தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஆகஸ்ட் 01, 2017

தேவகோட்டை to கீழக்கரை

ருமுறை நானும் எனது மனைவியும் தேவகோட்டையிலிருந்து கீழக்கரைக்கு மருது பாண்டியர் போக்குவரத்து கழக பேருந்தில் போனோம், எனது மனைவியின் கையில் எனது மகன் தமிழ்வாணன் கைக்குழந்தையாக, எனது கையில் எனது சகோதரரின் மகள் ஸபரி 3 ½ வயது குழந்தையாக, எனது மனவாட்டிக்கு இருக்கை கிடைத்து உட்கார (கணவனுக்கு முன் உட்காரக் கூடாது என்பது பொய் வேஷம்) நான் நின்று கொண்டு ஸபரியை கையில் பிடித்து இருந்தேன், சுற்றி இருந்த பெண்கள் என்னையே உற்று நோக்கி கொண்டு இருந்தார்கள் (காரணம் நான் மிகவும் அழகாக இருந்தது என்பது பிறகு நானாகவே எனது சுயஅறிவால் புரிந்து கொண்டேன் என்பதும், இதன் காரணமாகத்தான் எனது மனைவி என்னை ஃபாரன் லவ்லி உபயோகப்படுத்த விடுவதில்லை என்பதும் வேறு விடயங்கள்)

தில் எனக்கு ஓரத்தில் இருந்தபெண், குழந்தையை தாருங்கள் நான் மடியில் வைத்துக்கொள்கிறேன் எனக்கேட்டு வாங்கி கொள்ள, குழந்தையும் சமர்த்தாக உட்கார்ந்து கொண்டது, அந்தப்பெண் சும்மா இருந்திருந்தால் இந்த பதிவு வந்து இருக்காது அவள் என்னிடம் குழந்தை மூத்ததா ? எனக்கேட்க, நான் சொன்னேன் இல்லை இரண்டாவது என்று, உடனே அந்தப்பெண் என்னையும், என்னவளையும் ஆச்சர்யமாக மாறி மாறிப்பார்த்தாள். எனக்கு சந்தேகம் ஒருவேளை நான் இளவயதாக அழகாகவும் இருப்பதால், என்னை சைட் அடிக்கின்றாளோ ? குழப்பமாய் எதேச்சையாக திரும்பியவன், என்னவள் என்னை பத்ரகாளி மாதிரி பார்த்தாள் எனக்கு மீண்டும் குழப்பம் ஏன்... நமது தேவகோட்டை தேவதை தேவையில்லாமல் இப்படி அதுவும் அஷ்டகோணலாக முறைக்கிறாள் ? சிறிது நேரத்தில் விடையும் கிடைத்தது பக்கத்துப்பெண் R.S.மங்கலத்தில் இறங்கவும் நான் குழந்தையை வாங்கி கொண்டு மணவாட்டியின் அருகில் உட்காரவும் மணவாட்டியின் முதல் கேள்வி

அந்தப் பெண்ணுக்கிட்டே ஏன்... அப்படி சொன்னீங்க ?
எப்படி ?
இரண்டாவதுனு...
பின்னே ஸபரி இரண்டாவதுதானே... ராஜா மூத்தவன்ல,
ஐயோ அவங்க நம்ம குழந்தைனு நினைச்சுட்டாங்க, நம்மளே சின்னவயசு அப்படினா ? மூத்தது ஒண்ணு வீட்டிலே இருக்குனு நினைக்க மாட்டாங்களா ?
(உண்மைதான் அந்தநேரம் எனக்கு வயது 24 மனைவிக்கு வயது 22 இந்த வயசுக்குள்ளே மூணா ? சரிதா’’ஙே’’)
ஓஹோ... இப்படியொரு கணக்கு இருக்கா ? இது எனக்கு தெரியலையே....
உங்களுக்கு எதுதான் தெரியுது ?
எதுவும் தெரியாமலா ? தமிழ் படித்து கையில் தமிழை கொடுத்தேன் ? சரி, சரி முறைக்காமல் கீழே இறங்கு இராமநாதபுரம் வந்துருச்சு.
இறங்கி கீழக்கரை பேருந்தை பிடிக்கும் முன்பு மணையாள் சாப்பிடணும் என்று சொல்லவும் சரி பக்கத்துல ஆரியபவனில் சூடாக தோசை சாப்பிடலாம் எனப்போனோம்.

ரோட்டுல போற பேதியில பெரண்டு போயிறுவாங்கே என்றைக்கும் இல்லாமல் அன்றைக்கு எங்களைத்தான் பார்க்கிறாங்கே.. இதனால் எனக்குதானே பிரச்சனை காரணம் வராத குழந்தை ஸபரியை நான்தானே இழுத்துக்கொண்டு வந்தேன் மணையாளின் கண்ணில் பொறி பறக்கிறது வீட்டுக்குப்போய் எப்படி சமாளித்து... ? எப்படியோ கடந்து உணவகத்துக்குள்ளே நுழைந்தால் ? அங்கேயொரு கிரகம் எனது அம்மாவைவிட 25 வயது மூத்தது ஆனால் எனக்கு உறவுமுறை அத்தாட்சி இது எப்படி ? கிராமத்து கிழம் வேறு என்னை கண்டதும் கொஞ்சம்கூட இங்கிதம் தெரியாமல்,
ஏண்டா..... தூ........ எப்படியிருக்கே ?
கல்லாவில் இருக்கும் பெரிசு முதல் சாப்பிட்டுக்கொண்டு இருந்த அனைவரும் எங்களையே பார்த்து ’’கொல்’’ என சிரித்தார்கள், எனக்கு அந்த தருணமே இந்த கிழவியை கழுத்தை நெறித்து ’’கொல்’’வோமா ? என்று தோன்றியது பொது இடத்தில் இப்படியா ? ’’ச்சே’’ என்ன செய்ய ?
இருக்கேன் அத்தாட்சி நல்லாயிருகியலா ?
எனக்கேட்டு மணையாளை அறிமுகப்படுத்தி வைத்தேன், எனது மனைவி சந்திப்பது முதல்தடவை மனைவியிடம்
ஏண்டி சக்காளத்தி எப்படியிருக்கே ? ய்யேங் கொழுந்தன் உன்னை, எப்படி வச்சுக்கிறான் ?  
எனக்கேட்டு குழந்தையை கொஞ்சி விட்டு இடத்தை காலி செய்தது கிழவி.

ரியென உட்கார்ந்து ஆர்டர் கொடுத்து விட்டு மணையாளை பார்த்தால் ? அவள் முகத்தில்1000 வாட்ஸ் பல்பு காரணம் என்ன ? எல்லாம் அந்தக்கிழவி என்னை ‘’அந்தக்கேள்வி’’ கேட்டதுதான் எப்படியோ, நாக்கைப்பிடுங்கிற மாதிரி ஒரு கேள்வி கேட்டாலும் நமக்கு ஒருவேலை முடிஞ்சு போச்சு நல்லாயிருக்கட்டும் இன்னும் 100 வருஷத்துக்கு அந்தக்கிழவி SORRY அத்தாட்சி (வயது 75) என நினைத்துக்கொண்டு காத்திருந்(தோம்)தேன், சூடான தோசைக்காக ஆரியபவனில் எனது தேவகோட்டை தேவதையின் முகத்தைப் பார்க்க தைரியமில்லாமல்.....

54 கருத்துகள்:

  1. சுவாரஸ்யம்
    சொன்ன விஷயம் மட்டுமல்ல
    சொல்லிப்போன விதமும் கூட
    தொடர்கிறோம்
    த்டர வாழ்த்துக்க்ளுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி

      நீக்கு
  2. எல்லாம் நேரம்!.. வேற என்னத்தைச் சொல்றது?..

    பதிலளிநீக்கு
  3. எத்தனை எத்தனை பல்புகள்! இரண்டாம் வாக்கு நான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலம் முழுவதும் பல்புதான் ஸ்ரீராம்ஜி

      நீக்கு
  4. எல்லாச் சுவையும் கைவரப் பெற்றவர் நீங்க! நகைச்சுவைக்குக் கேட்கணுமா! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ இருந்தாலும் பல்பு வாங்குவது வருத்தம்தானே...

      நீக்கு
  5. ஆஹா..... சில சமயங்களில் இப்படித்தான்.

    த.ம. +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி இருந்தாலும் எனக்கு அதிகம்தானே..

      நீக்கு
  6. ஹஹஹஹ்ஹ் உங்க முகத்துக்கு எதுக்கு ஃபேர் அன் லவ்லி இப்படி பல்பு வாங்கினா நல்லாவே பிரகாசிக்கும் தான்!!!!

    உங்க மனையாளின் பல்பு வேற லைட் அடிச்சிருக்கும் உங்க முகத்துல!!! ஐயோ கண்ணைக் கூசுதுனு தப்பிச்சிட்டீங்களோ!! ஹஹஹஹ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க என்ன செய்யிறது எல்லாம் சந்தித்தே தீரணும்.

      நீக்கு
    2. இல்லை கில்லர்ஜி பல்பு வாங்குவது கூட ஒரு சந்தோஷம் தான்!!!

      நான் அப்படித்தான் நினைச்சு சிரிச்சுக்குவேன்! ஏன்னா நான் நிறைய பல்பு வாங்குவேன்!! (உங்க வீட்டுக்கு அவ்வளவு பல்பு வேணுமா அம்மாம் பெரிய வீடானு கேட்டுறாதீங்க!!ஹஹஹ்) மத்தவங்களை அப்படியாவது சிரிக்கவும் வைக்கிறோமேனும் நினைச்சுக்குவேன் கில்லர்ஜி!!!!

      கீதா

      நீக்கு
    3. சந்தோஷத்துலயே மிகப்பெரிய சந்தோஷம் மற்றவங்களை சந்தோஷப்படுத்தி பார்க்கிறதுதான்.

      இதை சொன்னது
      கில்லர்ஜியும் அல்ல!
      கே.பாக்கியராஜும் அல்ல!
      மஹாத்மா காந்தியும் அல்ல!
      "பகவத்கீதை"

      நீக்கு
  7. பதில்கள்
    1. ஆமாம் ஜி தனிமையில் நினைவில் வந்தவை.

      நீக்கு
  8. பதில்கள்
    1. வாங்க நான் பல்பு வாங்குவது உங்களுக்கு சிரிப்பா இருக்கா ?

      நீக்கு
  9. குமரியும் கிழவியுமா மாறி மாறித் துரத்தினால் நீர்தான் என்ன செய்வீர், பாவம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நீங்கதான் மிகச்சரியாக சொன்னீர்கள்.

      நீக்கு
  10. 'கணவனுக்கு முன் உட்காரக்கூடாது' - எந்தக் காலத்துல? இதெல்லாம் வழக்கொழிஞ்சு போய் 30 வருஷமாயிருக்குமே.

    "சுற்றி இருந்த பெண்கள் என்னையே உற்று நோக்கிக்கொண்டிருந்தார்கள்" - ம்க்கும்.. இது என்ன இவ்வளவு சின்ன வயசுலயே ரெண்டு குழந்தைகள் இருக்குன்னு நெனைச்சிருப்பாங்க.

    நல்ல ரசனையா எழுதியிருக்கீங்க. காலையிலேயே த ம

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இது நடந்தே 24 வருடங்கள் கடந்து விட்டது நண்பரே வருகைக்கு நன்றி

      நீக்கு
  11. போனது கீழக்கரைக்கா? ஏர்வாடிக்கா? ஏர்வாடி போறவங்க எல்லாம் பல்பு என்ன டியூப்லய்டே வாங்குவாங்க.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்து சந்தோஷமான கருத்துரை நன்றி ஐயா.

      இராமநாதபுரத்திலிருந்து ஏர்வாடி போகும் பேருந்தில் ஏறினால் வழி கீழக்கரை.

      பேருந்து புகைப்படத்தை கவனித்து எழுதியமைக்கு நன்றி ஐயா

      நீக்கு
  12. மலரும் நினைவுகள் அருமை.
    கிராமங்களில் இப்படி வயது வித்தியாசம் பார்க்காமல் கேலி செய்வதை கேட்டு ஆச்சிரியம் அடைந்து இருக்கிறேன்.
    சின்ன வயது மனைவிக்கு இதை எல்லாம் கேட்டால் கோபம் வரும் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ நான் நிறைய அனுபவப்பட்டு இருக்கிறேன் இப்படி... வருகைக்கு நன்றி

      நீக்கு
  13. இரசித்தேன்!த ம 9

    பதிலளிநீக்கு
  14. ஏண்டி சக்காளத்தி எப்படி இருக்கேன்னு என்று கிழவி கேட்டதுதான் ,உச்சபட்ச கோபத்தை வரவழைத்து இருக்கும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அதே அத்தாட்சிக்கு 75 வயதாக இல்லாமல் 25 வயதாக இருந்தால் என் கதி ?

      நீக்கு
  15. அப்போது மீசை இருக்கவில்லையா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இதில் பாதி மட்டுமே இருந்தது.

      நீக்கு
  16. ஆகா
    நினைவுகள் இனிமையாவை நண்பரே

    பதிலளிநீக்கு
  17. Nanbara thangal padivu malarum ninivugal sirika vaithalum sintheka vaikerathu vaalthukal.

    பதிலளிநீக்கு
  18. நண்பரின் கருத்துரைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  19. தூ.....................

    அது என்னன்னு ஃபில் பண்ணுங்கண்ணே

    பதிலளிநீக்கு
  20. அருமையான நினைவுகள்

    பதிலளிநீக்கு
  21. சுற்றி இருந்த பெண்கள் உங்களையே உற்று நோக்கியபோது தாங்கள் அழகாக இருப்பதாக சுய அறிவால் புரிந்துகொண்டேன் என்று எழுதியிருந்த வரிகளை இரசித்தேன்!
    ஒரு நிகழ்வை சுவையாய் சொல்லும் கலை தங்களிடம் இருக்கிறது. பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மையை எழுதுவதில் எமக்கு தயக்கம் இருந்ததில்லை தஙகளின் ரசனையான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  22. எல்லாம் உங்க அழகு படுத்தும் பாடு!

    பதிலளிநீக்கு
  23. கிரகங்கள் டானிக் சாப்பிட்டு விட்டு வந்து சதி செய்த மாதிரி இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ நலமா ?
      உண்மைதான் இப்படித்தான் இருக்கோணும்.

      நீக்கு
  24. சுவாரஸ்யமான நிகழ்வு பகிர்வுக்கு மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  25. Fair and lovely ஆளா. அப்போ டியுப் லைட்டே தான்

    பதிலளிநீக்கு
  26. தலைப்பைப் பார்த்து ஏதாவது வித்தியசமான விசயமாக இருக்கும் என்று நினைத்து வந்தேன்.

    பதிலளிநீக்கு