தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், நவம்பர் 03, 2016

மாமன் மகனும், அத்தை மகளும்


நண்பர்களே... நண்பிகளே... எனக்கு திடீரென Radio time 23.59க்கு தோன்றியது எவன் எவனோ என்னவெல்லாமோ.. எழுதுறான், பாடுறான் கேட்டால் நீ எதுக்குடா டாய்லெட்டை எட்டிப்பார்க்கிறே ? என்கிறான் நாமலும் பாடல் எழுதினால் என்னவென்று உடனே ஊரார் உறங்கையிலே.. பாடலை கொஞ்சம் உல்டாவாக எழுதிப் பார்ப்போமே... என்று எழுதினேன் அது இப்படியாகிடுத்து... இதை படிக்கும் பொழுது நமது பாடலை மனதுக்குள் Play செய்து விட்டு அதன் மெட்டோடு சேர்ந்தே பாடவும்.

மாமன் மகனும், அத்தை மகளும்.

ஊர்வசி உன்கூட.... ஊரணிக்கு போகையிலே...
ஊர்வசி உன்கூட.... ஊரணிக்கு போகையிலே...
புழுவாக நான் மாறி ஊர்ந்து வருவேன் பின்னாலே...
புழுவாக நான் மாறி ஊர்ந்து வருவேன் பின்னாலே...
ஊர்வசி உன்கூட.... ஊரணிக்கு போகையிலே...

புழுவாக நீயும் மாறி ஊர்ந்து வந்தாயானால்...
புழுவாக நீயும் மாறி ஊர்ந்து வந்தாயானால்...
பாட்டா செருப்பை வைத்து நசுக்கி கொன்னுடுவேன்
பாட்டா செருப்பை வைத்து நசுக்கி கொன்னுடுவேன்
புழுவாக நீயும் மாறி ஊர்ந்து வந்தாயானால்...

பாட்டா செருப்பாலே நசுக்க நீ வந்தாயானால்..
பாட்டா செருப்பாலே நசுக்க நீ வந்தாயானால்..
கொலுசாக நானும் மாறி உன் காலில் கோர்த்திடுவேன்..
கொலுசாக நானும் மாறி உன் காலில் கோர்த்திடுவேன்..

கொலுசாக நீயும் மாறி காலில் இருக்கும் உன்னை..
கொலுசாக நீயும் மாறி காலில் இறுக்கும் உன்னை..
திருகாணியை திருகியெடுத்து ஊரணியில் எறிந்திடுவேன்
திருகாணியை திருகியெடுத்து ஊரணியில் எறிந்திடுவேன்

திருகாணியை திருகியெடுத்து ஊரணியில் எறிந்தாயானால்..
திருகாணியை திருகியெடுத்து ஊரணியில் எறிந்தாயானால்..
மீனாக நானும் மாறி உன் குடத்தில் நுழைந்திடுவேன்..
மீனாக நானும் மாறி உன் குடத்தில் நுழைந்திடுவேன்..

மீனாக நீயும் மாறி குடத்துக்குள் நுழைந்து வந்தால்...
மீனாக நீயும் மாறி குடத்துக்குள் நுழைந்து வந்தால்...
ஆச்சி மசாலாவில் உன்னை குழம்பு வைத்து சாப்பிடுவேன்..
ஆச்சி மசாலாவில் உன்னை குழம்பு வைத்து சாப்பிடுவேன்..

குழம்பாக்கி உண்டாயானால் உன்னோடே சேர்ந்திடுவேன்
குழம்பாக்கி உண்டாயானால் உன்னோடே சேர்ந்திடுவேன்
உன்னுடனே நான் இணைய என்ன தவம் செய்தேன்டி
உன்னுடனே நான் இணைய என்ன தவம் செய்தேன்டி

தவழ்ந்தே வந்து கிடைச்ச கில்லர்ஜி மச்சானோடு...
தவழ்ந்தே வந்து கிடைச்ச கில்லர்ஜி மச்சானோடு...
கிளர்ச்சியாய் மகிழ்ச்சியாய் நாம் வாழ்வோம் நலமுடனே...
கிளர்ச்சியாய் மகிழ்ச்சியாய் நாம் வாழ்வோம் வளமுடனே...

ஆ.... ஆ..... ஆ...... ஆஆஆ... ஆஆஆ.... ஆ..... ஆ..... ஆ....
ஓ.... ஓ... ஓ... ஓஓஓ.... ஓஓஓ... ஓ... ஓ... ஓ....
ஆ.... ஆ..... ஆ...... ஆஆஆ... ஆஆஆ.... ஆ..... ஆ..... ஆ....
ஓ.... ஓ... ஓ... ஓஓஓ.... ஓஓஓ... ஓ... ஓ... ஓ....

அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

42 கருத்துகள்:

  1. ஆஹா..! புதிய திரையிசை கவிஞர் வந்துவிட்டார். இப்போதுதான் தெரிகிறது அபுதாபி வேலையை ராஜினாமா செய்ததன் பின்னணி. இமான், அனிருத், சந்தோஷ் நாராயண், ஏ.ஆர்.ரஹ்மான் என பல இசையமைப்பாளர்கள் கில்லர்ஜி வீட்டு வாசலில் வரிசை கட்டி நிற்பது தெரிகிறது.
    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நீங்கள் விளையாட்டுக்காக சொன்னாலும் எனக்கு என்மீது நம்பிக்கை உன்னது இன்றைய சினிமா கவிஞர்களுக்கு இணையாக மட்டுமல்ல இதைவிட சிறப்பாக பாடல்கள் எழுத முடியும் என்று ஆனால் சமூகம்தான் ஏற்றுக்கொள்ளாது வருகைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  2. ஓஹோ... ஜி... சூப்பர் ஜி... (இளமை திரும்புகிறோதோ...?!!!!!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாலிபக் கவிஞர் வாலி கிழவராக இருக்கும்வரை இளமையான பாடல்கள் எழுதினாரே ஜி
      ஆதரவு கொடுங்கள் ஜி

      நீக்கு
  3. ரசித்தேன் ஜி.

    இப்பொழுது கவி நயத்தோடு பாடல்கள் வருகிறதா தெரியவில்லை. வைரமுத்து இருக்கிறார். அவர் மகன்கள் இருக்கிறார்கள். ஆனாலும் குறைதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இரசித்தமைக்கு நன்றி ஊருக்கு வந்ததும் பாடல்களுக்கு முக்கியத்துவம். இன்னும் ஒரு வாரம்தான்.

      நீக்கு
  4. ஹிஹிஹிஹி, எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு எழுதணும்ல வேற என்ன செய்யிறது ?

      நீக்கு
  5. இதையே காணொளியாக்கி வெளியிட்டால் நன்றாய் இருக்கும் உங்களுக்குத்தான் இந்த விஷயமெல்லாம் அத்துபடி ஆயிற்றே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நானும் இதையே நினைத்தேன் ஆனால் எனது கணினி பெட்டி கட்டியாகி விட்டது தற்பொழுது ஓசி கணினியில் வேலை.

      நீக்கு
  6. இப்போ வர்ற பாட்டுக்கள் இப்படித்தான் இருக்கிறது ,நீங்களும் சான்ஸ் தேடலாம் ,பிரகாசமான எதிர்காலம் உங்களுக்கு உண்டு :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகவான் ஆதரவிருந்தால் தொடர்ந்து எழுதுவேன் ஜி

      நீக்கு
  7. ஊர்வசி உன் கூட
    ஊரணிக்குப் போகையில்
    ---------------------------------------
    ஊர்ந்து வருவேனே

    ஆகா... அழகாயிருக்கண்ணே
    இனி
    படங்களுக்குப் பாட்டெழுத அழைப்பாங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழைத்தால் எழுதுவோம் நண்பரே வருகைக்கு நன்றி

      நீக்கு
  8. சூப்பரா எழுதறீங்க ஜி! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  9. இலக்கிய பிரகாரம் அத்தை மாமன் உறவில் கல்யாணம் சரி . ஆனால் விஞ்ஞானப் படி ?
    ஆனால் பாட்டு நல்லாருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு.ராஜூ காளிபெருமாள் அவர்களின் முதல் வருகைக்கு நன்றி்
      விஞ்ஞானம் நேற்று வந்தது நண்பரே மாமன், அத்தை மகள் உறவு காலங்காலமாக தொன்று தொட்டு வந்தது.
      உண்மையில் தற்போது இந்த கேலிப்பேச்சுகள் ஒழிந்து போய் விட்டது என்றே சொல்லலாம் அதெல்லாம் பொற்காலமே...

      நீக்கு
  10. மீனா வந்தால் நிங்க ஆச்சி மசாலாவாகி குழம்பு வைத்து கொடுப்பது நிஜம் தானே? அப்படி எனில் மீனாவை அனுப்பி வைக்கின்றேன்.

    உச்சிவெயில் உள்ளந்தலையில் அடித்தால் இப்படித்தான் தோன்றுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ நான் ஊரணியில் வாழும் உயிரினத்தை சொன்னேன் நீங்க எனக்கு விருப்பமில்லாத நடிகையை அனுப்பி வச்சிடாதீங்க...
      அபுதாபியில் வெயில் காலம் முடியப் போகின்றது

      நீக்கு
    2. ம்ம்ம் அந்த மீனா??? நம்ம்ம்ம்ம்ம்ம்ம்பிட்டோம் சார்! மேலே இருக்கும் ஊர்வசிங்கறது யாரு சார்?

      மேலே என் பதிவில் இருக்கும் எழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும்!

      நீக்கு
    3. நான் தங்களது எழுத்துப்பிழையை மறைத்து உல்டா பண்ணினேன் நீங்க தேவையில்லாமல் போட்டு உடைச்சிட்டீங்க.... ஹிஹிஹி

      ஊர்வசி கல்பனாவோட தங்கச்சிதான்.

      நீக்கு
  11. முயற்சியுங்கள். எந்தக் கதவு வாழ்க்கைப் பயணத்தை எந்த திசையில் செலுத்தப்போகிறது என்று யாரே அறிவார்கள்? ஏண்டா இத்தனை நாள் அபுதாபியில் இருந்தோம்.. முன்னமேயே இப்போது செய்வதைச் செய்திருந்தால் எங்கேயோ போயிருக்கலாமே என்று எண்ணும்படியாக உங்கள் வாழ்வு வளம் பெறட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது மாறுபட்ட சிந்தை எனக்கு சந்தோஷம் அளிக்கின்றது நன்றி

      நீக்கு
  12. பாடலை பாடி பார்த்தேன்....என்னை ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள்...!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆள் பார்த்து, பொருத்தம் கோர்த்து பாடணும்

      நீக்கு
  13. அருமை.
    பாடி வெளியிடுங்களேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் குரல் கேட்டால் பிறகு இந்த ஏரியா பக்கமே வரமாட்டீர்கள் கவிஞரே...

      நீக்கு
  14. நூல் வெளியீட்டிற்குப் பிறகு பாடல் வெளியீடோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் கருத்தை உண்மையாக்க முயல்வேன்

      நீக்கு
  15. வாலிபம் திரும்புகிறதோ? பாடலை இரசித்தேன்! தொடர்ந்து பாடல்கள் எழுதுங்கள். பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து எழுத முயல்கிறேன் நண்பரே பாராட்டுகளுக்கு நன்றி

      நீக்கு
  16. பாடலாசிரியராகவும் பரிணமளித்து வரும் தங்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  17. ஆகா தொடரட்டும் முயற்சிகள்
    தம +

    பதிலளிநீக்கு
  18. அட! அருமையாக இருக்கு ஜி! என்ட்ரி போட்டாச்சு போல!!!முயற்சி செய்யுங்கள் க்ளிக் ஆகலாம்!! வாழ்த்துகள் ஜி!

    பதிலளிநீக்கு