தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, நவம்பர் 05, 2016

ஒரு ஊரில் ஒரு ஊமை மனம்


அந்த திருமணம் கோலாகலமாக, வெகு விமரிசையாக, அமர்க்களமாக, அலங்காரமாக, சந்தோசமாக நிகழ்ந்து முடிந்தது கீறியும், பாம்புமாக இருந்த அந்தக் கூட்டங்கள் இன்று இணைந்து விட்டது அவன் மட்டும் தனியாக உட்கார்ந்து இருந்தான் இந்த திருமணம் நிகழ்ந்து விட்டதில் மிகவும் சந்தோசப்பட்டது இவன் இவன் இவன் மட்டுமே ஆனால், வெளிக்காட்டவில்லை காரணம் முடியவில்லை எல்லோருமே ஒன்றிணைந்தது புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு இருந்தார்கள் தனது குழந்தைகளும் இணைந்து கொண்டதில் வருத்தமெனினும் தடுக்கவில்லை காரணம் குழந்தைகள் சந்தோசத்தை தடுக்கலாமா ? அவர்களின் பிஞ்சு மனம் வருந்துமே எத்தனையோ பேர் அழைத்தும், கெஞ்சியும் அவன் அசையவில்லை இதனால் ஒரு சாரரின் எண்ணம் இவனுக்கு இந்த திருமணத்தில் உடன் பாடில்லையோ ?

கி......... எந்திரிச்சு வாங்க...
எங்கே ?
ஃபோட்டோ எடுக்கத்தான்..
நாம இரண்டு பேரும் நிறைய எடுத்து இருக்கின்றோமே...
அவங்களோட....
எவங்களோட ?
நான் சொல்றது உங்களுக்கு தெரியும் அவங்க எல்லோருமே... உங்களை புரிஞ்சுக்கிட்டாங்க...
அந்தப் புரிதலுக்கு பின்னணி பணம்தானே...
அப்படியில்லை....
உலகம் அறிந்த நாள்முதல் இன்றுவரை எனது பொருளாதாரம் ஏறி இறங்கி இருக்கின்றது ஆனால், இன்றுவரை எனது மனம் மாற்றமில்லை நான் நானாகவே இருக்கிறேன்.
அதான் அவங்கே புரிஞ்சுக்கிட்டாங்களே...
அது உலகத்துக்கு தெரியுமா ? 
தெரியத்தான் அவங்களோடு ஃபோட்டோ எடுக்கலாம்னு...
கறந்த பால் மடு ஏறாது...
சிரிஞ்சுல வச்சு ஏற்றக்கூடாதா ?
ஏற்றலாம்தான் ஆனால், மாடு செத்து விடும் இல்லை என்றால் பால் திரண்டு விடும்.
எல்லோரும் பழையதை மறந்து விட்டார்கள் நீங்கள் மட்டும்....
இவர்கள் ரோபோட் பொம்மைகள் இவர்களின் இதயத்தில் உள்ள சிப்-கார்டில் பழையதை டெலைட் செய்து விட்டு புதிய ப்ரோக்ராம் சேவ் செய்து கொள்ளலாம் என்னுடைய இதயம் குருதியில் நனைந்து குளிர்ந்து குளித்து துடித்துக் கொண்டு இருப்பது அவ்வளவு எளிதாக மறந்து விடாது.
மறப்போம், மன்னிப்போம் சித்தாந்தம் உங்களுக்கும் உடன்பாடுதானே...
என்றுமே... உடன்பாடு உண்டு இவர்களுடன் நான் இணைவதில் எனக்கும் உடன்பாடு உண்டு.
பிறகென்ன ? வாங்க.
இருப்பினும் அதற்கு முன் எனது கேள்விகளுக்கு பதில் வேண்டும்.
சாதாரணமாகவே உங்களது கேள்விகளுக்கு பதில் கிடைப்பது கடினம் அதிலும் இந்தச் சூழலில் அவர்களிடம் நீங்கள் கேட்கும் கேள்விகள்.. ?
பொதுவாக எந்தக் கேள்விகளுக்கும் பதில் கிடைக்காது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை உலகில் நிச்சயமாக உண்டு.
உங்கள் கேள்விகளுக்கு அவர்களால் நிச்சயமாக பதில் தரமுடியாது.
காரணம் ?
அவர்கள்தானே எல்லா தவறுகளுக்கும் காரணம்.
வேண்டுமானால் இந்த கேள்விகளுக்கு பதில் இல்லை என்ற பதிலாவது சொல்லட்டும் எனக்கு அது போதும்.
அந்த பதிலால் உங்களுக்கு பலன் உண்டா ?
நான் நிரபராதி என்பது நிரூபிக்கப்படுமே... அது போதும் எனக்கு தவறுகளுக்கு காரணவாதிகள் யார் ? இதுதான் எனது கேள்வி.
அவர்கள் அனைத்தையும் மறந்து விட்டார்கள்... நீங்கள்தான்... பழையதை...
காயம் பட்டது நான்தானே அவர்கள் மறப்பதில் வியப்பில்லையே...
நீங்கள் எப்போதுதான் அவைகளை மறப்பீர்கள் ?
எனது காயங்கள் ஆறும் பொழுது...
இவ்வளவு காலமாக நினைத்துக் கொண்டே இருக்கும் நீங்கள் இனியும் மறப்பீர்களா ?
நிச்சயமாக மறப்பேன்.
அதுதான் எப்போது ?
எனது இறுதி நாளில்...
சரி உங்களிடம் இனி நான் பேசமுடியாது நீங்கள் மீறமுடியாத நபரை அனுப்பி வைக்கிறேன்.

அண்ணே..
என்னம்மா ?
எந்திரிச்சு வா ஃபோட்டோ எடுக்கலாம்.
நான் பொண்ணு மாப்பிள்ளையோட நிறைய எடுத்துக்கிட்டேனம்மா.... உன் கூடவும் எடுத்தேனே...
அண்ணே எந்திரிச்சு வா... எல்லோரும் சேர்ந்த பிறகு நீ மட்டும் ஏண்ணே... அவங்க எல்லோரும் இந்த கல்யாணத்துல உனக்கு சம்மதம் இல்லைன்னு நினைக்கிறாங்கண்ணே... 
நீ நினைக்கிறியா ?
என்னண்ணே... இப்படி சொல்றே, என்னைவிட உனக்குத்தானே ரொம்ப சந்தோசம் எனக்கு தெரியாதா ?
அது போதும்மா.. எனக்கு.
அவங்க உன்னை தப்பா நினைப்பாங்கண்ணே...
அவங்க என்றைக்கு என்னை நல்லவனாக நினைச்சாங்க ?
எனக்காக....
உனக்காக நான் எது... தரவில்லை சொல்லு ? என் வாழ்க்கையே உனக்காக விட்டுக்கொடுத்தேன் நீ சந்தோசமாக இருக்கணும் என்பதற்காக... நீயும் சந்தோசமாக இல்லை நான் இழந்தும் பிரயோசனம் இல்லை நான் கெட்டவன் என்று பெயர் எடுத்ததே மிச்சம்.
அண்ணே எனக்காக....
உனக்கு கொடுக்க இந்த அண்ணனிடம் உயிர் மட்டுமே இருக்கு வேணும்னா சொல்லு சந்தோசமாக தர்றேன்.
அண்ணே நல்லநாள்ல இப்படி பேசலாமா ?
இதுக்குத்தான் நான் யாருடனும் பேச விரும்புவதில்லை ஒதுங்கி போறேன்.
அண்ணே இனிமேலாவது சேரக்கூடாதா ?
உடைஞ்ச சங்கு ஊற்று பொரியாதுமா... நான் சராசரி மனுசங்களோடு வரமுடியாதுமா... காரணம் நான் நியாயமானவன்.
இன்றைக்கு எல்லோரும் கூடி இருக்காங்க... பேசி தீர்த்துகிறலாமே...
நான் என்றைக்குமே தயார் ஆனால், இன்றைக்கு வேண்டாம் இப்படிச் சொன்னதால் உனக்கு வருத்தமா ?
இல்லை எனக்குத் தெரியும் நீ ஏதாவது நல்ல காரணத்துக்காகத்தான் சொல்லுவே உன் குழந்தைகள் சேர்ந்துக்கிட்டாங்களே.. நீ மட்டும்....
அவங்க வாழ வேண்டியவங்க, சந்ததிகளை பிணைத்து வைக்கிறதுதான் நமது கடமை நாளைக்கு எனக்குப்பிறகு அவங்களோட அரவணைப்பும் இருக்கட்டுமே.. அதற்காக விட்டு கொடுத்தேன் ஆனால், நான் நானாகவே இருக்க விரும்புறேன் என்னை விட்ருமா.
சரிண்ணே நீ போய் சாப்பிடு.
எல்லோரும் சாப்பிடட்டும் நம்ம வீட்டுக் கல்யாணத்துல நீ சொல்லித்தான் நான் சாப்பிடணுமா ? நீ போம்மா போய் வந்தவங்களை கவனி.

இன்றைக்கு பேச்சு வார்த்தைக்கு போனால் இந்த சொந்த பந்தங்கள் முன்பு அனைத்தையும் திறந்து பேசி நிரூபித்து விடலாம் மாமாங்கமாக மனதில் கொட்டிக் கிடக்கும் அனைத்து விடயங்களையும் பேசி மனஆறுதல் பெறலாம் ஆனால், இந்த காட்டு மிராண்டிக் கூட்டங்கள் ஏதாவது பிரச்சினையை கிளப்பி அசம்பாவிதம் நடந்து மணமக்களின் இன்றைய இரவு சந்தோசத்தை கெடுத்து விட்டால் ? நம்மால் நமது தங்கையின் பிள்ளைகளை வருத்தப்பட வைக்கலாமா ? நமது தியாகம் நமது தங்கைக்கு மட்டும்தானா ? தங்கையின் பிள்ளைகளுக்கும்தானே... இதற்காகத்தான் இன்று வேண்டாம் என்றது அவனுக்கு மட்டும்தானே தெரியும் நல்ல சந்தர்ப்பம் போய் விட்டதே.... என அவனது மனம் ஊமையாய் அழுது கொண்டு இருந்தாலும், மணமக்களின் சந்தோசத்தை கெடுக்காமல் இருந்து விட்டோமே என்று அவன் மனம் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு இருந்தது காரணம் கடைசிவரை இவன் அவனாகவே வாழ விரும்புபவன்.
இவனது பழையகதை வேண்டாம் அது இரசிக்கும்படி இருக்காது இனியெனும் இரசிக்கும்படி இருக்கும் என்ற நம்பிக்கையோடு.....

42 கருத்துகள்:

  1. விவரங்கள், பின்னணி புரியா இட்டாலும் பெருந்தன்மையான சிந்தனை.

    தம சப்மிட் ஆகவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பதிவை மிகச்சரியாக புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  2. ஏதோபுரிகிறது போல் இருந்தாலும் பெரும்பாலும் புரியவில்லை. ஆனால் ஏதோ சஞ்சலம் என்று தெரிகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இதன் பின்புலம் வேண்டாம் அது ஒரு பதிவில் மட்டுமல்ல ஒரு நாவலில்கூட அடங்கி விடாது வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. என்னாயிற்று நண்பரே! எவ்வளவுதான் உள்ளுக்குள் சோகம் இருந்தாலும், அவற்றையெல்லாம் மறைத்து வைத்துக் கொண்டு சமூகம் பற்றியும் தன்னைப் பற்றியும் நண்பர்களான எங்களைப் பற்றியும் எப்பொழுதும் நகைச்சுவையாக எழுதுபவரான நீங்களே இப்படி வெளிப்படையாய் மனதைப் பதிவிடும் அளவுக்குப் போய்விட்டதா? எனக்கு வருத்தமாக இருக்கிறது! என்ன ஏது எனத் தெரியாமல் எப்படி ஆறுதல் சொல்வது எனத் தெரியவில்லை. இருந்தாலும், காலம் எல்லாவற்றையும் விடச் சிறந்த வலி நிவாரணி. அது உங்கள் வலியையும் கட்டாயம் ஒருநாள் மரக்கடிக்கும் எனும் நம்பிக்கையை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். என் பணிவன்பான நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது நீண்ட கருத்துரைக்கு முதலில் நன்றி நான் முடிவில் அந்த பின்புலம் வேண்டாம் என்றே சொல்லி இருக்கிறேன் இனி நகைச்சுவை பதிவை தர முயல்கிறேன் சில நேரங்களில் இப்படியும் பதிவுகள் எழுதும் சூழல் நிகழ்ந்து விடுகிறது.

      நீக்கு
    2. அதேநேரம் நீங்கள் நான் எழுதும் நகைச்சுவை பதிவுகளுக்கு வருவதில்லை என்பதையும் இங்கு பதிந்து வைக்கிறேன்

      நீக்கு
    3. மெய்தான் நண்பரே! என்ன செய்ய, நீங்கள் நிறையப் பதிவுகள் இடுவதால் எல்லாவற்றுக்கும் வர முடிவதில்லை. உங்களைப் போல் நிறையப் பதிவுகள் வெளியிடுபவர்களின் தளத்தைப் பின்தொடர்வதில் நான் ஒரு தனிமுறையைக் கையாள்கிறேன். அதாவது, அவர்கள் பதிவு இடும்பொழுதெல்லாம் போகாமல், தலைப்பைப் பார்த்து, முதன்மையானது எனத் தென்பட்டால் மட்டுமே படிக்கிறேன். அதனால்தான் அடிக்கடி உங்கள் தளத்துக்கு வர முடிவதில்லை. அதுதான் காரணம், வேறொன்றுமில்லை.

      நீக்கு
    4. வருக நண்பரே தங்களது மீள் வருகைக்கு நன்றி தங்களது கருத்தில் நான் முற்றிலும் மாறுபடுகின்றேன் தலைப்பை வைத்து பதிவுகளுக்கு செல்வது சரியானது அல்ல!

      ஊரின் பெயர் கொடுமலூர் என்பதற்காக அந்த ஊர்க்காரர்கள் எல்லோரும் கொடுமைக்காரர்கள் ஆகவே பெண் எடுக்க வேண்டாம் என்பது போல் இருக்கின்றது தங்களது தேர்வு.

      நான் பதிவுக்கு பொருந்தி வருவது போல் தலைப்பு வைக்கிறேன் இதில் மொக்கையான பதிவுகளும் இருக்கலாம் ஆனாலும் தலைப்பு பொருந்தி விடும் மீண்டும் நன்றி நண்பரே நேரம் கிடைக்கும் பொழுது வாருங்கள்

      நீக்கு
    5. ஹாஹ்ஹாஹா! ஊரின் பெயரை வைத்து அந்த ஊர் மக்களை மதிப்பிடுவது போலவா? அப்படி இல்லை ஐயா! தலைப்பு நன்றாக இருந்தால்தான் பதிவும் நன்றாக இருக்கும் என்று நான் சொல்லியிருந்தால் நீங்கள் இப்படிச் சொல்வது பொருந்தும். நான் சொன்னது அந்தப் பொருளில் இல்லை. பதிவின் தலைப்பு என்பது எப்படியும் பதிவோடு தொடர்புடையதாகத்தானே இருக்கும், ஓரளவுக்காவது? அந்த வகையில் பதிவின் தலைப்பைப் பார்த்தவுடன் பதிவு எது பற்றியது என்பதைத் தெரிந்து கொண்டு, எனக்குத் தேவையானதாக, நான் ரசிக்கக்கூடியதாக இருந்தால் படிக்க வருகிறேன், அவ்வளவுதான். எடுத்துக்காட்டாக, ’பசுபதிவுகள்’ தளம் பார்த்திருக்கிறீர்களா? அவர் ஒவ்வொரு தலைப்பையும் வெகு சுருக்கமாகத்தான் இடுவார் - பெரும்பாலும் ஒரே வார்த்தையில். காரணம், அவர் எழுதுபவையெல்லாம் பெரும்பாலும் பழைய காலத்து மனிதர்கள், பழைய இதழ்களில் வெளிவந்த படைப்புகள் பற்றியவை. கடந்த வாரம் ’பரிதிமாற் கலைஞர்’ பற்றி எழுதியிருந்தார். தலைப்பு என்ன தெரியுமா? ‘பரிதிமாற் கலைஞர்’ அவ்வளவுதான். ஆனால், நான் தலைப்பைப் பார்த்தவுடனே படிக்கப் போயிருந்தேன். காரணம், எனக்குப் பரிதிமாற் கலைஞர் மீது மிகுந்த மதிப்பும் அவரைப் பற்றித் தெரிந்து கொள்வதில் நிறைய ஆர்வமும் உண்டு, அதனால்தான். ஆக, பதிவின் தலைப்பு சுவையாக இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. பதிவு எனக்குப் பிடித்த எனக்குப் பயன்படக்கூடியதாக இருப்பதாகத் தலைப்பிலிருந்து தெரிந்தால் போதும், அவ்வளவுதான்.

      நீக்கு
  4. கில்லர்ஜிக்குள் இப்படி ஒரு சோகமான சம்பவம் இருப்பது புரிகிறது! ஆனாலும் பெரிது படுத்தாமல் விட்டுக்கொடுத்த உங்கள் பெருந்தன்மை சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது ஆறுதலுக்கு நன்றி

      நீக்கு
  5. புரிகிறது அண்ணா... வீட்டுக்கு வீடு வாசப்படி...
    மனதில் வைத்துக் குழம்பாதீர்கள்... நாளைய விடியல் நல்லதாக அமையும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது தங்களது கருத்துரைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  6. தேர்ந்த எழுத்தாளராக மாறி வருகிறீர்கள். உண்மைகளை புனைவுகள் போல் எழுதினாலும் உண்மையை உணரமுடிகிறது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆம் நான் புனைந்த கதை சொன்னேன் ஆனால் உள்ளே இருந்தது உண்மையே அழகிய கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  7. விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை என்பார்கள் நண்பரே
    தங்களின் பெருந்தன்மை போற்றுதலுக்குஉரியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  8. அருமையான பதிவு
    உணர்வுகளால் உண்மை ஒன்று
    ஒளிந்திருக்கிறதே!

    உங்கள் பதிவுத் தலைப்பையும் இணைப்பையும் இக்குழுவில் இணையுங்க...
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வந்தேன் இணைத்தேன் தகவலுக்கு நன்றி

      நீக்கு
  9. மன பாரத்தை இறக்கி வைத்து விட்டீர்கள் !சுகமான சுமை என்று நினைத்து பயணத்தைத் தொடருங்கள் ,காலம் ஒருநாள் கை கொடுக்கும் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி பகவானின் வாக்கு பலிக்கும் வருகைக்கு நன்றி

      நீக்கு
  10. வருத்தம் புரிகிறது. காரணம் புரியவில்லை. நீங்கள் சொல்வது உண்மை. சில காயங்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும் ஆறாது என்பது சரியானது! :( விரைவில் உங்கள் மனம் மகிழ்ச்சியுடன் இருக்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது பிரார்த்தனைகளுக்கு நன்றி சில வடுக்கள் ஆறுவதில்லை உண்மையே...

      நீக்கு
  11. சிரிப்பு பாதி... அழுகை பாதி... இதுவே வாழ்க்கை ஜி...

    பதிலளிநீக்கு
  12. ஆறுதல் சொல்லும் வகை தெரியவில்லை. எனினும்.....

    ‘ஆறு மனமே ஆறு.’

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் திரு. மானுடன் அவர்களின் முதல் வருகைக்கு நன்றி தொடர்க... நலம்.

      நீக்கு
  13. வாழ்க! மர்ம எழுத்தாளர்......!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  14. உங்க சோகந்தான் கொஞ்சம் மாறனும் எங்க சாமிக்கு மகுடம் ஏறனும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சிவமே அன்பாய் சொல்வது நடக்கும் நண்பரே

      நீக்கு
    2. என்ன, அன்பே சிவம் ஐயா! கணினி சரியாகி விட்டதா? மீண்டும் பதிவுகள் எழுதலாமே?

      நீக்கு
  15. சோகத்தை ஒளித்து வைத்து எழுதி உள்ளீர்கள். சரியாக புரியவில்லை. இருப்பினும் சோகத்திற்கு ஆறுதல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  16. ​இரண்டு மனம் வேண்டும். இறைவனிடம் கேட்டேன். நினைத்து வாட ஒன்று. மறந்து வாழ ஒன்று. ​ஆனாலும் இந்த கோடாரி பிடித்த கொடுவா மீசை கொலைகாரனுக்கு ரொம்பத்தான் வைராக்கியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா அது எனது பிறவிக்குணம் வருகைக்கு நன்றி

      நீக்கு
  17. ‘குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை’ என்று கொன்றை வேந்தனில் ஔவைப் பாட்டி சொன்னதை மனதில் கொள்ளுங்கள். மறப்போம். மன்னிப்போம். என்ற கொள்கையை ஏற்று உங்களின் பெருந்தன்மையைக் காட்டுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  18. பதிவு புரிந்தது ஜி! திருமணம் பற்றியும் அறிய முடிகிறது எந்தத் திருமணம் என்றும்..அதைப் பற்றியும் கூட நீங்கள் குறிப்பிட்டிருந்த நினைவுண்டு. தங்கள் வருத்தமும் கொஞ்சம் தெரியும் என்பதால்....பதிவு புரிந்தது.

    என்ன சொல்ல? அதுவும் உங்களுக்கு...இதுவும் கடந்து போகும் என்று சொல்லலாம், காலம் புண்ணை ஆற்றும் என்றும் சொல்லலாம்....ஆனால், இவை எல்லாம் வெறும் வார்த்தைகளே. தாங்கள் நினைத்தால் மட்டுமே இதிலிருந்து மீண்டு வர முடியும் ஜி! விரைவில் நடக்கும் என்று நம்புகிறோம்...

    பதிலளிநீக்கு