தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், செப்டம்பர் 11, 2017

பாலூற்றும் வரை...

சமூகத்தின் மீது கோபமாக உள்ளவன் நிச்சயமாக நியாயமானவன் ஆகத்தான் இருக்க முடியும் நியாயம் இல்லாதவன் மீது சமூகம் கோபப்படும். நான் நல்லவனோ ? கெட்டவனோ ? நானறியேன்.
But
இந்த சமூகத்தின் மீது கோபம் உள்ளவன்.
பால்குடி மறக்கும்போது தொடங்கிய இந்தக்கோபம்
எனக்கு பாலூற்றும் வரை தொடருமோ ?
யாமறியோம் பராபரமே.

 குறிப்பு - ஆவின் பால் நிறுவனத்திடமிருந்து பணம் பெறப்படவில்லை கிடைத்தால் பெறப்பட்டு...
சென்னை சிவானந்தா சரஸ்வதி சேவாஸ்ரமம் & ஸ்ரீ சாரதா சக்தி பீடம்
கோயமுத்தூர் குருவம்பாளையம் தி யுனைடெட் ஹேண்டி ஹேப்பிட் ஸ்கூல் போன்ற அனாதை ஆஸ்ரமங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் – கில்லர்ஜி

38 கருத்துகள்:

  1. வணக்கம் ஜி !


    உயர்ந்தவர் செயல்கள் எண்ணி
    ...உள்ளமும் காயம்! ஆனால்
    நயந்தவர் மட்டும் அங்கே
    ...நலம்பெறத் துடிப்பார் நன்றே
    இயந்திர மான வாழ்வில்
    ...இதயமும் இழந்தார் முன்னே
    பயந்தவர் என்னே செய்வார்
    ...பரமனும் விலைபோ னாரே !

    மடியிலே அழுது பிள்ளை
    ...மயங்கிடும் போதும் !இந்த
    நடிகரின் படத்துக் கெல்லாம்
    ...நம்மினம் பாலை ஊற்றும்
    முடிவிதற் கென்றும் இல்லை
    ...முற்றியே விட்ட சாபம்
    இடிவிழுந் தழிந்தால் அன்றி
    ...எவருமே மாறார் பாரில் !


    நெஞ்சைத் தொட்ட படம் ஜி குறிப்பு நல்லது தொடர வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே கவிதையாக வாழ்த்திய கருத்தை இரசித்தேன்.

      நீக்கு

  2. சமுகத்தின் மீது கோபமாக உள்ளவன் நியாயமானவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை... சமுக சொத்துகளை கொள்ளையடிப்பவன் அதை அடிக்க முடியாத நிலை ஏற்பட்டால் அவனுக்கு இந்த சமுகத்தின் மீது கோபம் கண்டிப்பாக வரும் அப்படி வரும் பட்சத்தில் அவன் நியாயமானவனாக இருக்க முடியுமா என்ன?நியாயமில்லாதவன் மீது சமுகம் கோபடும் என்று சொலவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.காரணம் நியாயமில்லாதவன் மீது கோபபடுவதிற்கு பதிலாக அவனை தலைவனாக ஏற்றுக் கொண்டாடுகிறார்களே அது எப்படி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே மாறுபட்ட கோணம் மறுக்க முடியாத உண்மையும்கூட...

      நான் என்னைக்குறித்து விளக்கம் தந்தேன், நீங்கள் இன்றைய சமூக பெரும்பான்மை நிலையை உணர்த்தி விட்டீர்கள்.

      வரூகைக்கு நன்றி

      நீக்கு
  3. பால் பாக்கி இருந்தா! உடனே கட்டி முடிச்சிருங்க. மீசக்காரரு கோவப்பட்டா தாங்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு வந்த பிறகு கோபம் நிறைய வருகிறது நண்பரே.

      எல்லோர் மீதிலும் இதை தொடங்கி வைப்பவர்கள் எனது குடும்பத்தினர்...

      நீக்கு
  4. புரியலேது பிரபு

    பதிலளிநீக்கு
  5. "நாடென்ன செய்தது நமக்கு என்று கேள்விகள் கேட்பது எதற்கு? நீயென்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு" என்று பாரதிதாசன் பாடல் ஒன்று உண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஸ்ரீராம்ஜி நான் இந்த சமூகத்திற்கு ஏதிவது செய்ய நினைக்கும் ரகம்...

      இயலாதபோது இந்த குருட்டு சமூகத்திற்கு சாவுமணியாவது அடித்து மறையவேண்டும்.

      நீக்கு
  6. என்ன கோபம் சமூகத்தின் மீது? நாம் அனைவரும் சேர்ந்து தானே சமூகம்? தவறு எல்லோரிடமும் தானே இருக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமூகத்தில் எங்கும் நேர்மையில்லை.

      முகமூடி அணிந்த அரசியல்வாதிகள் இதை அறிந்தும், திருந்தாத மக்கள் கூட்டம்.

      நீக்கு
  7. பாரதி சொன்ன 'ரெளத்திரம் பழகு 'பிடித்து விட்டதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று பாரதிக்காண நாளே...

      பாரதியை நினைந்து தொடங்கினேன் அது என்னுள் அடங்கி விட்டது.

      நீக்கு
  8. திரு மதுரைத்தமிழன் அவர்களின் கருத்தே என் கருத்தும்.சமூகத்தின் மீது கோபமாக இருப்பவன் நிச்சயம் நியாயமானவனாக இருக்கவேண்டிய அவசியமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சமூகத்தின்மீது கோபப்படும் மனிதர்கள் முடிவில் இயக்கமாக மாறி அரசியல்வாதிகளை நெருங்க இயலாதபோது பொதுமக்களை கொல்கிறார்கள்.

      ஆகவே அவர்கள் நல்லவர்கள் என்ற வட்டத்தை விட்டு விலகி விடுகின்றார்கள் இதுவும் உண்மையே...

      நண்பரின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  9. உங்களைக் குறித்த விளக்கம் சரியானதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இது என்னைக்குறித்த விளக்கம் மட்டுமே...

      நீக்கு
  10. கில்லர்ஜி!....சமூகத்தின் மீது கோபமாக இருப்பவர்கள் எல்லோரும் நியாயமானவர்கள் என்று சொல்ல முடியாது. நியாயமற்ற கோபங்களும் சிலருக்கு இருக்க வாய்ப்புண்டு...எதற்கெடுத்தாலும் கோபப்படுபவர்களுக்கும் சமூகத்தின் மீது கோபம் வருகிறதே...அதாவது ஒரு வரிசையில் நிற்க வேண்டி வரும் போது பொறுமை மிக மிக அவசியம். ஆனால் அங்கும் சிலர் பொறுமையிழந்து சமூதத்தைத் திட்டிக் கொண்டிருப்பார்கள். இது நியாயமற்ற கோபம்.

    மட்டுமல்ல சமூகம் என்பது எல்லா மனிதர்கள் நாம் உட்பட சேர்ந்ததுதானே...நாம் எல்லோரும்தான் தவறுகள் செய்கிறோம். சமூதத்தின் மீது கோபம் கொண்டு என்ன பயன்? நம்மால் சமூதத்தைத் திருத்த முடியுமா? நிச்சயமாக முடியாது... ஸோ சமூகத்தின் மீது கோபம் என்பதே ஒரு நெகட்டிவ் சிந்தனை. மட்டுமல்ல அப்படி ஒரு சிந்தனை தொடர்ந்து இருந்தால் நம் மனம் கெட்டுவிடும்...எனவே சமூகத்தின் மீது கோபப்படுவதை விட நம்மால் இயன்ற வரை வெளியில் சத்தமில்லாமல் நல்லது செய்து கொண்டே போனால் நம் மனம் மகிழ்வடையும்...நம்மால் ஏதோ செய்ய முடிகிறதே என்று தோன்றும்...சமூகத்தின் மீது கோபம் என்பது தொற்றுவியாதி. பல சமயங்களில் தவறான போராட்டங்களில் முடிகிறது. அது தீர்வு தரப் போவதில்லை. ஸோ அதைவிட நாம் நலல்தை நினைத்து நம்மால் இயன்றவரை நல்லது செய்து மகிழ்ச்சி ஏற்படுத்தலாமே...நாம் ஓர் உதாரணமாக இருக்கலாமே ஜி! நம்மைப் பார்த்து நாலு பேர் முன் வருவார்களே! சமூகத்தின் மீது கோபம் நல்லதா? இல்லை இவ்வழி நல்லதா...நாம் யோசிக்கலாமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாதமும் சரியே முடிவில் பலனின்றி நம்மைநாமே வெறுக்கும் நிலைக்கும் வந்து விடுகிறோம்

      அப்படி வந்து பாதிக்கும் நிலைக்கு வரும்பொழுது நம்மை இந்த சமூகம் நினைத்துப் பார்ப்பது இல்லை அது முடியாத காரியமும்கூட

      காரணம் அவரவர்களுக்கு ஆயிரம் வேலைகள்
      பல நேரங்களில் நான் நினைப்பது இந்த சமூகத்தில் இணைந்து வாழ எனக்கு தகுதி (பக்குவம்) இல்லையோ என்பதுதான்....

      நீக்கு
  11. நாலு பேர் சேர்ந்ததுதானே சமூகம் அதில் நல்லவர்களும் அல்லாதவர்களும் இருக்கிறார்கள் மனிதர் மீது கோபப்படுவதை விட அச்செயல்களின் மீது கோபம் காட்டுங்கள் பலன் கிடைத்தாலும் கிடைக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நல்லதையும், கெட்டதையும் மனிதர்கள்தானே செய்கின்றார்கள்.

      இனி வரும் காலங்களில் நாம் நிறைய காணவேண்டியது வரும் ஐயா.

      நீக்கு
  12. முட்டாள்தனங்கள் நிறைந்த சமூகத்தைத் திருத்த வேண்டும் என்றுதான் பெரியார் அவர்கள் பாடுபட்டார் ,அவர் கொள்கையை ஆதரிப்பதன் மூலம் நம் கோபத்தைக் குறைத்துக் கொள்ளலாமே ஜி ?அதற்காக நாலுவித தி க அமைப்புகளில்,ஏதாவது ஒன்றில் சேர்ந்து தான் ஆகணும் என்ற அவசியமும் இல்லை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி தங்களது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

      நீக்கு
  13. வணக்கம்
    ஜி

    திருவாய் மொழில் சொன்னாய்
    திரும்பி திரும்பி பார்க்கிறேன்
    சொல்லிய கருத்தையும்
    பதிவேற்றிய படத்தையும்.

    அருமை வாழ்த்துக்கள் ஜி....தொடரும் பயணம்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகரரூபன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகை தந்தமைக்கு நன்றி

      நீக்கு
  14. கோபம்! அது மட்டுமே சாத்தியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஜி அது மட்டுமே சாத்தியம்.

      நீக்கு
  15. நம்மால் முடிந்தது அது மட்டுமே. நம்மை நம்மால்கூட மாற்ற முடியாமல் போய்விடுகிறதே சில சமயங்களில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் முத்தான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  16. அனைத்திற்கும் அப்பால்...நல்ல கருத்துக்களை பதிவிட்டு வாசகர் அன்பால் குளியல் போடும் கில்லர்ஜி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  17. மகிழ்ச்சி.... சேகு வரா சொன்னதுதான் நிணைவுக்கு வருகிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல மனிதர்களுக்கு உயர்ந்த மனிதர்களின் நினைவே வரும் நண்பரே

      நீக்கு