தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜூன் 09, 2017

சாதா’’ரணம்


01. அதிகாலை வேளையில் விமானம் வடக்கு திசையிலிருந்து தெற்கு நோக்கி பறக்கும் பொழுது ஜன்னலோரம் இருந்து கொண்டு கிழக்கு திசையை ரசித்து இருக்கின்றாயா ?

02. மழலை உனது மீசையைப்பிடித்து இழுக்கும்போது வலிப்பதுபோல் பாவித்து குழந்தையை சிரிக்க வைத்து ரசித்து இருக்கின்றாயா ?

03. அறியாத்தனமாக பிறருக்கு கொடுத்து விட்ட கஷ்டத்திற்கு தனிமையில் உட்கார்ந்து ஆத்மார்த்தமாய் வேதனைப்பட்டு பிறகு மனம் இலவம் பஞ்சுபோல் பறப்பதை உணர்ந்து இருக்கின்றாயா ?

04. இத்தனை காலம்வரை நம் குழந்தைகளுக்கு சரியான தந்தையாக வாழ்ந்திருக்கின்றோம் மீதமுள்ள காலமும் அப்படியே இருப்போம் என நினைத்து இருக்கின்றாயா ?

05. பூந்தோட்டத்துக்குள் புகுந்து நின்று கொண்டு பூக்களை அணைத்தபடி சிரித்துக்கொண்டு புகைப்படம் எடுத்து இருக்கின்றாயா ?

06. எவ்வளவோ தர்மம் செய்திருக்கலாம் ஒரு நாளாவது பிச்சைக்காரர் ஒருவரை உணவகத்தில் உட்கார வைத்து உணவு வாங்கி கொடுத்து இருக்கின்றாயா ?

07. என்றாவது ஒருநாள் அனாதை குழந்தைகளின் ஆஸ்ரமம் சென்று ஏதாவது ஒரு குழந்தையின் தலையை ஆதரவாக தடவிக்கொடுத்து இருக்கின்றாயா ?

08. வீடில்லாமல் சாக்கடையோரம் படுத்துக்கிடக்கும் மனிதனிடம் இந்த போலிச் சமூகத்துக்கு பயப்படாமல் 2 வார்த்தை பேசி இருக்கின்றாயா ?

09. தாழ்த்தப்பட்ட சாதியினர் பகுதியில் சென்று தண்ணீர் கொடுங்கள் எனக்கேட்டு வாங்கி குடித்து இருக்கின்றாயா ?

10. நாளை இறைவனை கண்டால் ? ? ? பயப்படாமல் நான் எந்த தவறும் செய்யவில்லை என்று வாதிட முடியும் எனநினைத்து இருக்கின்றாயா ?

நண்பர்களே.... இவையனைத்தும் நான் உணர்ந்து செய்திருக்கின்றேன்.

குறிப்பு – இதில் உள்ள முதல் இலக்கத்தை தவிர்த்து பாக்கி அனைத்தும் சாதாரணமானவர்கள் செய்யக்கூடியதே என்பது எமது பனிவான கருத்து.

52 கருத்துகள்:

  1. 1) பல தடவை கீழ்வானச் சிவப்பில் ஆழ்ந்திருக்கின்றேன்..

    3)தவறாகப் பேசிய ஒருவனை அடித்துவிட்டு இன்றும் அதற்காக வருந்துகின்றேன்..

    2,4,5 - வழக்கமான சந்தோஷங்கள்..

    6)பசித்து வந்தவர்க்கு வீட்டில் வைத்து உணவளித்து இருக்கின்றோம்..

    7)ஆதரவற்ற குழந்தைகளுடன் சில மாதங்கள் இருந்திருக்கின்றேன்.

    எட்டு மட்டும் இதுவரை எட்டவில்லை..

    9)பள்ளி நாட்களில் நட்பு வட்டங்கள்..

    10)நாளை என்று இல்லை.. என்றும் அவனருகில் நான் இருப்பதாக உணர்வதால் பிழைகளுக்கு வேலையில்லை.. நிம்மதி கைவசம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி
      பத்தாவதில் சொன்னீர்களே... இந்த எண்ணம் அனைவருக்கும் இருந்தால் உலகில் அனைவருக்கும் நல்வாழ்வே..

      நீக்கு
  2. இங்கும் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊ முதல் வோட் என்னோடதாக்கும்.. பெயர் போட்டு வையுங்கோ வோட்டுக்கு:)..

    பத்தும் ஆழமான கேள்விகளே...

    முதலாவது பலதடவை அனுபவித்திருக்கிறோம்... கனடாவில் இருந்து பிரித்தானியா திரும்பி வரும்போது இப்படித்தான் விடியும் காலைப்பொழுது.

    ..
    2 வது பொருந்தாது ..

    3,4,5 செய்திருக்கிறேன்ன்.

    6 ஆவது உணவகத்தில் இல்லை.. வீட்டில் உட்காரவைத்து உணவளித்ததுண்டு ஊரில்.
    7. செல்லவில்லை.. பணம் அனுப்புவதுண்டு.

    8. சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

    9. குடித்திருக்கிறேன்.. எப்படியெனில்.. அது ஒருநாள் நாட்டுப் பிரச்சனையால்ல் இடம்பெயர்வு நிகழ்ந்தபோது.. யாராவது தண்ணி தருவார்களா என ... எதுவும் பாராமல் வாங்கிக் குடித்து, அதேபோல ஒருவரின் தலையணையில்.. எழுந்து நிற்க முடியாமல் மறுபக்கம் நானும் தலை வைத்துப் படுத்து விட்டேன்ன் ஒரு புல் வெளியில்[அம்மா எழும்பு எழும்பு என எழுப்பிப்போட்டா.. ஹா ஹா ஹா]... பிரச்சனை என வரும்போது எதுவும் கண்ணுக்கு தெரியாமல் போய் விடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நீங்கள் பாஸ்ட்டுதான்
      தங்களது அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

      நீக்கு
  3. 1, ம்ஹூம் :) எனக்கு விண்டோ சீட்ல உக்கார பயம் பிளேன்ல மிடில் ரோ கேட்டு உக்காருவேனே
    2, இல்லை மீசை இல்லியே :)
    3, ஆமாம் ஆமாம் ஆமாம்
    4..கணவர்கிட்ட கேட்கிறேன்
    5, யெஸ்ஸு அடிக்கடி தோட்டத்துக்கு போவேன் எல்லா மலர்களையும் பார்த்து ரசிப்பேன் படமும் எடுத்திருக்கேன் பேசவும் செய்வேன் .
    6,அடிக்கடி செய்வோம் நாங்க இங்கே உணவகம்னு இல்லை ஆனால் hot காப்பி sandwich இப்படி வாங்கி கொடுப்போம்
    7,சந்தர்ப்பம் அமையவில்லை
    8,எங்க ஊர்ல இங்கிலாந்தில்நான் பேசியிருக்கேன் அழுக்கு ஒரு தடையில்லை உரையாட
    9,ஒரு சம்பவம் நினைவு வருது .ஒருவர் பெயர் கிட்டன் நான் சின்ன பிள்ளை அப்போ வீட்டுக்கு தண்ணீர் குடத்தில் கொண்டாந்துதருவார் கிராமத்தில் அவரை வீட்டில்சேர்க்க எங்களுக்கு திட்டு நான் அங்கிள்னு கூப்பிடத்துக்கும் திட்டு இன்னும் பசுமையா நினைவு இருக்கு ..அப்புறம் சென்னை வந்தாச்சு .இப்போ இருக்கும் நாட்டில் அப்படி எல்லாம் இல்லை..ஆனால் இங்கும் வட இந்தியர் அப்படி கேவல வேலை செய்றாங்கன்னு படித்தேன் :(
    ஒன்பதையும் செய்தால் தைரியமா 10 வதை இறைவன் முன் சொல்லலாம் ..

    10,வதில் கொஞ்சம் நான் பண்படனும் 98 சதவீதம் வாதிடலாம் இன்னும் இரண்டு சதவீதம் பண்பட இறைவனிடம் வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது நிறைகுறைகளை ஒளிவுமறைவின்றி சொன்னமைக்கு நன்றி

      நீக்கு
  4. இதில் ரணம் எங்கே இருக்கிறது
    நல்ல குணம்தானே இருக்கிறது
    வாழ்த்துக்களுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் கருத்துப் பகிர்வுக்கு நன்றி

      நீக்கு
  5. வணக்கம் ஜி !

    மனிதனின் மகத்துவங்கள் அவன் செயல்களில் வெளிப்படுகின்றன
    அவற்றை உங்களில் காணும் போது பெருமிதம் கொள்கிறேன் ஜி
    வாழ்க நீவீர் வளத்துடனும் நலத்துடனும்

    பகிர்வுக்கு நன்றி

    தமன்னா வக்க்கு மேலும் ஒன்று !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவலரின் கருத்துரை கண்டு மகிழ்ச்சி

      நீக்கு
  6. மகிழ்ச்சி நண்பரே,
    தாங்கள் மனம் போல் என்றும் முதல் தரமாணவரே.

    பதிலளிநீக்கு
  7. 1. அனுபவமே இல்லை.

    2. ம்ம்ம்...

    3. அறிந்தே கூடச் சொன்ன தவறான வார்த்தைகளுக்காக வெட்கப்பட்டிருக்கிறேன்.

    4. நினைக்காமல் செய்கிறேன்!

    5. ஒரு தரம்... ஒரே தரம்...

    6. இல்லை.

    7. இல்லை.

    8. இல்லை. வாய்ப்பு வந்ததில்லை.

    9. டிட்டோ.

    10. இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் ஜி திறந்த மனதாய் சொன்னமைக்கு நன்றி

      நீக்கு
  8. இதில் சிலவற்றிற்கு வாய்ப்பு வரவில்லை...

    நானும் தொடர் போட்டி என நினைத்து விட்டேன் ஜி... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி நீங்கதான் எனக்கு அடிக்கடி ஞாபகப்படுத்துகின்றீர்கள்.
      வலைப்பதிவும் சுறுசுறுப்பு இல்லாமல்தான் இருக்கின்றது.

      நீக்கு
    2. முதல் நிகழ்வு பொருத்தமில்லை. மற்ற எல்லாம் வாழ்க்கைக்கு முக்கியம். தண்ணி தவித்தால் மனிதர்கள் வீட்டில் கேட்டு வாங்கிச் சாப்பிடுவதில் என்ன சிறப்பு இருக்கிறது? "சரியான தந்தை" என்பது பெரும்பாலும் ஒருதலைப்பட்சமானது. பசங்க, எங்கப்பா அம்மா பெஸ்டாக வளத்தாங்கன்னு சொன்னா நாம தவறு செய்திருக்கிறோம்னுதான் அர்த்தம். எதுலயும் மனசாட்சிக்கு விரோதமா நடக்கலைனா கடவுளை தைரியமா Face பண்ணலாம். அது எளிதானதல்ல.

      நீக்கு
    3. உண்மை நண்பரே மனசாட்சிக்கு விரோதமாக நடக்காதவர் இறைவனைக்கணடு பயம் இல்லை.

      நீக்கு
  9. உணர்ந்ததும் உரைத்த தும் நன்று

    பதிலளிநீக்கு
  10. 1.இல்லை. 2.இழுக்கும் அளவுக்கு மீசை வைத்ததில்லை. பொக்கை வாயால் கடிக்குமே, அந்தச் சுகத்தை அனுபவித்துக்கொண்டே வலிப்பது போல் நடித்திருக்கிறேன். 3.பிறருக்குக் கஷ்டம் கொடுத்துவிட்டதை உணர்ந்தால், முடிந்தவரை நேரிலேயே என் வருத்தத்தை வெளிப்படுத்துவேன். 4.இப்படி நினைப்பது எனக்குச் சிரமமாக இருந்ததில்லை. 5.பூக்களை ரசிப்பதோடு சரி. 6.ஐந்து பத்து என்று ரூபாய்கள் கொடுத்திருக்கிறேன். உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றதில்லை. 7.அனாதை விடுதிகள் சென்றிருக்கிறேன்; பரிவுடன் தடவிக் கொடுத்ததில்லை. 8.சாக்கடை ஓரம் என்றில்லை; அனாதையாகப் படுத்திருப்பவருடன் நிமிடக் கணக்கில் உரையாடியிருக்கிறேன்[கதை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் காரணம்! 9.தண்ணீர் என்றில்லை, சாப்பாடே கேட்டு வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன், 2 ஆண்டுகள் மலைப் பகுதிகளில் தொழில் காரணமாகச் சுற்றியபோது கேட்டு வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன்[உணவுக்கு வேறு வழி இல்லாததால்] 10.இறைவனைக் காண முடியும் என்பதிலெல்லாம் எனக்கு அறவே நம்பிக்கை இல்லை.

    தத்தம் குண இயல்புகளைத் தராசில் நிறுத்துப் பார்க்கப் பத்துக் கேள்விகளைத் தந்து உதவியிருக்கிறீர்கள் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எட்டாவது தங்களின் உயர்ந்த மனதை வெளிப்படுத்தி விட்டது நண்பரே எனது சல்யூட்.

      நீக்கு
  11. அநாதை விடுதிகளுக்குச் சென்றதில்லை. ஆனால் பல ஆதரவற்ற குழந்தைகளுக்கு மறைமுகமான உதவிகள் செய்தது உண்டு. பயணங்களின் போது தண்ணீர் யார் கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிடுவது உண்டு. உணவு அம்மாதிரி வாங்கிச் சாப்பிட்டதில்லை. ஏனெனில் என் வயிறு செய்யும் பிரச்னைகளே காரணம். அநேகமாகத் தொடர் பிரயாணம் எனில் உணவை மறுத்துவிடுவதே வழக்கம். கடவுள் எதிரே பயமில்லாமல் நிற்க முடியும். ஏனெனில் அவர் நம் நண்பர்! அருமைத் தோழர்! சண்டையே போடலாம். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுள் எதிரில் பயமில்லாமல் எவர் ஒருவர் நிற்கின்றாரோ... அவரே மனிதாபிமானம் உள்ளவர்.
      அழகாக சொன்னீர்கள் நன்றி

      நீக்கு
  12. மற்றபடி நல்ல அம்மாவாக வளர்த்திருப்பதாகத் தான் என் எண்ணம். என்றாலும் இது மற்றவர்கள் பார்வைக்கு உட்பட்டது!

    பதிலளிநீக்கு
  13. சாதி, மதம் பார்க்காமல் எல்லோர் வீடுகளுக்கும் போவேன்.முடிந்தவரை உதவிகள் செய்கிறேன். இப்போது வீடுகளுக்கு யாசகம் கேட்டு யாரும் வருவது இல்லை, அடுக்குமாடி குடியிருப்புகளில் காவலுக்கு இருப்பவர் யரையும் உள்ளே விடுவது இல்லை.
    யாசிப்பவர்களை தேடி சென்று கொடுத்து வருவேன் கொடுக்க நினைப்பதை.
    மனம் அறிந்து தவறுகள் செய்தது இல்லை அப்புறம் ஏன் இறைவனிடம் பயம்?
    தெரியாமல் செய்த தவறுகளுக்கு சில நேரம் தண்டனை அனுபவிக்கிறோம், அப்புறம் தெரிந்து தப்பு செய்வதா?
    எல்லாம் அவன் இஷ்டபடி நடக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  14. துளசி: 1, 2 அனுபவம் இல்லையே! 1 அனுபவம் கிடைத்த போது பிள்ளைகள் உட்கார்ந்து விட்டதால் எனக்கு இல்லாமல் போனது...2 மீசை இல்லையே...4, 10 தவிர மீதம் அனைத்தும் யெஸ்....4. நான் இன்னும் சிறந்த தந்தையாக இருக்க வேண்டும் என்று நினைத்துவருகிறேன். 10. இன்னும் அந்த அளவிற்கு வரவில்லை என்றே தோன்றுகிறது.

    கீதா: 1. யெஸ். 2. ஹிஹிஹிஹி...மீசை இல்லையே ஆனால் என் முடியைப் பிடித்து இழுத்து விளையாடும் குழந்தைகளிடம் அழுது அவர்கள் சிரிப்பதை ரசித்ததுண்டு...நிறையவே..

    4. நான் சிறந்த தாயா? என்ற கேள்வி எனக்குள் எழுவதுண்டு. இல்லை...என் மகன் சில தவறுகள் செய்யும் போது என் வளர்ப்பில் எங்கோ பிழை என்று தோன்றும். அதை அவனிடமே சொல்லி அவனையும் சரி செய்து என்னையும் சரி செய்து கொள்வதுண்டு. நாங்கள் இருவருமே நல்ல நண்பர்கள் என்பதால் இங்கு அம்மா மகன் என்பதை விட நல்ல நட்பு...இடித்துரைப்பவன் நண்பன் என்ற ரீதியில் செல்லும். நான் தவறு செய்யும் போது அவன் அதைச் சுட்டிக் காட்டி அவன் என்னைத் திருத்தினாலும் ஏற்றுக் கொள்பவள். ஒத்துக் கொள்பவள். அவனிடம் மன்னிப்பு கேட்பவள். யாரிடமும் மன்னிப்பு கேட்பதில்...
    பூக்களுடன் பேசுவதுண்டு, தடவுவதுண்டு, ரசிப்பதுண்டு அவற்றைப் புகைப்படம் எடுப்பதுண்டு ஆனால் நான் என்னைப் புகைப்படம் எடுப்பதில்லை என்பதால் அவற்றுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டது இல்லை.

    10. மனிதர்கள் பெர்ஃபெக்ட் கிடையாது. என்னதான் நாம் நம்மைத் திருத்தி வாழ்ந்தாலும், அதனால் இறைவனிடம் என்னால் வாதிட முடியாது. என் மனதிற்கு நான் தவறு செய்யவில்லை என்று தோன்றலாம். கொலைகாரன் கூட அப்படித்தான் சிந்திப்பான் ஏனென்றால் அவனும் ஒரு நொடிப் பொழுதில் ஏற்படும் மனப்பிறழ்வினால், அநீதியைத் தட்டிக் கேட்கிறோம் என்று தட்டிவிடுவதுண்டு எனவே அவனும் தவறு செய்யல்வில்லை என்றே சொல்லுவான். எனவே தவறு, சரி என்பது சூழ்நிலையைப் பொருத்து.... இறைவனின் கோர்ட் தீர்மானிக்கும் அதாவது மனாசாட்சி சரியாகத்தான் சொல்லும்..

    மற்றவை...வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூடத் தெரியக் கூடாது...என்பதால்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது விரிவான விளக்கம் அருமை
      ஆம் கொலைகாரன்கூட தனது தவறை நியாயப்படுத்திதான் பேசுகின்றான்,

      நீக்கு
  15. இறைவனை எனது நல்ல தோழியாக, இடித்துரைத்து என்னை வழிநடத்தும் நண்பரைப் போலக் கருதுவதால் எனக்கு அவரிடம் பயம் என்பதே இல்லை. ஆனால், நல்ல நண்பர் எனும் மரியாதை நிறையவே உண்டு. எனவே அவர் எது சொன்னாலும் சரி எனப்படுவதால் வாதிட மாட்டேன்..ஆனால் கேள்விகள் கேட்பதுண்டு. ஏன் இப்படி என்று...என்ன காரணம் என்று. விடைகள் கிடைத்துவிடும் பெரும்பாலும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவனை நண்பனாக நினைக்கும் பொழுது சாதாரணமாக கேள்விகள் கேட்கலாம்.

      நீக்கு
  16. நண்பரே இரையா ரணம்
    குணமல்லவா
    அனைத்தையும் செய்திருக்கிறீர்
    போற்றுதலுக்கு உரியவர் தாங்கள் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  17. இது உங்களுக்கு சாதாரணம் ,எனக்கு சதா ரணமாய் யோசிக்க வைக்குதே ஜி :)

    பதிலளிநீக்கு
  18. எல்லாமே அருமையான கேள்விகள் கில்லர் ஜீ. தனித்தனியே பதில் எழுத ஆசை..! நேரம் போதவில்லை ஜீ

    பதிலளிநீக்கு
  19. சிந்திக்க வேண்டியது தான் !

    பதிலளிநீக்கு
  20. பத்து கேள்விகளும் முத்தான கேள்விகள். அதில் மூன்றைத்தவிர மற்ற அனைத்து கேள்விகளுக்கும் எனது பதில் ஆமாம் தான். தங்களின் கேள்விகள் நம்மை சுயபரிசோதனை செய்ய உதவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் அந்த மூன்றையும் எதுவென்று சொல்லி இருக்கலாமே... வருகைக்கு நன்றி

      நீக்கு
  21. பட்டியலிடாமல் சொன்னால்,பலவற்றை செய்திருக்கிறேன்,செய்யாதன செய்ய ஆசை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களது கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  22. ஓ!..நல்ல கேள்விகள் சில செய்துள்ளேன்...
    நன்று....
    https://kovaikkothai.wordpress.com/

    பதிலளிநீக்கு
  23. கேள்விக் கணைகள்
    நெஞ்சைத் துளைத்தாலும்
    பதில் சொல்லும் அளவுக்கு
    நான்
    இன்னும் வாழவில்லையே!

    பதிலளிநீக்கு
  24. எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டுமென்றால்மனசில் உண்மை இருக்க வேண்டும் அது இருக்கிறதா எப்போதும் என்று தெரியலியே ரண்ங்கள் இல்லாத குணப்ங்கள் என்னிடம் இருக்கிறது என்றே நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்பவுமே மனதில் பட்ட உண்மைகளை எழுத தயங்குவதில்லையே ஐயா...
      வருகைக்கு நன்றி

      நீக்கு