தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜூன் 29, 2017

அர்த்தம் அபத்தமானது

 நான் அரபு மொழியில் உருவாக்கிய படம்

இந்தப்பதிவுக்கு வரும் நட்பூக்கள் கடந்த பதிவின் குழறுபடிகளை சரி செய்து விட்டேன் கீழ்காணும் இணைப்பை சொடுக்கி மேலோட்டமாக படித்து விட்டு இதைத்தொடர்ந்தால் தங்களுக்கு விளங்கும் நன்றி – கில்லர்ஜி

அந்த சங்கடம் என்னவென்றால் நவால் என்றொரு பெண் எல்லோருடைய பெயரைப்போல் இவளது பெயரையும் பதிவேட்டில் எழுதி வைத்துக் கொண்டே வந்தேன் மூன்று மாதம் கடந்த பிறகு அமல் என்றொரு பெண்தான் அந்த தவறை கண்டு பிடித்தாள் சத்தமில்லாமல் என்னிடமோ அல்லது நவாலிடமோ சொல்லி இருந்தால் பிரச்சனை சுமூகமாக மூக்கும் மூக்கும் வைத்தாற்போல் முடிந்திருக்கும் இவள் பதிவேட்டை எல்லோரிடமும் எடுத்துக்கொண்டு போய் காண்பித்து கில்லர்ஜி எப்படி எழுதி இருக்கிறான் பாருங்கள் என்று சொல்ல அலுவலகம் மொத்தமே சிரித்தது நவாலுக்கு வெட்கம் எனக்கு சங்கடம் ச்சே இப்படி ஆகிவிட்டதே

நவால்
Nawal
نوال

இப்படித்தான் எழுத வேண்டும் ஆனால் நான் எழுதியது இப்படி

بوال

ஏதும் வித்தியாசம் தெரிகிறதா

அந்தப்புள்ளி மேலே உள்ளது மேலிலும் கீழே உள்ளது கீழிலும் இருக்கிறதா இதுதான் பஞ்சாயத்து எனக்கு மிகவும் சங்கடமாகி விட்டது அவளிடம் மன்னிப்பு கேட்டேன் அவள் தலையில் அடித்துக்கொண்டு சிரித்தாள் உன்னால எல்லோரும் சிரிக்கிறாங்க எத்தனை தடவை இப்படி எழுதினேன் கணக்கு எடுத்தால் சுமார் இருநூறுக்கும் மேல் இந்த தருணத்தை பயன் படுத்த நஜாஹ் ஸ்கேலை எடுத்துக்கொண்டு வந்தாள்
என்ன
இருநூறு அடி வாங்கிக்க
ஏன்
செய்த தவறுக்கு
அப்படினா உன்னைத்தான் அடிக்கணும் நவால் நீ அடி நஜாஹ்தானே சொல்லிக் கொடுத்தது
ஆமா அதுவும் சரிதான் நீ வேணும்னே இப்படி எழுதகச் சொல்லி இருக்கே என அவளுடன் சண்டைக்கு கிளம்பி விட்டாள் நம் வேலை எப்பூடி

அதன் பிறகு அனைத்தையும் உட்கார்ந்து கரெக்சன் பென் வைத்து கீழுள்ள புள்ளியை அழித்து விட்டு மேலே ஒரு புள்ளியை கொடுத்து விட்டேன் வேலை முடிந்து விட்டது இந்த மாதிரி அரபு எழுதும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் சரி ஒரு புள்ளிதானே எலவு மேலே கிடந்தால் என்ன கீழே கிடந்தால் என்ன என்று கேட்கின்றீர்களா அதாவது

மேலே புள்ளி வைத்தால் நவால்
கீழே புள்ளி வைத்தால் புவால்
அதனாலென்ன

நவால் என்றால் ஒரு பெண்ணின் பெயர்
ஓகே
புவால் என்றால் என்றால் என்றால்
மூத்திரம்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

புதன், ஜூன் 28, 2017

வலிச்சா, வலிப்போக்கனிடம் போ !



தொடக்கத்தில் வந்த திரு ஜியெம்பி ஐயா அவர்கள் எழுத்தில் பிழைகள் இருக்கிறது என்று சொல்லிப்போனார் பிறகு செல்லில் வந்த ஸ்ரீராம் ஜி மற்றும் வாட்ஸ்அப்பில் வந்த தில்லை அகத்தாரும் வார்த்தைகள் குழறுபடியாக இருக்கிறது என்று சொன்னதால் மீண்டும் முழுமையாக எழுதினேன் இதில் கேள்விக்குறிகள் புள்ளிகள் அடைப்புக்குறிகள் இல்லை பொருத்தருள்க - கில்லர்ஜி

அபுதாபி வருடம் 2003
எனக்கு அரபு மொழி நன்றாக பேசத்தெரியும் பியூனாக இருந்து ஃபைலிங் கிளர்க்காக நுழைக்கப்பட்டபோது அரபு மொழியை எழுதிப்பழகும் பழகியே தீரவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டேன் எனது அலுவலகத்தில் வேலை செய்யும் அரபிப்பெண்களே கற்றுக்கொடுத்தார்கள் இதில் நஜாஹ் என்ற இளம் அரபிப் பெண்ணொருத்தி அவள்தான் கூடுதல் கற்றுக்கொடுத்தாள் என்று சொல்ல முடியும் அவரவர் வேலை நடந்து கொண்டு இருக்கும் அதன் மத்தியில் வேலையோடு வேலையாக எனக்கும் பயிற்சி நடக்கும் தவறாக எழுதில் விட்டால் அவளிடம் எனது கையில் புறகின் மொளியில் ஸ்கேலால் ஒரு அடி வாங்கி கொள்ளவேண்டும் என்பதும் அவளை நான் ஒஸ்தாத் என்றே அழைக்கவேண்டும் என்பதும் நாங்கள் வகுத்துக்கொண்ட எழுதப்படாத நீதி சரி கழுதை விளையாட்டுக்குத்தானே சொல்கிறாள் என்று நானும் ஒத்துக்கொண்டேன் முதல்நாளே பனிரெண்டு அடி மொளி பெயர்ந்து விட்டது என்னடா இது அரபு மொழி பழகுறதுக்குள்ளே நம் கைமொளியை பேர்த்திடுவாள் போலயே

என்ன நீ வலிக்கிற மாதிரி அடிக்கிறே
வலிச்சா வலிப்போக்கனிடம் போ நான் சொல்லித் தரமாட்டேன் என்றாள் சரி வலிப்போக்கனிடம் அரபி சொல்லித்தர முடியுமா என்று கேட்போம் என்றால் அவருடைய தொலைபேசி இலக்கமும் இல்லை நமது குருந்தன் வாத்தியார்கூட அடிச்சதில்லையே இவள் அடிக்கிறாளே... ஒருவேளை பூர்வஜென்ம பந்தமோ வேறு வழியின்றி சீக்கிரமாக அரபு பழகவேண்டும் இதற்காக சாலையில் நடந்து செல்லும் பொழுது அங்காடிகளில் எழுதியிருக்கும் பெயர்ப்பலகைகளில் அரபு மொழியிலும் ஆங்கிலத்திலும் இருக்கும் இவைகளை படித்துக்கொண்டே போவேன் இப்படி போகும் வேளையில் பலமுறை சாலையில் நடந்து செல்லும் இளம் பிலிப்பைன்ஸ் பெண்களை தெரியாத்தனமாக இடித்து விட்டு அவர்களது மொழியில் நாக்ஸிஸிஸி என்று சொல்லி மன்னிப்பு கேட்டும் சென்றது உண்டு

ஆறு மாதங்களில் இவளது அடிக்குப்பயந்து அதேநேரம் தொடக்கம் முதலே அழகாக எழுதப்பழகி விட்டேன் இதை பெருமைக்காக சொல்லவில்லை அவர்களே உனது எழுத்து அழகாக இருக்கிறது என்று சொன்னது இருக்கட்டும் எனக்கே தெரியும் காரணம் இவர்களில் பலருக்கும் எழுத்து அழகாக வராது இந்த அலுவலகத்தில் அரேபியர் சூடானியர் பாலஸ்தீனியர் எஜிப்தியர் ஒமானியர் யெமனியர் சிரியர் ஜோர்டானியர் அனைவருக்குமே தாய்மொழி அரபுதான் சுமார் நூற்றி இருபது ஊழியர்கள் வேலை செய்தாலும் இதில் ஆயிஷா என்ற அரபுப்பெண்ணின் எழுத்துதான் மிகவும் அழகாக இருக்கும் நான் சவால் விட்டு சொல்வேன் ஆயிஷாவின் எழுத்துதான் அழகு என்று ஆயிஷா எழுதும் பொழுது நான் அருகில் நின்று கவனித்து ரசிப்பேன் ஆயிஷாவுக்கு திருமணம் ஆனது இப்பொழுது அலுவலகத்தில் இல்லை

சரி விசயத்துக்கு வருவோம் ஆரம்பத்தில் எனக்கு கணினி கொடுக்கவில்லை கோப்புகள் வெளியே போகும் உள்ளே வரும் தேதிகளும் எடுத்தவர்களின் பெயர்களும் பதிவேட்டுகளில்தான் எழுதினேன் நான் நினைத்திருந்தால் ஆங்கிலத்திலேயே தொடர்ந்திருக்கலாம் அந்த தருணத்தில்தான் தேவகோட்டை மூளையின் மூலையோரத்தில் ஒரு மின்னல் வரிகள் ஓடியது நாமும் அரபு மொழியில் எழுதினால் என்ன காரணங்கள் இரண்டு உண்டு முதலாவது நான் விடுமுறை என்றால் அவர்கள் பதிவேட்டை பார்த்துக்கொள்வார்கள் பலருக்கும் ஆங்கிலம் தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது அடுத்தது இதையே காரணமாக வைத்து நாமும் ஓசியில் அரபி படித்து விடலாம் ஒரே கத்தி குத்து ரெண்டு

பிறகு கணினி கொடுத்தார்கள் வாழ்வில் முதல் முறையாக படிக்காத பாமரனுக்கு கணினியில் வேலை பெருமையாக இருந்தது அரபு மொழியில் டைரி டைப்பி பென் டிரைவரில் சேமிக்கும் பழக்கத்தை தொடங்கினேன் பிறகு இணையம் கொடுத்தார்கள் கிளி கையில் கோவைப்பழத்தை கொடுத்தால் என்னாகும் கிளி கிலி கிழிதானே அப்படி இப்படி எப்படியோ வலைப்பூவை கண்டு விட்டேன் விடுவேனா

எனக்கு புதிதாக ஒருவர் ஒரு விடயம் சொல்லிக்கொடுத்தார் என்றால் அதிலிருந்து அவருக்கே தெரியாத மற்றொன்றை தேடிப்பிடித்து விடுவேன் இது எனக்கு இறைவன் கொடுத்த அன்பளிப்பு என்றே பலதருணங்களில் நினைத்து இருக்கினேன் அரபு மொழியில் ஒரு சிறப்பு என்னவென்றால் எழுத்துக்களை எப்படி வேண்டுமானாலும் நமது வசதிக்கு எழுதமுடியும் உதாரணத்திற்கு கில்லர்ஜி என்ற எனது இனிமையான கனிவான பெயரைக்கூட ஒரு அழகிய தாமரையைப் போலவோ அல்லது அழகான உங்கள் கில்லர்ஜியின் உருவத்தைப் போலவோ ஒரு விமானத்தைப் போலவோ எழுதலாம் அதேநேரம் ஒரு சிறியபுள்ளி மாறி வந்தாலும் அர்த்தம் அபத்தமாகி விடும் இப்படித்தான் நானும் ஒருநாள் சங்கடத்தில் மாட்டிக்கொண்டேன் அது என்ன வென்றால்
தொடரும்

திங்கள், ஜூன் 26, 2017

நூர் இஸ்லாமிய வங்கி

100-ஐ சுற்றி மூன்று வலம்,

இடம் தாயும், மகனும் வீட்டில்....
அம்மா நான் சினிமாவுக்கு போகணும், நூறுரூபா கொடு.
அப்படி என்ன சினிமா பார்க்கப் போறே கண்ணா ?
நூறாவது நாள்.
அந்த மாதிரி சினிமாவெல்லாம் பார்க்கக் கூடாது நீ கெட்டுப் போயிருவே நான் பணம் தரமாட்டேன்.
அப்படினா அவசர போலீஸ் நூறு சினிமாவுக்கு போறேன்.
ஆங்... உங்க அப்பா போலீஸ்ல வேலை பார்த்து கிழிச்சட்டுட்டாரு நீ வேற அவசர போலீஸாம் அதெல்லாம் பார்க்க கூடாது.
அப்படினா நாகேஷ் நடிச்ச நூற்றுக்கு நூறு சினிமாவுக்கு போறேன்.
முதல்ல நூற்றுக்கு நூறு மார்க் எடுத்துட்டு வா ! அப்புறமா நூறென்ன ? நூற்றெண்பது சினிமாவுக்கு நான் கூட்டிட்டுப் போறேன்.
அதுக்கு நான் இன்னும் நூறு மாசம் படிக்கணுமே.

இடம் பள்ளி வகுப்பறையில் ஆசிரியரும், மாணவனும்....
இன்னைக்கு நாம சோசியல் பாடம் நடத்தப் போறோம். எத்திராஜ் நீ எந்திரி உனக்கிட்ட ஒரு கேள்வி கேட்கப் போறேன் இதுக்கு நீ சரியான பதில் சொன்னால் உனக்கு நூறு மார்க் தருவேன் சரியா சொல்லலைனா, உன் தலையில நூறு கொட்டு தருவேன் இது ரெண்டுல நீ எதை விரும்புறே ?
இது ரெண்டையுமே நான் விரும்பலை ஸார்.
வேற எதை விரும்புறே ?
உங்ககிட்டருந்து ஒரு நூறு ரூபா செலவுக்கு வாங்குறதை விரும்புறேன் ஸார்.
நான் ஏன் உனக்கு பணம் கொடுக்கணும் ?
ஏன் ஸார் கோபப்படுறீங்க ? நூறு ரூபா கூடஇல்லாம எதுக்கு ஸார் வாத்தியார் வேலைக்கு வர்றீங்க ?
உட்கார்டா நீ பதிலே சொல்ல வேண்டாம்.

Place – Noor Islamic Bank Coimbatore
வணக்கம் ஸார்.
வாங்க வணக்கம் என்ன விசயம் ?
எனக்கு உங்க பேங்க்ல லோன் வேணும்
உட்காருங்க உங்க பேர் ?
நூர் முஹம்மது.
எங்கே வேலை செய்றீங்க ?
நூரா ஹாஸ்பிட்டல்ல,
கல்யாணம் ஆயிடுச்சா ?
ஆயிடுச்சு ஸார்.
மனைவி பேர் என்ன ?
நூர்ஜஹான்.
கல்யாணம் ஆகி எவ்வளவு காலமாச்சு ?
இன்னையோட நூறு நாள்தான் ஆகுது ஸார்.
சொந்த ஊரு இதுதானா ?
ஆமா ஸார்.
சொந்த வீடு இருக்கா ?
இருக்கு ஸார்.
வீடு யாரு... பேருல இருக்கு ?
எங்க வாப்பா, நூருல்அமீன் பேருல இருக்கு ஸார்.
வீட்ல எத்தனை பேருக்கு பங்கு இருக்கு ?
எனக்கும், எங்க அண்ணன் நூருல்ஹக் ரெண்டு பேருக்கு மட்டும் ஸார்.
புது வீடா ?
பழைய வீடுதான் கட்டி நூறு வருசம் இருக்கும் ஸார்.
வீடு எங்கே இருக்கு ?
நூறடி ரோட்ல.
எத்தனை செண்டு இருக்கும் ?
பெரிய வீடு பின்னால காலி இடத்தையும் சேர்த்தா நூறு செண்ட் இருக்கும் ஸார்.
எவ்வளவு லோன் எதிர் பார்க்கிறீங்க ?
ஒரு நூறு கோடி ரூபாய்.
எவ்வளவு நாள்ல கட்டி முடிக்கலாம் ?
ஒரு நூறு வருசத்துல கட்டிடலாம் ஸார்.
எந்திரிய்யா இந்த ஏரியாவ விட்டு நூறு கிலோ மீட்டருக்கு அந்தப் பக்கம் போய் நிற்கணும் ஓடுயா...

இஸ்லாமிய நட்பூக்களுக்கு இனிய ரமதான் வாழ்த்துகள்.
காணொளி

வெள்ளி, ஜூன் 23, 2017

மேலே வானம் கீழே பூமிகா

1991 - ///லாலாக்கு டோல் டப்பிம்மா கண்ணே கங்கம்மா... உன் இடுப்பசுத்தி திருப்பி பாரம்மா எண்ணை இல்லாம விளக்கு எரியுமா கண்ணே கங்கம்மா மரம் இழுக்கிற கையெப்பாரம்மா ஏ... அடக் படக் சடக்/// இதை கவிதை என்று இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளும்போது நாமேன் கவிதை எழுதக்கூடாது ? என்று எனக்கு தோன்றியது அதன் விளைவாய் என் மனதில் உதித்த 1991 ஆண்டின் எனது கவிதைகளில் முதல் கவிதை.


இக் கவிதையின் கரு..

தற்காலம் ஈருடலாயினும் பிற்காலம் ஓருடலாவோமென கருதியிருந்த கன்னியின் மரணத்தால் வேருடல் வடித்த சிவப்பு கண்ணீர் அஞ்சலி....



பூமாஞ்சலி

பூத்திருந்த பூந்தளிரே...
காத்திருந்தாய் கனியதற்கு,

தேன் கொட்டும் நேரத்திலே...
தேள் கொட்டி விட்டதென,

தேர் ஏறி போனவளே...
ஊர் தேடிவந்து விட்டாய்,

கொஞ்சுகின்றாய்... கொஞ்சுகின்றாய்...
துயில் கொள்ளும் எனைக்கண்டு

அஞ்சுகின்றேன்... அஞ்சுகின்றேன்...
அஞ்சுகமே உனைக்கண்டு

தறிகெட்டு ஓடினாலும்-கழுத்து
நெறிபட்டு விடுவேனோ

விழி பிதுங்கி விடும் முன்னே...
வழி தேடி வாரேன் பின்னே...

சாம்பசிவம்-
அந்த வேருடல் தனிமையில் இந்தக் கவிதையை ரேவதி ராகத்தில் பாடும்போது நான் கேட்டிருக்கிறேன்.

காணொளி

புதன், ஜூன் 21, 2017

தமிழ்க் கலாச்சாரம்

துபாய் இந்தியன் ஸ்கூல் இசை நிகழ்ச்சி விழா.

எனது குடும்ப நண்பர் + மருத்துவர் இவர்களுடன் போயிருந்தேன் காணொளி யாருமே எடுக்ககூடாது அனைவரும் ஜெயா தொலைக்காட்சியில்தான் பார்க்க வேண்டுமென திட்டவட்டமாக அறிவித்து இருந்ததால் ? சுற்றி வளைத்து சுமார் 2 ½  மணிநேரம் எமது கேமராவால் எடுத்து மறுநாளே நண்பருக்கு சி.டி போட்டுக் கொடுத்து விட்டேன் அன்று நடந்த கூத்துகளைத்தான் இன்று விவரிக்கப் போகிறேன் அதன் ஒரு காட்சியைத்தான் கீழே இணைத்து இருக்கிறேன் காரணம் அந்தக் காட்சியை வைத்துதானே இந்தப்பதிவு.

பாவாடை தாவணி போட்டருந்தபோது பெண்களிடம் ஒரு நல்ல பழக்கம் தொற்றி வளர்ந்து கொண்டே வந்தது இது அவர்கள் கிழவியாகி சுடுகாடு செல்லும்வரை தொடர்ந்தது இதைப்பற்றி நான் விரிவாக எழுத வேண்டிய அவசியமில்லை சுடிதாருக்கு மாறிய பெண்கள் ‘’சால்’’ என்றொரு துண்டை பழங்கால பெரிசுகள் தோளில் போடுவதுபோல இவர்களும் போட்டுக்கொண்டு போகிறார்கள் பெரும்பாலும் முதுகுப்புறமே இது கிடக்கின்றது அது இல்லாமலும்கூட போகலாம் என்ற நிலையும் ஆகி விட்டது இது நாகரீகத்தின் வளர்ச்சியா ? வீழ்ச்சியா ? (இதனைக் குறித்து விரிவான பதிவு பிறகு எழுதுவேன்) உதாரணமாக பாவாடை தாவணி அணிந்த பெண்களின் மேலாடையை நாம் பொது இடத்தில் எடுத்து விடமுடியுமா ? எடுத்தவனின் நிலையை நினைத்துப் பாருங்கள் உடனடியாக அந்த இடத்தில் தர்மப்பிரபுக்கள் முளைத்து விடுவார்கள் இன்று சுடிதார் போடுவதால் அந்த சால் எடுத்தும் விளையாடலாம் என்பதை பல திரைப்படங்களிலும் காட்டி விட்டார்கள் அதே கூத்துதான் இங்கும் அரங்கேறி இருக்கிறது மொத்தமும் தமிழ்க் குடும்பங்கள்தான் அந்தக் கூட்டத்தில் நானும் உட்கார்ந்திருந்து இந்த காட்சிகளை சுட்டேன் திடீரென ஆடிக்கொண்டு இருந்தவன் அடுத்த வரிசையில் உட்கார்ந்திருந்த பெண்ணின் சால்’’லை எடுத்து வந்து தனது தலையில் போட்டுக் கொண்டு ஆடுகிறார் முடிந்ததும் கொண்டு போய் கொடுத்து விடுகிறார் இந்தக் கூட்டத்தினர் அனைவருமே தமிழர்கள் என்பதை நான் தங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன் பாருங்களேன்.

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா... கண்டவர்கள் சொன்னதுண்டா...

ஒரு சினிமாக்கவிஞர் கூட இப்படி எழுதினார் ஆம் முந்தானை விரித்தாள் என்கிறோம் இதன் அர்த்தமென்ன ? அந்த சேலையின் வாசம் அவனது கணவன் மட்டுமே நுகரவேண்டும் இதுவும் சேலைதானே இங்கு நுகர்ந்தவன் யாரோ ? எவரோ ? தமிழ்க் கலாச்சாரம் என்பது பழங்காலம் தொட்டு வளர்ந்தது அவை இன்றும் அயல் நாடுகளில் மதிப்புடன் பேசப்படுகிறது ஆனால் போற்றிப்பாதுகாக்க வேண்டிய நாமோ இப்படி வாழப்பழகி விட்டோம்.

மேலும் மகளுடன் குத்தாட்டம் அந்த மகள் எதிர் காலத்தில் எந்தவிதமான வாழ்க்கையை தேர்ந்தெடுப்பாள் ? பொது இடத்தில் இப்படி அடுத்தவன் மனைவியின் சால்’’லை உருவி ஆடுவது தவறென்று எடுத்தவனுக்கும் தெரியவில்லை, எடுக்க விட்டவளுக்கும் தவறென்று தெரியவில்லை, ஏன் ? இதை விட்டு விட்டவனுக்கும் தவறென தெரியவில்லை எந்த தொடர்பும் இல்லாமல் காட்சியாளராக வந்திருந்த எனக்கு மட்டும் ஏன் ரத்தம் கொதிக்கின்றது ? மெத்தப் படித்தவர்களிடம் கேட்டால் லைப்பில் என்ஜாய்மெண்ட் வேண்டும் என்பார்கள் சந்தோஷம் வேண்டும்தான் அதற்காக பொதுக்கலாச்சாரத்தை சீர்குழைத்து பொது இடத்தில் உனக்கென்ன சந்தோஷம் ? வேண்டுமானால் வீட்டுக்குள் வைத்து யாரும் யாருடனும் ஆடட்டும் வைர ஊசி என்பதால் வயிற்றில் குத்திக்கொள்ள முடியுமா ? இதில் ஆடுவதை நான் படமெடுக்கின்றேன் என்பதை அறிந்தும் ஆடுவதுதான் வேதனையிலும் வேதனை. அடுத்தவன் பொண்டாட்டி ஆடுவதை படமெடுப்பது குற்றமில்லையா ? எனக்கேட்கலாம் இல்லை என்பதே எமது பதில் காரணம் பொது இடத்தில்தான் எடுத்தேன் அவர்களின் சொந்த வீட்டினுள் நுழைந்து ஆடும்போது அல்ல !

புதுமைப் பெண்களடி பூமிக்கு கண்களடி
பாரதி சொன்னானே தமிழ்ப் பாரதி சொன்னானே
செல்லம்மா அக்கா புருஷன் சொன்னது இதற்காகவா ?

இப்பதிவுக்கும், இசைக்கடவுள் பதிவுக்கும் தார்ரோடு போட்டு இணைப்பு ஏற்படுத்திய நண்பர் திரு. ஸ்ரீராம் ஜி மற்றும் நண்பர் திரு. வே. நடனசபாபதி அவர்களுக்கு நன்றி.

காணொளி

திங்கள், ஜூன் 19, 2017

என் நினைவுக்கூண்டு (3)


இதன் பின்னணிகளை அறிவதற்கு கீழே சொடுக்கலாம்...


தவறு செய்து விட்டேன் உன்னை இங்கு கொண்டு வந்தது என் தவறு வனிதா உனது உயிர் பிரிந்த நேரம் நள்ளிரவு 2:30 am

வெள்ளி, ஜூன் 16, 2017

இசைக்கடவுள்


அபுதாபியிலிருக்கும் பொழுது ஒருமுறை DUBAI SCHOOL ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு போயிருந்தேன் பொதுவாகவே எனக்கு எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள், இசைக் கலைஞர்களிடம் ஒருவித ஈர்ப்புணர்வு உண்டு, காரணம் சராசரி மனிதர்களைவிட அவர்களிடம் ஒரு கூடுதலான விசயத்தை இறைவன் அவர்களுக்கு அளித்துள்ளார் என்பது எனது கருத்து அந்த STADIUM மில் சுமார் 2000 பேர் அமர்ந்திருப்பார்கள், அந்தப் பாடகர் மேடைக்கு வரும்போது சாதாரண பாடகி ஒருவர் இப்படிச் சொன்னார்,

//இசைக்கடவுள் மேடைக்கு வருகிறார் அவருக்கு நாம் அனைவரும் எழுந்து நின்று மரியாதை கொடுத்து வரவேற்போம்.//

என்று உடனே அமர்ந்திருந்த அனைவருமே எழுந்து பலத்த கை தட்டலுடன் கரகோஷமாய் வரவேற்றார்கள் இதில் ஒரேயொரு ஜீவராசி மட்டும் எழவில்லை காரணம் கோபம் கோபத்திற்கு முக்கிய காரணம் சிறிய பாடகர்கள் காலைத்தொட்டு வணங்க வரும்பொழுது சோபாவில் அமர்ந்திருந்தபடி ஷூக்காலை தூக்கி கொடுத்ததை திரையில் கண்டதால் ஜீவராசியின்  ரத்தம் கொதித்தது தமிழனுக்கு இது தேவையா... ? ஆனால் அந்த ஜீவராசி சிறிய அளவில் கை மட்டும் தட்டியது பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் அந்த ஜீவராசியிடம் கேட்டார்.

நீ ஏன் எந்திரிக்கவில்லை ?
நான் ஏன் எந்திரிக்கவேண்டும் ?

எவ்வளவு பெரிய பாடகர் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டாமா ?
ஐயா உங்க வயசு என்ன... நீங்க போயி எந்திரிச்சு மரியாதை கொடுத்தது என்னைப் பொருத்தவரை தவறு.

அது எப்படி தவறாகும் ? இவரு எவ்வளவு பெரிய திறமைசாலி எவ்வளவு பாட்டு பாடியிருக்கார் அந்த திறமைக்கு மரியாதை கொடுத்துதான் ஆகணும்.
அவரு என்ன சும்மா பாடுனாரா ? இல்லை இப்பகூட பணத்துக்காகத்தானே பாடுறாரு...

எல்லோருமே பணத்துக்காகத்தானே... வேலை செய்றோம்.
அந்தப் பெண் ஏன் அவரை கடவுள்னு சொன்னது ? இவர் மூலம் தனக்கு சினிமாவில் சந்தர்ப்பம் கிடைக்கும்னுதானே.

என்ன சாதாரணமா சொல்லிட்டே ? இந்தியா முழுக்க இவரை தெரியாதவங்க கிடையாது.
சினிமாவுல பாடும்போது தெரிஞ்சுதான் ஆகும் அது நீங்களா இருந்தாலும் சரி, எனது பேரனாக இருந்தாலும் சரி. 

இவரைப்போல... திறமையாக யாராவது பாட முடியுமா ?
திறமைங்கிறது வேற... சுயநலத்துக்காக மனுசனை கடவுள்னு சொல்றதை எப்படி ஏற்க முடியும் ?

கடவுள்னு சொல்றது தவறுதான் சரி கச்சேரி முடிஞ்சதும் நாம விவாதத்தை வச்சுக்கிருவோமா
சரி.

ஐந்துமணி நேரத்திற்கு பிறகு SCHOOL -ன் வெளியே...

சொல்லு இவரைப்போல எல்லாரும் பாடமுடியுமா
ஐயா உங்க பாணியிலேயே கேட்கிறேன் ஐயா T.M.சௌந்தரராஜன் பாடுனாரே //முத்தை தரு பத்தித் திருநகை// இந்த பாடலை உச்சரிப்பு மாறாமல் எவனாவது இப்போது பாடமுடியுமா ? இவனையெல்லாம் கடவுள்னு சொன்னா T.M.Sசை என்னானு சொல்வீங்க ? அதற்காக T.M.Sசை கடவுள்னு நான் சொல்லவில்லை அவரும் நம்மைப்போல மனிதர்தான்.

இருந்தாலும் உனக்கு ரசனை இல்லாத மாதிரி பேசுறியே.. பின்னே எதற்கு செலவு செய்து பார்க்க வரணும் ?
ஐயா இதே விழாவுக்கு ஒரு நடிகரோ, நடிகையோ வந்திருந்தால் நான் நிச்சயம் வந்துருக்க மாட்டேன் உங்களைவிட ரசனையாளன் நான் ரசிக்கத் தெரிந்தவன் தான் மனிதன், ஆனால் நாம அடிமையாகி விடக்கூடாது சுயசிந்தனை அடகு போககூடாது இதுதான் எனது கொள்கை.

ஏதோ தெரியலை உனது பேச்சு எனக்கு பிடிச்சுருக்கு இப்ப நேரமில்லை நான் உன்னிடம் நிறைய பேசவேண்டி இருக்கிறது உனது நம்பர் கொடு.
நம்பர்கள் பறிமாறப்பட்டு, அடுத்தநாள் முதல் தொலைபேசியில், வாதங்களும் தொடங்கப்பட்டு, ஜீவராசி துபாய் போனாலும் ஐயா அபுதாபி வந்தாலும் நேரிலும் வாதங்கள் வார்க்கப்பட்டு, பல வருடங்களாக தொடரப்பட்டு, முடிவில் ஒருநாள்.... (அவர் இறப்பதற்கு ஒருவாரம் முன்பு)

உன்னை நான் முழுசா புரிஞ்சுக்கிட்டேன் நீ ஜெயிச்சுட்டே வெற்றி உனக்குத்தான்டா.
இல்லை ஐயா இது வெற்றினா இந்த வெற்றியை, உங்க காலடியில போடுறேன் மிதிச்சுடுங்க இத்தனை வருஷத்துல உங்கள்ட்டருந்து நிறைய படிச்சுருக்கேன் அதற்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும், குறிப்பா மனுசனை கடவுள்னு சொன்ன அந்த பெண்மணிக்கும். 

அந்த ஐயா– Jadagopan Ayer Internet City Dubai. (Hometown, Thiruvannamalai)
அந்த ஜீவராசி– Killergee Pension Authority Abu Dhabi. (Hometown, Devakottai)

 காணொளி