தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜனவரி 30, 2017

மெய்யா ? பொய்யா ?


1999-ம் ஆண்டு நான் நான்கு மாத விடுமுறையில் இந்தியா வந்திருந்தேன் மீண்டும் அபுதாபி திரும்பும்போது எனது மனைவியிடமிருந்து ஒரு கோரிக்கை என்னைப்பற்றி எனது மனைவிக்கு தெரிந்திருந்தும் தயக்கத்துடன் இப்பொழுது ஜனித்திருக்கும் குழந்தையை அபார்ஷன் செய்து விடுவோமா ? எனக்கு வந்தது கோபம் காரணம் எனக்கு குழந்தைகள் என்றாலே மிகவும் ஆசைப்படுபவன் அப்படியானால் எனது குழந்தை மீது ஆசை இருக்காதா ? அதற்கு அவள் சொன்ன காரணம்தான் மேலும் கோபத்தைக் கிளப்பியது அதாவது மனைவி வீட்டார் ஜோசியம் பார்த்து இருக்கிறார்கள் அதில் மூன்றாவதாக ஜனிப்பது கண்டிப்பாக பெண் குழந்தைதான் மேலும் அது பிறந்தவுடன் தாய் இறந்து விடுவாள் இதுதான் காரணம் சொன்னது ஜோசியர். 

பீதி போதாதா ? நான் சொன்னேன் உனக்கு பயமாக இருக்கிறது என்றால்... அதில் நியாயம் இருக்கிறது யாரோ ஜோசியர் சொன்னதுக்காக சொல்றியே.. இதே ஜோசியர் நான் இப்பொழுது அபுதாபி போனால் திரும்ப மாட்டேன் என்று சொன்னால் உனது கருத்தென்ன ? நீ கண்டிப்பாக தடுக்க மாட்டாய் என்பதும் எனக்குத் தெரியும் அதேநேரம் நீ தடுத்தாலும் நான் கண்டிப்பாக போவேன். 

காரணம் இப்பொழுது குழந்தைகளுக்கு காது குத்தினோம் எவ்வளவு செலவு முக்கியமாக வரும்போது நிறைய வெளியூர் நண்பர்களிடம் கடன் வாங்கி வந்திருக்கிறேன் அதை எப்படிக் கொடுப்பது ? சர்ச்சைகள் சண்டையாகி அவள் இறப்பதை நான் விரும்புவதாக அந்த தீர்க்கதரிசி ஜோசியரைப் போலவே எனது மனைவி கணித்து விட்டாள் காரணம் அம்பூட்டு அறிவு என்னவளுக்கு இதற்கு உறுதுணையாக மனைவி வீட்டார் ஆத்திரத்தில் நீ அப்படி நினைத்தால் ? உனது இஷ்டப்படி செய்து கொள் என்று அந்தப்பாவச் செயலுக்கும் பணத்தைக் கொடுத்து விட்டு சென்று விட்டேன்.

நான் மீண்டும் அவசரமாக வந்து 2001-ல் பார்க்கும்போது அவள் இதயத்தில் BLOOD CENCER மரணத்தின் கடைசி நிலை. எல்லாம் முடிந்தும் விட்டது இதற்கு காரணம் யார் ? அழிக்கப்பட்ட அந்த சிசு காரணமில்லையே ஒருக்கால் அந்தக் குழந்தையையும் கொடுத்து விட்டு சென்றிருக்கலாமே என்ற கவலையும் எனக்கு வந்தது மீண்டும் தோன்றியது ஒருக்கால் நான் வெற்றி பெற்றிருந்தால்.

(நான் எதில்தான் வெற்றி பெற்றேன் இதில் வெற்றி பெற) 

இவளது மரணத்திற்கு அந்தக் குழந்தையும், நானுமே காரணம் என்று முத்திரை குத்தி விடுவார்கள் நான் சமாளித்து விடுவேன் நானில்லாதபோது குழந்தையை பழித்தால் ? ? ? அதன் மனம் எவ்வளவு வேதனைப்படும் எல்லாம் நன்மைக்கே என்று பெரியோர்கள் சொல்லி வைத்தது இதனாலும் தானோ ? நண்பர்களே ஜோசியம் பொய்யா ? இல்லை கணிப்பது பொய்யா ? இதை நம்புவது சரியா ? இல்லை நம்பாதது சரியா ? சிலவற்றை நம்பாமல் இருக்கவும் முடிவதில்லை நம்பவும் முடியவில்லை.

நட்பூக்களே தங்களின் கருத்தென்ன ?

47 கருத்துகள்:

  1. நாலு ஜோதிடர்கள் உங்கள் ஜாதகத்தைப் பார்த்து ஒரே மாதிரியாக கணித்தார்கள்என்றால் ஜோதிடத்தை நம்பலாம் !செத்தவருக்கே ஆயுசு நூறு என்கிறார்களே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஜி இதை வைத்து பலர் வாழ்கிறார்கள் என்பதே உண்மை

      நீக்கு
  2. இதைப்பற்றித் தான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். நல்ல ஜாதகம், இந்தப் பெண் தான் உங்கள் பையருக்குப் பொருத்தம் என்று சொல்லிச் சேர்த்த தம்பதியர் சந்தோஷமாக வாழ்வதில்லை. தினம் தினம் சண்டை, சச்சரவு. மனைவி கணவனை சிறிதும் மதிப்பதில்லை. ஏடிஎம் மிஷின் தான் கணவன் என்னும் எண்ணம்! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பலரது வாழ்க்கையை மாற்றி இருக்கின்றது சோசிய நம்பிக்கை

      நீக்கு
    2. ஆனால் இதை விதி என்று சொல்பவர்களும் இருக்காங்க! :(

      நீக்கு
    3. ஆம் உண்மைதான் சகோ

      நீக்கு
  3. மனம் கனக்க வைக்கின்றீர்கள். சிலரின் நம்பிக்கைகள் அப்படி எனும் போது நாம் அதை மாற்ற இயலாது. அந்த குழந்தை பிறந்து மனைவி இல்லாமல் போயிருந்தால் ஆயுசுக்கும் குழந்தை பழி சுமந்திருக்கும். நடந்ததும் நன்மைக்கே.

    நான் வயதுக்கு வந்த போது எனக்கு ஜாகதம் கணித்த ஜோசியன் தாய் மாமாவுக்கு ஆபத்து என சொல்ல.. இரண்டு வருடங்களின் பின் மாமா காணாமல் போல என்னை தான் அம்மம்மா திட்டி திட்டி அழுதார்.மாமா காணாமல் போனதை விட என்னை அம்மம்மா திட்டி அழுத்தும் அதை துக்கம் கேட்க வந்தவர்கள் வேடிக்கை பார்த்ததும் தான் எனக்கு பெரும் கவலையாக, கோபம் தந்தது.

    நான் இந்த ஜோசியம், சாஸ்திரம் எல்லாம் பார்ப்பதும் இல்லை. நம்பிக்கையும் இல்லை. ஆனால் சில வேளை ஜோசியம் உண்மையோ என கூட தோன்ற வைக்கும். அந்த வயதில் மாமா குறித்து சொன்ன ஜோசியன்.வயது 13 தான். அப்போதே நான் கடல் கடந்து போய் விடுவேன். குடும்பத்துடன் இருக்க மாட்டேன் பிரிந்து விடுவேன் எனவும் சொன்னானாம். நான் 16 வயதில் கடல் கடந்தும் விட்டேன். என்ன சொல்ல முடியும்?


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நாட்டில் அந்த சூழலில் பலருடைய மாமாக்கள் காணாமல் போனது உண்மைதானே இதை உணந்து பார்க்காமல் பேசுவது தவறானதே..

      நீக்கு
    2. நிஷா, உங்களுக்குச் சொன்ன ஜோசியருக்கு வயது 13 என்கிறீர்களா அல்லது உங்கள் வயது அப்போது 13? எதுவாக இருந்தாலும் பால ஜோசியம், வ்ருத்த வைத்தியம் என்பார்கள். ஏனெனில் இளம் வயதில் உள்ளவர்கள் ஜோசியம் பார்த்துச் சொல்லும் போது உள்ளதை உள்ளபடி சரியாகச் சொல்லுவார்கள். மனதில் தோன்றுவதை மறைக்க மாட்டார்கள். அதே அனுபவம் வாய்ந்த ஜோசியர் எனில் நிலைமையை ஊகித்தும், மனுஷ சுபாவத்தை ஊகித்தும் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லுவார்.

      வ்ருத்த வைத்தியம் என்பதே நல்லது என்பார்கள். அனுபவப் பட்ட வைத்தியருக்குத் தானே வைத்தியம் நன்றாகப் பார்க்க வரும்!

      நீக்கு
    3. நல்லதொரு கருத்து

      நீக்கு
  4. அடுத்தவர் ஆயுளையும் நடப்பதையும் கணிக்கும் ஜோசியர்களுக்கு தங்கள் ஆயுசையும், எதிர்காலத்தையும் கணிக்க முடியாமல் போவதும் வேடிக்கை. எல்லாம் மாயம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை எனது நாலில் கூட நகைச்சுவையாக இதை எழுதி இருக்கிறேன்

      நீக்கு
    2. "நூலில்" என்று படிக்கவும்

      நீக்கு
  5. நடப்பது நடந்தே தீரும் என்றே உறுதியாகிறது.

    பதிலளிநீக்கு
  6. நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை.

    பதிலளிநீக்கு
  7. நண்பரே
    நமது வீட்டில் ஒரு குழந்தை பிறந்து
    அதே தேதியில், அதே நேரத்தில், அதே நொடியில்
    அம்பானியின் வீட்டிலும் ஒரு குழந்தை பிறந்தால்,
    இரண்டிற்கும் ஒரே ஜாதகம்தான்
    இரண்டு குழந்தைகளும் ஒன்றே போல் எதிர்காலம் அமையுமா
    வசதி வாய்ப்பு அமையுமா
    கவலை வேண்டாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பொருத்தாமான உவமை அழகாக சொன்னீர்கள்.

      நீக்கு
  8. மனதைத் தொட்ட பதிவு.

    ஜோசியம் பற்றி என்ன சொல்ல..... எனக்கும் நம்பிக்கை இல்லை. பார்ப்பவர்கள் பார்த்துக் கொள்வதிலும் எனக்கு பிரச்சனையில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பண்டைகாலத்தில் சரியாகவே கணித்து இருக்கின்றார்கள் ஜி வருகைக்கு நன்றி

      நீக்கு
  9. இதை பற்றிய சிந்தனையே வேண்டாம் ஜி... அப்போது தான் உடலுக்கும் மனதிற்கும் நல்லது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நான் உடன்பாடில்லாதவனே... என்றும்

      நீக்கு
  10. உங்கள் பதிவைப்பார்த்ததும் மனம் கனமாகி விட்டது.
    எனக்கு நம்பிக்கை அவ்வளவாக இல்லையென்றாலும் மிகச் சரியாக எதிர்காலத்தைக் கணிக்கும் சில திறமையான ஜோதிடர்கள் இருக்கவே செய்கிறார்கள். சில சமயங்களில் அது நம்மை பிரமிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ சோசியம் என்பது பண்டை காலத்திலிருந்து இருக்கின்றது தற்போது அவைகள் வியாபாரத் தந்திரத்துக்குள் மூழ்கி விட்டது உண்மையே வருகைக்கு நன்றி

      நீக்கு
  11. உங்கள் பதிவை படித்தவுடன் மனம் கனத்துவிட்டது.

    ஜோதிடம் பார்த்து திருமணம் செய்து வைத்த உறவுகள் சில பிரிகிறது. சோதிடமே பார்க்காமல் இருவீட்டார் மனபொருத்தம் பார்த்து முடித்த திருமணம் வாழ்கிறது என்ன சொல்வது?

    என் அம்மா சொல்வார்கள் ’அன்று எழுதியதை அழிச்சா எழுதமுடியும் என்று’ பிறக்கும் போதே முடிவு செய்யப்பட்டது என்பது என் அம்மாவின் நம்பிக்கை.எல்லாம் விதி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உண்மைதான் தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  12. மனம் வேதனை....சோதிடத்தைச் சுத்தமாக நம்புவதில்லை....எதிர்மமறைகள் மனதைக் கெடுக்கும்.நடப்பதை ஏற்று வாழ்வதே நல்லது. சோதிடம் கணக்கியலாக, பாடமாக இருக்கலாம்....ஆனால் கணிப்பவர்? சரி நம்மை மீறிய சக்தியை நம்புபவர்கள் சோசியத்தை நம்பினால்...அப்போ அந்த சக்தி/கடவுளை நம்புவது? நம்பிக்கை இல்லை சோசியரை நம்புவது போல் இருக்கு இல்லையா...அப்ப சோசியரை கும்பிட்டு பூசிக்கலாமே....எனவே முயற்சி திருவினையாக்கும்....try your best...leave the rest to nature or that super power...அடுத்து என்ன நடக்கும் என்பதை ஆராய்ந்தால்...மனம் தடுமாறும்..முயற்சிகள் செய்வோம் இந்த நொடியில் வாாழ்வோம்...நோ நம்பிக்கை சோசியத்தில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது விரிவான விளக்கவுரைக்கு நன்றி

      நீக்கு
  13. வெகு நாட்கள் கழித்து வந்திருக்கிறேன். ஆனால், மனதைக் கனக்கச் செய்யும் பதிவு.

    தன் கற்பனைக் குதிரையைப் பறக்கப் பறக்கத் தட்டி விட்டு வாய்க்கு வந்தவற்றையெல்லாம் கொட்டிக் காசு பிடுங்கும் அற்ப சோதிடர்களையும் நான் பார்த்திருக்கிறேன். நடக்கப் போகிற விதயங்களைப் பல நாட்களுக்கு முன்பே சொல்லி அசத்தும் சோதிடர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.

    சோதிடம் மெய்யா பொய்யா என்பது அப்புறம் இருக்கட்டும். ஆனால், ’அந்தக் குழந்தை பிறந்த பிறகு உங்கள் மனைவியாருக்கு இப்படி ஆகியிருந்தால்...?’ என்பதுதான் மிகத் தலையாய கேள்வி. அந்தக் குழந்தையை என்னவெல்லாம் கரித்துக் கொட்டியிருப்பார்கள்! அதே நேரம், குழந்தை வயிற்றில் இருந்தபொழுது அப்படி ஒரு முடிவெடுத்த தங்கள் மனைவியார், குழந்தை பிறந்த பிறகு அப்படி ஆகியிருந்தால் அதற்காகக் குழந்தையை வெறுத்திருப்பாரா என்ன? கண்டிப்பாக மாட்டார்! எந்தத் தாயும் அப்படி இருக்க மாட்டார்! தனக்குப் பின் தன் குழந்தையை யார் வளர்ப்பார்கள் என்றுதான் அந்த உயிர் பிரியும் நேரத்திலும் அந்தத் தாய் மனம் ஏங்கும்.

    ஆனால், அதற்காக எல்லாம் நன்மைக்கே எனவெல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது. அந்தக் குழந்தையைக் கலைத்து விடுவதாக உங்கள் மனைவியார் எடுத்த முடிவு வேண்டுமானால் நன்மையாக முடிந்திருக்கலாம். ஆனால், உங்கள் மனைவியாரே இறந்து விட்டாரே! அதை எந்த வகையில் நன்மைக்கு என எடுத்துக் கொள்ள முடியும்? இந்த ’எல்லாம் நன்மைக்கே’, ’எதுவும் கடந்து போகும்’ என்பவையெல்லாம் முழுக்க முழுக்க ஊழையும் கடவுளையுமே நம்பி வாழ்க்கை வண்டியை ஓட்டுபவர்களின் சொற்கள். உங்களைப் போன்றவர்களுக்கு அந்த மாயை தோன்றக் கூடாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகை தந்தமைக்கு முதற்க்கண் நன்றி

      எனது குணாதிசயங்களை சரியாக கணித்து வைத்திருந்தமைக்கு மிக்க நன்றி நான் என்னை நம்பி வாழ்பவன் இருப்பினும் குடும்ப வாழ்க்கையில் சில நேரங்களில் ஒத்துழைக்க வேண்டிய சூழல் அமைந்து விடுகிறது

      இன்றைய நிலையிலும்கூட அந்த குழந்தையும் பிறந்திருக்கலாமோ என்றே நினைக்க தோன்றுகிறது

      தங்களது விரிவான கருத்துரைக்கு மீண்டும் நன்றி
      தலைப்பு பிடித்து விட்டதோ.... ஹா... ஹா... ஹா...

      நீக்கு
    2. //இன்றைய நிலையிலும் கூட அந்தக் குழந்தையும் பிறந்திருக்கலாமோ என்றே நினைக்கத் தோன்றுகிறது// - தந்தைமை!

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  14. ஜோசியம் பலவகைப்படுகிறது அதில் கைரேகை ஜோசியமும் ஒன்று இது பற்றி தெரிந்துகொள்ள நான் கைரேகை ஜோசியம் பற்றித் தெரிந்து கொள்ளக் கற்றுக் கொண்டேன் தமாஷாக நான் சொன்ன சில நடந்திருக்கிறது என்று சொன்னவர்களும் உண்டு ஜோசியம் சோறு போடுகிறது சிலருக்குபல சோசியர்கள் வாய்ச்சவுடாலால் வெல்கிறார்கள் எனக்கு நம்பிக்கை முற்றிலும் இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா உண்மை சோசியம் பலரை வாழ வைத்துக்கொண்டு இருப்பது உண்மையே...

      சமீபத்தில் டி.வி.யில் வருபவர் என்று நண்பருக்கு சோசியம் பார்க்கப் போனோம் கட்டணம் 1000 ரூபாய் அவர் சோசியம் சொல்வதைவிட தற்புகழ்ச்சியே அதிகம் பேசினார் 1000 ரூபாய் வாங்கி கொண்டு சமயம் களைகின்றாரே என்று எனக்கு கோபம் வந்து கேட்டேன் இதனால் சண்டை வந்து என்னை வெளியே போகச்சொல்லி விட்டார்

      பிறகு நண்பருக்காக வெளியே காத்திருந்து அழைத்து வந்தேன்.

      நீக்கு
  15. என்ன சொல்வதென்று தெரியவில்லை ஐயா.காலம் பதில் சொல்லிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ காலமே வெல்லும் வருகைக்கு நன்றி

      நீக்கு
  16. சோசியம் என்பது ஒரு அறிவியல் கலை. ஆனால் பலர் அதை வணிகமாக மாற்றிவிட்டார்கள் என்பது தான் சோகம். சோசியம் பார்பவர்களில் எவர் சொல்வது உண்மை எவர் சொல்வது பொய் என்று தெரியாதபோது வீணே கவலைப்படுவது சரியல்ல. தங்களுக்கு நடந்ததை அறியும்போது மனதை என்னவோ செய்கிறது. திரு திண்டுக்கல் தனபாலன் அவர்கள் கூறியது போல் எதையும் மனதில் நினைக்காதீர்கள். இனி நடப்பது நல்லவையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நல்லதொரு விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  17. NINAIPPATHELLAM NADANTHU VITTALTHEIVAM YETHUM ILLAI.NADANTHATHAIYE NINAITHIRUNTHAL AMAITHI ENRUMILLAI. JOSIYAKARAN SOLLUM NALLA VISAYANGALAIYETRUKKOLLUM NAAM THUKKANGALAI YETRUKKOLLA THAYANGUGIROM ITHUTHAN FACT. ATHULA SILAR JOSIYAME THAPPA SOLVATHUM UNDU

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் மாப்ளே...
      நமக்கு நன்மை சொன்னால் மட்டும் சந்தோஷம், நம்பிக்கை.

      நீக்கு
  18. கில்லர்ஜி, உங்கள் முரட்டு மீசைக்குப்பின்னால் இவ்வளவு சோகமுண்டென்பது எனக்குத் தெரியாது.....

    நெஞ்சம் கனக்கிறது ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணாச்சியின் முதல் வருகையில் சோகமான பதிவு இருப்பது கண்டு எமக்கு வருத்தம் உண்டு தொடர்க...

      நீக்கு