தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜூன் 03, 2017

சொர்ண-நாதன்


சொர்ணா கோயிலுக்குப் போனியே சாமிக்கிட்டே என்ன வேண்டிக்கிட்டே ?
எம் புருஷனுக்கு நல்ல புத்தியைக் கொடுனு வேண்டிக்கிட்டேன்.

கொடுத்தாரா ?
எதை ?

புத்தியைத்தான்டி...
அதெல்லாம் கடவுள் நேரடியா கொடுக்க மாட்டாரு, தானா வளரணும்.

தானா வளரணும்னு தெரியுதுல.... அப்புறம் ஏண்டி வீணா.. அலையுறே ?
தானா வளருறதுக்குத்தான் நேர்த்திக் கடனுக்கு வேண்டிக்கிட்டேன்.

என்ன... நேர்த்திக்கடன் வச்சுருக்கே ?
உங்களுக்கு முடி எடுக்கிறதாகத்தான்..

நேர்த்திக்கடன் வக்கிறவ... உனக்குத்தானே முடி எடுக்கணும்.
எனக்கு எதுக்கு ?

ஏன்... அதுக்கு தலையை எடுக்கிறதா.. வேண்டிக்கிறலாமே ?
இப்படியே பேசிக்கிட்டு திரிஞ்சீங்க... அப்படித்தான் வந்து சேரும்.

அப்படிச்செஞ்சீனா... நானும் போயிடுவேன் நீயும் ஜெயிலுக்குத்தான் போவே... பிறகு இந்த நேர்த்திக்கடன் எதுக்கு ?
வெள்ளிக்கிழமையும் அதுவுமா.... நல்லபேச்சு பேசுறீங்களா ?

அப்படினா, சனிக்கிழமை பேசலாமா ? அந்த தேங்காயை கொண்டா, உடைச்சுத்திங்க..
விபூதி மட்டும் பூசுறது இல்லை சாமிக்கு படைச்ச தேங்காயை மட்டும் திங்கலாமோ ?

பின்னே எதுக்கு... தேங்காயை வாங்கி வந்தே ?
நாளைக்கு சட்னிக்கு வேணுமுள்ள ?

அப்ப மட்டும் நான் சட்னியை சாப்பிடலாமா ? யேண்டி முட்டாச் சிறுக்கி உண்மையிலேயே உனக்குத்தான்டி புத்தி வேணும்.
காலையில உங்கள்ட்ட வாயைக் கொடுத்தா விளங்குனாப்பலதான் இன்னைக்கு.

ஏண்டி.. சும்மா இருக்கிற என்னை 25 வருஷமா மொட்டையடிச்சது போதாதுனு நல்லா இருக்குற கர்லிங் முடியை மொட்டை அடிக்கப் பார்க்கிறே ?
ஆங்..... இவரு.. வள்ளல் பரம்பரை நாங்க வந்துதான் நொட்டிக்கிருச்சு... இப்ப முடி இல்லைனு என்ன... நட்டமாகிப் போச்சு ? சம்பந்தி ஆகப்போற நேரத்துல...

எல்லாம் பேசுவேடி, புத்தி இல்லாமலா... உன்னை வச்சு 25 வருஷமா காலம் தள்ளுறேன் ?
அது நான் அம்மனுக்கு இருக்குற விரதத்தோட பலன்.

ஆமாடி அம்மனுக்கு விரதம் இருக்கியே.... எங்க அம்மாவை வச்சு சோறு போட மட்டும் உனக்கு வலிக்குது இதுக்கு மட்டும் உங்க அம்மன் உனக்கு புத்தியை கொடுக்க மாட்டாளா ?
இப்ப, உங்க அம்மாவுக்கு என்ன கொறைச்சல் ? உங்க அண்ணன் நல்லாத்தானே பார்த்துக்கிறாரு...

அதைத்தான்டி நானும் சொல்றேன் அண்ணன் வீட்ல ஆறுமாசம் இருந்தா, நம்ம வீட்லயும் ஆறுமாசம் இருக்கணும் அதுதான்டி முறை.
உங்க அண்ணன் சொந்தமா வீடு வச்சு இருக்காரு... ஒரு செலவும் இல்லை அவரு வச்சுக்கிற கூடாதோ ?

ஆமாடி அவரு எப்படி வீடு கட்டுனாரு ? மாமனாரு-மாமியாரு மச்சான் கொழுந்தியாள்னு ஒரு பிரச்சனையும் இல்லை இங்கேதான் வாராவாரம் உன் வீட்டு ஆளுக வந்து கும்மி அடிச்சா... நான் எப்படி வீடு கட்டறது ?
அதுக்காக உள்ளுருல இருக்கிற எங்க அப்பா-அம்மா என்னை பார்க்க வர மாட்டாங்களா ?

வரக்கூடாதுனு சொல்லலை எங்க அம்மா வந்துட்டா மட்டும் மூஞ்சை இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வச்சுக்கிட்டு இருக்கே, உங்க வீட்டு ஆளுக வந்தால் 32 பல்லும் தெரிய சிரிச்சுக்கிட்டு திரியுறே ?
உங்க அம்மாவுக்குத்தான் மாசாமாசம் பணம் அனுப்புறோம்ல அனுப்ப வேண்டாம்னா... சொன்னேன் ?

அடி எலவு மகளே வேண்டாம்னு வேற சொல்லுவியலோ... ?
இஞ்சே பாருங்க, இப்படி எடக்கு மடக்கா பேசிக்கிட்டு திரிஞ்சீங்க... ?

என்னடீ... செஞ்சுருவே ?
எங்க அம்மாக்கிட்டே சொல்லி வாயைக்கட்டி வச்சுருவேன் ஜாக்கிரதை.

இப்படிச் சொல்லியே 25 வருஷதை ஓட்டிட்டியேடி ஹும் காலவினை.

சொல்லி விட்டு வேலைக்கு கிளம்பினான் நாதன்.

59 கருத்துகள்:

  1. இஞ்சே பாருங்க .....இந்த சொல் ,எனக்கு தெரிந்த வாயாடியை நினைவு படுத்துதே ஜி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகவான் ஜீ நீங்க சந்தடி சாக்கில என்னை ஏதும் சொல்லலியே?:).. நேக்கு பபபபபபரமசிவம்:)- சொன்னதிலிருந்து சந்தேகமாகவே இருக்கேஏஏஏஏ:).. நீங்க நல்லவர் வல்லவர் அப்பூடி ஏதும் சொல்ல மாட்டீங்க என நேக்குத் தெரியும்:) இருப்பினும் ச்ச்சும்மா கேட்டுத்தெளிவடையலாமே எனக் கேட்டேனாக்கும்:)

      நீக்கு
    2. ஜி நீங்க யாரை ஜொள்றீங்க..... என்று குழம்பிக்கொண்டு இருக்கும் பொழுது... இடையில்....

      நீக்கு
    3. வாங்க அதிரா குழப்பத்தை தெளிவாக்கி விட்டீங்களோன்னு... குழம்பிட்டேன்.

      நீக்கு
    4. பகவான்ஜி :) பொய் சொல்ல மாட்டார் ஹாஹா :))

      நீக்கு
    5. ஏஞ்சல் ஹைfive....Hahaha haha

      கீதா

      நீக்கு
    6. மூளின்னு சொன்னா நீங்க ஏன் மூக்கைத் தொட்டு பார்த்துக்கிறீங்க,அதிரா:)

      நீக்கு
    7. இங்கின எல்லோருக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *46738564:)

      நீக்கு
    8. இது என்ன நம்பர்னு தெரியலையே...

      நீக்கு
  2. அடக் கெரகமே!.. 25 வருஷமா இந்தக் கொடுமையா!?...

    பதிலளிநீக்கு
  3. ஹா ஹா ஹா சுவாரஷ்யமான குடும்பச் சண்டை கில்லர்ஜி, முடிவில் ஜெயிப்பது என்னமோ பெண்கள்தான்:).. ஆண்கள் ரொம்ம்ம்ப நல்லவங்க.. விட்டுக்குடுத்திடுவினம்:)..

    ஜாக்க்க்க்க்ர்தை:).. ஹா ஹா ஹா இப்போ எல்லோருடைய டமிலும் மிக்ஸ்ட் ஆகிக்கொண்டே வருதே:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பொண்டாட்டி - புருசன் சண்டை வரும்போது விலக்கி விடாமல் சிரிப்பு என்ன வேண்டி கெடக்கு ?

      நீக்கு
  4. அடடா !!நாதன் நிலைமை மோசம்தான் ..சொர்ணா சொர்ணாக்காவா இருப்பாங்க போலிருக்கே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சொர்ணாக்கா அப்பாவோட ரெண்டாந்தாரத்தோட, நாத்துனா மகள் இப்படித்தானே இருப்பாள்.

      நீக்கு
    2. ///வாங்க சொர்ணாக்கா//////
      ஹாஆஆஆஆஆ ஹிக்க்க்க்க்க்க்கீஇ குக்க்குக்க்க்க்க் க் க் க் க் என்னால முடியல்ல முருகாஆஆஆ:)

      நீக்கு
    3. இது குழந்தைகளும் படிக்க வரும் தளம் இப்படியெல்லாம் பயமுறுத்தக்கூடாது.

      நீக்கு
    4. என்னைத்தானே சொன்னீங்க கில்லர்ஜீ?:)

      நீக்கு
  5. வீட்டுக்கு வீடு வாசப்படி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம் ஜி உண்மை பலபேரு இப்படித்தான் வாழுறான்.

      நீக்கு
    2. அப்போ ஸ்ரீராம் வீட்டிலும்:).. ஸ்ஸ்ஸ்ஸ் என் வாய்தேன் நேக்கு எதிரி:)

      நீக்கு
  6. பதில்கள்
    1. ஆம் நண்பரே அப்படித்தான் நாதன் புலம்புகிறான்.

      நீக்கு
  7. நம்ம வீட்டுலதான் கர்ரு உர்ருனு இருக்கே கொஞ்சம் பதிவு ஏதாவது படிச்சு மனச மாத்திக்கலாம்னு பாரத்தா,அங்கேயும் இதே கூத்து:( ம்ம்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க உங்க வீட்டு கதையும் இப்படித்தானா ?
      அடிக்கடி வந்து போனால் பலரகமான பதிவுகள் படிக்கலாமே...

      நீக்கு
  8. மனைவி ரொம்ப நல்லவ போல இருக்கு அதுனாலதான் அவ இன்னும் பூரிக்கட்டையை எடுத்து நாதன் மண்டையை உடைக்கவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போனவாரச் சண்டையில் மண்டை உடைந்து ஆஸ்பெட்டலில் இருந்து நேற்றுதான் டிஸ்சார்ஜ் ஆகி வந்துருக்கான் நாதன்.

      நீக்கு
  9. சொரணை நாதனை..இப்படி சொர்னா நாதனா ஆக்கியது யாருண்ணென்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்யாணம்'னு ஒன்னு நடந்துச்சுல... அதான்.

      நீக்கு
  10. குடும்ப சண்டையை நல்ல நகைச்சுவையாக எழுதி இருக்கீங்க சகோ.

    பதிலளிநீக்கு
  11. ஆஹா என்ன ஒரு சண்டை? மள மளவென்று வாசிக்கும்போது யாரோ 2 பேர் பக்கத்தில் நின்று சண்டை போடுவதுபோலவே இருந்திச்சு :) :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பாரீஸில் அன்வர் ஏரியாவிலும் இப்படித்தான் நடக்குமோ... ?

      நீக்கு
  12. அருமையான உரையாடல் (Script)
    இதனை
    குறும் திரைப்படமாக எடுக்கலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விரைவில் எடுப்போம் இலங்கை - இந்திய கூட்டுத்தயாரிப்பாக...

      நீக்கு
  13. வீட்டுக்கு வீடு வாசப்படி

    பதிலளிநீக்கு
  14. ‘ஞாயிறு ஒலிளிழி மழையில்’ பதிவிற்கு பின்னூட்டத்தில் நான் தந்த ‘அங்கங்கே அகப்பை ஆறு காசுதான்’ என்ற பழமொழி இந்த பதிவிற்கும் பொருந்தும். பதிவை இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் பழமொழி கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  15. உங்களுக்கு அழகாய் எழுத வருக்கிறது, அதனால் வீட்டுக்கு வீடு நடக்கும் சண்டையை ஏன் எழுத வேண்டும்?

    குடும்ப ஓற்றுமை, விட்டுக் கொடுத்து போவது அதனால் ஏற்படும் நன்மைகள் என்று எவ்வளவோ எழுதலாம் நீங்கள்.

    எடுத்தற்கு எல்லாம் சண்டை கோழிகளாக சண்டை இடுபவர்கள், தன் குடும்பத்தை கவனிப்பது, கணவன் குடும்பத்தை ஏன் என்று கூட கேட்பது இல்லை என்பவர்கள் இருக்கலாம் அவர்களைப்பற்றி நாம் ஏன் எழுத வேண்டும்?

    ஏனென்றால் இப்போது மணமானவர்கள் பிரிவு அதிகமாய் இருக்கிறது காரணமே இல்லாமல்.

    நாமும் அதையே ஏன் எழுத வேண்டும்.

    தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி
      இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லையே.

      இதை நகைச்சுவை என்ற பார்வையில் எழுதினேன் இனி தாங்கள் சொல்வதுபோல் முயற்சிக்கிறேன் நன்றி.

      நீக்கு
    2. இப்படியும் ஆஆ....பாவம் தான்... நாதன்....

      கீதா: பயக்கமில்லே ஜி..பயக்கமில்லே.ஆஹா....இது அதிரா
      வார்த்தை அல்லோ....அதிரா ரொம்ப நல்லவங்க ராயல்டி எல்லாம் கேக்க மாட்டாங்க

      நீக்கு
    3. ஜிஜி ஒட்டு லிங்?°???

      நீக்கு
    4. வாங்க நீங்களும் குழம்பத் தொடங்கியாச்சா ?

      செல்லில் வந்தால் தமனாவுக்கு கீழே "வலையில் காட்டு" சொடுக்கி போகலாம்.

      நீக்கு
  16. ஏன் இபபடி எலலாம் கற்பனை போறதோ.ரொம்ப ப்ரீடம் வீட்டில கொடுத்திருக்காங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குதான் வீட்டில் கடிவாளமிட ஆள் இல்லையே...
      வருகைக்கு நன்றி

      நீக்கு
  17. எங்க அம்மாகிட்டச் சொல்லி வாயைக் கட்டி வச்சிடுவேன் / யார் வாயை ஜீ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா புருசன் வாயைத்தான் சொல்றாள் சொர்ணா.

      நீக்கு
  18. நகைச்சுவைக்காக எழுதப்பட்டிருந்தாலும் பல வீடுகளிலும் இதான் நிலைமை! யதார்த்தம். மனைவியின் பெற்றோர், உடன்பிறந்தார் எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து செல்லலாம். கணவன் மட்டும் பெற்றோர், உற்றோர் உறவைக் கத்திரித்துவிட்டு இருக்க வேண்டும், பல பெண்களின் நிபந்தனையே இது தான்! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவின் சாராம்சமே இதுதான்.

      நீக்கு
  19. எங்கும் நடப்பவையே. இதனை உங்களின் எழுத்து மூலம் கண்டதும் நிறைவாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  20. அன்றாடம் பல வீடுகளில் நடப்பது
    அப்படியே நேரடி ஒளிபரப்புப் போல
    பகிர்ந்த விதம் அருமை
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு