தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், நவம்பர் 09, 2016

கண்ணைத் திறக்கணும் மாமி


நாட்டில் கற்பழிப்பு பெருகி வருவதின் காரணம் என்ன ? இதற்கு காரணகர்த்தா யார் ? முக்கிய காரணம் பெண்கள்தான் ஆம் ஒரு காலகட்டத்தில் ஒரு சிறுவனிடம் உனக்கு கூடப்பிறந்தவர்கள் எத்தனை பேர் என்று கேட்டால் எனக்கு இரண்டு அண்ணன், மூன்று அக்கா, ஒரு தம்பி, இரண்டு தங்கச்சி என்பான், வேறு ஒருவனிடம் கேட்டால் இதே விபரத்தை மாற்றிச் சொல்வான் ஆனால் இன்று யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். 

என் வீட்ல நான் மட்டும்தான் என்பான், தனியாகவே வாழும் இவனுக்கு எப்படி சகோதரப்பாசம் வரும் அதனால்தான் இவன் பெண்களை ஒரு போதைப் பொருளாகவே பார்த்து வளர்கின்றான் பற்றாக்குறைக்கு எரிகின்ற தீயில் டால்டாவை ஊற்றுவது போல் பெண்களும் ஆபாசமாக உடை அணிந்து அவன் தவறு செய்வதற்கு வழி வகுக்குகின்றார்கள்.

போதாக்குறைக்கு Cinema, Media, Cell Phone, Internet, E-mail, YouTube, Website, Face book, What's App போன்றவைகளும் அவனை தன் வழிக்கு பக்குவப்படுத்தி வளர்க்கின்றன, ஒரு சரியான வயதை தொடும் முன் தொடக்கூடாத விசயங்களை தொட நினைக்கின்றான், இந்த நிலைக்கு அவன் தள்ளப்பட்டதற்கு யார் காரணம் ? பெற்றோர்களே ஆம்.

நமக்கு ஒரேயொரு ஆண்சிங்கம் போதும் அவனை நல்லா படிக்கவச்சு பெரியவேலை வாங்கி கொடுத்துட்டா பணக்கார வீடா பார்த்து நிறைய வரதட்சிணை கேட்கலாம் இதுதானே பின்னணி. பணக்கார மருமகள் வந்து நமக்குத்தான் ஆப்பு வைப்பாள் என்பது வேறு விசயம், நாமதான் ஏற்கனவே மாமியாளுக்கு வச்சோமே ! என்பதும் வேறு விசயம். நல்லோர்களே ! ஏன் இப்படி ஆசைப்படுறீர்கள் ? இதன் விளைவை பார்த்தீர்களா ? எல்லோருமே ஆண் பிள்ளைக்கு ஆசைப்பட்டால்... அந்த ஆண்பிள்ளை ஆசைப்பட, பெண் பிள்ளைக்கு எங்கே போவது ? வேற்று கிரகத்திற்கா ? 

இந்நிலை தொடர்ந்தால் நாளை உங்கள் ஆண் சிங்கங்களை கையில் பிடித்துக் கொண்டு அம்மி கொத்தலையோ அம்மி என்பது போல பெண்ணு இருக்கா... பெண்ணு ? என்று கூவிக்கொண்டு திரிய வேண்டிய நிலை வரும் மறந்து விடவேண்டாம்.

 எல்லோருமே பெண் பிள்ளையையும் பெற்று தன் மகனுக்கு சகோதர ரத்த பந்தத்தை கற்றுக் கொடுத்திருந்தால், இந்நிலை வந்திருக்குமா ? எங்கோ ஒரு இடத்தில் ஒரு காமுகன் ஒரு பெண்ணை கற்பழித்துக் கொன்று விட்டான் என்ற செய்தி கேட்டவுடன் உச்சு கொட்டினால் போதுமா ? இதற்கு தீர்வு காணவேண்டாமா ? தன் வீட்டில் நடந்தால் மட்டுமே துடிக்கிறது இறைநம்பிக்கை உள்ளவர்களே ! இதை இறைவன் ஏற்றுக்கொள்வானா ? நான் பெண்களை சொல்வதற்கு காரணம் ஆண்களை விட பெண்களே பெண் குழந்தைகளை விரும்புவதில்லை, இது உண்மையென உங்களுக்கே தெரியும் பெண்கள் கற்பழிப்பு பெறுகி வருவதற்கு அரசாங்கமும், காவல்துறையும்தான் காரணம் என்று சொல்வது தவறு, சமூகப் பிரதிநிதிகளிடமிருந்து... தொடங்குவதுதான் தவறு என்பதே சரி.

CHIVAS REGAL சிவசம்போ-
யேங்கண்ணைத் தொறந்துட்டே சாமி நான் இப்பவே போறேன் பொன்னமராவதிக்கு எம்பொண்டாட்டி பொன்னம்மா அங்கேதான் இருக்கா.

46 கருத்துகள்:

  1. பெண்களே பெண்குழந்தைகளை விரும்புவதில்லை என்பதும் நிஜம்! சமுதாயம் தன் சிந்தனையை மாற்றும் வரை இதற்கு தீர்வும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது சிறப்பான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  2. அருமையான எண்ணம் ஒன்றை
    உலாவ விட்டுள்ளீர்கள்
    மக்கள் (சமூக) விழிப்புணர்வு தேவை
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. சினிமா மீடியாவின் பங்கு மிகப் பெரியது. நீங்கள் ஏன் அதைப் பார்த்துக் கெட்டுப் போகிறீர்கள் என்று கேட்க முடியாத அளவு வியாபாரம் செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி அவர்கள் நம்மைப் பார்த்து கேட்கும் அளவுக்கு அவர்களுக்கு நம்மீது நம்பிக்கை இருக்கின்றதே...

      நீக்கு
  4. ஒழுக்கக் கேடு ஓர் முக்கியக் காரணம் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  5. நூற்றுக்கு நூறு ஆமோதிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. அப்படித்தான் கூவி கூவி என் பையனுக்கு பெண் தேடி கண்டுபிடித்தேன். ஆமாம் உங்களுக்கு மகள்கள் தான் என்று எப்போதோ கூறிய மாதிரி ஞாபகம்.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா எனக்கு முதலில் மகன், பிறகு மகள் இரண்டு பொக்கிஷங்கள்.

      நீக்கு
  7. ஒவ்வொரு தனி மனிதனும் ஒழுக்கத்தைக் கடைப் பிடிக்கணும் :)

    பதிலளிநீக்கு
  8. துணிச்சலான கருத்தை எடுத்துரைத்த நண்பருக்கு பாராட்டுக்கள். இந்தக் கருத்தை ஒட்டியே நானும் ஒரு பதிவு வைத்திருக்கிறேன். இன்னும் வெளியிடவில்லை. கூடிய விரைவில் வெளியிடுகிறேன்.
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது பதிவையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் வருகைக்கு நன்றி

      நீக்கு
  9. பல காரணங்கள் உள்ளன .என்பது என் தனிப்பட்ட எண்ணம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ எடுத்து வையுங்கள் அந்த காரணத்தை...

      நீக்கு
  10. சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்!பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  11. பதில்கள்
    1. நண்பர் திரு, ஜோஸபின் பாலா அவர்களின் முதல் வருகைக்கு நன்றி

      நீக்கு
  12. ஆகா சிவகாசி பட்டாசு ஒன்றை கொளுத்தி ... த ம +

    பதிலளிநீக்கு
  13. இப்ப எங்க ஆட்களில் பெண் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிட்டது... எனக்கு பெண் குழந்தைகள் மீதுதான் பாசம் அதிகம்... நமக்கும் ஒரு குட்டி தேவதை இருக்குல்ல...


    நல்ல பகிர்வு...

    மீடியாக்களை குறை சொல்வதைவிட நாம்தான் திருந்த வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆம் நாம்தான் திருந்தவேண்டும்.

      நீக்கு
  14. முதல் குழந்தை பெண் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றலாம்.

    பயனுள்ள பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இது சாத்தியமில்லையே....
      பெண் குழந்தைகள் பெற்றால் அரசு செலவில் கல்வியும், திருமண ஊக்கத்தொகையும் அறிவிக்கலாம்.

      நீக்கு
  15. பெயரில்லா11/10/2016 2:20 PM

    உண்மையான சிந்தனை .
    உண்மையாக மக்கள் ஒத்துழைக்கட்டும்.
    த.ம. 11.
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  16. தவறுகளை நமிடம் வைத்துக் கொண்டு கடவுள் கண்ணைத் திறக்கணும் என்று சொல்வது என்ன நியாயம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நான் ''கண்ணைத் திறக்கணும் மாமி'' என்றுதான் சொல்லி இருக்கிறேன் சட்டென படிப்பவர்களுக்கு இது சாமி என்றுதான் தோன்றும் ஹாஹாஹா

      நீக்கு
  17. இப்படியான சீர்கேடான் சிந்தனையை வளர்த்துவிட்டது..அரசாங்கமும் அதை ஆளுகின்ற கூட்டமும் இவற்றை கண்டும்காணாமல் போகும் சுய கூட்டத்திற்கும் காரணம் நிலவும் சமூக கட்டமைப்புதான் காரணம் நண்பரே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே முதல் காரணம் சமூக அங்கத்தினராகிய நாம்தான் அரசு என்பது வானத்திலிருந்து குதித்து விடவில்லை நாம்தான் தேர்ந்தெடுக்கின்றோம்.

      நீக்கு
  18. பெண்களே பெண் குழந்தைகளை விரும்புவதில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. நடுவில் பிறந்தவர்கள் என்பவர்களே இல்லாத ஒரு தலை முறையை உருவாக்கி விட்டோம் என்று எஸ்.ரா. ஒரு முறை எழுதி இருந்தார். இப்போது அதையும் தாண்டி உடன் பிறந்தவர்களே இல்லாத ஒரு தலை முறை உருவாகிக் கொண்டிருக்கிறது. ஹும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ சரியாக சொன்னீர்கள் உண்மையே.

      நீக்கு
  19. நியாயமானதை நேர்மையாகப் பகிர்ந்தவிதம் அருமை.

    பதிலளிநீக்கு
  20. தங்களின் ஆதங்கத்தை சரியாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். ஆனால் தலைப்பை வேறு மாதிரியாக வைத்திருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இந்த முடிவை எடுக்க வேண்டியவர்கள் மாமியார்கள் என்று நினைத்தேன்

      நீக்கு
  21. ம்ம்ம்ம்ம் ஜி இதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஓர் ஆண் குழந்தை பெற்றதனால் சகோதரி சகோதர பாசம் இல்லாமல் ஆகும் என்பதை ஏற்க முடியவில்லை. சகோதரிகளுடன் பிறந்த ஆண் குழந்தைகள்தான் நிறைய தவறுகள் செய்வதாகப் புள்ளி விவரங்கள் உள்ளன். ஒரே ஓர் ஆண் குழந்தை என்றாலும் பெற்றோர் அக்குழந்தையை நல்ல முறையில் வளர்க்க முடியும். பல குழந்தைகள் இருக்கும் குடும்பங்களில் அந்தப் பல குழந்தைகளும் சரியில்லாமல் போன குடும்பங்களும் உண்டு ஜி. எனவே பெற்றோர் வளர்ப்பிலும், சூழ்நிலைகள் அமைவதிலும் இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  22. நியாயமான ஆதங்க பதிவு, பெண்களே பெண்களை மட்டுப்படுத்தி விட்டு பெண்ணியத்தை ஆண்கள் குலைப்பதாக பெண்கள் பேசுகிறார்கள்

    பதிலளிநீக்கு