படிப்பிற்க்கும்
அறிவுக்கும் பந்தமுண்டா ?
01.
உண்டெனில் ஒரு M.A படித்த பட்டதாரி படிக்காத
நடிகனுக்கு ரசிகர் மன்றம் அமைத்து அவனை தலைவனாக்கி அதன் வழியே வாழ்க்கையை
ஓட்டிக்கொண்டு போவது எந்த வகையில் ?
02.
படிக்காதவனாயினும்
பாமரனாயினும் இதுதான் வாழ்க்கை எனஅறிந்து உழைத்து தாய்-தந்தைக்கு உணவளிக்கிறானே
இது எந்த வகையில் ?
03.
நான்காம் வகுப்புவரை
படித்தவனிடம் ஒரு மையக்கருவை கொடுத்து ஒரு கதை வேண்டும் எனச்சொன்னால் மறுநாளே
அழகான கதையொன்றை தயார் செய்து விடுகிறானே இது எந்த வகையில் ?
04.
உடனடியாக ஒரு கவிதை வேண்டுமென்றால்
சட்டென ஹைக்கூ கவிதையொன்றை தீட்டி விடுகிறானே இது எப்படி ?
05.
இதையே ஒரு M.A படித்தவனிடம் கேட்டால் ? (எல்லோரும் அல்ல) எனக்கும் அதற்கும்
சம்பந்தமில்லை என்கிறானே இது எப்படி ?
06.
படிக்காததால் ஊனமென்றாலும்
ஒரு கையால் மண்வெட்டி கொண்டு வேலை செய்து வாழ்கிறானே இது எப்படி ?
07.
உயிரைக் காக்கும்
மருத்துவம் படித்தவன் (எல்லோரும் அல்ல) கிட்னியை
திருடி விற்கிறானே இது எப்படி ?
08.
படிக்காத தாமஸ் ஆல்வா எடிசன்
மின்சாரத்தை கண்டு பிடித்தாரே இது எப்படி ?
09.
படிக்காத ஐயா காமராஜர்
அவர்கள் நாட்டை செம்மை படுத்தினாரே இது எந்த வகையில் ?
10.
படிக்காத விவசாயி நமக்கு உலகம்
புரியாது எனஒதுங்கி நாட்டு மக்கள் உண்ணுவதற்க்கு உழைத்துக் கொண்டு இருக்கிறானே இது
எந்த வகையில் ?
11.
படித்தவன் கம்ப்யூட்டர்
மூலம் உலக அளவில் தீவிரவாதத்தை வளர்த்து மக்களை அழிக்கின்றானே இது எப்படி ?
12.
ராஜராஜசோழன் காலத்திலேயே தஞ்சை
பெரியகோயிலின் நிழல் தரையில் விழாமல் கணக்கு வைத்து கட்டினார்களே அவர்கள் எந்த
பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள் ?
13.
ஒண்ணேமுக்கால்
வாக்கியத்தில் உலக வாழ்க்கையை சித்தரித்து திருக்குறள் எழுதினாரே ஐயன்
திருவள்ளுவர் அவர் எந்த பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார் ?
14.
மூடக் கொள்கைகளை ஒழிக்க குரல்
கொடுத்தாரே தத்துவ முத்துக்களால் தந்தை ஈ.வெ.ரா.பெரியார் அவர்கள் எவ்வளவு தூரம்
படித்தவர் ?
15.
கல்வி வளர்ச்சி அடையாத
காலகட்டத்தில் சாதி-மத சண்டைகள் கிடையாதே இது எப்படி ?
16.
கல்வியோடு இன்று சாதி - மதமும்
வளர்ந்து விட்டதே இது எந்த வகையில் ?
கரும்புச்சாறிலிருந்து
சர்க்கரை வியாதிக்கு மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியிலிருக்கும் இயற்கை
விஞ்ஞானி ''ஞானி
ஸ்ரீபூவு'' அவர்களிடம்
ஒருமுறை கேட்கப்பட்டது, ஐயா படிக்காமலேயே இவ்வளவு தூரம் ஆராய்ச்சி செய்யும்
தாங்கள் படித்திருந்தால் ? அதற்கு அவர்கள் சொன்னபதில்
//எவனாவது நடிகனுக்கு ரசிகர்
மன்றம் அமைத்து கட்டவுட்டிற்க்கு பாலாபிஷேகம் செய்து கொண்டிருப்பேன்//
ஆக இதிலிருந்து தெரிவது என்ன ? படிப்பும் அறிவும் சம்பந்திகள் அல்ல !