இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், செப்டம்பர் 07, 2017

நட்சத்திரம்


எனக்கு கொஞ்ச காலமாகவே ஒரு சந்தேகம் பெருங்கொண்ட தொழில் அதிபர்கள் தங்களது கடைகளை திறக்க உதாரணத்திற்கு அவர்கள் நுங்கு வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் மென்மேலும் வளர இவர்கள் இந்தியாவின் பல இடங்களிலும், ஏன் ? வெளிநாட்டிலும் கூட கடைகளைத் திறக்கிறார்கள் அதைத்திறக்க பல கோடிகள் கொடுத்து திரைப்பட நடிகர் – நடிகைகளை வரவைக்கின்றார்கள் இவர்களை வைத்து திறக்கின்றார்களே ஏன் ? அறிவுஜீவி மக்’’கல்’’ வேலை வெட்டியைப் போட்டு விட்டு அன்றே இவர்களின் திருமுகத்தை பார்க்க கூட்டமாக கூடுகின்றார்கள் இந்தக்கடையை அவரு வந்து திறந்தாரு, இவரு வந்து திறந்தாரு என்று அனைவருமே அங்கு வந்தே நுங்கு குடிக்கின்றார்கள் அது நல்லா இருக்கா ? இல்லையா ? என்பது முக்கியமில்லை அந்த நடிகை வந்து திறந்தாள் ஆகவே இங்கு வந்து நுங்கு வாங்கி குடிப்போம் இதுதான் கொள்கை.

இதில் எனது ஐயம் என்னவென்றால் ? இதைத் திறப்பதற்கு வரும் திரைப்பட நடிகர்களோ, நடிகைகளோ அப்பழுக்கற்றவர்களா ? என்பதை ஆழ்ந்து கவனித்தேன் அதில் எனது அறிவுக்கு எட்டியவரை கட்டிய மனைவியை விவாகரத்து செய்து விட்டு ஏற்கனவே கல்யாணம் முடிந்து விவாகரத்து பெற்ற நடிகையை கட்டியவனும், ஏற்கனவே விவாகரத்து ஆன நடிகையை கட்டி விவாகரத்து செய்த நடிகரை கட்டியவளும், வீட்டில் மனைவியிருக்க, அடுத்தவளை வருடக்கணக்கில் வைத்திருந்து கழட்டி விட்டவனும்தான் வந்து கடையை திறக்கின்றார்கள் (அந்த சுந்தரியும், ஒரு சுந்தரனை பிடித்துக் கொண்டு செட்டில் ஆகி காங்கிரஸ் தியாகி ஆகிவிடுவாள் என்பதும் வேறு விசயம் அங்கு நாம் போகவேண்டாம்) இங்குதான் எனது குழப்பம் தலையெடுக்கின்றது அதாவது இவ்வளவு கீழ்த்தரமானவர்கள் கடையை திறந்தால் அந்தக்கடை விளங்குமா ? ஆனாலும் விளங்குகிறதே... ஆம் அடுத்த 6 மாதத்தில் இதே கோஷ்டிகள் மீண்டும் வந்து அடுத்த இடத்தில் திறக்கின்றார்களே... அப்படியானால் இவர்கள் ராசியானவர்களா ? இவர்களை சமூகம் பெரீரீரீரீரீரீய்ய்ய்ய்ய நடிகர் – நடிகை என்று சொல்கிறது அறிவாற்றலோடு சிந்தித்துப் பார்த்தால் இவர்கள் சாதாரண பொடி நடிகர்களே ஆம் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளத் தெரிந்த அறிவாளிகள் என்பேன் காரணம் அறியாமைவாதிகள் இவர்களை கூட்டமாக வந்து தெய்வங்களைப்போல பார்ப்பதால் பெரிய நடிகர் என்றும், உலகம் அழியும்வரை வாழும் வானத்திலிருக்கும் நட்சத்திரங்களுக்கு உள்ள அந்த நல்லபெயரை இந்த கேவலமான, பணத்துக்காக உடலை விற்கும் மானங்கெட்ட பிழைப்பு பிழைக்கும் இவர்களுக்கு கொடுத்து இவர்களையும் நட்சத்திரம் என்று சொல்கிறார்கள் இது மனசாட்சிப்படி தவறே... பெரிய நடிகர் என்றால் திரைப்படங்களில் நடிப்பதோடு கௌரவமாக நின்று கொள்ள வேண்டும் அதுதான் அழகு இப்பொழுதும் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களும் உண்டு.

என்னங்க, T.V. விளம்பரத்துல அண்ணங்காரன் வந்து நரசுஸ் காபி குடிங்கனு சொல்றான், மறு நிமிடமே தம்பிக்காரன் வந்து சன்ரைஸ் காபி குடிங்கனு சொல்றான், எதைக் குடிப்பதுனு குழப்பதுல இருக்கும்போது அந்த வீட்டுக்கு விளக்கு ஏற்ற வந்த மகராசி வந்து லிப்டன் டீ குடிங்கனு சொல்றா... வீட்டுப் பெரியவரிடம் இவ்வளவு காலமாக மார்க்கண்டேயன் மாதிரி இருக்கீங்களே... எப்படினு கேட்டால் நான் காஃபி, டீ குடிக்கிற பழக்கமே இல்லைனு சொல்றாரு....ஏண்டா... டோய் என்னாங்கடா... நினைச்சுக்கிட்டு இருக்கீங்க ? முதல்ல இவங்கள்ட்ட நீராகாரம் குடிக்க வழியில்லையே அதை நினைச்சுப் பார்த்தீங்களாடா ? இன்னொரு விளம்பரத்துல ஒருத்தி சொல்றா, ஐயா டவுசரோட வந்துருக்காருனு... இவன் என்னடானா ஜட்டி எப்படி மாட்டுறது ? கேட்கிறான் இதுல பழைய ஞாபகம் பேராண்டிங்கிறான் என்னடா நடக்குது இங்கே ?

ஒருமுறை நானும், நண்பனும் துபாய்க்கு ஒரு வேலையாக காரில் போனோம் போன வேலையை முடித்து விட்டு வரும்போது சாலையில் மிகப்பெரிய கூட்டம் இந்தியக்காரர்கள் மட்டுமே குறிப்பாக தமிழர்கள் காரணம் விசாரித்தால் ’’உள்ளாடைகள் உலகம்’’ ஜவுளிக்கடையை முன்னணி பிறகு பின்னணிக்கு தள்ளப்பட்டு கிடைத்தவரை லாபம் என வந்த ஒரு நடிகை திறக்க வந்திருக்கின்றார் நண்பன் சொன்னான்.

கொஞ்சம் நிறுத்தேன்.
ஏன் ?
நான் போயிப் பார்த்துட்டு வர்றேன்.
நீ வந்தது அவளுக்குத் தெரியுமா ?
என்னை எப்படித்தெரியும் ? அவங்க எவ்வளவு பெரிய ஸ்டாரு..
ஸ்டாரா... அப்படினா ?
நட்சத்திரம்.
முதல்ல உனக்கு நட்சத்திரம்னா என்னானு தெரியுமா ? நட்சத்திரங்கிறது இரவு நேரத்துல ஆண்டாண்டு காலமாக வந்து போற இறைவன் படைப்பு விழுந்து விழுந்து சாமி கும்பிடுறே அந்த இறைவன் படைப்பை இவ்வளவு கீழ்த்தரமான நடிகைக்கு கொடுக்குறே ?
என்னையா... நீ சம்பந்தம் இல்லாத கேள்வி கேட்கிறே ?
இவளைப் பார்ப்பதாலே உனக்கு என்ன கிடைக்குது ?
நானும் பார்த்தேன்னு... சொல்லலாம்ல...
வேண்டாம் போவோம் இவளைப் பார்ப்பதற்காக நேரம் ஒதுக்கிறதை நான் மானக்கேடா நினைக்கிறேன்.
இதுல என்னய்யா மானக்கேடு ?
நாளைக்கு அபுதாபியிலே போயி நானும், கில்லர்ஜியும்தான் பார்த்தோம்னு தண்டோரா போடுவே எனக்கு அது அவமானம் பேசுவது போலவே நடக்கணும் அதுதான் எனது கொள்கை.
எங்க அம்மா மேலே சத்தியமா ஒரு பயல்ட்டயும் சொல்ல மாட்டேன்யா நல்லாயிருப்பே கொஞ்சம் நிறுத்துயா.
அற்ப விசயத்துக்காக பெத்த தாயை இழுக்கிறே அதுலயும் நீ உளறுவாயி.
சொல்லமாட்டேன் இங்கே பாரு, என் தலைமேலே சத்தியம்.
வேண்டாம் சொன்னாக்கேளு நீ போயித்தான் ஆகணும்னா பின்னாலே வருத்தப்படுவே...
இல்லயா இப்ப வந்துடுறேன் ஒரு நிமிஷம்.
சரி போ உன் தலையெழுத்து
.
உடன் கதவைத்திறந்து கொண்டு ஓடினான் ¾ மணிநேரம் கழித்து அவனிடமிருந்து போன் வந்தது நான் எடுக்கவில்லை, மீண்டும் வந்தது எடுக்கவில்லை தொடர்ந்து.... வந்து கொண்டே.... இருக்க அடுத்த 1 ¼ மணி நேரத்துக்குப் பிறகு எடுத்தேன்.

யோவ் எங்கேயா இருக்கே ?
ரூம்ல..
ரூம்லயா... எந்த ரூம்ல ?
எந்த ரூம்ல இருப்பாக ? என்னோட ரூம்லதான்.
அபுதாபியிலயா ?
ஆமா அதுதானே என்னோட ரூம்.
அதுக்குள்ளே எப்படியா... போனே.. எங்கிட்ட பணம் இல்லைய்யா... நான் எப்படி அபுதாபி வருவேன் ?
எவளைப் பார்க்கப் போனியோ... அந்த........ போயி கேளு வைடா போனை.

மறுவாரம் அவனை டெலிபோனில் அழைத்தேன்...

துபாய் போறேன் வாறியா ?
ஐயா சாமி உனக்கு ஒரு கும்பிடு, உன்னோட காருக்கு ஒரு கும்பிடு இனிமேல் அபுதாபிக்கு உள்ளேயே கூப்பிட்டாலும் காருல வரமாட்டேன்.
இதை நீ எல்லோருட்டரும் சொல்லியிருப்பியே அங்கதான் நான் நிற்கிறேன்.
நீ நின்னுக்கோ இல்லை உட்காந்துக்கோ என்னை விடு.

விளம்பரம் செய்தால் வியாபாரம் சூடுபிடிக்கும் அதனால்தான் இப்படியெல்லாம் செய்யிறாங்க இதில் தப்பில்லை என்பவர்களுக்கு இந்தச்செலவு செய்யாமலே வியாபாரம் அமோகமாக செய்ய முடியும் உதாரணத்திற்க்கு இறைவன் செயலால் நான் நாளைக்கே மிகப்பெரிய நகைக்கடை அதிபராக வந்து விட்டேன் என்று வைத்துக் கொள்வோமே எப்படிச் செய்வேன் தெரியுமா ?

அதை மற்றொரு பதிவில் காண்போம்
காணொளி

23 கருத்துகள்:

  1. முதல் வோட்டும் முதல் கொமெண்ட்டும் என்னுடையது.. வடிவாப் பார்த்துக்கோங்க கில்லர்ஜி..

    போன பிறப்பில் புண்ணியம் செய்தவர்களே இப்பிறப்பில் என்ன தப்புச் செய்தாலும் மின்னிக் கொண்டிருக்கிறார்கள். அதனால அவர்களைப் பார்த்து வயிரெரியக்குடா:) வாழ்த்தி விடோணும்:) ஹா ஹா ஹா:).

    பதிலளிநீக்கு
  2. நட்சத்திரம் நல்ல விளக்கம்.. ஆனா நீங்க 2 லேட் கில்லர்ஜி.. இதை நீங்க பிறந்தபோதே சொல்லிப் போராடியிருந்தால் ஒருவேளை மாத்தியிருக்கலாம்.. இப்போ பிறந்த குழந்தைக்குக் கூட ஸ்ரார் எனில் அது இவிங்கதான் எனத்தானே தெரியுது..:)

    வீடியோ அழகு.. எடுத்தவர் நீங்களோ.. இல்ல ஓட்டியவர் நீங்களோ? இல்ல பின்னால பெல்ட் போடாமல் இருந்தது நீங்களோ? சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:).

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஜி !

    தங்கள் மன ஓட்டம் அறிவேன் நானும் இந்த சினிமாக்காரன்களைப் பார்ப்பதற்கு ஆசைப்படுவதில்லை என்றும் ......அவரைக் கழட்டிவிட்டு வந்ததுக்கு ஒரு சபாஸ்

    நீண்டநாளின் பின்னர் நாகூர் கனிபாவின் குரல் கேட்டதில் மகிழ்ச்சி

    தம +1

    பதிலளிநீக்கு
  4. சினிமா மோகத்தில் இருந்து நம் மக்கள் இளைஞர்கள் முதலில் விடுபடவேண்டும் நண்பரே
    தம+1

    பதிலளிநீக்கு
  5. வெளிநாட்டில் கடைகளைத் திறந்தால் மவுசு கூடுமே.

    பதிலளிநீக்கு
  6. பதிவு புரிந்து கொள்ள முடிந்தது. எனினும் முதல் இரு பத்தியில் வாக்கியங்களைச் சீராக அமைத்தால் நன்று. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும் வெளியூர் ஆகவே சரி செய்ய இயலவில்லை.

      நீக்கு
  7. சொதப்பிக்கிட்டு நின்ன ஆளை வாத்யார்.. அப்படின்னான்!.. அன்னைக்குப் புடிச்சது கெரகம்!..

    எதுக்கோ முத்துமாலை..ன்னு பேர் வெச்ச கதையாகிப் போச்சு..

    அது அப்படியே படித்துறையில பாசி புடிச்ச மாதி ஆயிடிச்சி..

    என்னென்னமோ எழுதி எழுதி கடைசியில
    சூப்பரு ஸ்டாரு யாருன்னு கேட்டா.. ந்னு பாட்டெழுதி
    சின்ன புள்ளைங்களைக் கெடுத்தானுங்க..

    நெற்றியில உளுகின்ற நீள முடி அழகு..ன்னானுங்க..
    சொட்டைத் தலையில இருந்து ஒற்றை முடி தாராயோ..ன்னானுங்க!..

    எதுக்கு அந்த ஒத்தை முடி?.. யாரும் வெவரம் சொல்லலை..

    தமிழனைக் கவுத்துவுட்டு காவடி எடுக்குறானுங்க.. காவடி!..

    இவன் மயங்கிக் கெடந்தாலும் பரவாயில்லை..
    மழுங்கிக் கெடக்கிறான்.. எப்போ எழுந்திரிக்கப் போறானோ..

    இதில நீங்களும் நானும் பேசி என்ன ஆகப் போவுது!..

    நாங்க ஆடுறதும் பாடறதும் காசுக்கு - பல
    ஆளைக் குல்லா போடறதும் காசுக்கு..
    காசுக்கு.. காசுக்கு.. காசுக்கு!..

    - இப்படியாக ஒரு பாட்டு அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்ற படத்தில் இருக்கிறது.. கேட்டுப் பாருங்கள்!..

    பதிலளிநீக்கு
  8. உண்மையில் நீங்கள் நல்ல நண்பர் அல்ல. நண்பரின் செய்கை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அதற்காக அவரை நடுத்தெருவில் விட்டு வந்தது சரியில்லை. குறைந்தபட்சம் திரும்பி வர கொஞ்சம் காசாவது கொடுத்திருக்கலாம்.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  9. ஏங்க... நீங்க எழுதியிருக்கிறது நியாயமா? நல்லவர்கள் கடையைத் திறந்துவைத்தால், யார் கூட்டத்தைக் கூட்டுவது? நடிக நடிகைகள் திறந்துவைக்கும்போதுதான் கூட்டம் எக்கச்சக்கமாக வரும். ஆளுக்கேத்த பணியார வியாபாரம்தானே. சென்னைல, சேலத்துல சினிமா நடிகைகள் ஒரு கடையைத் திறந்துவைக்கும்போது போக்குவரத்துத் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, லட்சக்கணக்கில் மக்கள் திரண்டதைச் செய்தித்தாள்களில் படித்திருப்பீர்களே.

    டீ, காபி விளம்பரத்தைப் பார்த்து டென்ஷன் ஆகலாமா? இல்லை அவங்க சொல்றாங்களேன்னு கரண்டி கரண்டியா நல்லெண்ணெய் ஊற்றி இட்லி சாப்பிட்டால் உயிரோடுதான் இருப்போமா? இந்த விளம்பர இடைவேளைலாம் எனக்கு மற்ற சேனலை சர்ஃப் பண்ணக் கிடைக்கும் அவகாசம். இப்படி ஒரே சமயத்தில் ரெண்டு சேனலில் நகைச்சுவை, விலங்குகளின் உலகம் என்று பார்த்துவிடமுடிகிறது. நீங்க என்னன்னா, அவங்க சொல்றாங்கன்னு சீரியசாக இந்த விளம்பரமெல்லாம் பார்த்துக்கிட்டு.

    சரி சரி... இன்னும் கொஞ்ச நேரத்துல ப்ரீத்தி ஜிந்தான்னு ஒரு நடிகை இங்க ஒரு கடையைத் திறக்கப்போறாங்களாம் (1950ல் நடித்தவங்க?). போய்ப் பார்த்துட்டு வந்திடறேன். அதுக்கப்புறம் மீதி.

    பதிலளிநீக்கு

  10. தங்களது வணிகத்தைப் பெருக்க நிறுவனத்தின் உரிமையாளர்கள் எல்லா வகையிலும் விளம்பரம் செய்யத்தான் நினைப்பார்கள். அவைகள் சட்டத்துக்கு உட்பட்டு இருக்கும் வரை நாம் ஒன்றும் செய்ய இயலாது. வேண்டுமானால் நீங்கள் செய்ததுபோல் அந்த நிகழ்க்சியைப் புறக்கணிக்கலாம். மக்களின் மன நிலை மாறும் வரை இது போன்றவைகள் நடந்துகொண்டுதான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  11. நல்ல பதிவு அண்ணா...
    இது விளம்பர மோகம் பிடித்த உலகம்... நடிகனின் பின்னால் வீழ்ந்து கிடக்கும் உலகம்... அதான் அவர்கள் கோடிகள் செலவு செய்து கொண்டு வரப்படுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  12. சினிமா நட்சத்திரம் என்றில்லை, ஏதாவது ரூ வகையில் பிரபலமானாலே அவர்களை வைத்து வியாபாரம் செய்ய முடியுமா என்று பார்ப்பார்கள். எனக்கொரு சந்தேகம். இப்படி விளம்பரங்களை பார்த்து எத்தனை பேர் ந்தப் பொருளை வாங்குவார்கள்? நான் விளம்பர இடைவெளி வந்ததுமே சேனலை மாற்றுபவன்!

    என்னதான் பிடிக்காத காரியம் செய்தாலும் நண்பனை அப்படி விட்டு வரலாமா?

    காணொளியில் பின்னணியில் ஒலிப்பது ஹனீஃபா குரலா?

    பதிலளிநீக்கு
  13. விளம்பரம் அவர்கள் யுக்தி அதை நிஜமென்று நினைத்துப் போவது இவர்களி புத்தி மட்டு என்பதையே காட்டுகிறதுஎத்தனை விளம்பரங்களில் உண்மை விளம்பப்படுகிறதுகாசுக்கு கதவு திறக்க வருவோர் குற்றமல்ல இருந்தாலும்திரைப்பட நடிக நடிகையர் மீது ஏனோ உங்களுக்கு இவ்வளவு கோபம் பேசாமல் ஒதுங்க வேண்டியதுதானே

    பதிலளிநீக்கு
  14. அண்மையில் முற்றும் துறந்த நடிகை கடை திறப்பு விழாவுக்கு வந்த போது ,அவரைக் காண.. வெட்கம் மானம் ,சூடு சொரணை துறந்தவர்கள் லட்சக் கணக்கில் கூடி இருந்தது நினைவுக்கு வருது ஜி :)

    பதிலளிநீக்கு
  15. விளம்பர மோகம்! வெறென்ன சொல்ல!

    பதிலளிநீக்கு
  16. இந்த விஷயத்தில் அஜித்-தின் கொள்கையை பாராட்டலாம் !

    பதிலளிநீக்கு
  17. வித்தியாசமான எழுத்து.. :-)

    பதிலளிநீக்கு
  18. நியாயமான கவலைதான், பாராட்டுகள் த.ம. வாக்கு பெட்டி எங்கே எல்லோர் வலைத்தளங்களிலும் காணவில்லையே, களவாடி விட்டோர்களோ இல்லை ஒரிஜனல் லைசன்ஸ் கேட்கிறார்களோ ?

    பதிலளிநீக்கு
  19. கில்லர்ஜி! சொற்கள் மாறி மாறி வந்துள்ளன என்றாலும் உங்கள் பதிவின் கருத்து புரிந்தது....இவ்வுலகமே விளம்பரம்...இதை விடுங்க...வீட்டுக் குடும்ப நிகழ்வுகளான காது குத்தல், பூப்பெய்தல், திருமணம், புது மனை புகுதல் போன்றவையே ஏதேனும் அரசியல்வியாதி தொற்றிக் கொள்கிறது அல்லது சினிமாக்காரர்கள் வைத்துச் செய்கிறார்கள்...அப்புறம் என்ன...இதேனும் வியாபாரம் ஆனால் அது?...

    பதிலளிநீக்கு
  20. நல்ல வேளைநான் அந்த மானகெட்ட,சூடு சொரணை கெட்ட ரசிக கூட்டத்தோடு சேரவில்லை...

    பதிலளிநீக்கு