தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜூலை 04, 2017

ராஜா, राजा, రాజా, രാജാ, Raja, راجا

இடம் பேரையூர் பேருந்து நிலையம். 
02.35 am Police catch 3 People

இங்கே வாங்கடா இந்த நேரத்திலே இங்கே என்ன வேலை ?
சினிமாவுக்கு போனோம் ஸார் சிட்டி பஸ்ஸுக்காக நிற்கிறோம்.
உன் பேரென்ன ?
ராஜா
உன் பேரென்ன ?
ராஜா
உன் பேரென்னடா ?
ராஜா
? ? ? ஏட்டு இவங்களை வண்டியிலே ஏத்து.

போலீஸ் ஸ்டேஷன்.

ஏண்டா... பேரைக்கேட்டா ஒன்னு சொன்னாப்பலே ராஜானு சொல்லுவியலோ எந்த நாட்டுக்குடா ராஜா நீங்களெல்லாம் ?
ஸார் யேன்பேரு ராஜாதான் முழுப்பேரு ராஜாராம்.
உங்க அப்பா பேரு ?
ராஜாமணி ஸார்.

நீ வாடா சொல்லு.
எம்பேரு ராஜா உசேன் ஸார்.
உங்க அப்பா பேரு ?
ராஜா முஹம்மது ஸார்.

? ? ? நீ சொல்றா.
ஸார் எம்பேரு அந்தோனி ராஜா
அப்பன் பேரென்ன... ஆரோக்கியராஜாவா ?
ஆமா ஸார்.
சரிதான் படிக்கிறீங்களாடா ?
ஆமா ஸார்.
எந்த காலேஜ் ?
ராஜா தேசிங்கு காலேஜ்.
எல்லாரும் காலேஜ் ஐ.டி. எடுங்கடா,.

மூன்று பேரும் தங்களது ஐடியை எடுத்துக் கொடுக்க இன்ஸ் பார்த்து விட்டு...
யோவ் ஏட்டு இவங்கெளை முதல்ல வெளியே அனுப்பு விட்டா மதப்பிரச்சனையை கிளப்பி காலேஜை இங்கே கொண்டு வந்துருவாங்கே போங்கடா தொலைஞ்சு போங்கடா...

43 கருத்துகள்:

  1. போங்கடா... வெளியே.. பிரச்னையக் கெளப்பாம!..

    என்னய்யா.. ஏட்டு.. இன்னைக்கு இந்த மாதிரி ஆயிப் போச்சு..

    ஆமா.. சார்.. எம்பேரு தர்ம ராசு.. உங்க பேரு தங்க ராசு.. எல்லாம் இருந்தும் என்ன பிரயோசனம்!.. இன்னைக்கு ஓட்டாண்டியாப் போனோமே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அபுதாபியில் இருந்து ரசித்து கருத்து இட்டமைக்கு நன்றி ஜி
      இன்று நண்பர் ''மனசு'' சே.குமார் அபுதாபி வந்து இருக்கிறார் ஜி

      நீக்கு
  2. ராஜாக்களின் குழப்பம் உங்களுக்கும் தொற்றிவிட்டதா ,இரண்டாவது வரியில் சொற்கள் இடம் மாறியிருக்கே ஜி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எனது கணினியில் சரியாக இருக்கின்றதே ஜி ?
      சரியான இடத்தை குறிப்பிட்டால் நல்லது திருத்தம் செய்து விடுவேன்.

      நீக்கு
  3. சொற்கள் பல இடங்களில் மாறி இருந்தாலும் ரசிக்கும்படி இருக்கு! புரியவும் புரியுது! ஹிஹிஹீஹிஹிஹீ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பொழுது சரியாக இருக்கிறதா சகோ ?

      நீக்கு
    2. அப்பாடா! சரியா இருக்கு! அலைபேசி மூலம் அடித்தீர்களோ? நான் இந்த வம்புக்கே போறதில்லை! அலைபேசியில் தமிழ் எல்லாம் முயற்சி செய்யறதில்லை! தரவிறக்கியும் வைச்சுக்கலை! :) எல்லாம் கணினி மூலமாத் தான்! :))))

      நீக்கு
    3. மிக்க நன்றி சகோ மீள் வருகைக்கு.
      எனக்கும், கூகுள் ஆண்டவருக்கும் சில தினங்களாகவே மனஸ்தாபம் ஆகவே தனது வேலையை காட்டி விடுகிறார்

      ஸ்ரீரங்கம் போகும் பொழுது அப்படியே எனக்கும் சேர்த்து வேண்டிக்கோங்கோ...

      நீக்கு
  4. த ம காலைலேயே போட்டுவிட்டேன். நல்லாத்தான் இருக்கு. ஆனால் போட்ட படத்தில் உங்க வேலையைக் காண்பிக்கவில்லையே. நான் வடிவேலு முகத்துக்குப் பதில் உங்கள் முகம் போட்டிருக்கிறீர்களா என்று கூர்ந்துபார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே எனது முகத்தை ஏன் போடவேண்டும் ராஜமுகம் எனக்கு அமையவில்லையே.... வருகைக்கு நன்றி

      நீக்கு
    2. என்ன இப்படிச் சொல்லிட்டீங்க. (படத்துக்குக் கீழே கில்லர்ஜி என்று போட்டிருந்ததனால் பார்த்தேன்). குணம்தானே நம்ம முகத்தைப் பிரதிபலிக்கிறது. எல்லோருக்கும் அவரவர் முகம் 'ராஜ களை உள்ள முகம்தான்'

      நீக்கு
    3. படத்தில் சிறிது சித்து வேலை செய்தேன் ஆகவே வழக்கம் போல் பெயரிட்டேன் மீள் வருகைக்கு நன்றி நண்பரே.

      நீக்கு
  5. அவர்கள் எல்லோரும் ராஜ பாளையத்தை சேர்ந்தவர்களோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா... இந்த யோசனை எனக்கு வரவில்லையே ஐயா.... இன்னும் கொஞ்சம் இழுத்து இருக்கலாமோ....

      நீக்கு
  6. பெரிதாய் ‘கறக்க’ நினைத்த காவல் ஆய்வாளருக்கு சீச்சீ! இந்த பழம் புளிக்கும் கதையோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்தவங்ககே எமகாதப் பயல்களாக இருக்காய்ங்களே நண்பரே...

      நீக்கு
  7. ராஜாவுக்கே ராஜாவா ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே அவங்கெ மூன்று பேருமே ராஜயோகத்தில் பிறந்தவங்கே இன்ஸ் தேவையில்லாம பஸ் ஸ்டாண்டிலிருந்து கொண்டு வந்தது கவர்மெண்டுக்கு வெட்டிச்செலவு.

      நீக்கு
  8. அருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. மேம்போக்கா பார்த்த வெறும் தமாசுக் கதை. கொஞ்சம் உள்ளே நுழைஞ்சி தோண்டித் துருவினா என்னவெல்லாமோ புரியுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மதப்பிரச்சனையை கிளப்பி விடும்போல் கண்டிப்பாக இருக்காது நண்பரே பயந்து விடாதீர்கள்

      நான் எழுதும் பதிவுகள் எல்லா மதத்தினரையும் சிந்திக்க வைக்கவேண்டும் இது எனது கொள்கை
      மேம்போக்காக படிக்காமல் ஆழ்ந்து படித்தமைக்கு நன்றி

      நீக்கு
  10. ரசிக்க வைத்த பதிவு சகோ.

    பதிலளிநீக்கு
  11. எல்லோரும் இந்த நாட்டு மன்னர்கள் என்பதை பெயரிலாவது பார்க்க நினைத்தார்கள் போலும்....

    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  12. எந்த ராஜாவுக்கும்ம் கூஜா தூக்க மாட்டோம்னு சொல்லும் ராஜாக்களோ!!...
    ரசித்தோம்.ஜி

    பதிலளிநீக்கு
  13. ஆமா உண்மையான தமிழர்களாக இருப்பாங்களோ ?

    பதிலளிநீக்கு
  14. காவற்றுறை செயலகத்தில்
    கல்லூரியே வந்திடுமா - அது
    மதப்பிரச்சனையைக் கிளப்பிவிடுமா - அப்ப
    சிறைப்பிடிக்க முன் சிந்திக்க வேணுமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்காகத்தான் தொலைஞ்சு போங்கடானு அனுப்பி விட்டாரோ...

      நீக்கு
  15. ஆகா
    வார்த்தை விளையாட்டு அருமை நண்பரே
    ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  16. பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  17. பெயர் மறந்துவிட்டது.. டென் அக்ராய்டும் செவி சேசும் நடித்த படம்.. ஒரு காட்சியில் அத்தனை பெரும் மருத்துவர்கள்.. அத்தனை பெரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் போது டாக்டர் டாக்டர் என்று அழைப்பது சிரிப்பாக இருக்கும்.. நினைவுக்கு வந்தது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு