளிநீக்கு
  10. தம்பி கில்லர்ஜி வருகிறார்...
    இன்று
    தேவகோட்டையில் வரவேற்பு விழா!
    எல்லோரும்
    மறக்காமல் வந்திடுங்க...

    பதிலளிநீக்கு
  11. 'ஒப்பாரிச் சத்தம்'ரொம்ப முக்கியம் :)

    பதிலளிநீக்கு
  12. எதையும் சுவைபடச் சொல்லும் கலை உங்களுக்குக் கைவந்தது.

    20 ஆண்டு U.A.E. அனுபவங்களைத் தொடராக எழுதுங்கள்[இடைவெளி இருந்தாலும் பரவாயில்லை. பின்னர் அதை நூலாக்குங்கள். நிச்சயம் வரவேற்புப் பெறும்.

    இனியும் உங்களின் வாழ்விடம் சிறந்திட என் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. கவலைகள், கஷ்டங்கள் நீங்கிய வாழ்வு நம் தேவகோட்டையில் அமையட்டும் அண்ணா...

    தொடர்ந்து எழுதுங்கள்...

    பதிலளிநீக்கு
  14. தீர்மானிச்ச பின் ம் ...ம் சவாலே சமாளி

    பதிலளிநீக்கு
  15. குடும்பத்தினருடன் இனிதாக வாழுங்கள், வாழ்க வளமுடன்.
    சென்றதை மறந்து இனி வரும் காலங்களில் இனிய உறவு, நட்புகளுடன் இனிமையாக வாழுங்கள்.

    காணொளி அருமை.

    பதிலளிநீக்கு
  16. 20 வருட அனுபவம். வாழ்க. நான் ஏப்ரல் 1993ல் துபாய் வந்தேன். காலம் விரைவு வண்டிபோல் ஓடுகிறது. காலமகள் கண் திறந்தாள் சின்னையா என்று பாடிக்கொண்டிருக்கும்படி வாழ்வு சிறக்கட்டும்.

    இழந்ததுல பலாப்பழமும், மாங்காயும், தெருவோர இட்லிக்கடைகளையும் போடலையே. .

    பதிலளிநீக்கு
  17. Hope for the best and be prepared for the worst அன்புடன்

    பதிலளிநீக்கு
  18. வருக, வருக, உங்கள் வரவு நல்வரவாகுக,உங்கள் இரண்டு கடமைகளையும் இனிதே முடியுங்கள். அடிக்கடி சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  19. இழந்ததை மீட்க வாழ்த்துக்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  20. ஆஹா வந்துட்டாருய்யா வந்துட்டாரு நல் பாரத பிரதமர் ஏன்னாஇவரு தேவையில்லாம உலக சுத்த மாட்டார்.

    பதிலளிநீக்கு
  21. நெஞ்சைத் தொட்ட பதிவு. ஒரு பக்கம் தாய்நாடு வரபோகிறோம் என்ற சந்தோஷம். இன்னொரு பக்கம், இத்தனை வருடம் பழகிய பல நண்பர்களை விட்டுப் பிரிகிறோமே என்ற ஏக்கம். எது எப்படி இருந்த போதும் உங்கள் குடும்ப உறவுகளுடன் வந்து சேர்வதில் மகிழ்ச்சியே. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  22. வெளியே போயிருந்ததால் திரும்பி வந்ததும் உங்களிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வந்திருப்பதை சற்று முன் தான் பார்த்தேன். உடனேயே அழைத்தும் பார்த்தேன். பதில் இல்லையென்பதால் கிளம்பி விட்டீர்கள் என்று புரிந்து கொன்டேன். மன அழுத்தம் நீங்கி மகிழ்வுடன் தமிழகத்தில் இனிதே வாழ வாழ்த்துக்கள்! நேரம் அமையும்போது தாய்நாட்டில் சந்திப்போம்!

    பதிலளிநீக்கு
  23. அபுதாபியில் இழந்த சந்தோஷங்களை இந்தியாவில் உங்கள் குழந்தைகள், உறவினர்கள், நட்புகள் மூலம் கிடைக்க வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  24. வாங்க ஜி! இதுவும் கடந்து போகும். எல்லாம் நல்லதாக அமையட்டும். வாழ்த்துகள் நண்பரே/சகோ

    பதிலளிநீக்கு
  25. ji take enough care regarding vehicle driving in india... you were accustomed to some disciplined traffic/vehicle driving in U A E. after few months in india i am sure you would do all traffic violations...etc..

    பதிலளிநீக்கு
  26. வாருங்கள் சகோ,,

    நல்லதே நடக்கும்,, வருக,,

    பதிலளிநீக்கு
  27. தாய் மண்ணில் தடம்பதிக்க வருபவருக்கு தலைதாழ்ந்த வணக்கங்களும் வாழ்த்துகளும்

    பதிலளிநீக்கு
  28. பென்ஷன் உண்டுங்களா? கவர்மெண்ட் ஜோலியிலே அல்லவா இருந்தீங்க.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு