தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், செப்டம்பர் 18, 2017

அழகான மனிதர்கள் அழுக்கான மனதுடன்


ஒருமுறை 2005 என்று ஞாபகம் அதாவது எனது மனைவி மறைந்து ஐந்து வருடமிருக்கலாம் அபுதாபியில் தமிழ் உணவகம் ஒன்றில் உணவருந்த போனேன் எனது பக்கத்து டேபிளில் ஒருவர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார் அப்பொழுது இரண்டு நண்பர்கள் வந்தார்கள் வந்தவர்கள் அவரின் டேபிளில் உட்கார்ந்தார்கள்.

பெயர் வேண்டாமே ஊரைச் சொன்னாலும் பெயரைச் சொல்லக்கூடாது என்பார்கள் பேசும்பொழுது அவரின் ஊர் திருவாரூர் என்று அறிந்து கொண்டேன்
என்னங்க.... நல்லாயிருக்கியலா...
நலகுசலங்கள் முடிந்தது நான் அடுத்த டேபிள் என்பதால் அவர்கள் பேசுவது அனைத்தும் எனக்கு கேட்டது மூவரும் பேசியது...

ஊருக்கு போறீங்களாமே....
ஆமா அடுத்த வாரம்.
ஏதும் விஷேசமா
ஆமா கல்யாணம் வச்சு இருக்காங்க.... புள்ளைய பார்த்துக்கிறவும் ஆளு வேணுமுள்ள... குழந்தையை வச்சுக்கிட்டு ரொம்ப கஷ்டமா இருக்கு...
ஆமா.. ஆமா.. புள்ளையை வளர்த்துத்தானே ஆகணும்..
அதான் ரெண்டரை மாச லீவுல போறேன்..
நல்லது நல்லபடியா போயி கல்யாணத்தை முடிச்சிட்டு வாங்க... ஆமா நீங்க ஊருக்குப் போயிட்டு வந்து எவ்வளவு நாளாச்சு
அஞ்சு மாசம் ஆச்சு என் மனைவி இறந்ததுக்கு ஒரு வாரம் எமர்ஜென்ஸி லீவுலதானே போனேன்.
அப்படியா...
சரி பார்ப்போம் நான் பில் கொடுக்கிறேனே....
வேண்டாம், வேண்டாம் ஊருக்குப் போயிட்டு வந்து பார்ட்டி வையிங்க..
கண்டிப்பா... சரி வாரேன்..
நல்லது.

அவர் பணத்தை கொடுத்து விட்டு வாசலைக்கூட கடந்து இருக்க மாட்டார்.....
..... இவனையெல்லாம் ......... நண்பர்களே டைப்ப முடியாத வார்த்தைகள்

விடுய்யா... இவங்கே இப்படித்தான்....
என்னையா... கொஞ்சமாவது நியாயம் வேண்டாமா... வருஷம்கூட திரும்பலையா.....
நீ ஏன் டென்ஷனாகுறே...
அவன் சொல்ற காரணத்தைப் பார்த்தியா... குழந்தையை வளர்க்க ஆளு வேணுமாம் அஞ்சு மாசமா பச்சைப் புள்ளயை வளர்த்தவங்களுக்கு இனிமேல் முடியாதா வர்றவ உடனே பால் கொடுத்து வளர்த்துடுவாளா
விடு விடு ஏதோ உப்புக்கு சப்பாணி கதை சொல்றான்.
இவனெல்லாம் அந்தக் குழந்தையை கடைசிவரை பார்ப்பானு சொல்றே...
எல்லாம் மேலே உள்ளவன் தீர்மானிக்கிறான் அந்தக் குழந்தை நல்லபடியாக இருக்கணும்னு வேண்டிக்கிருவோம் நம்மளால் முடிந்தது
இவன் கல்யாணம் செய்யிறது தப்புனு நான் சொல்லலையா... கண்டிப்பாக வாழ்க்கைத்துணை வேணும் இல்லைனா மனுஷன் கிறுக்கனாயிடுவான் இருந்தாலும் ஒரு வருஷம் போனபிறகு செய்தாலும் பரவாயில்லை அதை விடக் கொடுமை இவன் சொன்ன காரணம்தான் எனக்கு பத்திக்கிட்டு வருது...
அவன் வேண்டாம்னு சொன்னாலும் வீட்ல பொம்பளைங்க சும்மா இருக்க விடமாட்டாங்க..
இருக்கட்டுமே சமாளிக்க முடியாதா இங்குதானே இருக்கான் கம்பெனி லீவு கொடுக்கலை அப்படி இப்படினு சொல்லக்கூடாதா இவனுக்கு ஆசை வேறென்ன...
இவன் உடன்படாமலா கல்யாணம் நடக்கும்.
எப்படிய்யா அவன் பொண்டாட்டியோட எலும்புக்கூடு இன்னும் மண்ணு தின்னு இருக்காது... ச்சே...
நீ ஏன் கோபப்படுறே... உன் தங்கச்சியா... பேசாமல் சாப்பிடு
தன்கூட படுத்தவ மண்ணுகுள்ளே போயிட்டாளேனு... எண்ணமே வராதா... எப்படி அதை உடனே மறந்துட்டு அடுத்தவ கூடபடுக்கிறாங்கே... மனசு உறுத்தாதா... மனசாட்சியே இல்லையா
சாப்பிடு, சாப்பிடு... மனசாட்சி எவனுக்கு இருக்குது எல்லாப் பயலுக்கும் மனசாட்சி இருந்தால் ஒருத்தன்கூட கட்சியில இருக்க மாட்டான், நாடு உருப்படும் நாமளும் இப்படி அடுத்த நாட்டுக்கு வர வேண்டியதிருக்காது.
இவனுக்கு பொண்ணு கொடுக்கிறானே... அவனைச் சொல்லணும்.
என்ன செய்யிறது அவங்க குடும்பச்சூழல் அவங்களுக்குத்தான் தெரியும் வரதட்சிணையின்னு இருக்குலே... முடியாத பட்சத்தில் இப்படித்தான்.
ச்சே என்ன... மனுஷங்கே...

அவரது வாயிலிருந்து நிமிடத்துக்கு ஒருமுறை எழுத முடியாத வார்த்தைகள் வெளியில் வந்து விழுந்து கொண்டே இருந்தது இவர்களுக்காகவே நானும் மீண்டுமொரு தோசை சொல்லி விட்டு நேரத்தைக் கடத்திக்கொண்டு இருந்தேன் அவனது கண்களை ஊடுறுவிப் பார்த்தேன் அதில் சுயநலமில்லாத ஒரு கோபம் தெரிந்தது நிச்சயமாக சுயநலமில்லை பொதுநலமே காரணம் இவன் யாரோ... அவன் யாரோ... இருவருமே ஜாதி, மதம், ஊர் வேறுபட்டவர்கள் என்பதை அவர்களின் பேச்சின் ஊடே கவனித்தேன் இருப்பினும் இவனுக்கு கோபம் சமூக கோபம், நியாயமான கோபம்தானே.... மறைந்துபோன முகமறியா அந்தச் சகோதரியின் ஆன்மா சாந்தியும் சமாதானமும் அடைய வேண்டுமென மனதுக்குள் வேண்டிக் கொண்டேன் என்னால் முடிந்தது இவ்வளவுதானே.. வேறென்ன செய்யமுடியும்... இந்தக்கோபம் நியாயமே... ஆனால் சமூகம் இவனது கோபத்தை ஏளனமாக பார்த்து சிரிக்கும் என்பது எனக்குத் தெரிந்தாலும் பின்னாளில் நானும் அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டேன் ஏன்... இன்றுவரை காரணம் நானும் இவரின் ஜாதிதானே.... நான் மறுமணம் செய்யாமல் போனதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள் என்னிடம் உண்டு அவைகளை எழுதினால் ஐநூறு பதிவுகளே எழுத முடியும் அந்த ஆயிரம் காரணங்களில் இதுவும் ஒன்று நான் ஏற்கனவே ஒரு பதிவில் கேட்டது போல்

பொண்டாட்டி செத்துட்டா புருஷன் புதுமாப்பிள்ளை ஆகிடுறான் ஆனால் புருஷன் செத்துட்டா பொண்டாட்டி புதுப்பெண்ணாக ஆவதில்லையே ஏன்
இந்த நிலையில் மாற்றம் வரும் பொழுது என் மனதிலும் மாற்றம் வரலாம்
அழகான மனிதர்கள் அழுக்கான மனதுடன்

அதை கழுவ முடியாத நான் எனது கைகளை மட்டும் கழுவி விட்டு வெளியேறினேன் அவர்கள் இன்னும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள், அதில் அவரின் கண்களில் தீ எரிந்து கொண்டிருந்தது.

56 கருத்துகள்:

  1. எழுத்துகளில் குழறுபடி இருந்தால் சொல்லவும் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 கில்லர்ஜி.. வோட் ல மீ தான் 1ஸ்ட்டூஊ:)

      நீக்கு
    2. எழுத்துகளில்மட்டுமில்லை ,எண்ணத்திலும் குளறுபடி எதுவுமில்லை :)

      நீக்கு
    3. வாங்க ஜி வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. இருங்க இருங்க எனக்கு தமிழ்ல டி ஆக்கும்:) எழுத்துப் பிழைகள் எல்லாம் அத்துப்படி.. இலங்கை வீரகேசரிப் பேப்பருக்கு நான் தேன் எடிட்டர்:)).. ஹையோ இது நமக்குள் இருக்கட்டும் கில்லர்ஜி...

    ஆங்ங்ங்ங்.. பேப்பிள் எழுத்தில்.. கடசிக்கு முதல் பந்தியில்.. “நாமலும்”.. எனப் போட்டிட்டீங்க.. அது “நாமளும் “ என வரோணுமாக்கும்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மாற்றி விட்டேன் வீரகேசரி எடிட்டருக்கு நன்றி

      நீக்கு
  3. வணக்கம் ஜி !

    அவனாவது ஐந்து மாதம் கழித்து மறுமணத்துக்கு ஆயத்தமாகிறான் சில இடங்களில் ஒருமாதம் கூட அதிகமாகிறது ..... எல்லாம் உடலால் வாழ்ந்தவர்கள் ஜி மனத்தால் வாழ்த்தவர்களுக்கு மரணம்வரை நினைவிருக்கும் ..!

    மறைவாழ்வு போலும் மனைமாட்சி கொள்வார்
    நிறைவாழ்வு காண்பார் நிலத்து !

    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரே அவன் திருமணம் செய்வதில் எனக்கு ஆட்சேபனை இல்லை பேசியவிதம் தவறு வருகைக்கு நன்றி

      நீக்கு
  4. நல்ல கேள்வி தான். புருஷன் செத்தால் மனைவிமார் புதுப்பெண் ஆவதில்லை என்பதும் இப்போது அருகித்தான் வருகின்றது.

    என்னைக்கேட்டால் இளவயதில் கணவன் மனைவியை இழந்தோர் மறு திருமணம் செய்வதே நல்லதென்பேன். இருபது முப்பதில் இழப்புக்கள் குறித்து உணராத தனிமை நாற்பதின் பின் உடல் உள ரிதியில் பல பிரச்சனைகளுக்குள் தள்ளி விடுகின்ற வாய்ப்பிருக்கின்றதே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக உடல்ரீதியாக மட்டுமல்ல, மனரீதியாகவும் பாதிக்கும் அபாயம் உள்ளது மறுமணம் இருவருக்குமே அவசியம்.

      நீக்கு
  5. ஆம். எழுத்துகளில் குளறுபடி. ஆனாலும் படிச்சு குன்ஸா கருத்தைப் புரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குளறுபடிகளை சரி செய்து விட்டேன் நன்றி ஸ்ரீராம் ஜி

      நீக்கு
    2. ஆம். இப்போது வரிகள் சீராக இருக்கிறது.

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி ஸ்ரீராம்ஜி

      நீக்கு
  6. உண்மைதான் நண்பரே
    அழுக்கு மனதுடன், அப்பழுக்கற்ற ஆடைகளுடன்தான்
    மனிதர்கள் இருக்கிறார்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

      நீக்கு
  7. கருத்து புரிகிறது, என்றாலும் அவர் வரையில் அவர் செய்தது தப்பில்லை! அவர் நிலை அவருக்குத் தானே நன்றாகப் புரியும்! எல்லோராலும் மனைவி இல்லாமல் தனித்துக் குழந்தையை வளர்க்க முடியாது! பிறர் உதவியும் எத்தனை வருடங்கள் கிடைக்கும்! :( கணவனை இழந்த பெண்களும் மறுமணம் செய்து கொள்வதில் தப்பே இல்லை! எங்க வீட்டிலேயே அப்படி 1940 களிலேயே நடந்திருக்கு! இப்போவும் விவாகரத்தான பல உறவினப் பெண்கள் மறுமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ மறுமணம் அவசியம் இருபாலருக்குமே வேண்டும். நம் முன்னோர்கள் நன்மைக்காகத்தான் மறுமணம் செய்ய வைத்தார்கள்

      ஆனால் இதில் பெண்பாலருக்கு சில விதிமுறைகளை வைத்தது ஆணாதிக்கம் என்பது எனது தாழ்மையான கருத்து.

      நீக்கு
  8. மறுபடியுமா!?..
    தூண்டில் புழுவுக்கு ஆசைப்பட்ட சுறாவைப் போல ஆயிற்று!..

    அது போகட்டும்..

    மற்றபடி - ஆணுக்கும் பெண்ணுக்கும் மறுமலர்ச்சியான விஷயங்களும் நடந்து கொண்டிருக்கின்றன என்பதையும் குறித்தாக வேண்டும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி
      ஆணுக்கும், பெண்ணுக்கும் மறுமலர்ச்சி வாழ்க்கை தேவை என்பதே எனது கருத்தும்.

      நீக்கு
  9. ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் ஒரு நியாயம் வைத்திருக்கிறார்கள்.நண்பர் செய்ததி சரி என்றாலும் அதற்கு இவ்வளவு அவசரம் காட்ட வேண்டியதில்லை என்பதே பெரும்பாலோரின் கருததாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எனக்கு அவர்மீது கோபம் இல்லை இவ்வளவு அவசரம் தவறு என்பது எனது கருத்து.

      நீக்கு
  10. உங்களின் கோபம் புரிகிறது. அவருடைய சூழல் எப்படியோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே அவரை நான் எப்படி கோபப்பட முடியும் ?
      அதற்கு உரிமை இல்லையே...

      நீக்கு
  11. கில்லர்ஜி இப்போது பெண்களும் மறுமணம் செய்து கொள்கின்றனர். சமூகமும் கொஞ்சம் மாறி இருப்பது போல்தான் படுகிறது. ஒரு வேளை மிக மிகப் பின்னடைந்த கிராமப்பகுதிகளில் வேண்டுமென்றால் பெண்கள் மறுமணம் செய்து கொள்வதை ஒருமாதிரியாகப் பார்ப்பது. ஒன்று சொல்லுகிறோம்...ஜி இதற்குக் கோபப்படுவதில் அர்த்தம் இல்லை ஜி. ஏனென்றால் நாம் நினைப்பது போல் எல்லாரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது நல்லதல்லவே! அது அவர் இஷ்டம். நாம் அவர்கள் நன்றாக இருக்கட்டும் என்று வாழ்த்திவிட்டு அதுவும் நமக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாத போது எதற்குக் கோபம்? இதனைச் சமூகக் கோபமாகப் பார்க்க முடியவில்லை ஜி. அது ஒருவேளை தவறான எண்ணமாக இருந்தால் அந்தத் தவற்றிற்கான பலனை அவர்கள்தானே அனுபவிக்கப் போகிறார்கள்...உங்களால் அதை மாற்ற முடியுமா? சொல்லுங்கள்? இது மிகவும் தனிப்பட்ட விருப்பம் என்றே படுகிறது...ஜி...விடுங்கள் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மறுமணத்தை நான் என்றுமே ஆதரிக்கிறேன் கடந்த 18 வருடங்களில் மூன்று மறுமணங்கள் நடப்பதற்கு நான் காரணமாக இருந்திருக்கிறேன். இது கடைசி காலம்வரை தொடரும்....

      நம்மைப்போல் எல்லோரும் நியாயமாக நடக்கவேண்டும் என்று நினைக்கலாம் ஆனால் அதை முழுமையாக எதிர்பார்ப்பது அறிவீணம்.

      வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கொள்கையாளர்கள் இன்று நிறைந்து வாழ்கின்றனர் அதிலும் பணமும், அதிகாரமும் படைத்தவன் வாழ்வதில் தவறில்லை.

      விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  12. நியாயமான கோபம் ...... மனிதம் இன்னும் வாழ்கிறது இது போன்ற மனிதர்களின் மனங்களில்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  13. காதல், பாசத்துக்குலாம் கலிக்காலத்துல இடமில்லண்ணே.

    பதிலளிநீக்கு
  14. கருத்துப் பகிர்வுக்கு நன்றி
    தமிழ் செய்திகள்

    பதிலளிநீக்கு
  15. என்ன செய்வது நண்பரே சில நேரங்களில் சில மனிதர்கள். விரல்கள் ஐந்தெனினும் உயரம் ஏறக்குறையாதானே ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  16. பொதுவாப் பார்க்கும்போது தவறாத் தெரியறது, அவங்க ஏன் அந்த முடிவு எடுத்தாங்கன்னு பார்த்தால் தவறாத் தெரியாமல் இருக்க வாய்ப்பு இருக்கு. சட்டுனு எனக்கு விரைவில் திருமணம் செய்துகொண்டவரைத் தவறாக எண்ண முடியவில்லை. ஐந்து மாதத்தில் திருமணம்-ம்..அவருக்குள்ள நிர்ப்பந்தங்கள் என்னவோ.

    திருமணம் என்பது என்ன-இரண்டுபேர் சேர்ந்து தங்கள் வாழ்க்கையை இறுதிவரை நடத்துவது. அதில் வம்ச விருத்தி, அவங்களை, சரியான வயதுவரை முடிந்தவரை நன்றாக வளர்ப்பது. கிட்டத்தட்ட கான்டிராக்ட் மாதிரிதானே. நெறிமுறைகளோடு வாழணும். இடையில் கிளை ஒடிந்துவிட்டால், வேறு மரத்தோடு பதியன் போட்டு வாழ்வைத் தொடரவேண்டியதுதான்.

    என் ஆபீசில் ஒரு நண்பருடைய மனைவி கேன்சரால் இறந்துபட்டாள். இவருக்கு பதின்ம வயதில் குழந்தைகள், அதில் ஒரு பெண் வேறு. அவருக்கு 45 வயது ஆகியிருந்தபோதும், இன்னொரு திருமணம் செய்துகொள்வது நல்லதல்லவா என்று சொன்னேன், ஆனால் அவருக்கு அதில் உடன்பாடு இல்லை.

    என்னதான் நம் கடைசி காலம் வரை நமக்கு ஒரு துணை என்று நினைத்தாலும், யார் முன்னால் போவார், யார் காத்திருப்பார் என்று யாருக்கே தெரியும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மறுமணத்தை நான் என்றுமே ஆதரிக்கிறேன் கடந்த 18 வருடங்களில் மூன்று மறுமணங்கள் நடப்பதற்கு நான் காரணமாக இருந்திருக்கிறேன். இது கடைசி காலம்வரை தொடரும்....

      அவரவர் சூழல் அவர்களுக்குதான் தெரியும் இருப்பினும் தாம்பத்யத்தின் பலன் இவ்வளவுதானா ?

      எனக்கு தெரிந்தவர் பணக்காரர்தான் இரண்டு மகன்கள் மனைவி இறந்துவிட இரண்டாவது திருமணம் செய்தார் ஒரு பெண் குழந்தை மறுவருடம் நண்பர் இறந்துவிட சொத்து முழுவதும் இரண்டாவது மனைவி சுருட்டிவிட மூத்ததாரத்து இரண்டு மகன்களும் இன்று நடுத்தெருவில்.... இதற்கு காரணம் விதி என்றும் சொல்வார்கள்

      தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
    2. 'பணக்காரர்.... இரண்டாவது திருமணம்' - கில்லர்ஜி... நீங்கள் சொல்வதைப் புரிந்துகொள்கிறேன். நானும் இதுபோல் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். (அதில் ஒன்று, இரண்டாவது திருமணத்துக்கு முன், அந்தப் பெண்ணை குழந்தை பெற முடியாமல் முன்னேற்பாடு செய்யச்சொன்னது). வாழ்க்கை நமக்கு நிறைய கற்றுக்கொள்ள வைக்கிறது. இன்னொன்று தேவையில்லாமல் ரெண்டாவது திருமணம் செய்து, அவர்களுக்கும் வத வத வென்று குழந்தைகளைப் பெற்று வீட்டை மிக மிக ஏழ்மையாக்கியது. 'விதி' என்று சொல்லிவிடலாம், ஆனால், 'விதியை மதியால் வெல்ல முயற்சிக்கலாமே'.

      நீக்கு
    3. வருக நண்பரே கடைசியில் மதியால் விதியை வென்றாலும் இதுவே விதியாகும் என்றே சொல்வார்கள்.

      நீக்கு
  17. மனசாட்சி பற்றியும் எழுதி இருக்கிறீர்கள் யாராவது அவர்கள் செய்யும் செயல் மனசாட்சிக்கு விரோதமானது என்பார்களா மனசாட்சி என்பதே அவரவர் செய்கையை நியாயப்படுத்த் ஒரு உத்தி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை ஜி.எம்.பி சார். எவர் எதைச் செய்தாலும் அவர் அதை அறிவார். இப்போ ஒருத்தருக்கு 100 ரூ கொடுத்தோம்னா, நம்ம மனதுல 'பாவம் ஏதேனும் சாப்பிடட்டும்' னு நினைக்கலாம். இல்லைனா, இவனுக்கு 100 ரூ கொடுத்தால் நாலு பேர்ட்ட நம்மளைப் பத்தி நல்லாச் சொல்லுவான்னு நினைக்கலாம். இல்லை மனசுல திட்டிக்கிட்டே காசு கொடுக்கலாம். ஆனால் வாங்குபவனுக்கு இதெல்லாம் தெரியாது.

      நம்ம மனசாட்சிக்குத் தெரியும் நாம் செய்வது நல்லதா கெட்டதா என்று. 'யாரிடம் அதை நியாயப் படுத்தணும்?'

      நீக்கு
    2. வாங்க ஐயா மனசாட்சியை அடகு வைத்தே பல காரியங்கள் செய்கின்றார்கள் மனிதர்கள் அதுஒரு கருவேப்பிள்ளை என்ற நிலைக்கு உபயோகப்படுத்துகின்றார்கள்

      நீக்கு
    3. நண்பர் திரு. நெல்லைத்தமிழன் அவர்களின் மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  18. பெண்களுக்கென எழுதப்படாத விதிகள் மாறும் வரை அல்லது மக்களின் மனதில் மாற்றம் வரும் வரை நாம் கோபப்பட்டு பயனில்லை. அந்த மாற்றத்திற்காக நாமும் நமது பங்களிப்பைச் செய்யவேண்டும் என்பது எனது கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்களுக்காக போராடியவர் தந்தை பெரியார் இன்று எந்த அரசியல்வாதி பெண்களுக்காக உரிமைக்குரல் கொடுக்கப் போகின்றார்கள்.
      வருகைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  19. அண்ணன் தம்பியாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு என்ற சொல்வாடைதான் நிணைவுக்கு வருகிறது நண்பரே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இதுவும் உண்மைதான் மிக்க நன்றி

      நீக்கு

  20. ஒருவர் சீக்கிரம் மறுமணம் செய்கிறார் என்றால் அதற்காக அவருக்கு அழுக்கான மனது இருக்கிறது என்று சொல்வது தவறு. அந்த கணவர் மனைவியுடன் எத்தனை ஆண்டு காலம் உடன் வாழ்ந்தார் என்பதையும் நாம் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் ஒரு அவருக்கு கல்யாணம் ஆகி அவர் வெள்நாட்டிலும் அவரின் மனைவி உள்நாட்டிலும் இருந்து வந்து இருக்கலாம் அதனால் அவர்களுக்கிடையே அன்னியோயனம் அவ்வளவாக இல்லாமலு இருந்திருக்கலாம் அல்லது கல்யாணமாகி சில வருடங்கள்தான் சென்ரி இருக்கலாம் அதனால் அவர்களுக்கிடையே மிக நெருங்கிய உணர்வுடன் கூடிய உறவுகள் இல்லாமல் இருந்திருக்கலாம் அல்லவா அது எல்லாவற்ரையும் கருத்தில் கொள்ளாமல் அவரை தீட்டி தீர்த்தவரின் மனதுதான் மனதுதான் அழுக்காக இருக்க வேண்டும் tm 15

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே நான் அவரை குற்றம் சுமத்தவில்லை அவர் சற்று பொருத்து திருமணம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதே எனது கருத்து.

      மறுமணத்தை முழுமையாக ஆதரிப்பவன் நான் காரணம் அனுபவம் அதன் விளைவுகள், கஷ்டங்கள்.

      தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  21. பந்த பாசம் என்பதெல்லாம் பழங்கதை ஆகிவிட்டது! த ம 16

    பதிலளிநீக்கு
  22. ஜெயகாந்தன் தனது நாவல் ஒன்றினுக்கு வைத்த பெயர் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - சரியாகத்தான் சொன்னார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அருமையாக சொன்னீர்கள் சரியான வார்த்தையே...

      நீக்கு
  23. சில நேரங்களில் சில மனிதர்கள்....

    பதிலளிநீக்கு
  24. நமது காலத்திலாவது கணவன் இறந்தால் பெண்களை மணமகளாக பாப்போம் (அவர்கள் விருப்ப பட்டால்) .ஜி

    பதிலளிநீக்கு