தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், அக்டோபர் 16, 2017

நையாண்டி தர்பார்

வடிவேலு கிணற்றைக் காணோம்னு
சொன்னதை உண்மை ஆக்கிட்டீங்களேடா...
நாந்தேன் ரெண்டு பேருக்கும் வாடகைக்கு விட்டேன்.
எவன் தலையில் விழுந்தால் எனக்கென்ன ?
ஒதுக்கிய பணத்தில் சாதாரணமாக கட்டுங்கடா போதும்.
இருபது வருடங்களுக்கு முன்பு நான் ஊரணியில்
குளிக்கும்போது தாத்தா பின்னாலிருந்து எடுத்த படம்.
இதற்குதான் பெயிண்டரிடம் பேரம் பேசக்கூடாது
மனுஷன் கேள்வி கேட்டது தப்பா ?
இந்த இனியாவை கரைக்ட் பண்ணவே முடியலையே...
 (சிறிய திருத்தம் மட்டுமே எனது)
திருச்சிகாரவுங்க சண்டைக்கு வந்தா அழுதுடுவேன்.
வாய் கூசாமல் பொய் பேசுறீங்களேடா...
எதைத்தான் நம்புவதோ... பேத்தை நெஞ்சம்.
முடி வெட்டிய முடுதாறுக்கு ஒரு சபாஷ்
சுளையில் சுளை குத்திடுச்சோ...
இனி எழுத்துக்கூட்டி படிச்சு என்ன செய்ய ?
இங்கிலீஷ்காரன் எது செய்தாலும் தவறில்லையோ...
இதுவும் வேண்டுமடா உமக்கு இன்னமும் வேண்டுமடா
கலைத்தாகம் கட்டவுட்டை கிழிக்கும்
புதிய டீலக்ஸ் கோச் டெல்லியிலிருந்து இறக்குமதி.
பதிலுக்கு பதிலடி கொடுப்பேன்.
மதம் மறப்போம், மனிதம் காப்போம்.

 என்னிடம் பேரம் பேசாமல் ஒரு படம் அனுப்பி வைத்த நண்பர் திரு.வே.நடனசபாபதி அவர்களுக்கு நன்றி

57 கருத்துகள்:

  1. பதிலுக்கு பதிலடி ஹாஹாஹாஹாஹா ...வாட்சப்பில் கூட நண்பர் ஒரு படம் அனுப்பிருந்தார்...அதில் கூட ஒருவர் மொபைலை நோண்டியபடியே இருப்பார். ஒரு பைரவர் முதுகுப்பக்கம் சென்று முகர்ந்து பார்த்து காலைத் தூக்கி அடித்துவிட்டுப் போகும்!!ஹாஹா

    சுட்டது சுடாதது ஹாஹாஹாஹா செம..

    கில்லர்ஜி அண்ட் முதலை கிராஃபிக்ஸ் சூப்பர்!!..

    நதிகளை மீட்போம் வடிவேலு ஜோக் ஹாஹாஹாஹா சூப்பர் செம...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பதிவை ரசித்தமைக்கு நன்றி முதலை உண்மையிலேயே நான் குளிக்கும்போது தாத்தா ரிஸ்க் பண்ணி எடுத்தாரு... க்ராப்பிக்ஸ்னு சொல்றது அவரது ஆன்மாவுக்கு தெரிஞ்சது....???

      நீக்கு
  2. எங்கிருந்துதான் சேகரிக்கிறீர்களோ .... அனைத்தும் அருமை. ஒவ்வொன்றுமே ஒவ்வொரு உணர்வைத் தூண்டுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  3. அனைத்துப் படங்களும்
    அழகாகச் சிந்திக்க வைக்கின்றன
    சிரிப்புப் பெட்டகமான பதிவு

    பதிலளிநீக்கு
  4. அனைத்தையும் ரசித்தேன். நண்பர் நடனசபாபதி அனுப்பிய படம் எதுவாக இருக்கும் என்கிற யோசனை மனதுக்குள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஸ்ரீராம்ஜி நன்றியில் சிறிய "க்ளு" இருக்கிறதே...

      நீக்கு
  5. அருமை
    அருமை
    மனிதம் போற்றுவோம்
    தம+1

    பதிலளிநீக்கு
  6. அனைத்தையும் நுணுக்கமாகத் தேர்ந்தெடுத்துப் பகிர்ந்த விதம் அருமை. ஒவ்வொன்றும் ஒரு செய்தியினைக் கூறுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  7. நையாண்டிகள் அருமை! உங்கள் தர்பார் மென்மேலும் வளர்க!! :-))

    பதிலளிநீக்கு
  8. கதை சொல்லும் கதம்ப மாலை..

    அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  9. கதம்பமா செலக்ட் பண்ணிக் கலக்கிட்டீங்க..

    ஆனா இந்த மிஸ்டுகால் கொடுத்தா நதிகள இணச்சிறலாம்கிறது .. இத்தன நாளாத் தெரியாமப் போச்சே. ம்ஹ்ம், எதுக்க்கும் ஒரு நேரம், காலம் வரணும்ல..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நதிகளை இணைப்பது நேரு காலத்தில் துவங்கப்பட்டது அப்பொழுதே மொபைல் கண்டுபிடித்து இருந்தால் இந்நேரம் முடிந்திருக்கும்.

      நீங்கள் சொல்வதுபோல் காலநேரம் வரவேண்டும்.

      நீக்கு
  10. முதல் இரண்டும் சிந்திக்க வேண்டியவை (என்னமா.. ஏமாத்ராங்க)...

    பின்னால் ஒவ்வொன்றும் சிரிக்க வைப்பவை...சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஏமாற்றுகிறார்கள் என்பது தெரிந்து விட்டதே அடுத்த தேர்தலில் இவர்களை மக்கள் புறக்கணிக்கலாமே...

      நீக்கு
  11. சிந்திக்க சிரிக்க ரசிக படங்களின் அணிவகுப்பு அதற்கு உயிர் கொடுத்து இருக்கிறது வர்ணனைகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது ஊக்கப்படுத்தும் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  12. உங்கை இருபது வருசத்துக்கு முந்தி எடுத்த போட்டோ செம. கூடவே முதலையை கொல்ல உதவிய என்னை காணோமே அண்ணா!

    வாடகை விட்ட வண்டி, சிறுதுளி பெருவெள்ளம் சூப்பர்.

    அந்த குட்டி டயாஃபர் போட்டிருக்கான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அந்த குச்சியை தூக்கி வீசியதே நீங்கள்தானே....
      வருகைக்கு நன்றி

      நீக்கு
  13. ஒவ்வொன்றும் ஒருவிதம் கில்லர்ஜியின் பதிவுகளில் மெருகேறி வருகிறதுமனம் நிறைந்த வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவின் மனம் நிறைந்த வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சியும், நன்றியும்.

      நீக்கு
  14. கில்லர்ஜியின் மீது பாஜக எம் பி குற்றச்சாட்டா எங்கே எப்போது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடுங்க ஐயா இதையெல்லாம் பெரிசு பண்ணக்கூடாது போயிட்டுப் போறாங்க... நல்லா இருக்கட்டும்.

      நீக்கு
  15. அனைத்தும் அருமை தேடிக் கொணர்ந்த செல்வம்!

    பதிலளிநீக்கு
  16. பதிலுக்கு பதிலடி ஏற்கெனவே வந்துடுச்சு. பெயின்டரிடம் பேரம் பேசியது தான் நண்பர் அனுப்பியதா? எல்லாமே அருமை! அதற்கேற்ற விளக்கங்கள் அதை விட அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க க்ளுவை வைத்து கண்டு பிடித்து விட்டீர்களே வாழ்த்துகள்.

      ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.... அப்பாடா திருச்சிகாரங்க சண்டைக்கு வரலை தப்பிச்சேன்.

      நீக்கு
  17. அனைத்துமே அருமை !! சிரிப்பைத்தூண்டுவனவீயிருந்தன, முதல் படத்தைத் தவிர. ரசிக்க முடியவில்லை அடியேனுக்கு பொருள் விளங்காத்தால் !!!

    Shankar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வடிவேலு ஒரு படத்தில் கிணற்றைக் காணோம் என்று சொல்வார் அது பலருக்கும் மிகைப்படுத்துவது போலிருந்தது காரணம் கிணறு எப்படி காணாமல் போகும் என்று ?

      மீட்போம் என்றால் பொருள் என்ன ?
      அதாவது நமது குழந்தை, நமது பணம், இது காணாமல் போனால் போலீஸிடம் சொல்லி மீட்டெடுப்போம்.

      அதைப்போலவே இங்கு "நதிகளை மீட்போம்" என்ற வார்த்தையும் இருக்கிறது என்னமோ நமது நதிகளை பாக்கிஸ்தான்காரன் கடத்தி விட்டதைப்போல கூவுகிறார்கள் மீட்போம் என்று கேவலமாக இருக்கிறது.

      அந்த பேனர் இருக்குமிடம் சாக்கடையோரம் இது எங்கு இருந்தது தெரியுமா ?
      எனது ஊர் தேவகோட்டையில்தான் நானே எனது செல்லில் எடுத்தேன்.

      மேலும் அப்படத்தை பெரிதாக்கி காணவும்ட அதனுள் மற்றொரு நகைச்சுவை இருக்கிறது "சிறுதுளி பெருவெள்ளம்" என்று.

      பொருள் தெரியாவிட்டால் தயக்கமின்றி கேட்கலாம் விளக்கம் அளிக்க வேண்டியது எனது கடமை.

      வருகைக்கு நன்றி

      நீக்கு
    2. நன்றி நண்பரே, பொறுமையுடன் விளக்கியமைக்கு !!!

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி நண்பா

      நீக்கு
  18. படங்களும் நக்கல் கமெண்ட்களும் அருமை ஜி! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நீண்ட இடைவெளிக்கு பிறகு வருகை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  19. அனைத்தும் அருமை த.ம. வுடன்

    பதிலளிநீக்கு
  20. சுட்ட பணம், சுடாத பணம் - ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  21. நையாண்டி தர்பார் மிகவும் அருமை நண்பரே....

    பதிலளிநீக்கு
  22. ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு நக்கல் பாணி அழகான தொகுப்பு ஜீ!

    பதிலளிநீக்கு
  23. வாடகைக்கு விட்டது சூப்பராக இருக்கு அரிய பொக்கிஷம்)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா நம்மலிடம் மூன்று ஹெலிகாப்டர் இருக்கிறது தேவை என்றால் தொடர்பு கொள்ளவும்.

      நீக்கு
  24. படங்களுக்கு தந்துள்ள விளக்கங்கள் அருமை! அனைத்தையும் இரசித்தேன்! இந்த படங்களை எங்கிருந்து பெற்றீர்களோ என எண்ணிக்கொண்டு படித்தபோது, நான் அனுப்பிய படம் இருப்பதையும் கண்டேன். சரியாக பயன்படுத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் ரசிப்புக்கு மிக்க நன்றி

      நீக்கு
  25. முதல்ல 5 ம் படத்த நம்பள்ள. நப்பினா தான் ப்ளாக் வர ஒடுவங்கலாம் அதான் நம்பிட்டேன்

    பதிலளிநீக்கு