தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், அக்டோபர் 31, 2016

முரண்பாடு

01. சிறப்பாக நடந்த திருமணங்களின் எல்லோருடைய வாழ்க்கையுமே சிறப்பாக இருப்பதில்லை.
02. ஊர் சிரிக்க நடந்த திருமணங்களின் பலருடைய வாழ்க்கையும் சிறப்பாக இருந்திருக்கின்றது
03. மனங்கள் ஒன்றி நடந்த திருமணங்களின் பலருடைய வாழ்க்கையும் பிரிந்து போயும் இருக்கின்றன.
04. மனம் சேராமல் நடந்த திருமணங்களின் பலருடைய வாழ்க்கையும் சேர்ந்தே சிறப்பாக இருந்திருக்கின்றது.
05. விருப்பத்துடன் நடந்த திருமணங்களின் பலர் சமூகத்துக்காக பிரியாமல் வாழ்கின்றார்கள்.
06. விருப்பமில்லாமல் நடந்த திருமணங்களின் பலரும் சமூகத்துக்காக சேர்ந்தே வாழ்கின்றார்கள்.
07. குழந்தைகளுக்காக விருப்பமில்லாத கணவனுடன் வாழும் பெண்கள் இருக்கின்றார்கள்.
08. குழந்தைகளால் விருப்பமுடன் கணவனுடன் வாழும் பெண்களும் இருக்கின்றார்கள்
09. குழந்தை இல்லாததால் கணவனை பிரிந்து வாழும் பெண்களும் இருக்கின்றார்கள்.  
10. பேராசையால் பொன்னுக்காக, பலரும் பெண்ணை திருமணம் செய்கின்றார்கள்.
11. ஆசைக்காவும், அழகான பெண்ணுக்காகவும் சில ஆண்கள் திருமணம் செய்கின்றார்கள்.
12. ஆசைப்பட்டு திருமணம் செய்த அழகான பெண்களாலும் சிலர் பிரிகின்றார்கள்.
13. ஆசைப்படாமல் திருமணம் செய்த அழகில்லாத பெண்களால் பலரும் சந்தோஷமாய் வாழ்கின்றார்கள்.
14. நல்ல கணவனுக்கும் துரோகம் செய்து கொண்டும் சில பெண்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
15. அயோக்கிய கணவனுக்கும் துரோகம் செய்யாமலும் பல பெண்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
16. பழிக்குப்பழி என்ற கோட்பாட்டில் கணவனும், மனைவியும் துரோகம் செய்து கொண்டும் வாழ்கிறார்கள்.

இந்த முரண்பாடுகளுக்கு எல்லாம் காரணகர்த்தா யார் ? மேல் வீட்டு திருவாளியத்தவனா ? இல்லை விதி என்றும் எல்லாம் அவன் செயல் என்று மேல் வீட்டுக்காரரை கைகாட்டி விட்டு கீழ் வீட்டுக்குச் செல்லும் காலம்வரை வாழ்வின் நெளிவு சுழிவு அறிந்து வலிகளை நீக்கத்தெரியாத வழிப்போக்கர்களான புரியா மடந்தை மனித மனங்களா ? இதன் மூலம் கீழ்காணும்...

விருப்பமற்ற விவாஹம் விருத்திக்கு வராது.
திடீர் திருமணம் திருப்தி தராது.
ட்டாய ல்யாணம் ளத்தில் நிற்காது.
என்பதும் பொய்யாகிறது ஆம் இவை எதிர் புறமாகவும் திரும்பலாம் என்பதே எமது கருத்து உங்கள் கருத்தென்ன, நட்பூக்களே... ?

காணொளி
மணப்பெண் கதறக் கதற கட்டியதாலி நிலைக்குமா ?
பதிவுக்கு காரணமான திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்கு நன்றி.

சனி, அக்டோபர் 29, 2016

கொடுத்துட்டு போங்க, அத்தான்

மச்சான் நான் தினமும் பார்க்கிறேன் இவள் என்னையே பார்க்கிறாள்டா...
அட மூதேவி இவ பேரு கண்ணம்மாள் மாறு கண் எவன் பார்த்தாலும் அவனைப் பார்க்கிற மாதிரித்தான் இருக்கும்.

மாப்ளே அதோ போறாளே.. அவ எங்கிட்டே ஏதோ சொல்லணும்னு நினைக்கிறாடா நானே நேரடியாகவே கேட்றவா.... ?
அட முண்டம் அவள் பிறவியிலேயே ஊமை உங்கிட்டே என்னத்தை சொல்லப் போறா ?

மாமு நான் இவள் பின்னால் மறைமுகமா பாடிக்கிட்டே என் காதலைச் சொல்றேன் திரும்பிக்கூட பார்க்க மாட்றாடா..
அட முடுமை இவளுக்கு சுத்தமாக காது கேட்காது இதுல நீ பின்னாலே வேற பாடுனியா ? வெளங்கிடும்.

மச்சி இந்த வீட்ல ஒரு ஸூப்பர் ஃபிகருடா நான் தினம் இந்த வழியாக போகும்போது ஜன்னல் வழியாக என்னைப் பார்த்து சிரிப்பாள் ப்ளைன் கிஸ் விட்டுப் பார்த்தேன் சிரிக்கிறாள் ஆனால், ஒருமுறைகூட பிடித்து எனக்கு ப்ளைன் கிஸ் விட மாட்றேளேடா....
அட முடுதாறு இவளுக்கு சின்ன வயசுலயே ஆக்ஸிடெண்டல இரண்டு கையும் போயிருச்சு பின்னே ப்ளைன் கிஸ் உனக்கு எப்படி ?

பாஸூ இந்த வீட்டு பால்கனியில் ஒருத்தி சேரில் உட்கார்ந்து சிரிக்கிறாள், டாடா காமிக்கிறாள் கீழே வா பேசுவோம்னு சைகையில் சொன்னால் வரமாட்றாடா..
அட கூதரை இவள் பிறவியிலயே இரண்டு காலும் ஊனம் பின்னே எப்படி கீழே வந்து உன்னிடம் பேசுவாள் ?

தல இந்த வீட்ல ஒருத்திக்கிட்டே லவ் லட்டர் கொடுத்தேன்டா அதுக்கு எதிர்த்த டெலிபோன் பூத் கடைகாரர்ட்ட கொடுத்துட்டு போங்க அத்தான் அப்படின்னு சொன்னாடா அத்தான்னு சொல்றாளே சம்மதம் போல அப்படின்னு போய் கொடுத்தேன் வாங்கி படிச்சு பார்த்தவன் எதுவுமே கேட்காமல் மாத்துல விட்டு நச்சு எடுத்துட்டான்டா இவளுக்கும், அவனுக்கும் என்னடா சம்பந்தம் ?
அட கூமுட்டை அவன்தான்டா இவளோட புருசன்.

எப்படிடா.... இவ்வளவு விபரமும் தெரிஞ்சு வச்சு இருக்கே ?
அட காமுட்டை நீ செஞ்சதைப் பூராம் நானும் ஒரு தடவை செய்து அனுபவப்’’பட்டு’’ வந்தவன்டா.

சிவாதாமஸ்அலி-
பூத் கடைகார அத்தான்’’னு சொன்னதை இவனைச் சொன்னதாக நினைச்சுட்டானோ ?
Chivas Regal சிவசம்போ-
ஒருவேளை இவனும் செவிடோ ?
சாம்பசிவம்-
இந்த திக்குவாய்க்காரன் தேடிப்போனது பூராம் இப்படித்தானா ?
இனிய தீபாவளி வாழ்த்துகள்.

வியாழன், அக்டோபர் 27, 2016

சங்கரன்கோவில், சந்தேகபுயல் சங்கரன்


எனக்கு நெடுங்காலமாகவே சந்தேகம்

அதாவது திரைப்படங்களில் கசாநாயகனை அடிப்பதற்கு சுமார் பத்திலிருந்து இருபது நபர்கள் வரை பைக்குகளில் வருவார்கள் அதுவும் இப்பொழுது ஐம்பது பேருக்குமேல் வருகிறார்கள் அவர்கள் கைகளில் அருவாள், கத்தி, கம்பு, கோடரி, ஈட்டி, சைக்கிள் ஜெயின் போன்ற பயங்கரமான ஆயுதங்கள் இருக்கும், போதாக்குறைக்கு அவர்கள் அனைவருமே 80 திலிருந்து 110 கிலோ வரை எடையுள்ள தடியன்களாகவும் இருப்பார்கள் இவர்கள் எல்லோருமே கசாநாயகனை சுற்றிக் கொண்டுதான் நிற்பார்கள் கையிலிருக்கும் ஆயுதத்தால் ஒரே அடியில் மண்டையில் அடித்து வீழ்த்தி விடலாம். ஆனால் செய்ய மாட்டார்கள் காரணம் ஐடியா இல்லை அறிவு வளர்ச்சி குறைவு. ஆனால் கசாநாயகனோ சாதாரண எடையுள்ள ஒரு மனிதராகத்தான் இருப்பார் கையிலும் எந்த ஒரு ஆயுதமும் இருக்காது, அடிக்க வரும் எதிரிகளை வெறும் கையால் அடிப்பார், மேலும் காலால் எதிரிகளை பந்து போல் எத்தி விடுவார் அந்த நேரங்களில் நான் ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன் இந்தக் கால்களுக்கு எவ்வளவு பலம் இருக்கிறது ?

அப்புறம் இன்னொரு சந்தேகம் ?

சாநாயகனை வில்லன் ஆட்கள் துப்பாக்கியோடு விரட்டுவார்கள் கசாநாயகனோ வீட்டின் ஓட்டு முகளில் ஓடிக்கொண்டு இருப்பார் இவர்கள் அனைவருடைய துப்பாக்கி குண்டுகளும் அவரின் காலின் பக்கத்திலேயே சுடுவார்கள், ஓடுகள்தான் வேஷ்டாகும். சட்டென ஒருவனுடைய துப்பாக்கியை பிடுங்கி ஓடிக்கொண்டே... ஆறு குண்டுகள் உள்ள, துப்பாக்கியிலிருந்து எட்டுப் பேரை சுடுவார், பிறகு கசாநாயகன் தரையில் ஜம்ப் பண்ணி ஜீப்பில் ஏறப்போகும் போது பக்கத்தில் உயரமான டவரிலிருந்து ஒருஆள் பாம் வீசுவார் ஓடிக்கொண்டே நமது கசாநாயகனும் அதை லாவகமாக பிடித்து அந்தத் டவரின் மீது மிகச் சரியாக வீசுவார் டவர் மீது நின்றவரும் கருகிச்செத்து விடுவார்.

(அப்போழுதெல்லாம் நான் நினைத்ததுண்டு கெடுவான் கேடு நினைப்பான்)

ஜீப்பில் ஏறிய பிறகும் விடமாட்டார்கள் கார்களிலும், லாரிகளிலும், பைக்குகளிலும் விரட்டி வருவார்கள் கசாநாயகனும் லொடக்கு ஜீப்பை வைத்துக் கொண்டே எல்லோரையுமே இடித்தும், அவர்கள் கையில உள்ள பாம்''மை பிடுங்கிவீசி கொன்று விடுவார். இவ்வளவும் செய்து விட்டு வில்லனின் மகளோடு கைகோர்த்துக் கொண்டு போய்க் கொண்டே... இருப்பார். அந்த உலுத்த சிறுக்கியும், நம்ம அப்பனோட சொத்தை எல்லாம் அழிச்சுட்டானே ! நாளைக்கு சோத்துக்கு என்ன செய்வது ? என்று நினைத்துப் பார்ப்பதில்லை போலீஸாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். சரி அது போகட்டும் அது வேற காரியம்.

அதாவது ஒருஆள் இத்தனை ஆபத்துகளையும் கடந்து இவ்வளவு பேரையும் கொல்ல முடிகிறது என்றால் உண்மையிலேயே அவர் மிகமிகத் திறமைசாலிதான்.

(அரசாங்கம் ஏன் ? இந்த மாதிரி வீரர்களை ராணுவத்துக்கு எடுக்ககூடாது)

இத்தனை பேர் சேர்ந்தும் கசாநாயகனை வீழ்த்த முடியவில்லையே... இதற்கு காரணம் என்ன ? நான் யோசித்துப் பார்த்தேன்.

தேர்வுமுறை சரியில்லை. ஆம், தேர்வுமுறை சரியில்லை.

தேர்வு செய்தது யார் ? நமது இயக்குனர்தான்.

அவர்தானே இந்த மாதிரி திறமையில்லாத தடியன்களை தேர்வு செய்தது. ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது ஒரு திறமையான கசாநாயகனை சரியான முறையில் தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

எனது சந்தேகமே இனிமேல்தான்.

அதாவது ஒரு படத்தில்தான், இந்த மாதிரி திறமையில்லாத அடியாட்களை தேர்வு செய்து விட்டார்கள் சரி. அடுத்து வரும் படங்களிலாவது மற்ற இயக்குனர்கள் நல்ல திறமையான அடியாட்களையும், வில்லன்களையும் ஏன் தேர்வு செய்வதில்லை ?

இதுதான் எனது சந்தேகம்.

சாம்பசிவம்-
ஏலே யாருப்பா... அங்கிட்டு இந்த ஆளைக் கொஞ்சம் கவனி''லே.

 காணொளி