தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஆகஸ்ட் 10, 2017

கொஞ்சம் ரிலாக்ஸ்

தமிழ் வாழ்க ! தமிழ் வாழ்க ! ! தமிழ் வாழ்க ! ! !
நன்றி கன்னடத்து கிளிக்கு
உள் நாட்டானுக்கு விளங்கலையே...
செல்ஃபி மன்னர் மோடியே தோற்றார் போ !
வேற்றுமையில் ஒற்றுமை
இந்திய கலாச்சாரம் காப்பவர்கள்
ராமாயி ஆண்டாலும் ராக்காயி ஆண்டாலும்
எனக்கொரு கவலை இல்லை.
விஞ்ஞானம் வளர்ந்தாலும் நாங்களும் வளர்வோம்
மதம் மறந்தால் மனிதம் தளைக்கும்
நானென்ன சொல்வது ?
பந்தா பத்மாவதி
காவல்துறையில் இதெல்லாம் சகஜமப்பா
பெண்களின் பாதுகாவலர்கள்
கோபப்படாமல் சற்று சிந்தி நண்பா...
குப்புறத்தான் விழுந்தீக மண்ணு ஒட்டலையே...
அப்பவே சொன்னேன் M.B.B.S வேண்டாம்னு
தன்வினை தன்னைச்சுடும்
இது எங்கள் தமிழ் நாட்டில்தான்டா சாத்தியம்
கடவுளை கண்டு பிடித்தவர்கள்
அடுத்த ஜென்மத்திலும் நீதான் என் மனைவி
தியாகத்துக்கு மரியாதை
பாரதிராஜாவுக்கு சொந்தக்காரராம்
பின்னே என்ன மசுத்துக்கு லாக்கர் வாடகை ?
நேற்று எங்கள் வீட்டில் சாமி கும்பிட்டபோது எடுத்தபடம்
சபாஷ் சரியான இடத்துல சரியான ஃபோட்டோ 

58 கருத்துகள்:

  1. கொஞ்சம் என்ன ,நிறையவே ரிலாக்ஸ் ஆனேன் !
    நம்ம தமிழ்நாட்டில் வழக்காடு மொழியாக கூட தமிழ் இல்லை என்பதை நினைக்கும் போதுதான் பற்றிக் கொண்டு வருகிறது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஜி நாம் கும்பகர்ணன் பரம்பரையில் வந்து விட்டோமே...

      நீக்கு
  2. சில படங்கள் உரக்கச் சிரிக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "அந்த சில" குறிப்பிட்டு இருக்கலாம் நண்பரே...

      நீக்கு
  3. ஒவ்வொன்றும் சாட்டையடி..

    உருட்டுக் கட்டை உலகநாதன் நீங்கள் தானா!..
    வெளுத்து வாங்கியிருக்கின்றீர்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உருட்டுக்கட்டை அடி கொடுக்கப்பட வேண்டியவர்கள் நாட்டில் நிறைந்து விட்டார்கள்.

      நீக்கு
  4. ஆஸ்திரேலிய மூன்றாவது ஆட்சி மொழி தமிழ் - ஆச்சர்யம். ராமாயி ஆண்டாலும் ராக்காயி ஆண்டாலும் ... சூப்பர். நடந்தாலும் நடக்கும். நிறைய ரசிக்க வைத்தது. வேதனையான உண்மைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  5. ஹாஹா... அனைத்தும் ரசித்தேன் நண்பரே.

    த.ம. +1

    பதிலளிநீக்கு
  6. இல்லாத இறைக்கு எல்லாம் செய்த நாம்
    இரையில்லா மக்களுக்கு என்னசெய்வதென்று மறந்தோம்.
    //
    மக்கள் தொண்டே மககேசன் தொண்டு என்பதை மறந்தவர்கள்.

    இறந்தவர் உடலை தூக்கி போகும் போதும் செல்ஃபி

    நேற்று சாமி கும்பிட்ட போது உள்ள பொருட்களை பொது உடமையாக்கினால் நாட்டில் பஞ்சம் இருக்காது போலவே!
    தமிழ் மூன்றாவது ஆட்சி மொழியாக வந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    அனைத்தும் உலகம் போக்கும் போக்கை சொல்கிறது.
    செய்தி தொகுப்பு அருமை.

    பதிலளிநீக்கு
  7. உலகம் போகும் போக்கை சொல்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" என்று சொல்பவர்கள் அதை நம்புவதில்லையே...

      செல்ஃபி இன்னும் என்னவெல்லாம் செய்யுமோ...

      நேற்றே எங்க அம்மா சொன்னாங்க போட்டோ எடுத்தால் பதிவில் போடாதே கண்ணேறு படும் என்று...

      நீக்கு
  8. சிரிக்கவும் சிந்திக்கவும் அழவும் ஆவேசம் கொள்ளவும் வைக்கிற அசத்தல் பதிவு, மிகப் பொருத்தமான படங்களுடன். இது கில்லர்ஜிக்கு மட்டுமே சாத்தியம்.

    எத்தனை முறையும் பாராட்டலாம்; நன்றி சொல்லலாம்.

    பாராட்டுகளும் நன்றிகளும் நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நலமா ? சில பதிவுகளுக்கு வாக்கு மட்டும் போட்டதோடு நிறுத்தி விட்டீர்களே...

      கருத்துரைதான் சரித்திரத்தில் நிற்கும்.
      வாக்கு அரசியல்வாதிகள் வாக்கு மாதிரி விரைவில் மறைந்து விடும்.

      தங்களது விரிவான கருத்துரைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி.

      நீக்கு
  9. சில புதிய தகவல்களையும் தெரிந்துகொண்டேன்...

    பதிலளிநீக்கு
  10. ஹஹஹஹ்ஹ்!!! நிறையபடங்கள் சிரிக்க வைத்தன! ராக்காயி சிரிக்க வைத்தாள்! தமிழ்நாடு போற போக்கைப் பார்த்தா நடக்கும்!!

    சில படங்கள் வேதனை...துன்பம் வரும் வேளையிலும் சிரிங்கனு போட்டீங்களோ?!!

    கடைசிப் படம் செம!!! ஹஹஹஹஹ் சரி அங்க எங்களுக்கும் இடம் இருக்கானு கேட்டுச் சொல்லுங்க!! ஹிஹிஹிஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரசித்தமைக்கு நன்றி.
      நல்லவேளை கடைசி படத்துக்கு மேலேயுள்ள படம் நீங்க கவனிக்கவில்லை நல்லதுதான் இல்லையென்றால் மேலும் கண்ணேறு.

      நீக்கு
    2. துளசி/கீதா - அந்த ZOOல, விலங்குகளுக்கு வெயில் சூடு இருக்கக்கூடாது என்பதற்காக மிகவும் மெனக்கட்டிருக்கிறார்கள். (ஏசி அல்லது ஏர் கூலர் பார்த்த ஞாபகம்). நமக்கும் அங்க இடம் கொடுத்தால், நாம நாட்டில இருக்கறதைவிட இன்னும் நல்லாத்தான் இருப்போம் என்பது என் எண்ணம்/நம்பிக்கை.

      நீக்கு
    3. பணக்கட்டைப் பார்த்தபோது (வாட்சப்பில் வந்தது) எனக்குத் தோன்றியது, இதுல ரெண்டு கட்டை உருவி, ஏழைகள் 4 பேருக்குக் கொடுத்தால் (அவர்கள் சிறு தொழில் தொடங்க, டாஸ்மாக்குக்குச் செலவழிக்க அல்ல), அவர்கள் குடும்பமே சாகும்வரை வாழ்த்துவார்களே. அதைவிடப் பெரியதையா, இறைவன் தரமுடியும்? எவ்வளவு கட்டு. 'அழக் கொண்ட எல்லாம் அழப்போம்'-தவறான வழியில் வந்தது தவறான வழியில் செல்லும்.

      நீக்கு
    4. இதுல இரண்டு கட்டை உருவப்போறீங்களா ?
      இதோ பூஜையறையை பூட்டி விட்டேன்.

      நீக்கு
  11. இரசித்தேன் த ம 8

    பதிலளிநீக்கு
  12. ரிலாக்ஸ் படமாக தெரியவில்லையே...டென்சனை ஏத்துற படமாகவுல்ல இருக்கு......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பரே அப்படியும் சொல்லலாமோ......

      நீக்கு
  13. சில சித்திரங்கள். சில விசித்திரங்கள். ஒரு சித்திரமோ கலைப்பொக்கிஷம். பாலிவுட், கோலிவுட் என சினிமாவையே ஞானமார்க்கமாகக் கொண்டு வாழ்பவர்களுக்கு, அமிதாப்-ஐஸ்வர்யா அணைப்பு. அடடா! கலாச்சார அழைப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே சினிமாவில் முத்தெடுக்க மூழ்கியவன் சொத்து இழந்தே நிற்பான்.

      நீக்கு
  14. ரசனை, கோபம், நகைச்சுவை என அனைத்தையும் விட மிஞ்சுவது வேதனை தான் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நாட்டில் பெரும்பான்மையானவர்கள் கோமாளிகளாகி விட்டதே காரணம்,

      நீக்கு
  15. ரொம்ப நல்ல தொகுப்பு கில்லர்ஜி. எல்லாவற்றைப் பற்றியும் எழுதணும்னுதான் ஆசை. (த ம காலையிலேயே போட்டாச்சு).

    இந்திய நாடு என்ற அமைப்பில், உலகத்தின் ஆதி மொழிகளில் ஒன்றான தமிழ் அதன் இடத்தில் அரசியலால் வைக்கப்படமுடியவில்லை என்பது வருத்தம்தான். ஹிந்தி, சமீப காலங்களில் வந்த மொழி. எதில்தான் மெஜாரிட்டி பார்ப்பது என்ற விவஸ்தையே நம்ம நாட்டில் இல்லாமல்போய்விட்டது. சரி.. நமக்காவது தமிழுணர்வு இருக்கா (80% தமிழர்களுக்கு). அதுவும் இல்லை.

    'திருக்குறளை' - இதைப் படித்தவுடனே எனக்கு ஞாபகம் வந்தது, திருவள்ளுவர் என்ன ஜாதி என்ற சர்ச்சை வெகு காலம் முன்பு எழுந்ததுபற்றி. ராஜராஜ சோழன், எங்க ஜாதி என்று பயங்கரமான சண்டை சில வருடங்களுக்கு முன்பு சில ஜாதிகளிடையே எழுந்ததும் ஞாபகம் வந்தது.

    'காவல்துறை' பற்றிய படங்கள் - இதுவும் சாதியினால் பிணைக்கப்பட்ட நம்ம சமூக அமைப்புதான் காரணம். அதனால்தான் ஆண்டான், அடிமை என்ற மனோபாவம் நமக்கு இயல்பாகவே இருக்கிறது.

    வெள்ளத்தில் சிக்கிய ரமணன், பணக்கட்டு/நகையுடன் சாமியை வேண்டும் அற்ப மனம்-கர்னாடக அமைச்சர்-இது வெளில தெரிஞ்சது, எல்லா அரசியல்வாதிகளும் இந்த ரகம்தான், ரசிகர்கள் (விஜய், ரஜினி) போன்று ஒவ்வொரு படத்துக்கும் எழுத ஆரம்பிச்சா பிரஷர்தான் அதிகமாகும். 'நெஞ்சு பொறுக்குதில்லையே'.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மையே குறிப்புகளே நமக்கு ஏற்க முடியவில்லையே.... பதிவாக கொடுத்தால் மேலும் வேதனையே....

      வருகைக்கும் விரிவான அலசலுக்கும் நன்றி நண்பரே

      நீக்கு
  16. எல்லாமே சூப்பர். முக்கிய்மா கரண்ட் கம்பமும், ரமணன் சாரும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரண்ட் கம்பி ஸ்ட்ராங்க் என்று சொல்லலாமோ....

      நீக்கு
  17. எல்லாமே அருமையான தொகுப்பு! நன்றாக ரசித்தேன். பல செய்திகள் ஏற்கெனவே தெரிந்ததே! முக்கியமாய் லாக்கர் விஷயம். அது லாக்கர் வாங்கும்போதே நாம் நிரப்பிக் கொடுக்கும் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டிருப்பார்கள். இப்போப் புதுசாச் சொல்லலை. அதே வங்கியில் நாம் தங்க நகைக் கடன் வாங்கி இருந்தால் அப்போது அந்த நகைகளுக்கு வங்கி பொறுப்பு. இது பல்லாண்டுகளாக உள்ள நடைமுறையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா நான் இதுவரை இப்படி கேள்விப்பட்டதில்லை மேலும் நானும் பத்து வருடமாக விடுமுறையில் வரும்பொழுதெல்லாம் லாக்கர் கேட்டு, கேட்டு பிறகு நகை வாங்கிய பிறகு லாக்கர் வாங்கலாம் என்று தாமதித்து பிறகு வாங்கிய நகைகளை உறவுகளுக்கு கொடுத்து ஏமாந்து இறுதியாக கேன்சலில் வரும்வரை லாக்கர் வாங்கவில்லை ஆகவே எனக்கு இந்த முழு விபரம் தெரியாமல் போய் விட்டது.

      நீக்கு
  18. "இறை" "இரை" மனதை வருத்தியது! ஆனாலும் சமீப காலங்களில் இப்படிப் பார்க்க நேர்ந்ததில்லை. இன்னும் இருந்தால் அது துயரத்திற்குரிய ஒன்றே. :( கடைசிப் படம் ரசித்துச் சிரித்தேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசிப்படம் ரசித்து சிரித்தீர்களா ?
      எங்களைப் பார்த்தால் நக்கலாகத்தான் இருக்கும்.

      நீக்கு
  19. வாட்ஸ் அப் , பேப்பர் கட்டிங் எல்லாத்தயும் சேர்த்து ஒரு கூட்டான்சோறு பதிவு . நல்ல ஐடியா . சில படங்கள் சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க எப்படியோ சோறு வடிச்சு குழம்பு வச்சுட்டோம்ல....

      நீக்கு
  20. அனைய்தும் அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
  21. அப்படியே ஒரு முழுத் தொகுப்பாக வெளியிடலாம். மிகவும் அருமை! ஆனால், ஓர் ஐயம்! மழை வரும் அல்லது வராது என்று முன்கூட்டியே சொன்னது தவிர இரமணன் என்ன குற்றம் செய்தார்? தன் வினை தன்னைச் சுடும் எனக் குறிப்பிட்டு விட்டீர்களே! :-)

    அப்புறம் இன்னொன்று, அந்தப் பாதியில் தொங்கும் மின்கம்பத்தின் படம் போலி. அப்படித் தொங்கவே இயலாது. மின் கம்பத்தின் எடை மிகவும் கனமானது. அடியில் அந்த அளவுக்கு உடைவு ஏற்பட்டால் கம்பிகளையெல்லாம் சேர்த்து இழுத்துக் கொண்டு கம்பம் சாய்ந்து கீழே விழுமேயன்றி அப்படிப் பாதியில் தொங்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு. இரமணன் அவர்களை தமாசுக்காக இழுத்தேன் நண்பரே

      அந்தப்படம் போலியாக தெரியவில்லை நண்பரே மேலும் அடுத்த கம்பம் மிக அருகில் இருக்கிறது ஒருவேளை புதியதை நட்டு வைத்த பிறகு பழையதை இடிக்கும்போது இடைப்பட்ட தருணத்தில் முகநூல் நண்பர்கள் அவசரப்பட்டு எடுத்தும் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

      மேலும் மிகவும் அழுத்தமாக கட்டியிருந்தால் இந்த எடையை தாங்கும் வலிமை கம்பிகளுக்கு உண்டு.

      நீக்கு
  22. சூப்பர்

    https://www.youtube.com/watch?v=JYAraNxeR1Q

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பர் சதீஷ் நரசிம்மன் அவர்களே...

      நீக்கு
  23. நிறைய நேரம் செலவு செய்து கோர்த்திருப்பீர்கள் போல - தகவல் மாலை...! செம..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எல்லாம் உங்களுக்ககத்தான்.

      நீக்கு
  24. Tamizhar @ karnataka vs rajni @ tamil nadu,, super

    பதிலளிநீக்கு
  25. ஒற்றுமையில் வேற்றுமையில் சிறந்தவர்கள் நாம்

    பதிலளிநீக்கு
  26. இரசிக்கவும், வருத்தப்படவும், கோபப்படவும், சிந்திக்கவும் வைத்த படங்கள். பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
  27. அனைத்தையும் ரிலாக்ஸாக பார்த்தேன். இன்றுதான் உடல்நிலை சற்று பராவாயில்லை. இதுநாள் வரை வராததற்கு மன்னிக்கவும். பெரியவர்கள் கோபிக்க கூடாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே மன்னிப்பு எதற்கு.

      நீக்கு